இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆப்கன் மக்கள் எங்களை ஆதரிக்கின்றனர்; ஐ.நா. எங்களை அங்கீகரிக்க வேண்டும்: தலிபான்கள்

படம்
ஆப்கன் மக்கள் எங்களை ஆதரிக்கின்றனர். அதனால், ஐ.நா.,வும் எங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று தலிபான்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில், ஐ.நா.வின் நிரந்தரப் பிரதிநிதியாக ஆப்கானிஸ்தான் சார்பில் முஹம்மது சுஹைல் ஷாஹீனை தலிபான்கள் நியமித்தனர். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க தலிபான்கள் அனுமதி கோரினார். ஆனால், அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதேபோல், ஆப்கனின் முன்னாள் அரசின் ஐ.நா. பிரதிநிதியும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் அன்றாட கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 26,727 பேருக்கு தொற்று உறுதி  https://ift.tt/3B1NO8d

படம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26,727 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக அன்றாட பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 277 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தான் இன்னமும் பயங்கரவாதிகளின் புகலிடமாக இருக்கிறது: அமெரிக்க ராணுவத் தலைமையகம் பென்டகன் கவலை

படம்
பாகிஸ்தான் நீண்ட காலமாகவே பயங்கரவாதிகளின் புகலிடமாக இருக்கிறது. இது கவலையளிக்கிறது எனக் கூறியிருக்கிறார் அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாள ஜான் கெர்பி. கடந்த காலங்களில் அமெரிக்காவுடன், அப்போதைய ஆப்கன் அரசும் பாகிஸ்தான் மீது தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துவந்தது. தலிபான்களுக்கு ஆயுதம் அளிப்பது, ஆப்கனின் குளிர் காலத்தில் தலிபான் தலைவர்களுக்கு பாகிஸ்தானில் தஞ்சமளிப்பது, தலிபான் தலைவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது என பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவித்ததாக பாகிஸ்தானை குற்றஞ்சாட்டி வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெங்களூருவில் ஒரே பள்ளியில் 60 மாணவிக‌ளுக்கு கரோனா https://ift.tt/39Tuiih

படம்
கர்நாடகாவில் கரோனா பரவல் குறைந்ததால், கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி 9 முதல் 12-ம் வகுப்பு களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள சைதன்யா உறைவிட பள்ளியில் கடந்த ஞாயிற்றுகிழமை 2 மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பின் பள்ளியில் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் 60 மாணவிகளுக்கு கரோனா தொற்று இருப்பது தெரிந்தது. அவர்கள் உடனடியாக பெங்களூரு பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பெங்களூரு ஊரக மாவட்ட ஆட்சியர் மஞ்சுநாத் கூறும்போது, ‘‘மாணவிகள் ஒரே விடுதியில் தங்கி படித்ததால் எளிதில் தொற்று பரவியுள்ளது. அங்கு கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என விசாரிக்க உத்தரவிடப்பட் டுள்ளது. தொற்றுக்கு ஆளான மாணவிகளில் 14 பேர் தமிழ்நாட்டையும், 3 பேர் கேரளா வையும் சேர்ந்தவர்கள். சம்பந்தப்பட்ட பள்ளி 20-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது'' என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணை...

திருமலையில் ரூ.300 தரிசன டிக்கெட் கள்ளச் சந்தையில் விற்பனை: தேவஸ்தான ஊழியர் உட்பட 6 பேர் மீது வழக்கு https://ift.tt/3mdC8Jn

படம்
ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டை 5 ஆயிரம் வீதம், 7 டிக்கெட்டுகள் ரூ.35 ஆயிரத்திற்கு பக்தர்களுக்கு விற்றதாக திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர், வங்கி ஊழியர் உட்பட 6 பேர் மீது திருமலை போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது தினமும் சுமார் 22 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். இதில் 8 ஆயிரம் பேர் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொண்ட பக்தர்களாவர். மேலும் 8 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் சர்வ தரிசன டோக்கன்களை முன்பதிவு செய்துகொண்டவர்கள். இது தவிர, விஐபி பிரேக், வாணி அறக்கட்டளை டிக்கெட் மற்றும் சிபாரிசின் பேரில் ரூ.300 டிக்கெட்டுகளை பெற்று ‘சுபதம்’ வழியாக விரைவாக தரிசனம் செய்யும் பக்தர்கள் 6 ஆயிரம் பேர் உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கட்சித் தலைமை மீது விமர்சனம்; கபில் சிபல் வீடு முன் ஆர்ப்பாட்டம்: காங்கிரஸாருக்கு மேலிட தலைவர் கண்டனம் https://ift.tt/3kWEWem

படம்
காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் வீடு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாருக்கு மேலிட தலைவர் ஆனந்த் சர்மா கண் டனம் தெரிவித்துள்ளார். காங்கிரசில் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு பதிலாக நிரந்தரத் தலைவரை தேர்ந்தெடுக்க மூத்த தலைவர்கள் கபில் சிபல், குலாம் நபி ஆசாத் போன்றோர் ஏற்கெனவே வலியுறுத்தி வருகின்றனர். பஞ்சாபில் காங்கிரஸில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மும்பை உட்பட 4 உயர் நீதிமன்றங்களில் 16 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை https://ift.tt/3BaOYy8

படம்
மும்பை உட்பட 4 உயர் நீதிமன்றங்களில் 16 பேரை நீதிபதி களாக நியமிக்க, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்ககொலீஜியம் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, யு.யு.லலித் மற்றும் ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் உள்ளனர். மூன்று உறுப்பினர்கள் கொண்ட இந்த கொலீஜியம், உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க பெயர்களை பரிந்துரை செய்யும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எந்த சவாலையும் சந்திக்க தயாராக இருப்பதே ராணுவ கலாச்சாரம்: ராணுவ தலைமை தளபதி கருத்து https://ift.tt/3F6yGJd

படம்
தற்செயலான எந்த சூழலையும் சந்திக்க தயாராக இருப்பதே ராணுவத்தின் கலாச்சாரம் என்று ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே கூறியுள்ளார். டெல்லியில் பிஎச்டி தொழில் வர்த்தக சபையின் 116-வது ஆண்டுக் கூட்டத்தை முன்னிட்டு ‘உறுதியான இந்தியா’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் ராணுவ தளபதி எம்.எம்.நரவானே பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கொள்கை மீது தொண்டர்கள் விசுவாசம் : பாஜக.வினருக்கு ஜே.பி. நட்டா பாராட்டு https://ift.tt/3zYuHe7

படம்
உத்தராகண்டில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அங்கு தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. உத்தராகண்டை பொறுத்தவரை ஆளும் பாஜகவுக்கும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இந்நிலையில், உத்தராகண்டில் பாஜக தொண்டர்களுடன் தேசியக் கட்சி தலைவர் ஜே.பி. நட்டா நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மூத்த குடிமக்களுக்கு தனி ‘ஹெல்ப்லைன்’- வெங்கய்ய நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார் https://ift.tt/3D0CauT

படம்
மூத்த குடிமக்களுக்கு ‘எல்டர் லைன்’ என்ற பெயரில் ‘ஹெல்ப் லைன்’ வசதியை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ‘எல்டர் லைன்’ என்ற பெயரில் ஹெல்ப் லைன் வசதியை மத்திய அதிகாரமளித்தல் மற்றும் சமூகநீதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. முதியோருக்கான சர்வதேச தினமான இன்று (அக்.1), இந்த வசதியை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருமலையில் பஜனைக்கு அனுமதி கோரி ஆர்ப்பாட்டம் https://ift.tt/39UsjdG

படம்
திருமலையில் பஜனைகள் நடத்த அறங்காவலர் குழுவினரும் அதிகாரிகளும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி குண்டூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன் பஜனை குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். திருமலையில் அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு இடங்களில் பஜனை குழுவினர் ஏழுமலையானை புகழ்ந்து ஆடிப் பாடுவதுவழக்கமாக இருந்தது. இந்நிலையில் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2 ஆண்டுகளாக திருமலையில் பஜனைகள் நடத்த தேவஸ்தான அறங்காவலர் குழு அனுமதிக்கவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2,700 உலக கோடீஸ்வரர்கள் உதவினால் வறுமையில் வாடும் குழந்தைகள் பெண்களை பாதுகாக்க முடியும்: கைலாஷ் சத்யார்த்தி வலியுறுத்தல்

படம்
வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் கோடிக்கணக்கான குழந்தைகளையும், பெண்களையும் பாதுகாக்க வேண்டியது உலக நாடுகளின் கடமை என்று நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி வலியுறுத்தியுள்ளார். நியூயார்க்கில் ஐ.நா. மாநாடுநடைபெற்று வருகிறது. இதில்"வறுமையை ஒழிக்க வேலைவாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்தல்" என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடைபெற்றது.இதில் 2014-ல் நோபல் பரிசு பெற்றகைலாஷ் சத்யார்த்தி பேசியதாவது: கரோனா தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகளும், பெண்களும் வறுமையின் கோரப்பிடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஞ்சாப் முதல்வருடன் நவ்ஜோத் சிங் சித்து சந்திப்பு https://ift.tt/2Y7AuBd

படம்
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை, நவ்ஜோத் சிங் சித்து சண்டிகரில் நேற்று சந்தித்துப் பேசினார். பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. இதன்காரணமாக கடந்த 18-ம் தேதி அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி கடந்த 20-ம் தேதி பதவியேற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அதானியின் ஒரு நாள் வருமானம் ரூ.1,000 கோடி: இந்தியாவின் 2-வது பணக்காரர் ஆனார் https://ift.tt/3F7ugBS

படம்
கடந்த ஆண்டில் அதானி நாளொன்றுக்கு ரூ.1,000 கோடி வருமானம் ஈட்டியுள்ளார் என்று ஐஐஎஃப்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐஐஎஃப்எல் நிறுவனம் 2021-ம் ஆண்டுக்கான இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ரூ.7.18 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக முகேஷ் அம்பானி குடும்பம் முதல் இடம் பிடித்துள்ளது. சென்ற ஆண்டில் நாளொன்றுக்கு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் ரூ.163 கோடி அளவில் வருமானம் ஈட்டியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி - உத்தரபிரதேச எல்லையில் போராட்டம் என்ற பெயரில் ஓராண்டாக நெடுஞ்சாலையை எப்படி முடக்க முடியும்?- விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி https://ift.tt/2Y6pcMR

படம்
டெல்லி - உத்தரபிரதேச எல்லையில் போராட்டம் என்ற பெயரில் ஓராண்டாக நெடுஞ்சாலைகளை எப்படி முடக்க முடியும்? என விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தலைநகர் டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 300 நாட்களுக்கும் மேலாக தொடரும் இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, டெல்லி- ஹரியாணா, டெல்லி - உத்தரபிரதேசம் நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.13,165 கோடிக்கு ஹெலிகாப்டர் ஏவுகணைகள் கொள்முதல்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் https://ift.tt/3kWS4jV

படம்
இந்திய பாதுகாப்பு படைகளை வலுப்படுத்த ரூ.13,165 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள், வெடிபொருட்கள் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புப் படைகளை நவீனப்படுத்தவும், பலப்படுத்தவும் ரூ.13,165 கோடிக்கு அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள், பீரங்கி வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்முதல் திட்டத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ கொள்முதல் கவுன்சில் (டிஏசி) ஒப்புதல் அளித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேகாலயா தலைமை செயலராக ரெபேக்கா வனிஷா பதவியேற்பு: உயர் பதவியை எட்டிய மண்ணின் முதல் புதல்வி https://ift.tt/3F3Sugi

படம்
மேகாலயா மாநில தலைமைச் செயலாளராக அந்த மண்ணின் புதல்வி ரெபேக்கா வனிஷா சூசியாங் பதவியேற்றுள்ளார். வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் தலைமைச் செயலாளராக எம்.எஸ்.ராவ் பதவி வகித்து வந்தார். அவர் நேற்று ஓய்வு பெற்றார். இதை தொடர்ந்து மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக ரெபேக்கா வனிஷா சூசியாங் பதவியேற்றுக் கொண்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சமாதானம் ஆகிறார் சித்து?- முதல்வர் சன்னியுடன் மாலை சந்திப்பு https://ift.tt/2XVAB29

படம்
பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் உச்சபட்ச குழப்பம் நிலவும் நிலையில் அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை, நவ்ஜோத் சிங் சித்து இன்று மாலை 3 மணியளவில் சந்தித்து பேசுகிறார். பஞ்சாபில் காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் எம்எல்ஏ நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வந்தது. இதில் அமரீந்தரின் விருப்பதை மீறி, மாநில காங்கிரஸ் தலைவராக சித்து கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஈக்வேடார் சிறையில் மோதல்: கைதிகள் 100 பேர் பலி

படம்
ஈக்வேடாரில் சிறையில் நடந்த கலவரத்தில் 100 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர். ஈக்வேடார் சிறைச் சாலைகளில் கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டு தாக்குதல் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் மீண்டும் நாட்டின் முக்கிய சிறைச் சாலையில் கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முஸ்லிம் நண்பர்களுடன் பயணித்த மருத்துவ மாணவர்கள் மீது தாக்குதல்: மங்களூருவில் பஜ்ரங்தளம் அமைப்பினர் 5 பேர் கைது https://ift.tt/39NpPxC

படம்
முஸ்லிம் நண்பர்களுடன் காரில் பயணித்த மருத்துவக் கல்லூரி மாணவர்களை தாக்கிய பஜ்ரங்தளம் அமைப்பினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் 4 ஆம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மல்பே கடற்கரைக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது வழிமறித்த பஜ்ரங்தளம் அமைப்பினர் காரில் உள்ள மாணவர்களின் பெயரைக் கேட்டு சோதனை நடத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மீண்டும் உலுக்கும் கரோனா: அமெரிக்காவில் ஒரே நாளில் 2,000 பேர் பலி

படம்
அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனாவுக்கு 2,190 பேர் கரோனாவுக்கு பலியாகினர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,23,276 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 2,190 பேர் கரோனாவுக்கு பலியாயுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆப்கனில் தீவிரவாத ஒழிப்புக்கு ரஷ்ய உதவியை நாடும் அமெரிக்கா: மத்திய ஆசிய நாடுகளின் ராணுவத் தளங்களைப் பயன்படுத்த பேச்சுவார்த்தை

படம்
ஆப்கானிஸ்தானில் தீவிரவாத ஒழிப்புக்கு ரஷ்யா உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகளின் உதவியை அமெரிக்கா நாடியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சியை வீழ்த்தி தலிபான்கள் ஆட்சியமைத்துள்ளனர். தலிபான்கள் அறிவித்துள்ள அமைச்சரவையில் 15க்கும் மேற்பட்டோர் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் உள்ளவர்கள். இதனால், ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள தலிபான் ஆட்சியை இதுவரை எந்த ஒரு நாடும் வெளிப்படையாக அங்கீகரிக்கவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் மேலும் 23,529 பேருக்கு கரோனா பாதிப்பு; 311 பேர் பலி: மத்திய சுகாதார அமைச்சகம் https://ift.tt/3unww2M

படம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 23,529 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 311 பேர் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். முன்னதாக செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 18,870 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதியாகியிருந்தது. தொற்று பரவல் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்திருந்தது நல்ல முன்னேற்றமாக பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 23,529 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நிபா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்புத்திறன் வவ்வால்களில் இருக்கிறது: கேரள சுகாதார அமைச்சர் https://ift.tt/3DdtXnt

படம்
நிபா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்புத்திறன் அதனைப் பரப்பும் வவ்வால்களிடமே இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார் கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ். உலகையே கரோனா வைரஸ் ஆட்கொண்டுள்ள நிலையில், கேரளாவில் இன்னும் கரோனா வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்தியாவில் அன்றாடம் பதிவாகும் கரோனா பாதிப்பில் 50%க்கும் மேலான பாதிப்பு கேரள மாநிலத்தில் மட்டுமே பதிவாகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மே.வங்க முதல்வராக நீடிப்பாரா மம்தா பானர்ஜி?- பவானிபூர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது https://ift.tt/3olUdHU

படம்
மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் இடைத்தேர்தல் தொடங்கியது. மக்கள் காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். 6,97,164 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி, பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு முன்னதாக மம்தா பானர்ஜி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், நான் எனது சொந்த ஊரில் இருந்து தேர்வாக வேண்டும் என்பது விதி போல. இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற வேண்டும். நான் முதல்வராக இருந்தால் மட்டுமே, பாஜகவின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்துப் போராட முடியும். குடியுரிமை சட்டம், வேளாண் சட்டங்கள் என எல்லாவற்றையும் எதிர்க்க நான் முதல்வராக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதி ஏழுமலையானுக்கு ஆகம முறையில் பூஜை நடக்கிறதா?- விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/3zOKT1r

படம்
திருப்பதி ஏழுமலையானுக்கு ஆகம முறைப்படி பூஜைகள் நடப்பதில்லை என பக்தர் ஒருவர் உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமென தேவஸ்தானத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அபிஷேகம், தோமாலை சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், ஏகாந்த உற்சவங்கள் ஆகம சாஸ்திரங்களின்படி நடப்பதில்லை எனவும், தவறான முறையில் மகா லகு தரிசனத்திற்கு தேவஸ்தானம் பக்தர்களை அனுமதித்து வருவதாகவும், உற்சவ மூர்த்திகளையும் தவறான வழியில் கையாள்வதாகவும் ஸ்ரீவாரி தாதா எனும் பக்தர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பேச்சுவார்த்தை நடத்தலாம் வாருங்கள்: சித்துவுக்கு பஞ்சாப் முதல்வர் சன்னி அழைப்பு https://ift.tt/3ol0KCM

படம்
பஞ்சாபில் காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் எம்எல்ஏ நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வந்தது. இதில் அமரீந்தரின் விருப்பதை மீறி, மாநில காங்கிரஸ் தலைவராக சித்து கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை சித்து நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இதையடுத்து அவருக்கு ஆதரவாக அமைச்சர் ஒருவரும் கட்சி நிர்வாகிகள் மூவரும் பதவி விலகினர். கட்சித் தலைவராக பொறுப்பேற்ற 2 மாதங்களில் சித்து பதவி விலகியது கட்சி மேலிடத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தானுக்கு மீண்டும் அழைத்துச் செல்ல இந்திய ராணுவத்தினரிடம் பிடிபட்ட ‘டீன் ஏஜ்’ தீவிரவாதி வேண்டுகோள் https://ift.tt/2ZDeRsB

படம்
காஷ்மீரின் உரி எல்லைப் பகுதியில் கடந்த 26-ம் தேதியன்று அங்கிருந்த ஒரு பதுங்குக் குழிக்குள் மறைந்திருந்த இரண்டு தீவிரவாதிகள், ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். மற்றொரு தீவிரவாதி தன்னை உயிருடன் விடுமாறு வேண்டுகோள் விடுத்து ராணுவத்தினரிடம் சரணடைந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

60 வயது முதியோர் வேலை தேட புதிய இணையதளம் தொடக்கம்: மத்திய சமூக நீதித் துறை அறிமுகம் https://ift.tt/3oo6I5I

படம்
அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியோர் மீண்டும் வேலைவாய்ப்பை தேட, புதிய இணையதளத்தை மத்திய சமூக நீதித் துறை அமைச்சகம் நாளை அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 1951-ம் ஆண்டு 2 கோடியாக இருந்த முதியோரின் எண்ணிக்கை, கடந்த 2001-ம்ஆண்டு 7.6 கோடியாக உயர்ந்தது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படிஇந்த எண்ணிக்கை 10.4 கோடியாக அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கட்சியில் இருந்து தலைவர்கள் விலகல்: காங்கிரஸுக்கு கபில் சிபல் சரமாரி கேள்வி https://ift.tt/3F0hiG9

படம்
கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறி பாஜக உள்ளிட்ட வேறு கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் நேற்று கூறியதாவது: காங்கிரஸ் கட்சிக்கு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பவரே இல்லை. முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை. ஆம், ஐயா என்று கூறி கீழ்படிந்து செல்பவர்கள் நாங்கள் அல்ல. நாங்கள் ஜி-23 குழுவை சேர்ந்தவர்கள். பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருப்போம். பாரம்பரியம்மிக்க காங்கிரஸ் கட்சியிலிருந்து தலைவர்கள் ஏன் வெளியேறி வருகின்றனர்? from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அவமதிப்பு வழக்கில் நீதிமன்ற அதிகாரத்தை சட்டம் இயற்றுவதால் கூட பறிக்க முடியாது: ராஜிவ் தய்யாவுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து https://ift.tt/3zWTcbr

படம்
அவமதிப்பு வழக்கில் நீதிமன்றத்தின் அதிகாரத்தை சட்டம் இயற்றுவதன் மூலம் கூட பறிக்க முடியாதுஎன்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுராஜ் இந்தியா அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் ராஜிவ் தய்யா. நீதிபதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்து வந்தார். இந்த வழக்குகளில் உண்மைத் தன்மை இல்லை என்று பலமுறை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக கண்டனம் தெரிவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பட்டாசுகளில் விஷத்தன்மை வாய்ந்த ரசாயனம் பயன்படுத்துவதை ஏற்க முடியாது: உத்தரவை மீறும் செயல் என உச்ச நீதிமன்றம் கண்டிப்பு https://ift.tt/3zULWN9

படம்
பட்டாசுகளில் விஷத்தன்மை வாய்ந்த ரசாயனங்களை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீனாவில் மின்வெட்டால் தொழில் உற்பத்தி பாதிப்பு: வளர்ச்சி கணிப்பை குறைத்தது கோல்ட்மேன் சாச்

படம்
சீனாவில் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு பிரச்சினை அதிகரித்திருப்பதால் உற்பத்தி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சீனாவின் வளர்ச்சி கணிப்பை 8.2-லிருந்து 7.8 சதவீதமாகக் குறைத்துள்ளது கோல்ட்மேன் சாச் நிறுவனம். சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 66 சதவீத பங்களிக்கும் 17 மாகாணங்களில் கடந்தசில மாதங்களாக மின்வெட்டு பிரச்சினை அதிகரித்துள்ளது. இதனால் பல லட்சக்கணக்கான வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பெருமளவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிள்,டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சப்ளை செய்யும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹாசனில் முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித் மக்கள்: உரிமையை பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக பேட்டி https://ift.tt/3urjEsM

படம்
கர்நாடக மாநிலம் கொப்பலில் கோயிலில் நுழைந்த 4 வயது தலித் குழந்தைக்கு கடந்த வாரம் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல குல்பர்காவில் கோயிலுக்குள் நுழைந்த தலித் இளைஞருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல ஹாசன் மாவட்டத்தின் தின்டகூரு உள்ளிட்ட பிற இடங்களிலும் தலித் மக்களை ஆதிக்க சாதியினர் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பதாக அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமித் ஷாவுடன் அமரீந்தர் சிங் ஆலோசனை; பாஜகவில் இணைய முடிவெடுத்திருப்பதாக தகவல்: பஞ்சாப் அரசியலில் பரபரப்பு; காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி https://ift.tt/39S4i6Q

படம்
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் விரைவில் இணைவார் என்று கூறப்படுகிறது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்து இதுகுறித்து பேசினார். இதனால், காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், கட்சியின் முக்கிய தலைவர் களில் ஒருவரான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. அமரீந்தரின் எதிர்ப்பை மீறி பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். அதன்பிறகு இருவருக் கும் இடையேயான மோதல் வலுத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத் கடற்பகுதியில் புதிய புயல் ‘ஷாகீன்’- பாகிஸ்தான் நோக்கி செல்லக் கூடும் என கணிப்பு https://ift.tt/2XWMi8O

படம்
குஜராத் கடற்பகுதியில் ‘ஷாகீன்’ என்ற புதிய புயல் நாளை (அக்.1) காலைக்குள் உருவாகி பாகிஸ்தானை நோக்கி செல்லக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயலானது, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆந்திர பிரதேசத்தில் கரையை கடந்தது. இப்புயலில் எச்சங்கள் தெலங்கானா, மகாராஷ்டிரா முழுவதும் நகர்ந்து, நேற்று தெற்கு குஜராத் மீதிருந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவின் அதிவேக பைக் பந்தய வீராங்கனை கல்யாணி https://ift.tt/39OwmrR

படம்
இந்தியாவின் அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்27 வயதான கல்யாணி பொடேகர். சமீபத்தில் என்சிஆரின் புத்தா இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில், 2.08 நிமிடங்களில் இலக்கை கடந்து அசத்தினார் கல்யாணி பொடேகர். இதன் மூலம் இந்தியாவின் அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்திருந்தார் கல்யாணி பொடேகர். இதற்குமுன்னர் கல்யாணி 2.16 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்திருந்தார். இந்த சாதனையை தற்போது டுகாட்டி பனிகல் வி 4 சூப்பர் பைக் மூலம் முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாத்வான் குளோபல் கேபிடல் நிறுவனத்தின் ரூ.578 கோடி சொத்துகள் முடக்கம்: உ.பி. பி.எப். முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை https://ift.tt/3okTKpe

படம்
இங்கிலாந்தைச் சேர்ந்த வாத்வான்குளோபல் கேபிடல் லிமிடெட் நிறுவனத்தின் ரூ.578 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று முடக்கியுள்ளது. உத்தரப் பிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (யுபிபிசிஎல்) நிறுவனத்தின் ஊழியர்கள் சேம நல நிதி (பிராவிடன்ட் பண்ட்) ஊழல் புகார் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனமும் (டிஹெச்எப்எல்) ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம்; ரூ.1.30 லட்சம் கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல் https://ift.tt/3CY5KBm

படம்
நாடு முழுவதும் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்படும் தேசிய உணவுத் திட்டத்தின் பெயர் பிரதமர் போஷான் திட்டம் என மாற்றப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1.30 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதியம் சமைக்கப்பட்ட சூடான உணவுகளை வழங்க மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜெர்மன் நாடாளுமன்றப் தேர்தல்: புதிய பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸுக்கு ஏஞ்சலா மெர்க்கல் வாழ்த்து

படம்
ஜெர்மன் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஓலாஃப் ஷோல்ஸுக்கு, ஏஞ்சலா மெர்க்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு திங்கட்கிழமை அதன் முடிவுகள் வெளியாகின. சமூக ஜனநாயகக் கட்சி 25.7% வாக்குகளைப் பெற்றது. ஏஞ்சலா மெர்க்கல் தலைவராக உள்ள ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி 24.1% வாக்குகளைப் பெற்றது. கிரீன்ஸ் கட்சி 14.8% வாக்குகளைப் பெற்றுள்ளது. சுதந்திர ஜனநாயகக் கட்சி 11.5% வாக்குகளைப் பெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆப்கன் அரசுக்கு ஆதரவு அளிக்கலாமா? குழப்பத்தில் பாகிஸ்தான்

படம்
ஆப்கானிஸ்தானில் புதிதாக அமைந்துள்ள தலிபான் அரசை ஆதரிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளது பாகிஸ்தான். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் இடம்பெற்றோரில் 15க்கும் மேற்பட்டோர் ஐ.நா.வால் தேடப்படும் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள். இதனாலேயே சர்வதேச சமூகம் ஆப்கனின் தலிபான் ஆட்சிக்கு ஆதரவு அளிக்க தொடர்ந்து தயக்கம் காட்டிவருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செப். 12-ம் தேதி நடந்த இளநிலை நீட் தேர்வை ரத்து செய்க: உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் https://ift.tt/3kRDaLO

படம்
நாடு முழுவதும் கடந்த 12-ம் தேதி நடந்த மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகவும், கேள்வித்தாள் வெளியானதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கும், வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்பவருக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க பிரத்யேக ஆபரேஷனை அறிவித்த தலிபான்கள்

படம்
ஆப்கானிஸ்தானிலிருந்து ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க பிரத்யேக ஆபரேஷனை அறிவித்துள்ளனர் தலிபான்கள். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். அதன் பின்னர் அங்கு தலிபான்கள் முறைப்படி ஆட்சியமைத்தனர். ஆனாலும் உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவளிக்க இன்றளவும் தயக்கம் காட்டிவருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காபூலுக்குப் பயணிகள் விமானப் போக்குவரத்து; இந்தியாவுக்குத் தலிபான்கள் கோரிக்கை: மத்திய அரசு ஆலோசனை https://ift.tt/3ik33SO

படம்
ஆப்கன் தலைநகர் காபூல் நகருக்குப் பயணிகள் விமான சேவையைத் தொடங்குங்கள் என இந்திய விமானக் கட்டுப்பாட்டு இயக்குநகரத்துக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் தலைமையிலான அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியோடு காபூல் நகருக்கு இந்தியா சார்பில் பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இந்தச் சம்பவத்துக்குப் பின் காபூல் விமான நிலையம் மூடப்பட்டது. இந்நிலையில் கடந்த 5-ம் தேதி உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கியது. கடந்த 13-ம் தேதி சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கியது. பாகிஸ்தான் அரசு முதன்முதலில் ஆப்கனுக்கு விமான சேவையைத் தொடங்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நியூசிலாந்தில் அதிகரிக்கும் கரோனா

படம்
நியூசிலாந்தில் டெல்டா வைரஸ் காரணமாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''நியூசிலாந்தில் புதிதாக 45 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 3,000க்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக்லாந்தில் மட்டும் பெரும்பாலானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத நிந்தனை புகாரில் பெண் தலைமையாசிரியருக்குத் தூக்கு: பாக். நீதிமன்றம் தீர்ப்பு

படம்
பாகிஸ்தானில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையான முறையில் கருத்து தெரிவித்த பள்ளித் தலைமையாசிரியர் (பெண்) ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “பாகிஸ்தானில் லூகூர் நகரில் உள்ள பள்ளியில் தலைமையாசிரியராக இருப்பவர் தன்வீர். இவர் முகமது நபிகள் கடைசி இறைத் தூதர் இல்லை என்றும், நானே கடைசி இறைத் தூதர் என்றும் கூறியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆப்கனில் நீதிக்கே பாதுகாப்பில்லை: குற்றவாளிகள் என அறிவித்த பெண் நீதிபதிகளை வேட்டையாடும் கொலையாளிகள் 

படம்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு முந்தைய ஆட்சியின்போது, கொலைக் குற்றவாளிகள் என்று அறிவித்த பெண் நீதிபதிகளைத் தேடிச் சென்று கொலையாளிகள் வேட்டையாடி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானில் நீதிக்கும், நீதிபதிக்குமே பாதுகாப்பில்லாத சூழல்தான் நிலவுகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறியபின் தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றிவிட்டனர். கடந்த முறை போன்று கொடுமையான ஆட்சி இருக்காது, பெண்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படும், சுதந்திரம் வழங்கப்படும் எனத் தலிபான்கள் தரப்பில் அறிவித்தாலும் பெண்களைத் தொடர்ந்து அடிமை போன்றே நடத்துகிறார்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு சிங்கப்பூரில் மக்கள்தொகை சரிவு

படம்
சிங்கப்பூர் மக்கள்தொகை கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவைச் சந்தித்துள்ளது. கரோனா காரணமாக சிங்கப்பூரில் பொருளாதார மந்த நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்வியலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வருடாந்திர மக்கள்தொகை அறிக்கையை சிங்கப்பூர் அரசு வெளியிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சித்து ராஜினாமாவை ஏற்க காங்கிரஸ் மேலிடம் மறுப்பு: கடும் அதிருப்தியால் நடவடிக்கை பாயும் https://ift.tt/3igdLd4

படம்
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டு ஒரு மாதத்துக்குள் பதவியை ராஜினாமா செய்த நவ்ஜோத் சிங் சித்துவின் நடவடிக்கையால் காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கும், சித்துவுக்கும் இடையே ஏற்பட்ட உட்கட்சி மோதல் முற்றியதையடுத்து, காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். ஆனால், சித்து தலைவராக நியமிக்கப்பட்ட சில வாரங்களில் முதல்வர் பதவியை அமரிந்தர் சிங் ராஜினாமா செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்துத்துவா அனைவரையும் அழைத்துச் செல்கிறது; ஒன்றாக இணைக்கிறது: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு https://ift.tt/3kLNg0x

படம்
இந்துத்துவா எனும் சித்தாந்த முறை அனைவரையும் அழைத்துச் செல்கிறது, ஒன்றாக இணைக்கிறது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார். குஜராத் மாநிலம் சூரத் நகருக்கு 3 நாட்கள் பயணமாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வந்திருந்தார். சூரத் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மோகன் பாகவத் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்