இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிருஷ்ணகிரியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 27 பேரிடம் ரூ.78.74 லட்சம் மோசடி செய்ததாக துணை ஆட்சியர், வட்டாட்சியர் மீது வழக்கு https://ift.tt/muBIi8e

படம்
கிருஷ்ணகிரி: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கிருஷ்ணகிரியில் 27 பேரிடம் ரூ.78.74 லட்சம் பெற்று மோசடி செய்ததாக, துணை ஆட்சியர், வட்டாட்சியர் உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகரன் (39) மற்றும் இட்டிக்கல் அகரம், தேவசமுத்திரம், நக்கல்பட்டி, கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த 26 பேர், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் வெவ்வேறு காலகட்டங்களில் புகார் அளித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோயில் சிலைகளை புனரமைக்க நிதி திரட்டிய விவகாரம்: யூடியூபர் வங்கி கணக்கை முடக்க காவல்துறை முடிவு https://ift.tt/Gbd7rmR

படம்
ஆவடி: சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலின் உப கோயில்களின் சிலைகளை புனரமைப்பதற்கு நிதி திரட்டியதாக கைதான யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தின் வங்கி கணக்கை முடக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலின் உப கோயில்களில் உள்ளபழுதான சிலைகளை புனரமைப்பதாக கூறி, ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டையைச் சேர்ந்தகார்த்திக் கோபிநாத் என்ற யூடியூபர், சமூக வலை தளம் மூலம் பொதுமக்களிடம் நிதி திரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீஸார், நேற்று முன்தினம் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா உடல் தகனம் - பூர்வீக கிராமத்தில் நடந்த இறுதிச்சடங்கில் ஏராளமானோர் பங்கேற்பு https://ift.tt/PI2gh4i

படம்
சண்டிகர் : பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் உடல் அவரது பூர்வீக கிராமத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர். பிரபல பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் இளம் தலைவருமான சித்து மூஸ் வாலா (28), கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, மான்சா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு காரில் சென்றார். அப்போது மர்ம நபர்கள் காரை வழிமறித்து துப்பாக்கியால் சரிமாரியாக சுட்டதில் சித்து மூஸ் வாலா உயிரிழந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு https://ift.tt/dgLZA0G

படம்
ஸ்ரீநகர் : காஷ்மீர் காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் நேற்று கூறும்போது, “குல்காம் மாவட்டம் கோபால்போரா பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் சிலர் அங்கிருந்த ஒரு ஆசிரியையை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தீவிரவாதிகளை தேடி வருகிறோம்” என்றார். இத்துடன் மே மாதத்தில் மட்டும் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக, 3 போலீஸார் மற்றும் காஷ்மீர் பண்டிட் அரசு ஊழியர் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டனர். 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு: இதனிடையே, புல்வாமா மாவட்டம் ராஜ்போரா கிராமத்தில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜகவில் நாளை இணைகிறார் ஹர்திக் படேல் https://ift.tt/eDXRmI0

படம்
அகமதாபாத் : காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹர்திக் படேல், பாஜகவில் நாளை இணைகிறார். குஜராத்தில் பட்டிதார் சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி பிரபலமானவர் ஹர்திக் படேல் (28). இவர், காங்கிரஸில் சேர்ந்து பாஜகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். குஜராத் மாநில செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். எனினும், சமீபகாலமாக கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்த ஹர்திக் படேல், தன்னை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். இதையடுத்து கடந்த 18-ம் தேதி காங்கிரஸில் இருந்து விலகினார். பாஜக தலைமையை புகழ்ந்து கருத்து தெரிவித்தார். அதனால், அவர் பாஜகவில் சேரலாம் என்று செய்திகள் வெளியானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மே மாதம் வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை - மாநிலங்களுக்கு ரூ.86,912 கோடி நிதியை வழங்கியது மத்திய அரசு https://ift.tt/JoAyFgP

படம்
சென்னை : மாநில அரசுகளுக்கு மே இறுதி வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையாக ரூ.86,912 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில், தமிழகத்துக்கு ரூ.9,602 கோடி கிடைக்கும். நாடு முழுவதும் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதால் மாநிலங்களின் சொந்த வரிவருவாய் பாதிக்கப்படும் என்பதால், 5 ஆண்டுகளுக்கு இந்த பாதிப்பின் சுமையை குறைக்கும் வகையில் இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்தது. அதன் அடிப்படையில், மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க, சில பொருட்களின் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டு, அந்த வருவாய் இழப்பீட்டுக்கான நிதியத்தில் சேர்க்கப்பட்டது. அந்த தொகை கடந்த 2017 ஜூலை முதல் மாநிலங்களுக்கு இழப்பீடாக பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரபல பாடகர் கேகே மாரடைப்பால் காலமானார்; தனித்துவ குரலால் தமிழிலும் வசீகரித்தவர் https://ift.tt/B6OyXvT

படம்
கொல்கத்தா: பிரபல பின்னணி இசை பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (கேகே) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கலை தெரிவித்துள்ளார். அவருக்கு வயது 53. பிரபல பாடகரான கேகே, தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் பாடியுள்ளார். கடந்த 1968-இல் தலைநகர் டெல்லியில் வசித்து வந்த மலையாள குடும்பத்தில் பிறந்தவர். திரைப்படங்களுக்கு பின்னணி பாடல் பாடுவதற்கு முன்னதாக 3500-க்கும் மேற்பட்ட ஜிங்கிள்களுக்கு பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். தொடர்ந்து 1999 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக பாடல் பாடியிருந்தார் கேகே. 1996 முதல் திரைப்பட பாடல்கள் பாடி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தான் முதன் முதலில் அவர் திரையில் பாடியுள்ளதாக தெரிகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியீடு - முதல் 3 இடங்களை பிடித்த பெண்களுக்கு பிரதமர் வாழ்த்து https://ift.tt/I9SeWT5

படம்
புதுடெல்லி : யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 685 பேர் தோ்வாயினர். முதல் மூன்று இடங்களை பெண்களே பிடித்துள்ளனர். தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளாக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. 2021-ம்ஆண்டுக்கான பிரதான தேர்வுக்கான முடிவுகள் கடந்த மார்ச் 17-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஏப்ரல் 5 முதல் மே 26-ம் தேதி வரை நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘நெருப்புடன் மோத தேவையில்லை’ - மவுலானாக்கள் மாநாட்டில் அறிவுறுத்தல் https://ift.tt/M0wBloj

படம்
புதுடெல்லி : உத்தர பிரதேசத்தில் பாபர் மசூதி - ராமர் கோயில் வழக்கில் நவம்பர் 2019-ல் வெளியான தீர்ப்புக்கு பின்பு மதுராவின் ஷாய் ஈத்கா மற்றும் வாரணாசியின் கியான்வாபி மசூதிகளின் மீதும் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இச்சுழலில், நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம் மவுலானாக்களின் மாநாடு, உத்தர பிரதேசத்தின் தியோபந்த் நகரில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 5,000 மவுலானாக்கள் பங்கேற்றனர். ஜமாத்-எ-உலாமா ஹிந்த் (ஜேயூஎச்) நடத்திய மாநாட்டில் மசூதிகளுக்கு எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ககன்யான் விண்கலத்தை உருவாக்க மருத்துவர்களுடன் இஸ்ரோ ஆலோசனை https://ift.tt/g9MOuUJ

படம்
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ‘ககன்யான்’ திட்டப் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளது. இதுபற்றி இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வதற்கு, அவர்கள் செல்லும் விண்கலனில் சவுகரியமான சூழல் இருக்க வேண்டும். அசாதாரணமான சூழலில் அவர்களை பாதுகாப்பதாகவும் இருக்க வேண்டும். அதனால் மனிதனை விண்ணுக்கும் அனுப்பும் விண்கலத்தை தரமாக, நம்பகத்தன்மையுடன் உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஒரு வெற்றிகரமான, மனிதனை அனுப்பும் விண்கலத்தை உருவாக்க, நல்ல அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். இந்த விண்கலத்தை உருவாக்குவது தொடர்பாக இஸ்ரோ பொறியாளர்கள், மருத்துவர்கள் இடையே கலந்துரையாடல்கள், விவாதங்கள் நடந்து வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 23 வயதில் ரூ.10 லட்சம் வழங்கும் திட்டம் - பிரதமர் தொடங்கி வைத்தார் https://ift.tt/iCcGHrR

படம்
புதுடெல்லி : கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், அந்தக் குழந்தைகளுக்கு 23 வயது நிறைவடைந்ததும் ரூ.10 லட்சம் ரொக்கமாக வழங்கப்படும். அத்துடன் இலவச கல்வி, மருத்துவம், உயர்கல்வி பயிலும்போது மாதம் ரூ.4 ஆயிரம் உதவித் தொகையும் வழங்கப்படும். கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், ‘பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ட்ரன்’ என்ற திட்டத்தை கடந்த ஆண்டு மே 29-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். கரோனாவால் பெற்றோர், தத்து எடுத்த பெற்றோர் அல்லது சட்ட ரீதியிலான பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்பு அளிப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதன்படி, பாதிக்கப்பட்ட குழந்தைகள் 23 வயதை எட்டும்வரை அவர்களுக்குத் தேவையான கல்வி, மருத்துவம், தங்க இடம், உணவு வழங்கப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை https://ift.tt/4b7d8vQ

படம்
கோவை : பேரூரை அடுத்த பச்சாபாளையத்தில் உள்ள, ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை பேரூரை அடுத்த பச்சாபாளையத்தில், கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட் எனப்படும் ஆவின் நிறுவனம் உள்ளது. இங்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பால் ஊற்றும் உறுப்பினர்கள் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 340-க்கும் மேற்பட்ட பிரதான கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் இருந்து, தினமும் ஏறத்தாழ ஒரு லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாமக்கல்: ரூ.19 லட்சத்தை கொள்ளையடித்து நாடகமாடிய 6 பேர் கைது https://ift.tt/kbdo4LC

படம்
நாமக்கல் : ரூ.19 லட்சத்தை கொள்ளையடித்து நாடகமாடிய ஓட்டுநர் உள்பட 6 பேரை நாமக்கல் புதுச்சத்திரம் போலீஸார் கைது செய்துள்ளனர். நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள குப்பநாயக்கனூரை சேர்ந்தவர் சரக்கு ஆட்டோ ஓட்டுநர் ஜீவா(25). இவர் பேளுக்குறிச்சியைச் சேர்ந்த ஹரிஹரசுதனுக்கு சொந்தமான 40 டன் மிளகு பொருளை விருதுநகர் மாவட்டத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்துள்ளார். பின் கடந்த 20ம் தேதி சொந்த ஊரான திருமலைப்பட்டிக்கு வந்துள்ளார். அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் எடையப்பட்டி வழியாக பேளுக்குறிச்சியில் உள்ள ஹரிஹரசுதனிடம் மிளகு விற்பனை செய்த தொகை ரூ.19 லட்சத்தை வழங்க சென்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிவில் சர்வீஸ் தேர்வில் 685 பேர் வெற்றி: முதல் மூன்று இடங்களில் பெண்கள் அசத்தல் https://ift.tt/FCwoOJU

படம்
புது டெல்லி: 2021-க்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் மொத்தம் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் பெண்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற சிவில் சர்வீஸ் முதற்கட்ட தேர்வை சுமார் 5 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர். அவர்களில் 9214 பேர் மட்டுமே முதன்மைத் தேர்வு எழுத தகுதி பெற்றனர். அதில் 1,824 பேர் நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர். ஒட்டுமொத்தமாக இந்தத் தேர்வுக்கு சுமார் 10 லட்சம் பேர் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குண்டூரில் 'அண்ணா கேன்டீன்': நடிகர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார் https://ift.tt/wfuonsV

படம்
குண்டூர்: தமிழகத்தில் அம்மா உணவகத்தைப் போன்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடைபெற்றபோது, ஆந்திராவிலும் அண்ணா கேன்டீன் தொடங்கப்பட்டது. தேர்தலுக்கு சுமார் 6 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த கேன்டீன்கள், குறிப்பாக ஏழை, எளியவர்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருந்தது. ஆனால், தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வி அடைந்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அண்ணா கேன்டீனும் மூடுவிழா கண்டது. இதேபோன்று தெலுங்கு தேசம் சார்பில் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம் https://ift.tt/olqP6GJ

படம்
சென்னை: தென்மேற்கு பருவமழை வழக்கமாக கேரளாவில் ஜூன் 1 அல்லது அதற்கடுத்த நாட்களில் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு 3 நாட்கள் முன்னதாக நேற்றே தொடங்கியதாக இந்தியவானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று தென் தமிழகத்தின் சில பகுதிகளில் பரவியுள்ளது. இது அடுத்த சில நாட்களில் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பரவ வாய்ப்பு உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

'மனதின் குரல்' நிகழ்ச்சியில் தஞ்சை மகளிர் சுயஉதவி குழுவினரை பாராட்டிய பிரதமர் மோடி https://ift.tt/EAR3Mwi

படம்
புதுடெல்லி: தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை அனுப்பிவைத்த தஞ்சை தாரகைகள் மகளிர் சுயஉதவிக் குழுவினரை, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டி பேசினார். பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, இந்த மாதத்துக்கான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது. சில தினங்களுக்கு முன்பு நம்நாடு புதிய சாதனை படைத்திருக்கிறது. கிரிக்கெட் போட்டியில் நம்வீரர்கள் சதம் அடித்தால் நீங்கள்அனைவரும் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆனால், இந்தியா மற்றொரு துறையில் சதம் அடித்துள்ளது. கடந்த 5-ம் தேதி நம் நாட்டின் யூனிகார்ன்கள் எண்ணிக்கை 100-ஐ தொட்டது. ஒரு யூனிகார்ன் என்பது ரூ.7,500 கோடி மதிப்புள்ள ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். மொத்த யூனிகார்ன்களின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் கோடியாகும். இது இந்தியர்களுக்கு பெருமை தரும் விஷயமாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India ...

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

படம்
கொல்கத்தா: சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான பயணிகள் ரயில் சேவை ஆரம்பமாகி உள்ளது. கரோனா தொற்று காலமாக ரயில் சேவை தடைப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கிழக்கு ரயில்வே சார்பில் இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு இடையே மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வங்கதேச நாட்டிற்கு இயக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-க்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான ரயில் சேவை முடங்கி இருந்தது. இந்நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ரயில் சேவை தொடங்கியுள்ளது. இதனை கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுதந்திரத்துக்கு முன்பிருந்தே பாகிஸ்தானில் வசிக்கும் தமிழ் குடும்பங்கள் நடத்தும் மாரியம்மன் கோயில் திருவிழா

படம்
சென்னை : பாகிஸ்தான் கராச்சியில் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தமிழ் இந்து குடும்பங்கள் வசித்து வருகின்றன. அரசு பாதுகாப்புடன் ஆண்டுதோறும் மாரியம்மன் கோயில் திருவிழாக்களையும் அவர்கள் நடத்தி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் ஒன்றுக்கொன்று எதிரி நாடுகளாக பார்த்து வருகின்றன. காஷ்மீர் எல்லையில் நிலவும் தீவிரவாத தாக்குதல்கள் உலக நாடுகளையே அச்சத்துக்கு உள்ளாக்கி வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவதை இந்திய ராணுவம் தொடர்ந்து தடுத்து வருகிறது. இதில் ஏராளமான பாகிஸ்தான் தீவிரவாதிகளும், இந்திய ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப் படையினர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது. பாகிஸ்தான் முஸ்லிம் நாடாக இயங்கி வரும் நிலையில், அங்கு சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தமிழ் இந்துக்கள் வாழ்ந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அங்கு ஆண்டுதோறும், அரசு பாதுகாப்புடன் அச்சமின்றி மாரியம்மன் கோயில் திருவிழாக்களை நடத்தி வருகின்றனர். வரும் 12-ம் தேதி அக்கோயிலுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. ...

மே 31-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முதல்வர்களுடன் ஆலோசனை - காணொலி மூலமாக கலந்துரையாடுகிறார் https://ift.tt/wPKlOoU

படம்
சிம்லா : இமாச்சலப் பிரதேச மாநிலத் தலைநகரம் சிம்லாவில் இருந்து, அனைத்து முதல்வர்களுடனும் பிரதமர் மோடி வரும் 31-ம் தேதி காணொலி மூலமாக கலந்துரையாடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வரும் 30-ம் தேதியுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் நற்பணிகள், நலத் திட்டங்கள், அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புழல் மத்திய சிறை காவலர் தற்கொலை https://ift.tt/8B2bCYG

படம்
திருவள்ளூர் மாவட்டம், புழல் மத்திய சிறைச்சாலையில் விசாரணை பிரிவு காவலராக பணிபுரிந்து வந்தவர் காசிராமன் (29). திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு சரண்யா என்பவருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் புழல் சிறை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக தம்பதியினர் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடுமுழுவதும் குழாய் மூலம் குடிநீர்: 50 சதவீதம் நிறைவு https://ift.tt/1wdkSjs

படம்
புதுடெல்லி: நாடுமுழுவதும் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தில் 50 சதவீதம் பணிகள் முடிந்துள்ளதாக மத்திய அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தவறான முடிவால் பல்லாவரம் அருகே பரிதாபம்: மனைவி, குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த பொறியாளர் - போலீஸார் விசாரணை https://ift.tt/ZPlbkmW

படம்
பல்லாவரம் அருகே மனைவியையும் தனது 2 குழந்தைகளையும் கொலை செய்த மென்பொறியாளர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடன் தொல்லையால் இச்சம்பவம் நடந்திருப்பதாகத் தெரிகிறது. பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (41). தரமணியில் ஒரு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி காயத்ரி (39). அதேபகுதியில் நாட்டு மருந்து கடை நடத்தி வந்தார். பொழிச்சலூர் மண்டல பாஜக மகளிர் அணி செயலாளராகவும் இருந்து வந்தார். இவர்களுக்கு நித்யஸ்ரீ (13) என்ற மகளும் சாய்கிருஷ்ணா (8) என்ற மகனும் உள்ளனர். மகள் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பும் மகன் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது https://ift.tt/mnPSV5Q

படம்
சென்னையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் காவல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். கடந்த 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர், கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேர் மற்றும் வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர் என மொத்தம் 7 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தட்சிணா மூர்த்தி நிலை இனி? - சிங்கப்பூரில் மரண தண்டனைக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் இளம் குரல்கள்!

படம்
தன் மே க்யூயானும் அவரது நண்பர்களும் சமீபத்தில் சிங்கப்பூர் அதிபருக்கு கடிதம் ஓன்றை எழுதியிருந்தனர். அக்கடிதத்தில், ‘44 கிராம் ஹெராயின் (மூன்று டேபிள்ஸ்பூன் அளவு) கடத்திய குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்டு 7 ஆண்டுகள் சிறையில் உள்ள தட்சிணா மூர்த்தியின் மரண தண்டனை தடை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சிங்கப்பூரில் மரணத் தண்டனைகளுக்கு எதிரான போராட்டங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சிங்கப்பூர் தமிழரான நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு போதை பொருட்கள் கடத்தல் குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. அறிவுசார் குறைபாடுடைய நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சிங்கப்பூரில் இளைஞர்கள் பலரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்தன. சர்வதேச அளவில் எதிர்ப்புக் குரல்களும் பதிவு செய்யப்பட்டன. நாகேந்திரன் அறிவுசார் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி என அவர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும், அதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இறுதியில் கடந்த மாதம் 27-ஆம் ...

சொத்து குவிப்பு வழக்கில் சவுதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு https://ift.tt/OLfdVXi

படம்
புதுடெல்லி : ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, 1993-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுக்கு இடையே வருமானத்துக்கு அதிகமாக ரூ.6.09 கோடி சொத்து குவித்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்து கடந்த 2010ம் ஆண்டு குற்றபத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், கடந்த 21-ம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலா குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் சொத்து குவித்த வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி விகாஸ் துல் தீர்ப்பளித்தார். மேலும், ரூ.50 லட்சம் அபராதம் விதித்தும் அவரது 4 சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘இ-ஷ்ரம்’ இணையதளத்தில் 27 கோடிக்கும் மேற்பட்ட முறைசாரா தொழிலாளர்கள் பதிவு - உச்ச நீதின்றத்தில் மத்திய அரசு தகவல் https://ift.tt/VKIf0Si

படம்
புதுடெல்லி : கரோனா தொற்று நீடிக்கும் வரை புலம்பெயர்த் தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன், நல உதவிகளை அளிக்கும் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதி, ‘‘மாநில அரசுகள் அளிக்கும் தகவல் அடிப்படையில், தேசிய தகவல் மையத்துடன் ஆலோசித்து உருவாக்கப்பட்ட ‘இ-ஷ்ரம்’ இணையதளத்தில் சுமார் 27.45 கோடி முறைசாரா தொழிலாளர்கள் அல்லது புலம்பெயர் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார். இவர்களுக்கான திட்டங்கள் குறித்த அறிக்கையை, ஜூலை 20-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முறைகேடாக விசா பெற்றுத்தந்த வழக்கு: சிபிஐ முன்பு 2-வது நாளாக ஆஜரானார் கார்த்தி சிதம்பரம் https://ift.tt/8a5wOU6

படம்
புதுடெல்லி : முறைகேடாக விசா பெற்றுத் தந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் நேற்று 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார். காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம் 2011-ல் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் 263 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா பெற்றுத் தந்தார் என்றும் இதற்காக கார்த்தி ரூ.50 லட்சம் லஞ்சமாகப் பெற்றார் என்றும் சிபிஐ வழக்குபதிவு செய்தது. இதற்கிடையில், நீதிமன்ற அனுமதியுடன் வெளிநாடு சென்றிருந்த கார்த்தி, நாடு திரும்பியதை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் மாலை 6 மணி வரை விசாரணை நடத்தினர். இந்நிலையில் கார்த்தி நேற்று 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சார் தாம் பாத யாத்திரையில் இதுவரை 74 பேர் உயிரிழப்பு https://ift.tt/hk1cFT2

படம்
டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தில் சார் தாம் புனித யாத்திரை கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இதில் உள்ள 4 புனித தலங்களில் யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகியவை உத்தரகாசி மாவட்டத்திலும், கேதார்நாத் ருத்ரபிரயாக் மாவட்டத்திலும், பத்ரிநாத் சமோலி மாவட்டத்திலும் உள்ளன. இந்த யாத்திரை தொடங்கியதில் இருந்து 3.35 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கேதார்நாத்துக்கும், 3.15 லட்சம் பக்தர்கள் பத்ரிநாத்துக்கும், 1.49 லட்சம் பக்தர்கள் யமுனோத்ரிக்கும், 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கங்கோத்ரிக்கும் கடந்த புதன்கிழமை வரை சென்றுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா வைரஸ் தொற்று காரணமாக சார் தாம் யாத்திரை ரத்து செய்யப்பட்டதால், இந்தாண்டு சார் தாம் யாத்திரைக்கு அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். இந்த யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 74 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜனநாயகத்தை பாஜக பலவீனப்படுத்துகிறது - காங். முன்னாள் தலைவர் ராகுல் குற்றச்சாட்டு https://ift.tt/Y9pkQry

படம்
புதுடெல்லி : நாட்டின் முதல் பிரதமர் நேருவின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: நேரு மறைந்து 58 ஆண்டுகள் ஆகிறது. அவரது சிந்தனைகள், அரசியல், தொலைநோக்கு பார்வை இன்றும் பொருத்தமானவையாக உள்ளன. அவரது கொள்கைகள் நம்மை வழிநடத்தும். ஐஐடி, ஐஐஎம், எல்ஐசி, ஐடிஐ, பிஎச்இஎல், என்ஐடி, பிஏஆர்சி, எய்ம்ஸ், இஸ்ரோ, செயில், ஒஎன்ஜிசி, டிஆர்டிஓ ஆகிய அரசு அமைப்புகளை நேரு உருவாக்கினார். நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தினார். கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் ஜனநாயகத்தை பாஜக பலவீனப்படுத்தி உள்ளது. அரசு அமைப்புகளை அழித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீரில் டிவி நடிகையை கொன்ற லஷ்கர் தீவிரவாதிகள் 2 பேர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு https://ift.tt/RLVzNDC

படம்
ஸ்ரீநகர் : காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தொலைக்காட்சி நடிகையைக் கொன்ற 2 தீவிரவாதிகள் உட்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் போலீஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து, புல்வாமா மாவட்டம் அவந்தி போரா பகுதியில் நேற்று முன்தினம் இரவு தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். அப்போது, நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஷாகித் முஷ்டாக் பட், பர்ஹான் ஹபீப் ஆகிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

லடாக் பகுதியில் வாகனம் ஆற்றில் கவிழ்ந்து 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல் https://ift.tt/Mnwg6mS

படம்
புதுடெல்லி : லடாக் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்ததில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். லடாக் பகுதியின் பர்தாபூர் முகாமில் இருந்து ஹனீப் என்ற இடத்தில் உள்ள துணை முகாமுக்கு நேற்று காலை ராணுவ வீரர்கள் 26 பேர் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். துர்துக் செக்டார் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் இருந்து விலகிச் சென்று அருகே உள்ள ஷயோக் ஆற்றில் கவிழ்ந்தது. இதில் வாகனத்தில் இருந்த 7 வீரர்கள் உயிரிழந்தனர். மற்ற வீரர்கள் காயமடைந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அதிகபட்ச வேலைவாய்ப்புகளை கொண்டதாக ட்ரோன் துறை உள்ளது  - பிரதமர் மோடி https://ift.tt/IbPts7i

படம்
புதுடெல்லி: பொதுமக்களுக்கு தொழில்நுட்பம் செல்லும் போது அதன் பயன்பாட்டு வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் மிகப் பெரிய ட்ரோன் திருவிழாவான "பாரத் ட்ரோன் மகோத்ஸவத்-2022" –ஐ பிரதமர் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைத்து இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு: இந்தியாவின் மிகப் பெரிய ட்ரோன் திருவிழாவான பாரத் ட்ரோன் மகோத்ஸவத்-2022-ஐ பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைத்தார். கிசான் ட்ரோன் விமானிகளுடன் கலந்துரையாடிய அவர் வான்வெளி ட்ரோன் செயல் விளக்க காட்சிகளை பார்வையிட்டார். ட்ரோன் கண்காட்சி மையத்தில் புதிய தொழில்முனைவோருடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், கிரிராஜ் சிங், ஜோதிராதித்ய சிந்தியா, அஸ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா, பூபேந்திர யாதவ், மாநிலங்களின் பல அமைச்சர்கள், தலைவர்கள், ட்ரோன் தொழில்துறை உடைமையாளர்கள் கலந்துகொண்டனர். 150 ட்ரோன் விமானி சான்றிதழ்களையும் பிரதமர் வழங்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, L...

பல்கலைக்கழக வேந்தராக மம்தாவை நியமிக்க முடிவு https://ift.tt/tiJGSBb

படம்
கொல்கத்தா : மேற்குவங்க பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர் மம்தா பானர்ஜியை நியமிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தன்கருக்கும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. அந்த வகையில் பல்கலைக்கழங்களின் துணை வேந்தர்களை நியமிப்பதில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சகோதரர்களை பழி தீர்க்க காத்திருந்த 7 பேர் கும்பல் கைது: வீட்டில் பதுங்கி இருந்தபோது பிடிபட்டனர் https://ift.tt/junytLo

படம்
சென்னை: சகோதரர்கள் இருவரை கொலை செய்ய, வீட்டில் பதுங்கி இருந்த 7 பேர் கும்பலை கொரட்டூர் போலீஸார் கைது செய்துள்ளனர். அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், மாதனாங்குப்பம், பஜனை கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக கொரட்டூர் போலீஸாருக்கு நேற்று அதிகாலை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி https://ift.tt/aZR5gd9

படம்
புதுடெல்லி : நாட்டின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘பாரத் ட்ரோன் மஹோத்சவ் 2022’ என்ற பெயரில் நாட்டின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழா மே 27 மற்றும் 28 தேதிகளில் (இன்றும் நாளையும்) டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பின்னர் விவசாயிகளுக்கு உதவும் ட்ரோன் பைலட்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். மேலும் ட்ரோன்கள் பற்றிய செயல் விளக்கங்களையும் அவர் பார்வையிட உள்ளார். இத்துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவன அதிகாரிகளுடனும் பிரதமர் கலந்துரையாட உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மங்களூரு மசூதி கோயிலாக இருந்ததாக பஜ்ரங் தளம் போர்க்கொடி - 144 தடை உத்தரவு அமல் https://ift.tt/KH6zCpn

படம்
பெங்களூரு : கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள மலாலியில் பழமையான‌ ஜும்மா மசூதி உள்ளது. அங்கு அண்மையில் புணர‌மைப்பு பணிகள் மேற்கொண்டபோது இந்து கோயில் போன்ற கட்டிடத்தின் வடிவமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனால் முஸ்லிம்கள் வசம் இருக்கும் இந்து கோயிலை மீட்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நில மோசடி வழக்கு: மகாராஷ்டிர அமைச்சர் வீடுகளில் திடீர் சோதனை https://ift.tt/c8IubHj

படம்
மும்பை : நில மோசடி வழக்கு தொடர்பாக மகாராஷ்டிரா போக்குவரத்து அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். மகாராஷ்டிரா மாநில கூட்டணி அரசில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அனில் பராப் போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ளார். 2017-ம் ஆண்டு அனில் பராப் ரத்தினகிரி மாவட்டத்தை அடுத்த டபோலி பகுதியில் நிலம் ஒன்றை வாங்கி இருக்கிறார். இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 1 கோடியே 10 லட்சம் ஆகும். எனினும், இந்த நிலத்தை 2019-ம் ஆண்டில்தான் அவர் பதிவு செய்துள்ளார். 2017 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் அந்த நிலத்தில் தங்கும் விடுதி கட்டப்பட்ட நிலையில், 2020-ம் ஆண்டு அந்த நிலம் மும்பையை சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் சதானந்த் கதம் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதில் மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடக காங். தலைவர் சிவகுமார் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் https://ift.tt/4AxBWwn

படம்
பெங்களூரு : கடந்த 2018ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார், காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் உள்ளிட்டோருக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ரூ.10 கோடிக்கும் அதிகமான ரொக்கப்பணம், ஏராளமான சொத்துக்களின் ஆவணங்கள், கணக்கில் வராத தங்க வைர நகைகளை கைப்பற்றினர். இதுகுறித்து விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் டி.கே.சிவகுமார் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திஹார் சிறையில் 50 நாட்கள் அடைக்கப்பட்டார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற அவர், தற்போது கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அமலாக்கத்துறை சார்பில் நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் டி.கே.சிவகுமார் மீதான பண மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பேரவையில் அநாகரீகமாக பேச கூடாது - அகிலேஷ் யாதவுக்கு ஆதித்யநாத் அறிவுரை https://ift.tt/LeHV0o3

படம்
லக்னோ : உத்தரபிரதேச சட்டப்பேரவையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் 2-வது ஆட்சி காலத்தின் முதல் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ரூ.6.15 லட்சம் கோடி மதிப்பிலான நிதிநிலை அறிக்கையை உ.பி நிதியமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா தாக்கல் செய்தார். பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நேற்று தொடங்கியது. அப்போது பேசிய துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, ‘‘அகிலேஷ் யாதவ், தான் முதல்வராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட பணிகளை புகழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது பணி நன்றாக இருந்திருந்தால், தேர்தலில் அவரது கட்சியை மக்கள் படுதோல்வி அடைய செய்திருக்கமாட்டார்கள். விரைவுச் சாலை, மெட்ரோ எல்லாம் யார் போட்டது. சைஃபை கிராமத்தில் உள்ள உங்கள் நிலத்தை விற்று இந்த வசதிகளை செய்தது போல் பேசுகிறீர்கள்?’’ என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து 9 பேர் உயிரிழப்பு https://ift.tt/NVGAlir

படம்
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கார்கில் நகரிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி நேற்று முன்தினம் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த அந்த கார், நிலைதடுமாறி அருகில் இருந்த ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கியான்வாபி மசூதி வழக்கில் இந்துக்களின் 3 மனுக்கள் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றம் - மே 30-ம் தேதி விசாரணை https://ift.tt/ARfGpty

படம்
புதுடெல்லி : கியான்வாபி மசூதி வழக்கில் இந்துக்கள் தரப்பில் நேற்று 3 புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை வாரணாசி விரைவு நீதிமன்றத்திற்கு மாவட்ட நீதிமன்றம் மாற்றியுள்ளது. இம்மனுக்கள் வரும் 30-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதி சுவரில் சிங்கார கவுரி அம்மனை தினமும் தரிசிக்க உத்தரவிட கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ல் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியில் களஆய்வு நடத்த சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இதில், வழக்கை வாராணாசி மாவட்ட சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

'நாடாளுமன்றத்தில் சுயேச்சை குரல் ஒலிக்க வேண்டியது அவசியம்' - காங்கிரஸில் இருந்து விலகினார் கபில் சிபல் https://ift.tt/RwMX1K0

படம்
லக்னோ : காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் (73) அக்கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். மேலும் சமாஜ்வாதி ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் மூத்த தலைவரும் பிரபல வழக்கறிஞருமான கபில் சிபல், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் (2004 – 2014) பல்வேறு முக்கிய துறைகளின் அமைச்சராக பதவி வகித்தார். 2016-ம் ஆண்டு முதல் உ.பி. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவரது பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைய இருந்தது. இதனிடையே, காங்கிரஸ் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்த 23 அதிருப்தி தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஸ்ரீபெரும்புதூரில் தந்தை கொலை: மகனுக்கு போலீஸ் வலைவீச்சு https://ift.tt/hL1cDTp

படம்
ஸ்ரீபெரும்புதூர்: குடிப்பதை தட்டிக் கேட்ட தந்தையை கொலை செய்த மகனை போலீஸார் தேடி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் பாரதி நகர், ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் ராமு (45) இவர் அரசினர் மேல்நிலை பள்ளி அருகில் முடிதிருத்தகம் கடை நடத்தி வந்தார். இவரது மகன் தினேஷ். இந்நிலையில் தினேஷ் குடிபோதைக்கு அடிமையாகி சுற்றித் திரிந்து வந்துள்ளார். இதனால் அவரை குனப்படுத்துவதற்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீர் பாரமுல்லாவில் என்கவுன்ட்டர்: பாக். ஆதரவு 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு https://ift.tt/19ACkje

படம்
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் கிரீரி பகுதியில் நஜிபாத் என்ற இடத்தில் நேற்று காலை ராணுவத்தினரும் போலீஸாரும் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஓரிடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் போலீஸ்காரர் ஒருவரும் உயிரிழந்தார். இதனிடையே, ஸ்ரீநகரில் அஞ்சர் சவுரா பகுதியில் தனது வீட்டு வாசலில் நேற்று முன்தினம் மாலை நடந்து சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் சபியுல்லா காத்ரி என்பவரையும் அவரது 9 வயது மகளையும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதில் சபியுல்லா காத்ரி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் துணை அமைப்பான எதிர்ப்பு முன்னணி இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & Worl...

தேடப்படும் குற்றவாளிக்கு நிவாரணம் வழங்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு https://ift.tt/uoJBZlF

படம்
புதுடெல்லி : மகாராஷ்டிராவில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 6 பேர் மீது, மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் (1992) (எம்சிஓசிஏ) 23(2)வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாநில ஏடிஜிபி மற்றும் புனே மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டனர். இந்த சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோர முடியாது. இதை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, உச்ச நீதிமன்றத்தை அணுகினார். கடுமையான எம்சிஓசிஏ சட்டத்தின் கீழ் என் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருப்பது, அரசியல் சாசனம் வழங்கி உள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என்று அந்த நபர் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் அனிருதா போஸ் ஆகியோர் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து பிறப்பித்த உத்தரவில், “ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 438-வது பிரிவின் கீழ் நீதிமன்றங்களை நாடி முன்ஜாமீன் பெறலாம். ஆனால், ஒரு வழக்கில் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபர் மற்றும் விசாரணைக்கு ஒத்துழைக்காத ந...

ரூ.1 கோடி ஐபிஎல் சூதாட்டம்: அஞ்சல் துறை அதிகாரி கைது https://ift.tt/wqPTm7R

படம்
போபால் : வாடிக்கையாளர்களின் ரூ.1 கோடி பணத்தை கையாடல் செய்து ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட அஞ்சல் துறை அதிகாரியை போலீஸார் கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பஜாரியா நகரில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் துணை போஸ்ட் மாஸ்டராக பணியாற்றுபவர் விஷால் அஹிர்வார். இவர் பணியாற்றும் அலுவலகத்தில் சிறுசேமிப்பு கணக்கு வைத்திருக்கும் கிராம மக்கள், அங்கு வந்து பணத்தைச் செலுத்திவிட்டு செல்வர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரக்கோணம் அடுத்த சாலை கிராமத்தில் தம்பதியை கொலை செய்து முட்புதரில் உடல் வீச்சு: 5 தனிப்படைகள் விசாரணை https://ift.tt/qWvHLlG

படம்
அரக்கோணம்: அரக்கோணம் அருகே தம்பதியை கொலை செய்து உடலை சாலை யோர முட்புதரில் மர்ம நபர்கள் வீசிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருவதாக டிஐஜி ஆனி விஜயா தெரிவித்துள்ளார். அரக்கோணம் அடுத்த கைலாசபுரம் சாலை கிராமத்தில் உள்ள சாலையோர முட்புதரில் ஒரு ஆண் மற்றும் பெண் உடல்கள் இருப்பதாக அரக்கோணம் கிராமிய காவல் துறையினருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன்பேரில், அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், ஆய்வாளர் சேதுபதி மற்றும் காவலர்கள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் காஞ்சிபுரம் புஞ்சை அரசந் தாங்கல் பகுதியைச் சேர்ந்த பட்டு நெசவு தொழிலாளி மாணிக்கம் (52), அவரது மனைவி ராணி (47) என்பது தெரியவந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்துக்களை காங்கிரஸ் கட்சி அதிகம் வெறுப்பது ஏன்? - ஹர்திக் படேல் கேள்வி https://ift.tt/9Oz1wSv

படம்
புதுடெல்லி : ‘‘இந்துக்களை, காங்கிரஸ் கட்சி அதிகம் வெறுப்பது ஏன்?’’ என குஜராத்தின் படிதார் இன தலைவர் ஹர்திக் படேல் கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத் காங்கிரஸ் கட்சியில் செயல் தலைவராக இருந்தவர் ஹர்திக் படேல். இவர் தற்போது அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போதே, பா.ஜ.க மற்றும் அதன் விரைவான முடிவெடுக்கும் தன்மையை புகழ்ந்து வந்தார். தற்போது அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிறுவனின் வெறுப்புணர்வு கோஷம் தொடர்பாக கேரளாவில் 3 பேர் மீது வழக்கு https://ift.tt/8Wdwogc

படம்
திருவனந்தபுரம் : கேரளாவின் ஆலப்புழாவில் கடந்த 21-ம் தேதி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) சார்பில் நடைபெற்ற ஜன மகா சம்மேளனம் நிகழ்ச்சியின்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பேரணியாக சென்றனர். அப்போது ஒருவரின் தோளில் அமர்ந்திருந்த சிறுவன், இந்துக்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஆவேசமாக கோஷமிட்டான். அது மதவெறியை தூண்டும் வகையில் அமைந்திருந்தது. கூட்டத்தில் சென்றவர்கள் சிறுவனின் கோஷத்தை வழிமொழிந்து கோஷமிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்