இடுகைகள்

ஆகஸ்ட், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இயற்கை பேரிடரிலும் 2 சாதனை படைத்த காஷ்மீர்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் https://ift.tt/w1le2XH

படம்
புதுடெல்லி: ‘‘க​னமழை, நிலச்​சரிவு போன்ற இயற்கை பேரிடர்​கள், நமது நாட்டை சோதிக்​கின்​றன. இந்த இக்​கட்​டான நேரத்​தலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 சாதனை​களைப் படைத்​துள்​ளது’’ என்று மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி தெரி​வித்​தார். பிரதம​ராக நரேந்​திர மோடி பதவி​யேற்ற பிறகு ஒவ்​வொரு மாத​மும் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை வானொலி​யில் மனதின் குரல் என்ற நிகழ்ச்​சி​யில் நாட்டு மக்​களு​டன் உரை​யாடி வரு​கிறார். அதன்​படி 125-வது மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி நேற்று பேசி​ய​தாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆஸி.யில் அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டினர் குடியேறுவதை கண்டித்து போராட்டம்

படம்
சிட்னி: ஆஸ்​திரேலி​யா​வில் வெளி​நாட்​டினர் அதிக அளவில் குடியேறி வரு​கின்​றனர். அந்​நாட்​டில் வசிக்​கும் 2-ல் ஒரு​வர் வெளி​நாட்​டில் பிறந்​தவ​ராக அல்​லது அவரது பெற்​றோர் வெளி​நாட்​டில் பிறந்​தவ​ராக உள்​ளார். இதற்கு நவ-​நாஜிக்​கள் மற்​றும் வலது​சாரி அமைப்​பினர் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், வெளி​நாட்​டினரின் குடியேற்​றத்​தைத் தடுக்க வலி​யுறுத்தி நாடு முழு​வதும் நேற்று மாபெரும் போராட்​டம் மற்​றும் பேரணி நடை​பெற்​றது. ‘ஆஸ்​திரேலி​யா​வுக்​கான பேரணி’ என்ற பெயரில் நடை​பெற்ற இதில் பல்​லா​யிரக்கணக்​கானோர் பங்​கேற்​றனர். சிட்னி நகரில் நடை​பெற்ற போராட்​டத்​தில் சுமார் 8 ஆயிரம் பேர் தேசி​யக் கொடியேந்​தி​யபடி பங்​கேற்​றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவும், சீனாவும் கூட்டாளிகள்தான், எதிரிகள் அல்ல!- பிரதமர் மோடி, அதிபர் ஜி ஜின்பிங் உறுதி

படம்
தியான்ஜின்: ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, தியான்ஜின் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது, ‘இந்தியாவும், சீனாவும் கூட்டாளிகள்தான், எதிரிகள் அல்ல’’ என்று இரு தலைவர்களும் உறுதிபட தெரிவித்தனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு: இன்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார்

படம்
தியான்ஜின்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று சீனாவின் தியான்ஜின் நகருக்கு சென்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அவர் இன்று சந்தித்துப் பேசுகிறார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற 15-வது இந்திய, ஜப்பான் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதன் பிறகு அவர் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் 90 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடியை முதலீடு செய்ய உடன்பாடு எட்டப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எதிர்க்கட்சிகள் ஆளும் 8 மாநிலங்கள் ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கு ஆதரவு: ஜெய்ராம் ரமேஷ் தகவல் https://ift.tt/OUwdWkI

படம்
புதுடெல்லி: ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் 8 மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஜிஎஸ்டி அடுக்கை 4-லிருந்து 2 ஆக குறைப்பது மற்றும் வரி விகிதங்களை குறைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு கர்நாடகா, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளும் 8 மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ட்ரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை: மேல்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

படம்
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த அதிபர் ட்ரம்பின் உத்தரவுகள் சட்டவிரோதமானவை என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கூடுதல் வரிவிதிப்பை நீக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ட்ரம்ப் அரசு மேல்முறையீடு செய்ய அக்டோபர் 14-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரிவிதிப்புக் கொள்கையை அமெரிக்கா கடை பிடிக்கும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். கனடா, மெக்சிகோ உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடும் இறக்குமதி வரிகளை விதித்துள்ளார். தனது இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சீனா மீதான வரியை ட்ரம்ப் பல மடங்கு உயர்த்தினார். பின்னர், சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வரி விகிதத்தை குறைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஏமனில் இஸ்ரேல் தாக்குதல்: ஹவுதி அரசின் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டார்

படம்
சனா: ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி அரசின் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சிப் படை சனிக்கிழமை அன்று அறிவித்தது. இந்த தாக்குதல் ஏமன் தலைநகர் சனாவில் நடந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹவுதி அரசின் அமைச்சர்கள் மற்றும் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது. இதை அன்றைய தினம் இஸ்ரேல் பாதுகாப்பு படையும் உறுதி செய்திருந்தது. ‘ஹவுதி தீவிரவாத படையின் முக்கிய இடத்தின் மீது துல்லிய தாக்குதல் மேற்கொண்டோம்’ என இஸ்ரேல் தெரிவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் உக்ரைனின் மிகப் பெரிய போர்க்கப்பல் மூழ்கியது

படம்
மாஸ்கோ: உக்ரைன் நாட்டின் மிகப் பெரிய போர்க்கப்பலை, ட்ரோன் மூலம் ரஷ்யா தகர்த்தது. இதில் உக்ரைன் வீரர் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயம் அடைந்தனர். காணாமல் போன வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முயற்சி எடுத்தார். ஆனால் ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீதான தாக்குதலை இன்னும் நிறுத்தவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜப்பான் - இந்தியா இணைந்தால் புதிய தொழிற்புரட்சி: டோக்கியோவில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி நம்பிக்கை

படம்
டோக்கியோ: ஜப்பானின் தொழில்நுட்பமும், இந்தியாவின் திறமையும் இணைந்தால், 21-ம் நூற்றாண்டில் புதிய தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று டோக்கியோவில் நடைபெற்ற இந்திய, ஜப்பான் வருடாந்திர மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 15-வது இந்திய, ஜப்பான் வருடாந்திர மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகில் வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கிறது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் 40 பில்லியன் டாலருக்கு அதிகமாக முதலீடு செய்துள்ளன. 80 சதவீத ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை விரிவுபடுத்த விரும்புகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜப்பான், சீனாவுக்கு பிரதமர் மோடி பயணம்: சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ஆக.31-ல் சந்திக்கிறார் https://ift.tt/qvbIgm5

படம்
புதுடெல்லி: ஜப்பான், சீனாவில் பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். முதல்கட்டமாக அவர் நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு புறப்பட்டார். அங்கிருந்து சீனா செல்லும் அவர் ஆகஸ்ட் 31-ம் தேதி அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசுகிறார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 15-வது இந்திய, ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு ஆகஸ்ட் 29, 30-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து டோக்கியோவுக்கு புறப்பட்டார். இந்த மாநாட்டில் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை, அவர் சந்திக்கிறார். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகள் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘ரஷ்யா யுத்தம் செய்ய இந்தியா நிதியுதவி’ - 50% வரி விதிப்பு குறித்து ட்ரம்ப்பின் ஆலோசகர் கருத்து

படம்
வாஷிங்டன்: தொடர்ச்சியாக தள்ளுபடி விலையில் ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதுதான் உக்ரைன் மீதான உக்கிர தாக்குதலுக்கு காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறியுள்ளார். இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை (ஆக.27) அமலுக்கு வந்தது. ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியோடு இந்த கூடுதல் 25 சதவீதமும் சேர்ந்துள்ள நிலையில், 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும். இதனால், தொழிலாளர் சார்ந்த துறைகள் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“நீண்ட போர்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்” - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் https://ift.tt/WPepERZ

படம்
புதுடெல்லி: புதிய தொழில்நுட்பங்கள் போரின் தன்மையை மாற்றியமைத்துள்ளதால், குறுகிய மற்றும் நீண்ட போர்களுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “வீரர்களின் எண்ணிக்கையும் ஆயுதங்களும் மட்டுமே இனி போதுமானதாக இருக்காது. சைபர் யுத்தம், செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா வான்வழி ட்ரோன்கள் மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு ஆகியவையே எதிர்காலப் போர்களை வடிவமைக்க உள்ளன. புதிய தொழில்நுட்பங்கள் போரின் தன்மையை மாற்றியமைத்துள்ளதால், குறுகிய மற்றும் நீண்ட போர்களுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும். துல்லியமாக வழிநடத்தப்படும் ஆயுதங்கள், நிகழ்நேர நுண்ணறிவு மற்றும் தரவு சார்ந்த தகவல்கள் ஆகியவையே இப்போது எந்தவொரு யுத்தத்திலும் வெற்றிக்கான அடித்தளமாக மாறிவிட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்கா | பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 2 குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு

படம்
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். மினசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரில் இயங்கி வரும் ஒரு கத்தாலிக்க பள்ளியில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. 395 குழந்தைகள் படிக்கும் இந்த பள்ளியில் நுழைந்த மர்ம நபர் ஒருவர், பள்ளியில் உள்ள தேவாலயத்தில் குழந்தைகள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஜன்னல் வெளியாக திடீரென குழந்தைகளை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாற்று மதத்தைச் சேர்ந்த பெண் யூ டியூபர் குருவாயூர் கோயில் குளத்தில் இறங்கியதால் சர்ச்சை https://ift.tt/G7PfEVm

படம்
குருவாயூர் : கேரள மாநிலம் குரு​வாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயில் உலகம் முழு​வதும் புகழ்​பெற்​றது. ஒவ்​வொரு ஆண்​டும் கோடிக்​கணக்​கான பக்​தர்​கள் வந்து வழிபட்டு செல்​கின்​றனர். இந்​நிலை​யில் இந்​தக் கோயி​லின் புனித குளத்​தில் கடந்த சில நாட்​களுக்கு முன் ஜாபர் என்ற யூ டியூபர் குரு​வாயூர் ரீல்ஸ் பதிவு செய்து வெளி​யிட்​டார். சமூக வலை​தளத்​தில் பிரபல​மாக உள்ள ஜாஸ்​மின் ஜாபர், கேரள பிக் பாஸ் நிகழ்ச்​சி​யிலும் பங்​கேற்​றவர். குரு​வாயூர் கோயி​லில் இந்து அல்​லாத பிற மதத்​தவர்​களுக்கு அனு​மதி கிடை​யாது. இந்​நிலை​யில் ஜாஸ்​மின் ஜாபர், கோயில் குளத்​தில் இறங்கி ரீல்ஸ் பதிவு செய்து வெளி​யிட்​டது பக்​தர்​கள் மத்​தி​யில் பெரும் கொந்​தளிப்பை ஏற்​படுத்​தி​யது. கோயில் குளத்​தின் புனிதத்​தன்மை கெட்​டு​விட்​ட​தாக பக்​தர்​கள் புகார் செய்​தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஸ்ரேலின் அயர்ன் டோம் போல இந்திய வான்வெளியை சுதர்சன சக்கரம் பாதுகாக்கும்: முப்படை தலைமை தளபதி தகவல் https://ift.tt/z6Pfx3J

படம்
இந்தூர்: இஸ்ரேலின் அயர்ன் டோம் போல், இந்தியாவின் சுதர்சன சக்கரம் வான் பாதுகாப்பு கவசம் உருவாக்கப்படும் என முப்படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் தெரிவித்துள்ளார். இந்தியா மீது எதிர்காலத்தில் போர் மூண்டால், குஜராத்தின் ஜாம்நகர் எல்லைப் பகுதியில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் சமீபத்தில் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பு இன்று முதல் அமல்: பணிய மாட்டோம் என பிரதமர் உறுதி https://ift.tt/nl7kXTf

படம்
புதுடெல்லி: இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு இன்று முதல் அமலாகிறது. எனினும், எந்த நெருக்கடிக்கும் பணிய மாட்டோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் 25 சதவீத வரிவிதிப்பு தொடர்பான வரைவு அறிக்கையை அமெரிக்க சுங்கம் மற்றும் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. ரஷ்யாவால் அமெரிக்காவுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான கொள்கையின் கீழ் இந்த வரிகள் இந்தியா மீது விதிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (ஆக. 27) நள்ளிரவு 12.01 மணிக்கு பிறகு கூடுதல் வரிகள் அமலுக்கு வரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“50 ஆண்டுகள் பாஜக ஆட்சி என்று அமித்ஷா சொல்வதன் காரணம்…” - ராகுல் காந்தி விவரிப்பு https://ift.tt/k2iM8Ua

படம்
பாட்னா: தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிஹாரில் 1,300 கிலோ மீட்டர் 'வாக்காளர் அதிகார யாத்திரை'யைத் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். ஆகஸ்ட் 17 ஆம் தேதி சசாரமில் இருந்து தொடங்கிய 16 நாள் யாத்திரை, செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் ஒரு பேரணியுடன் முடிவடைகிறது. இந்த யாத்திரையில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், சிபிஎம்எல் தலைவர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர். சுபால் பகுதியில் இன்று நடைபெற்ற யாத்திரையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இணைந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: பத்திரிகையாளர்கள் 5 பேர் உட்பட 20 பேர் உயிரிழப்பு

படம்
கான் யூனிஸ்: கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் மாதம் முதல் ஹமாஸ் தீவிர​வா​தி​கள், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையில் மோதல் நடைபெற்று வருகிறது. இந்​நிலை​யில், கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்​து​வ​மனை மீது இஸ்​ரேல் ராணுவம் நேற்று வான் வழி தாக்​குதல் நடத்​தி​யது. இதில் 5 பத்​திரி​கை​யாளர்​கள் உட்பட 20 பேர் உயி​ரிழந்​த​தாக காசா பொது​மக்​கள் பாது​காப்பு முகமை​யின் செய்​தித் தொடர்​பாளர் மமுத் பசல் தெரி​வித்​துள்​ளார். மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவமும் ஒப்புக்கொண்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாலியல் புகாரில் சிக்கிய கேரள எம்எல்ஏ: காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் https://ift.tt/3mIxtLg

படம்
திருவனந்தபுரம்: பாலியல் துன்புறுத்தல் புகார்களில் சிக்கிய கேரளாவின் பாலக்காடு எம்எல்ஏ ராகுல் மாம்கூட்டத்தில் (35), காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கேரளாவின் பாலக்காடு சட்டப்பேரவை தொகுதிக்கு கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸை சேர்ந்த ராகுல் மாம்கூட்டத்தில் வெற்றி பெற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் 6 நீர்மூழ்கி கப்பல் தயாரிக்க திட்டம்: ஜெர்மனி நிறு​வனத்​துடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அனுமதி https://ift.tt/YJyqTZ2

படம்
புதுடெல்லி: கடற்​படை பயன்​பாட்​டுக்​காக ஜெர்​மனி நிறு​வனத்​துடன் கூட்டு சேர்ந்து இந்​தி​யா​வில் 6 நவீன நீர்​மூழ்கி கப்​பல்​கள் தயாரிக்​கும் திட்​டம் குறித்து பேச்​சு​வார்த்தை நடத்த மத்​திய அரசு ஒப்​புதல் அளித்​துள்​ளது. இந்​திய கடற்​படை அடுத்த 10 ஆண்​டு​களில், தன்​னிடம் உள்ள 10 பழைய நீர்​மூழ்கி கப்​பல்​களை மாற்ற திட்​ட​மிட்​டுள்​ளது. எல் அண்ட் டி போன்ற தனி​யார் நிறு​வனங்​களு​டன் இணைந்து நீர்​மூழ்கி கப்​பல் தயாரிக்​கும் திட்​டத்​தி​லும் இந்​தியா ஈடு​பட்​டுள்​ளது. சீனா​வும், பாகிஸ்​தானும் தனது கடற்​படையை விரை​வாக விரிவுபடுத்தி வரு​வ​தால், இந்​தி​யா​வும் தனது கடற்​படையை நவீனப்​படுத்த வேண்​டிய கட்​டா​யம் ஏற்​பட்​டுள்​ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

​​​​​​​இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்: விண்கலத்தை தரையிறக்கும் பாராசூட் சோதனை வெற்றி https://ift.tt/XhjHPxW

படம்
விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் விண்கலம் பாதுகாப்பாக கடலில் இறங்குவதற்கான பாராசூட் சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதன்மூலம் ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல் கல்லை இஸ்ரோ எட்டியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.100 கோடி சொத்து குவித்த இன்ஜினீயர் வீட்டில் ரெய்டு: ரூ.3 கோடியை எரித்து கழிவறையில் ஊற்றிய தம்பதி சிக்கினர் https://ift.tt/VEUYoce

படம்
பாட்னா: லஞ்​சம் வாங்கி ரூ.100 கோடிக்கு மேல் சொத்து குவித்த பிஹார் இன்ஜினீயர் வீட்​டில் சோதனை நடத்த வந்த பொருளா​தார குற்​றப்​பிரிவு அதி​காரி​கள், ரூ.3 கோடி பணத்தை எரித்து அழித்​ததை கண்டு திடுக்​கிட்​டனர். பிஹார் மாநிலத்​தில் ஊரக பணி​கள் துறை​யில் இன்​ஜினீய​ராக பணி​யாற்​று​பவர் வினோத் ராய். மது​பானி, சீதா மார்ஹி ஆகிய இரு மாவட்​டங்​களில் நடை​பெறும் சாலைகள் மற்​றும் பாலங்​கள் கட்​டு​மானத்தை இவர்​தான் கவனித்து வந்​தார். ஒப்​பந்​த​காரர்​களிடம் இருந்து அதி​கள​வில் லஞ்​சம் வாங்​கு​வதை இவர் வழக்​க​மாக கொண்​டுள்​ளார். இது குறித்து பொருளா​தார குற்​றப்​பிரிவுக்கு புகார் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்து அவர்​கள் வீட்​டில் சோதனை செய்ய பொருளா​தார குற்​றப்​பிரிவு அதி​காரி​கள் முடிவு செய்​தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை நியமித்தார் அதிபர் டொனால்டு ட்ரம்ப்

படம்
நியூயார்க் : அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அலு​வலக இயக்​குன​ராக பணி​யாற்​றும் தனது நெருங்​கிய நண்​பர் செர்​ஜியோ கோரை, இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக, அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் நெருங்​கிய நண்​பர் செர்​ஜியோ கோர். இவர் வாஷிங்​டனில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளி​கை​யில் உள்ள அதிபர் அலு​வலக இயக்​குன​ராக உள்​ளார். இவரை இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். இது குறித்து சமூக ஊடகத்​தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி​யிருப்​ப​தாவது: செர்​ஜியோ கோர் எனது மிகச் சிறந்த நண்​பர். இவர் பல ஆண்​டு​களாக என்​னுடன் இருப்​பவர். அவருக்கு பதவி உயர்வு அறி​விப்​ப​தில் மகிழ்ச்​சி​யடைகிறேன். அவர் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக பணி​யாற்​று​வார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களை தொடும்: பிரதமர் மோடி உறுதி https://ift.tt/RKgFYdj

படம்
புதுடெல்லி: இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களை தொடும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சந்திரயான்-3 திட்டம் மூலம் கடந்த 2023 ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் இந்தியா கால் பதித்தது. இதை நினைவுகூரும் விதமாக கடந்த 2024-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தேசிய விண்வெளி தினவிழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு உணவளிக்க உச்ச நீதிமன்றம் தடை - முழு விவரம் https://ift.tt/cNsmCL5

படம்
புதுடெல்லி: டெல்லியில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவளிக்க தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், அவற்றைப் பிடித்து காப்பகங்களில் அடைக்கும் உத்தரவையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தெரு நாய்களால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, குழந்தைகளை நாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்து குதறும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், வெறிநாய்கள் கடிப்பதால் ரேபிஸ் தொற்று ஏற்பட்டும் பலர் இறக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் குறித்து ஊடகங்களில் அவ்வப்போது வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது - பின்னணி என்ன?

படம்
கொழும்பு: அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே (76) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் கொந்தளிப்பை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச 2022 ஜூலை மாதம் பதவி விலகினார். அவரது எஞ்சிய பதவிக் காலத்தில் ரணில் அதிபராகப் பொறுப்பேற்றார். 2024 செப்டம்பர் வரை அவர் அதிபராக பதவி வகித்தார். இவர் 5 முறை இலங்கை பிரதமராகவும் பதவி வகித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘அக்னி-5’ ஏவுகணை சோதனை வெற்ற: 5,000 கி.மீ தூரம் சென்று இலக்கை தாக்​கும் திறன் படைத்​தது https://ift.tt/U69CA1m

படம்
புதுடெல்லி: கண்டம் விட்டு கண்​டம் பாயும் அக்னி -5 ஏவு​கணை, ஒடி​சா​வில் உள்ள சண்​டிபூர் பரிசோதனை மையத்​தில் இருந்து நேற்று முன்​தினம் வெற்​றிகர​மாக பரிசோதனை செய்​யப்​பட்​டது. நாட்​டின் பாது​காப்​புக்​காக பல வகை ஏவு​கணை​களை ராணுவ ஆராய்ச்சி மேம்​பாட்டு மையம்​(டிஆர்​டிஓ) உரு​வாக்கி வரு​கிறது. அவற்​றில் மிக​வும் சக்தி வாய்ந்​தது அக்​னி-5 ஏவு​கணை. அணு ஆயுதங்​களு​டன் 5,000 கி.மீ தூரம் சென்று இலக்கை தாக்​கும் திறன் படைத்​தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: இண்டியா கூட்டணி வேட்பாளர் மனு தாக்கல் https://ift.tt/ZhzqXfr

படம்
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ) சார்பில் தமிழகத்தை சேர்ந்தவரான மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆளுநர் தபால்காரர் அல்ல; மத்திய அரசின் பிரதிநிதி - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதம் https://ift.tt/oU9WnNR

படம்
புதுடெல்லி: குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் 2-வது நாளாக நேற்று நடை​பெற்ற விசா​ரணை​யில், ‘ஆளுநர் ஒன்​றும் தபால்​காரர் இல்​லை. அவர் மத்​திய அரசின் பிர​தி​நி​தி’ என்று மத்​திய அரசு தரப்​பில் வாதிடப்பட்​டது. சட்ட மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்க ஆளுநர், குடியரசுத் தலை​வருக்கு கால நிர்​ண​யம் செய்து உச்ச நீதிமன்றம் உத்​தர​விட்​டது. இதையடுத்​து, குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பான விசா​ரணை உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதிபி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான அரசி​யல் சாசன அமர்​வில் நேற்று 2-வது நாளாக நடந்​தது. அப்​போது நடந்த வாதம்: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலையில் 5% தள்ளுபடி: ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி அறிவிப்பு

படம்
மாஸ்கோ: அமெரிக்காவிடமிருந்து பல்வேறு கட்ட அழுத்தம் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5 சதவீத தள்ளுபடியில் தொடரும் என்று இந்தியாவுக்கான ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதி அளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனால், ரஷ்யாவிலிருந்து தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிப்புடன், மொத்தம் 50 சதவீத வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர், முதல்வரை நீக்க வகை செய்யும் மசோதா: கடும் அமளிக்கிடையே மக்களவையில் அமித் ஷா தாக்கல் செய்தார் https://ift.tt/2XuO0na

படம்
புதுடெல்லி: பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தாலே, அவர்களை பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். மக்களவையில் நேற்று 130-வது திருத்த அரசியலமைப்பு மசோதா, யூனியன் பிரதேச அரசு (திருத்த) மசோதா, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று தாக்கல் செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசியல் சாசனத்தை உச்ச நீதிமன்றம் மாற்றி எழுதிவிட முடியாது: மத்திய அரசு வாதம் https://ift.tt/ZpJVlyI

படம்
புதுடெல்லி: உச்ச நீதி​மன்​றம் தனக்​குரிய சிறப்பு அதி​காரத்​தைப் பயன்​படுத்தி அரசி​யல் சாசனத்தை மாற்றி எழுத முடி​யாது என உச்ச நீதி​மன்​றத்​தில் மத்​திய அரசு தரப்​பில் ஆஜரான அட்​டர்னி ஜெனரல் கார​சா​ர​மாக வாதிட்​டார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்​றப்​பட்ட 10 சட்ட மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளிக்​காமல் கிடப்​பில் போட்​டதையடுத்து தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தது. அந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் ஜெ.பி.பர்​தி​வாலா, ஆர்​.ம​காதேவன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, உச்ச நீதி​மன்​றத்​துக்​குரிய சிறப்பு அதி​காரத்​தைப் பயன்​படுத்தி அந்த 10 மசோ​தாக்​களுக்​கும் ஒப்​புதல் அளித்​தனர். மேலும், சட்​டப்​பேர​வை​யில் மறுநிறைவேற்​றம் செய்​யப்​படும் மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒரு மாத காலத்​தி​லும், குடியரசுத் தலை​வர் 3 மாத காலத்​தி​லும் ஒப்​புதல் அளிக்க வேண்​டு மென கால நிர்​ண​யம் செய்​தும் உத்​தர​விட்​டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிப்பு: நாளை மனு தாக்கல்  https://ift.tt/i1br6NF

படம்
புதுடெல்லி / ஹைதராபாத் : குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணியின் பொது வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி (79) அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ம் தேதி ராஜினாமா செய்தார். இந்தப் பதவிக்கு செப். 9-ல் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ் ணன் அறிவிக்கப்பட்டுள்ள்ளார். தற்போது அவர் மகாராஷ்டிர ஆளுநராக பதவி வகிக்கிறார். அவரை ஏகமனதாக தேர்வு செய்ய பாஜக தலைமை தீவிர முயற்சி செய்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரஷ்யாவின் கச்சா எண்ணெயிலிருந்து இந்தியா லாபம் ஈட்டுகிறது: அமெரிக்கா மீண்டும் தாக்கு

படம்
ரஷ்யாவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெயிலிருந்து இந்தியா லாபம் ஈட்டுவதாக, அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் விமர்சித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “மாஸ்கோவிலிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி அதை சுத்திகரிக்கப்பட்ட பொருளாக மறுவிற்பனை செய்யும் இந்தியாவின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை. அவர்கள் இதன் மூலம் லாபம் ஈட்டுகின்றனர். என்று பெசென்ட் விமர்சித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம்: இண்டியா கூட்டணி திட்டம் https://ift.tt/zn6lLaU

படம்
புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம் கொண்டுவர இண்டியா கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிஹாரில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அங்கு வாக்கு திருட்டு நடைபெறுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையமும், பாஜகவும் இணைந்து செயல்படுவதாகவும் கூறியிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிப்பு: 21-ம் தேதி வேட்புமனு தாக்கல்  https://ift.tt/pE4f7qt

படம்
புதுடெல்லி: ​பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் (என்​டிஏ) குடியரசு துணைத் தலை​வர் வேட்​பாள​ராக, மகா​ராஷ்டிர ஆளுந​ரான தமிழகத்தை சேர்ந்த சி.பி.​ரா​தாகிருஷ்ணன் அறிவிக்​கப்​பட்​டுள்​ளார். குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கரின் பதவிக் காலம் வரும் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வரை இருந்த நிலை​யில், அவர் தனது பதவியை கடந்த ஜூலை 21-ம் தேதி ராஜி​னாமா செய்​தார். இந்த பதவிக்கு போட்டி இருக்​கும் பட்​சத்​தில், செப்​டம்​பர் 9-ம் தேதி தேர்​தல் நடை​பெறும் என்று தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

என்டிஏ கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு! https://ift.tt/tV4fNdH

படம்
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை இறுதி செய்வதற்காக கூட்டப்பட்ட பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மூளையை திண்ணும் அமீபா பாதிப்பால் கேரளாவில் 9 வயது சிறுமி உயிரிழப்பு https://ift.tt/CHMo8dg

படம்
திருவனந்தபுரம் : கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் தமரசேரி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடும் காய்ச்சல் காரணமாக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 14-ம் தேதி சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். சிறுமியின் இறப்புக்கான காரணம் குறித்து நுண் உயிரியியல் பரிசோதனைக் கூடத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது சிறுமியின் மூளையில் அரியவகை அமீபா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. மூளை திசுக்களை திண்ணும் இந்த அரிய வகை அமீபா மாசடைந்த ஏரி, குளம், ஆறுகளில் இந்த வகை அமீபா உயிர் வாழும். இந்த நீர்நிலைகளில் குளித்தால், மூளைவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மும்பை மருத்துவமனையில் இருந்து வங்கதேச கர்ப்பிணி கைதி தப்பியோட்டம் https://ift.tt/6pCliMz

படம்
மும்பை: ​ மும்பை ஜேஜே மருத்​து​வ​மனை​யில் இருந்து வங்​கதேச கர்ப்​பிணி கைதி ஒரு​வர் தப்​பிச் சென்​றார். போலி பிறப்​புச் சான்​றிதழை பயன்​படுத்தி இந்​திய பாஸ்​போர்ட் பெற்​றதற்​காக வங்​கதேசத்தை சேர்ந்த ரூபினா இர்​ஷாத் ஷேக் (25) என்ற பெண்ணை மும்​பை, வாஷி போலீ​ஸார் கடந்த 7-ம் தேதி கைது செய்​தனர். இதையடுத்து இவர் பைகுல்லா மகளிர் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். இந்​நிலை​யில் கடந்த 11-ம் தேதி உடல்​நலக்​குறைவு மற்​றும் 5 மாத கர்ப்​பம் தொடர்​பான மருத்​து​வப் பரிசோதனைக்​காக ஜேஜே மருத்​து​வ​மனைக்கு ரூபினா அழைத்​துச் செல்​லப்​பட்​டார். கடந்த வியாழக்​கிழமை பிற்​பகல் மருத்​து​வ​மனை கூட்​டத்தை பயன்​படுத்​திக் கொண்​டு, பாது​காப்பு பணி​யில் இருந்த காவலரை கீழே தள்​ளி​விட்டு ரூபினா தப்​பிச் சென்று விட்​டார். அவரை மும்பை போலீ​ஸார் தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்​. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்தால் குழப்பம் ஏற்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் https://ift.tt/GSnih8L

படம்
புதுடெல்லி: சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாக கிடப்பில் போட்டதையடுத்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் சோதனை: ரூ.1.68 கோடி, 6.75 கிலோ தங்கம் பறிமுதல் https://ift.tt/eRChDvN

படம்
பெங்களூரு: கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள கார்வார் தொகுதியின் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா சைல் (59) சட்ட விரோதமாக ரூ.38 கோடி மதிப்பிலான கனிம வளங்களை ஏற்றுமதி செய்ததாக சுரங்க மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு பெங்களூருவில் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மோசமான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்: ராகுலுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் https://ift.tt/n2PY7Kr

படம்
புதுடெல்லி: பாஜகவுடன் இணைந்​து, தேர்​தல் ஆணை​யம் வாக்கு திருட்​டில் ஈடு​படு​வ​தாக மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்​றம் சாட்டி வந்​தார். கடந்​தாண்டு நடை​பெற்ற மக்​களவை தேர்​தலில் மத்​திய பெங்​களூரு மக்​களவை தொகு​தி​யில், உள்ள மகாதேவ்​புரா சட்​டப்​பேரவை தொகு​தி​யில் 1 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​கு​கள் திருடப்​பட்​ட​தால், காங்​கிரஸ் வேட்​பாளர் தோல்​வி​யுற்​றார் என அவர் குற்​றம் சாட்​டி​னார். இதுகுறித்து தேர்​தல் ஆணை​யம் விடுத்​துள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஒரு​வருக்கு ஒரு ஓட்டு என்ற நடை​முறை கடந்த 1951-52-ம் ஆண்டு தேர்​தலில் இருந்து உள்​ளது. தேர்​தலில் யாராவது 2 முறை வாக்​கு​கள் அளித்​திருந்​தால், அதற்​கான ஆதா​ரத்தை தேர்தல் ஆணை​யத்​துடன் பகிர வேண்​டும். அதை​விடுத்து வாக்​காளர்​கள் அனை​வரை​யும் திருடர்​கள் என கூறக் கூடாது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு மீது பதில் அளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/4KbqJuH

படம்
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு மீண்​டும் மாநில அந்​தஸ்து வழங்க உத்​தர​விடக் கோரும் மனு மீது மத்​திய அரசு பதில் அளிக்க வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் நேற்று உத்​தர​விட்​டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்​துக்கு சிறப்பு அந்​தஸ்து வழங்க வகை செய்​யும், அரசி​யல் சாசனத்​தின் 370-வது சட்​டப் பிரிவை மத்​திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்​தது. இதையடுத்​து,அம்​மாநிலம் ஜம்​மு-​காஷ்மீர் மற்​றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்​களாக பிரிக்​கப்​பட்​டன. மத்​திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தாக்​கல் செய்​யப்​பட்ட மனுக்​களை உச்ச நீதி​மன்​றம் ஏற்​கெனவே தள்​ளு​படி செய்​தது. இந்​நிலை​யில், ஜம்மு காஷ்மீருக்கு மீண்​டும் மாநில அந்​தஸ்து வழங்க உத்​தர​விடக் கோரி கல்​வி​யாளர் ஜாஹூர் அகமது பட் மற்​றும் சமூக அரசி​யல் ஆர்​வலர் அகமது மாலிக் ஆகியோர் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் இன்று 79-வது சுதந்திர தின கோலாகலம்: 12-வது முறையாக தேசிய கொடியேற்றுகிறார் பிரதமர் https://ift.tt/1MCofqK

படம்
புதுடெல்லி: டெல்லி செங்​கோட்​டை​யில் இன்று நடை​பெறும் சுதந்திர தின விழா​வில் 12-வது முறை​யாக பிரதமர் நரேந்​திர மோடி தேசிய கொடியேற்​றி, நாட்டு மக்​களுக்கு உரை​யாற்ற உள்​ளார். நாடு முழு​வதும் 79-வது சுதந்​திர தினம் இன்று கோலாகல​மாக கொண்​டாடப்பட உள்​ளது. இதற்​காக 28 மாநிலங்​கள், 8 யூனியன் பிரதேச தலைநகரங்​கள், மாவட்ட தலைநகரங்​களில் சிறப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு உள்​ளன. தலைநகர் டெல்​லி​யில் அமைந்​துள்ள செங்​கோட்​டை​யில் இன்று காலை 7.30 மணிக்கு பிரதமர் நரேந்​திர மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்​களுக்கு உரை​யாற்ற உள்​ளார். அவர் தொடர்ச்​சி​யாக 12-வது முறை​யாக செங்​கோட்​டை​யில் தேசிய கொடியேற்ற உள்​ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பு: 44 பேர் உயிரிழப்பு, 200 பேரை காணவில்லை https://ift.tt/DPthIsW

படம்
ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பில் இரண்டு சிஐஎஸ்எஃப் வீரர்கள் உட்பட 44 பேர் உயிரிழந்துள்ளனர். 167 பேர் படுகாயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் நகரில் உள்ள சோசிட்டி கிராமத்தில் இந்த மிகப்பெரிய மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இமயமலையில் உள்ள மாதா சண்டி கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் இந்த மேகவெடிப்பு ஏற்பட்டதே உயிரிழப்புகளுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எப்-16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? - பாகிஸ்தானிடம் கேட்க அமெரிக்கா பதில்

படம்
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எப்-16 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா? என்ற கேள்விக்கு பாகிஸ்தானிடம் கேட்குமாறு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ மற்றும் விமானப்படை தளங்கள் சேதமடைந்தன. இதில் அமெரிக்க நிறுவன தயாரிப்பான எப்-16 உள்ளிட்ட போர் விமானங்களும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப் படை தளபதி சமீபத்தில் கூறியிருந்தார். இதில் எப்-16 ரக விமானமும் அடங்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐ.நா பொதுச் சபையில் உரையாற்ற அமெரிக்கா செல்கிறார் பிரதமர் https://ift.tt/fUrbvKD

படம்
புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததால், இந்தியா மீதான இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவீதமாக உயர்த்தினார். இந்நிலையில், ஐ.நா பொதுச் சபையின் 80-வது பொதுக் கூட்டம் செப். மாதம் 9-ம் தேதி தொடங்குகிறது. பொது விவாத நிகழ்ச்சி செப். 23 முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் உரையாற்றுகிறார்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘இறந்துபோன’ வாக்காளர்கள் உடன் தேநீர் விருந்து: தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என ராகுல் காந்தி பதிவு https://ift.tt/6x57Act

படம்
புதுடெல்லி: இறந்தவர்கள் என காரணம் காட்டி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பிஹார் மாநிலத்தை சேர்ந்த வாக்காளர்களுடன் தேநீர் பருகினார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி-யுமான ராகுல் காந்தி. இந்த தனித்துவ அனுபவத்தை தனக்கு கொடுத்த தேர்தல் ஆணையத்துக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். பிஹாரை சேர்ந்த ஏழு பேர் குழு புதன்கிழமை அன்று ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது இறந்தவர்கள் என காரணம் காட்டி வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையத்தால் தங்கள் பெயர் நீக்கப்பட்டதாக ராகுல் காந்தியிடம் அவர்கள் தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உயிரிழந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்த வாக்காளர்களுடன் தேநீர் பருகிய ராகுல் காந்தி! https://ift.tt/6x57Act

படம்
புதுடெல்லி: உயிரிழந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்த பிஹார் மாநிலத்தை சேர்ந்த வாக்காளர்களுடன் தேநீர் பருகினார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி-யுமான ராகுல் காந்தி. இந்த தனித்துவ அனுபவத்தை தனக்கு கொடுத்த தேர்தல் ஆணையத்துக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். பிஹாரை சேர்ந்த ஏழு பேர் குழு புதன்கிழமை அன்று ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது தாங்கள் உயிரிழந்ததாக அறிவித்த தேர்தல் ஆணையம், தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டதாக ராகுல் காந்தியிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்