கவனத்தை திசைதிருப்பும் ஆயுதமானது சமூக ஊடகம்: மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கவலை https://ift.tt/wQoFKZs
கோவா: கோவா மாநிலத்தின் மர்மகோவா பகுதியில் உள்ள ஜி.ஆர்.காரே சட்டக் கல்லூரியில் ‘ஜிஆர்கே - சட்ட பேச்சுகள்’ என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா கிளை நீதிபதி மகேஷ் சோனக் பேசியதாவது: நாம் தற்போது கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன்களை போற்றும் யுகத்தில் வாழ்கிறோம். ஆனால், சிந்திக்க முயற்சிக்கும் மனிதர்களை பற்றி சந்தேகப்படுகிறோம் அல்லது எச்சரிக்கையாக இருக்கிறோம். செயற்கை நுண்ணறிவுக்கு சில சிறப்புகள் உள்ளன. இயந்திரங்களும், கணிப்பு நெறிமுறைகளும் எவ்வளவு புத்திசாலித்தன மாகவும் இருக்கட்டும். ஆனால், நாம் நமது சிந்திக்கும் திறனையும், விவேகமாக செயல்படும் திறனை யும் அவற்றுக்கு அடமானம் வைத்தால், அது சோகமான நாளாகவும், சோகமான உலகமாகவும் இருக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்