இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நமது ஒற்றுமையால் எதிரிகளுக்கு கலக்கம் - வல்லபபாய் பிறந்த நாளில் பிரதமர் மோடி பெருமிதம் https://ift.tt/0gStMVk

படம்
புதுடெல்லி : இந்தியாவின் பன்முகத் தன்மையில் காணப்படும் ஒற்றுமை நமது எதிரிகளை கலங்க செய்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் கெவாடியா நகரில் சர்தார் வல்லபபாய் படேலின் 147-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பொது மக்கள் மத்தியில் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளை தாங்க முடியாமல் ஐபோன் ஆலையில் இருந்து ஊழியர்கள் தப்பியோட்டம் - வீடியோ வைரல்

படம்
பெய்ஜிங் : சீனாவில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஐபோன் ஆலையிலிருந்து புலம்பெயர் பணியாளர்கள் தப்பிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து சீனாவில் உள்ள பிபிசி செய்தியாளர் ஸ்டீபன் மெக்டொனல் ட்விட்டரில் கூறியுள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரு விரல் சோதனை பாடத்தை நீக்க நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/H0S1WXw

படம்
புதுடெல்லி : மருத்துவக் கல்லூரி பாடப்புத்தகத்தில் இருந்து, பெண்களின் கன்னித்தன்மையைப் பரிசோதிக்கும் இரு விரல் பரிசோதனை தொடர்பான பாடத்தை நீக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள் ளாக்கப்படும்போது, அப்பெண் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட் டுள்ளாரா என்பதை ஹைமன் எனப்படும் கன்னித்திரை சவ்வை வைத்து தெரிந்து கொள்வதற்காக இரு விரல் பரிசோதனை செய்யும் முறை கடை பிடிக்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நபர் புகார் கொடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பிறகு, மருத்துவ அறிக்கைக்காக இந்த இரு விரல் பரிசோதனையை செய்து வருகின்றனர். 2018-ம் ஆண்டு ஐ.நா சபை இந்தப் பரிசோதனை முறையை தடை செய்து அறிவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டிஆர்எஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சு இல்லை - பாத யாத்திரையில் ராகுல் காந்தி திட்டவட்டம் https://ift.tt/QFbR5zi

படம்
ஹைதராபாத் : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்போது தெலங்கானாவில் தேசிய ஒற்றுமை யாத்திரையை தொடர்கிறார். நேற்று ரங்காரெட்டி மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்திக்கு அங்குள்ள மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திம்மாபூர் என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறும்போது, ‘‘குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கண்டிப்பாக வெற்றி பெறும். குஜராத் மற்றும் இமாச்சலபிரதேச தேர்தல் வியூகத்தை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தீர்மானிப்பார். பாஜகவும் டிஆர்எஸ் கட்சியும் பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுகின்றன. மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் டிஆர்எஸ் போன்ற கட்சிகளுடன் காங்கிரஸ் கண்டிப்பாக கூட்டணி வைத்துக்கொள்ளாது. தெலங்கானாவில் தனித்தே போட்டியிடும்’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத் | விபத்து நேரிட்ட இடத்தில் பிரதமர் இன்று ஆய்வு - ரஷ்ய அதிபர் புதின் இரங்கல் https://ift.tt/t6SaWdk

படம்
மோர்பி : குஜராத் மாநிலம் மோர்பி நகரில் தொங்கு பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141-ஆக உயர்ந்துள்ளது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் நேற்று முன்தினம் மோர்பி நகருக்குச் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மோர்பி நகருக்கு நேரில் சென்று, ஆய்வு செய்கிறார். குஜராத், ராஜஸ்தானில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், தனது பல்வேறு பயணத் திட்டங்களை ரத்து செய்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து | ஒரே நேரத்தில் 100 பேர் மட்டுமே நிற்க வேண்டிய இடத்தில் 500 வரை அனுமதி https://ift.tt/wxmr6Uq

படம்
மோர்பி : குஜராத் மாநிலம் மோர்பி நகரில் தொங்கு பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141-ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தின் சவுராஷ்டிரா பிராந்தியத்தில் மோர்பி நகர் அமைந்துள்ளது. 1889-ல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அங்குள்ள மச்சூ நதியின் குறுக்கே, மன்னர் வாக்ஜி தாகோரால் தொங்கு பாலம் கட்டப்பட்டது. 233 மீட்டர் நீளம், 1.25 மீட்டர் அகலத்தில், ஐரோப்பிய பாணியில் இப்பாலம் கட்டப்பட்டது. தர்பார்கர் அரண்மனை, லக்திர்ஜி பொறியியல் கல்லூரியை இணைக்கும் இந்தப் பாலம் பலமுறை புனரமைக்கப்பட்டு உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் காவலர் - கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம் https://ift.tt/lwEt0dY

படம்
திருவனந்தபுரம் : கேரளாவில் கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட பிறந்து 12 நாள்களே ஆன குழந்தைக்கு பெண் காவலர் ஒருவர் தாய்ப்பால் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் சேவயூர் காவல் நிலையத்தில் காவலராக இருப்பவர் ரம்யா. இவர் பணிசெய்யும் காவல் நிலையத்துக்கு கடந்த 22 -ம் தேதி புழக்கடவு பகுதியைச் சேர்ந்த ஆசிகா என்ற பெண் ஒரு புகாருடன் வந்தார். அதில் பிறந்து இரு வாரம் கூட முழுமையடையாத தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு என் கணவர் ஆதிலும், அவரது தாயாரும் தலைமறைவாகிவிட்டனர். எனக்கும், என் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இப்படிச் செய்துள்ளனர் எனவும் புகார் கொடுத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

15-க்கும் மேற்பட்ட நாடுகளில் உயர்பதவி வகிக்கும் 200-க்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர்

படம்
புதுடெல்லி : இந்திய வம்சாவளியினர் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், பிரேசில், கனடா, நார்வே உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் வசிக்கின்றனர். அவர்களில் பலர் அங்கு உயர்பதவி வகிக்கின்றனர். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரை இதில் சேர்க்கலாம். அண்மையில் பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இந்தப் பட்டியலில் இடம்பெற்றார். இவர் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன். சவுத்தாம்படனில் 1980-ல் பிறந்தவர் ரிஷி சுனக். இவரது தாத்தா, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பஞ்சாப் மாகாணத்தில் வசித்தவர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர்கள் அருங்காட்சியகத்தில் மோடி அரங்கு விரைவில் திறப்பு https://ift.tt/kXSdZQ8

படம்
புதுடெல்லி : இந்தியாவின் பிரதமர்களுக்காக தனி அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.270 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி டெல்லியில் உள்ள தீன் மூர்த்தி முர்க் பகுதியில் பிரதமர்களுக்கான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு அதை பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் திறந்து வைத்தார். இதில் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு முதல் மன்மோகன் சிங் வரை 14 பிரதமர்களுக்கான அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கங்களில் முன்னாள் பிரதமர்களின் போட்டோக்கள், உரைகள், வீடியோக்கள், பேட்டி கள், ஒரிஜனல் எழுத்துக்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. இங்கு பிரதமர் மோடிக்கும் அரங்கம் அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளதாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அரங்கம் பொது மக்களின் பார்வைக்கு அடுத்தாண்டு ஜனவரி மாதம் திறக்கப்படவுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தென்கொரியாவில் `ஹாலோவீன்' திருவிழாவில் பரிதாபம் - நெரிசலில் சிக்கி 153 பேர் உயிரிழப்பு; 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

படம்
சியோல் : தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற ஹாலோவீன் திருவிழாவில் (பேய்களின் திருவிழா) கூட்டநெரிசலில் சிக்கி 153 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். ஒவ்வோர் ஆண்டும் அக். 31-ம் தேதி நடைபெறும் ஹாலோவீன் திருவிழாவையொட்டி, சியோலில் கடந்த சில நாட்களாக இரவில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி, கேளிக்கை, கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். எலும்புக்கூடு, சூனியக்காரி, ஓநாய் உள்ளிட்ட வேடமணிந்த இளைஞர்கள், இளம்பெண்கள் சாலையெங்கும் சுற்றித் திரிந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத் மோர்பி கேபிள் பாலம் விபத்து - பலி எண்ணிக்கை 68 ஆக அதிகரிப்பு https://ift.tt/tGKmE08

படம்
மோர்பி : குஜராத்தின் மோர்பி நகர் கேபிள் பாலம் விபத்தில் பலி எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. குஜராத்தின் மோர்பி நகரில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த கேபிள் பாலம், புதுப்பிக்கப்பட்டு 4 நாட்களுக்கு முன்பு அதாவது கடந்த 26ம் தேதிதான் மீண்டும் திறக்கப்பட்டது. குஜராத்தி புதுவருடப் பிறப்பை ஒட்டி பாலம் திறக்கப்பட்ட நிலையில், நேற்று அது அறுந்து விழுந்தது. பாலம் இடிந்து விழும்போது அதில் 500க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். அவர்களில் சுமார் 350 பேர் ஆற்றில் விழுந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத் | நூற்றாண்டு பழமையான மோர்பி கேபிள் பாலம் - புதுப்பிக்கப்பட்ட 4 நாட்களில் விபத்துக்குள்ளான சோகம் https://ift.tt/8920U3h

படம்
குஜராத் : குஜராத்தின் மோர்பி நகரில் ஓடும் ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநில பஞ்சாயத்து அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா இந்த தகவலைத் தெரிவித்தார். இறந்தவர்களில் பலர் குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா உட்பட பல அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியில் பள்ளிகளில் இருந்து சிறுமிகள் கட்டாயமாக வெளியேற்றம்: சவால் விடும் ஹசாரா பெண்கள்

படம்
காபூல்: ஆப்கானிஸ்தானில் பருவ வயது சிறுமிகள் பள்ளிகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த 1994-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் பஸ்தூன் இன மாணவர் சங்கங்களால் தலிபான் அமைப்பு தொடங்கப்பட்டது. அப்போது அங்கு ரஷ்யாவின் ஆதரவு பெற்ற அரசு ஆட்சி நடத்தி வந்தது. கடந்த 1995-ல் ஹெராட் மாகாணத்தை தலிபான்கள் கைப்பற்றினர். கடந்த 1998-ல் நாடு முழுவதும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தானில் இருந்து பேசிய மும்பை தாக்குதல் குற்றவாளி சஜித் மிர் ஆடியோ ஒலிபரப்பு https://ift.tt/3IkuEsl

படம்
மும்பை: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீவிரவாத தடுப்புக் குழு சார்பில், தீவிரவாத செயல்களுக்கு புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் படுவதைத் தடுப்பது தொடர்பான சிறப்புக் கூட்டம் மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 15 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள், தூதரக அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், 26/11 மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உள்ள பங்கு குறித்து இந்திய உளவுத் துறை உயர் அதிகாரி பங்கஜ் தாக்குர் ஆதாரத்துடன் விரிவாக எடுத்துரைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரள தங்க கடத்தல் வழக்கை முடக்க முயற்சி: உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல் https://ift.tt/VvnZkbs

படம்
புதுடெல்லி: கேரள தங்க கடத்தல் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றக் கோரி அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அளித்துள்ள பதில் மனுவில், “ஊழல் வெளிப்பட்டவுடன் அது தொடர்பாக விசாரணை கோரி பிரதமருக்கு கேரள முதல்வர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டாலும் ஊழலில் முதல்வரின் முதன்மைச் செயலாளரின் பங்கு வெளிப்பட்டவுடன் மாநில அரசு விசாரணைக்கு எதிராக திரும்பியது. பொய் வழக்குகள் பதிவு செய்து, தங்க கடத்தல் வழக்கு விசாரணையை தடம் புரளச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பத்திரிகையாளர்களுக்கு ஸ்வீட் பாக்ஸுடன் ரூ.1 லட்சம் தீபாவளி பரிசாக கொடுத்த கர்நாடக முதல்வர்: கண்டனம் எழுந்ததால் வருத்தம் தெரிவித்தார் https://ift.tt/wyiESOn

படம்
பெங்களூரு: மூத்த பத்திரிகையாளர்களுக்கு தீபாவளி பரிசாக ஸ்வீட் பாக்ஸுடன் ரூ.1 லட்சம் கொடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 22-ம் தேதி கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் அலுவலகத்தில் இருந்து மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் பிரிவு செய்தி ஆசிரியர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ஸ்வீட் பாக்ஸுடன் தீபாவளி வாழ்த்து அட்டை அனுப்பப்பட்டது. அத்துடன் ரூ.1 லட்சம் ரொக்க பணமும் இன்னொரு கவரில் போட்டு வைக்கப்பட்டு இருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி முன்னிலையில் பழங்குடியின குழந்தைகள் கெவாடியாவில் இசை நிகழ்ச்சி https://ift.tt/veVMtiZ

படம்
புதுடெல்லி: நாட்டின் முதல் துணை பிரதமரும், உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. பட்டேலின் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மரியாதை செலுத்த, பிரதமர் நரேந்திர மோடி நாளை கெவாடியா செல்கிறார். ஒற்றுமை தின அணி வகுப்பில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, பனஸ்கந்தா மாவட்டத்தின் அம்பாஜி நகரைச் சேர்ந்த பழங்குடி குழந்தைகளின் வாத்தியக் குழு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு குழு: குஜராத் அமைச்சரவை ஒப்புதல் https://ift.tt/aXkm9zG

படம்
புதுடெல்லி: சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான குழு அமைக்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. மத, இனம், பாலின பாகு பாடின்றி அனைத்து மக்களுக்கும் பொதுவான சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்ற திட்டம் நீண்டகாலமாக உள்ளது. பொது சிவில் சட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என ஷாபானு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் கடந்த 1985-ம் ஆண்டே பரிந்துரை செய்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எம்எல்ஏ பதவி இழந்தார் ஆசம் கான்: உ.பி. பேரவை செயலாளர் உத்தரவு https://ift.tt/MsbtGHF

படம்
லக்னோ: உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான். கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் அப்போதைய ராம்பூர் மாவட்ட ஆட்சியர் ஆஞ்சநேய குமார் ஆகியோருக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆசம் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சட்டப்பேரவை உறுப்பினராக நீடிக்கும் தகுதியை ஆசம் கான் இழந்துள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் பிரதீப் துபே நேற்று முன்தினம் அறிவித்தார். அதனால் ஆசம் கான் எம்எல்ஏ.வாக இருந்த ராம்பூர் சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சவுதியில் பொறியாளராக பணிபுரிய அங்கீகாரம் சான்றிதழ் கட்டாயம்

படம்
சென்னை: சவுதி அரேபியாவில் பொறியாளராகப் பணிபுரிய விரும்பும் இந்தியர்கள் அதற்கான அங்கீகாரச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) கல்விப் பிரிவு ஆலோசகர் ரமேஷ் உன்னிகிருஷ்ணன், அனைத்து விதமான தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹாலோவீன் கொண்டாட்டத்தில் நெரிசல்: தென்கொரியாவில் பலர் காயம், சிலருக்கு மாரடைப்பு

படம்
சியோல்: தென் கொரிய நாட்டில் நடைபெற்ற ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 100 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சிக்கிய சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல். சுமார் 120 பேர் இந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதாவோன் (Itaewon) பகுதியில் சுமார் 1 லட்சம் பேர் ஹாலோவீன் கொண்டாடத்திற்காக வந்துள்ளனர். அங்கு கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்ட காரணத்தால் பெரிய அளவிலான மக்கள் திரண்டிருந்தனர். அப்போது தான் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டாக்சி சேவையில் குறைபாடு - வாடிக்கையாளருக்கு ரூ.20,000 வழங்க உபேர் நிறுவனத்துக்கு உத்தரவு https://ift.tt/B2mi5SC

படம்
மும்பை: மும்பை டாம்பிவிளியைச் சேர்ந்தவர் கவிதா சர்மா. வழக்கறிஞரான இவர் கடந்த 2018 ஜூன் 12-ம் தேதி சென்னைக்கு விமானத்தில் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்தார். அன்றைய தினம் மாலை 5.50 மணிக்கு விமானத்தில் ஏற வேண்டிய சூழ்நிலையில், வீட்டிலிருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு செல்ல மாலை 3.29 மணியளவில் உபேர் டாக்சியை புக் செய்துள்ளார். ஆனால் தாமதமாக வந்த உபேர் டாக்சி டிரைவர், கவிதாவை மாலை 5.23 மணிக்குத்தான் விமான நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார். இதனால், அவர் விமானத்தை தவறவிட்டார். இதையடுத்து, முன்பதிவு செய்த பணம் விரயமானதுடன், புதிதாக கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டிஆர்எஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்ற புகார் - கைது செய்யப்பட்ட 3 பேர் விடுவிப்பு https://ift.tt/1J2OdlF

படம்
ஹைதராபாத் : தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதரமில்லை எனக் கூறி அவர்களை நீதிமன்றம் விடுவித்தது. தெலங்கானாவில் ஆளும் கட்சியான டிஆர்எஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு, டிஆர்எஸ் கட்சியின் தாண்டூரு தொகுதி எம்எல்ஏ பைலட் ரோஹித் ரெட்டி கொடுத்த தகவலின் பேரில் அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில், மொயினாபாத் போலீஸார் அதிரடியாக நுழைந்து, அங்கிருந்த 3 பேரை கைது செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதமாற்றத்தில் ஈடுபட்ட தொண்டு நிறுவனம் மீது கடும் நடவடிக்கை - அமித் ஷா தகவல் https://ift.tt/8lwSGKU

படம்
சூரஜ்கண்ட் : ஹரியாணாவின் சூரஜ்கண்ட்டில் நடந்த மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: மாநிலங்களுக்கு இடையேயான குற்றங்களை ஒழிப்பதில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். சட்டம், ஒழுங்கை நிர்வகிப்பதற்கான அதிகாரத்தை மாநிலங்களுக்கு அரசியல் சாசனம் வழங்குகிறது. ஆனால், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக, இன்று பல சட்டங்கள் எல்லை இல்லாததாக கொண்டுவரப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை-மைசூரு வந்தே பாரத் ரயில் - வரும் 11-ம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார் https://ift.tt/d0JF4e7

படம்
பெங்களூரு : சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 11-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாநிலங்களுக்கு பிரதமர் மோடி யோசனை - ஒரே நாடு, ஒரே காவல் சீருடை https://ift.tt/IoRcCfJ

படம்
புதுடெல்லி : நாடு முழுவதும் போலீஸாருக்கு ஒரேவிதமான சீருடையை அறிமுகம் செய்தால், அவர்களின் அடையாளம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்தார். உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பாக, மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனைக் கூட்டம், ஹரியாணா மாநிலம் சூரஜ்கண்ட்டில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில், மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள், உள்துறைச் செயலர்கள், காவல் துறை தலைவர்கள் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

''விஜய் மாமா, ஹாய் நான் ரிஷி'' - இங்கிலாந்து பிரதமரின் வைரல் வீடியோ

படம்
இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்தின் 57-வது பிரதமராக பதவியேற்றுள்ளார். இங்கிலாந்தின் முதல் இந்து பிரதமர், வெள்ளையினத்தை சாராத முதல் பிரதமர், முதல் இந்திய வம்சாவளி பிரதமர் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளை ரிஷி சுனக் பெற்றுள்ளார். இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனான ரிஷி, இளம் வயதில் (42) பிரதமராகி, கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைத்துள்ளார். இதனிடையே, ரிஷி சுனக்கின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. செஃப் சஞ்சய் ரெய்னா என்பவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் அவருடன் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் இணைந்து வீடியோ கால் பேசுகிறார். வீடியோவில் செஃப் சஞ்சய் ரெய்னா, "மாமா, நான் உங்களுக்கு ஒருவரை அறிமுகம் செய்யப்போகிறேன்" என்று சொல்லி கேமராவை திருப்பி பிரதமர் ரிஷி சுனக்கை அறிமுகம் செய்துவைக்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சமூக மேம்பாட்டு இலக்குகளை அடைய இந்திய மாதிரியை பின்பற்ற வேண்டும் - நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் வலியுறுத்தல் https://ift.tt/YiMu086

படம்
ஜாம்ஷெட்பூர் : ஐக்கிய நாடுகள் சபையால் நிர்ணயிக்கப்பட்ட சமூக மேம்பாட்டு இலக்குகளை (எஸ்டிஜி)வரும் 2030-க்குள் நிறைவேற்ற உள்ளூர்மயமாக்கலின் இந்திய மாதிரி அவசியம் என நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குற்றங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் - உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுரை https://ift.tt/Q19Oc5R

படம்
புதுடெல்லி : குற்றங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தினார். உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பான சிந்தனைக் கூட்டம் ஹரியாணாவின் சூரஜ்கண்டில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள், உள்துறைச் செயலர்கள், காவல் துறை தலைவர்கள், மத்திய ஆயுதக் காவல்படைத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தலைமை வகித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரஷ்யா திடீர் அணு ஆயுதப் போர் ஒத்திகை - அதிபர் விளாடிமிர் புதின் காணொலி மூலம் ஆய்வு

படம்
மாஸ்கோ : ரஷ்ய-உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், திடீரென ரஷ்ய ராணுவம் அணு ஆயுதப் போர் ஒத்திகை நடத்தி வருகிறது. அதிபர் விளாடிமிர் புதின் காணொலி மூலம் இதை ஆய்வு செய்தார். ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனின் அணுசக்தி அமைப்பு, அணுக்கழிவுகளைப் பயன்படுத்தி நாசகார குண்டுகளைத் தயாரித்து இருப்பதாகவும், அதன் மூலம் ரஷ்யா மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்புத் துறை குற்றம் சாட்டியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேட்டூரில் ரவுடியை கொன்றுவிட்டு போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய இருவருக்கு கால் எலும்பு முறிவு https://ift.tt/RWAxcO1

படம்
சேலம்: மேட்டூர் அரசு மருத்துவமனையில் புகுந்து ரவுடியை கொன்று விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிய இருவரை போலீஸார் துரத்திப் பிடிக்க முயன்றனர். அப்போது, வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இருவர் படுகாயம் அடைந்தனர். மேட்டூர் தொட்டில்பட்டியைச் சேர்ந்தவர் பெயின்டர் ரகுநாதன் (29). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ரகுநாதனும் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையனும் (37) சேர்ந்து, அவ்வப்போது குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். வெள்ளையனிடம் இருந்து ரகுநாதன் பிரிந்து சென்று, வேறு ஒரு கோஷ்டியுடன் சேர்ந்து கொண்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண் உட்பட 3 பேருக்கு தலா 31 ஆண்டுகள் சிறை: புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு https://ift.tt/AkPrhZt

படம்
கறம்பக்குடி அருகே மாற்றுத்திறன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பெண் உட்பட 3 பேருக்கு தலா 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த அன்புக்கோவில் அருகே இடையன் கொள்ளைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் பி.ராஜேந்திரன்(56), எம்.அண்ணாதுரை(41). இவர்கள் இருவரும் அதே ஊரைச் சேர்ந்த வீரையா மனைவி அஞ்சலை(60) என்பவரின் வீட்டில் 24 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய ஒரு பெண்ணை கடந்த ஆண்டு அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே முற்றும் மோதல் - என்னதான் நடக்கிறது கேரளாவில்? https://ift.tt/U5zNcw0

படம்
கேரளாவில் இடதுசாரி அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை தகுதிநீக்கம் செய்யும் அஸ்திரத்துடன் ஆளுநர் களமாட, பதிலுக்கு கேரள அரசோ பல்கலைக்கழகத்தில் தலையிடும் அதிகாரத்தையே ஆளுநரிடம் இருந்து பறிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. கண்ணூரில் பற்றிய கனல்!: கடந்த 2019-ல், கண்ணூர் பல்கலைக்கழகத்தில் அகில இந்திய அளவிலான வரலாற்று அறிஞர்கள் கூட்டம் நடைபெற்றது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதா பெரும் பிரச்சினையாக எதிரொலித்த நேரம் அது. ஆளுநர் ஆரிப் முகமது கான் அதை ஆதரித்து அந்தக் கூட்டத்தில் பேசினார். கூட்டத்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. வரலாற்று ஆராய்ச்சியாளர் இர்பான் ஹபீப் தன்னைத் தாக்க பாய்ந்ததாகவும், துணைவேந்தர் கோபிநாத் ரவீந்திரன் அதைக் கண்டுகொள்ளவில்லை எனவும் முதல் பரபரப்பை பற்ற வைத்தார் ஆளுநர் ஆரிப். அந்தத் தாக்குதலில் தனது உதவியாளரின் சட்டை கிழிந்ததாகவும் ஆளுநர் குற்றம் சாட்டினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Onlin...

உத்தரபிரதேசத்தில் சர்ச்சையில் சிக்கிய மருத்துவமனையை இடிக்க நோட்டீஸ் https://ift.tt/Hva6tDY

படம்
பிரயாக்ராஜ் : உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில், உள்ள தனியார் மருத்துவமனையில், சமீபத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்ட பிரதீப் பாண்டே என்பவருக்கு ரத்த தட்டணுக்களுக்கு பதிலாக சாத்துக்குடி சாறு ஏற்றியதாகவும், இதனால் பிரதீப் பாண்டே இறந்ததாகவும் அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் சர்ச்சையில் சிக்கிய தனியார் மருத்துவமனை சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்பதால், அதை புல்டோசர் மூலம் இடிப்பது தொடர்பாக மருத்துவமனைக்கு பிரயாக்ராஜ் மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. இதற்கு நாளைக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும், பதில் திருப்திகரமாக இல்லையென்றால், மருத்துவமனை புல்டோசர் மூலம் இடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காங்கிரஸ் கட்சித் தலைவராக கார்கே பதவியேற்பு - சோனியா குடும்பத்தினர் பங்கேற்றனர் https://ift.tt/ZsYx8Lg

படம்
புதுடெல்லி : காங்கிரஸ் கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே(80) நேற்று பதவியேற்றுக் கொண்டார். கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே போட்டி ஏற்பட்டது. இதில் கார்கே 7,897 வாக்குகளும், சசிதரூர் 1072 வாக்குகளும் பெற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பட்டாசு வெடித்தவரை தாக்கிய சிறுவன் உள்ளிட்ட 5 பேர் கைது: திமுக வட்ட செயலாளருக்கு வலை https://ift.tt/Hqjl3Zw

படம்
சென்னை: வில்லிவாக்கம் மண்ணடி ஒத்தவாடை தெருவைச்சேர்ந்தவர் தீபன்ராஜ் (37). இவர் தனது வீட்டுக்கு வெளியே தெருவில் நேற்று முன்தினம் மாலை பட்டாசு வெடித்துள்ளார். அப்போது அந்த வழியாக 95-வது வார்டு திமுக வட்ட செயலாளர் அகிலன் என்பவரின் கார் ஓட்டுநரானபாலாஜி(35) காரில் வந்துள்ளார். அப்போது தீபன்ராஜிடம் தெருவில் ஏன்பட்டாசு வெடிக்கிறீர்கள் என கேட்டு பாலாஜி தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது இதனால்,இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த பாலாஜி, திமுக வட்ட செயலாளர்அகிலன் உள்ளிட்டோரை செல்போனில் அழைத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த அகிலன் உள்ளிட்டோர், தீபன்ராஜை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். காயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வில்லிவாக்கம் போலீஸார்வழக்கு பதிவு செய்து வில்லிவாக்கத்தை சேர்ந்தகடம்பன்(41), பாலன் (38), நவீன்குமார்(27), ரஞ்சித்குமார் (37) மற்றும் 17 வயது சிறுவனைநேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள திமுக வட்ட செயலாளர் அகிலன், பாலாஜி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். from இந்து தமிழ் ...

எந்த ஆதாரமும் இல்லாமல் கணவனை குடிகாரன் என அழைப்பது கொடுமை - மும்பை உயர் நீதிமன்றம் கருத்து https://ift.tt/qHmj2aM

படம்
மும்பை : கணவனை அவதூறாகப் பேசுவதும் எந்த ஆதாரமும் இல்லாமல் கணவனை குடிகாரன் என்று சொல்வது கொடுமைப்படுத்துவதற்கு சமம் என்று மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவரின் திருமண பந்தத்தை ரத்து செய்து புனே குடும்ப நலநீதிமன்றம் கடந்த 2005 நவம்பரில் உத்தரவிட்டது. இதற்கு எதிராக அவரது மனைவி மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தனது குழந்தைகளையும் பேரக் குழந்தைகளையும் தன்னிடம் இருந்து பிரித்துவிட்டதாக குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் தெரிவித்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரிஷி சுனக் ‘வாழும் பாலம்’ - பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து https://ift.tt/i0SwolK

படம்
புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ரிஷி சுனக்குக்கு உளமார்ந்த வாழ்த்துகள். இங்கிலாந்தின் புதிய பிரதமருடன் இணைந்து செயல்பட ஆவலோடு காத்திருக்கிறேன். குறிப்பாக சர்வதேச விவகாரங்கள், 2030 தொலைநோக்கு திட்டத்தில் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா வழியில் ரிஷி சுனக்..

படம்
கடந்த 1971-ம் ஆண்டில் ரிஷி சுனக்கின் தந்தை யாஷ் மற்றும் அவரது தாத்தா ராம்தாஸ் சுனக் ஆகியோர் இணைந்து தென்மேற்கு லண்டனின் சவுதாம்டன் நகரில் இந்து கோயில் ஒன்றை கட்டியுள்ளனர். ரிஷி சுனக் இந்த கோயிலுக்கு சென்று உதவிகள் செய்வதை வழக்கமாகக் கொண்டவர். இந்த கோயிலின் தலைவர் சஞ்சய் சந்தரனா கூறியிருப்பதாவது: இங்கிலாந்து வரலாற்றில் வெள்ளை இனத்தை சாராத ஒருவர் பிரதமராக பதவியேற்பது இதுவே முதல் முறை. கருப்பினத்தைச் சார்ந்த பராக் ஒபாமா அமெரிக்க அதிபராகி சாதனை படைத்தது போலவே இதுவும் வரலாற்று சிறப்பு வாய்ந்த தருணமாகும். அதேபோன்று, இந்திய வம்சாவளி பின்புலத்துடன் இந்து ஒருவர் இங்கிலாந்து பிரதமராகி சாதனை படைப்பதும் இதுவே முதல் முறை. இவ்வாறு அவர் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முதல் இந்து பிரதமர், இந்திய மருமகன் - இங்கிலாந்து பிரதமராக ரிஷி பதவியேற்பு

படம்
லண்டன் : இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்தின் 57-வது பிரதமராக நேற்று பதவியேற்றார். முதல் இந்து பிரதமர், வெள்ளையினத்தை சாராத முதல் பிரதமர், முதல் இந்திய வம்சாவளி பிரதமர் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளை அவர் பெற்றுள்ளார். இங்கிலாந்து பிரதமராக இருந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த தலைவர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததை அடுத்து, பிரதமராக லிஸ் ட்ரஸ் கடந்த செப்டம்பர் 6-ம் தேதி பதவியேற்றார். சமீபத்தில் அவர் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டால் இங்கிலாந்தின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தது. லிஸ் ட்ரஸ்ஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிதி அமைச்சர் க்வாசி க்வார்டெங்க், உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மேன், கட்சியின் தலைமை கொறடா வெண்டி மார்டன் உள்ளிட்டோர் ராஜினாமா செய்தனர். நெருக்கடி முற்றியதால், லிஸ் ட்ரஸ் கடந்த 20-ம் தேதி பதவி விலகினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரிட்டனுக்கு புதிய விடியல்... ராஜாவை விட இரண்டு மடங்கு பணக்காரர் - ரிஷி சுனக் நியமனத்துக்கு இங்கிலாந்து ஊடகங்களின் ரியாக்சன்

படம்
இங்கிலாந்தின் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ், பதவியை ராஜினமா செய்வதாக கடந்த 20ம் தேதி அறிவித்ததை அடுத்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுவால் ரிஷி சுனக் நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, மன்னரிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்று ரிஷி சுனக் பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் சென்றார். அப்போது, நாட்டின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக்கை, மன்னர் மூன்றாம் சார்லஸ் நியமித்தார். பிரிட்டனின் பிரதமராக இந்திய வம்சாவளி ரிஷி சுனக் நியமிக்கப்பட்டுள்ளதற்கு இங்கிலாந்து ஊடகங்கள் சில வரவேற்றுள்ளன. சில எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளன. இங்கிலாந்தில் உள்ள அனைத்து முக்கிய செய்தித்தாள்களின் முதல் பக்கத்திலும் ரிஷி குறித்தே செய்திகள் இடம்பெற்றிருந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உபி அதிர்ச்சி | படுகாயங்களுடன் உதவி கேட்கும் சிறுமி: வீடியோ எடுத்து வேடிக்கை பார்த்த மக்கள் கூட்டம் https://ift.tt/OjwxLHv

படம்
லக்னோ: உடல் முழுவதும் படுகாயங்களுடன், தனக்கு உதவுமாறு கையை நீட்டிக் கெஞ்சும் சிறுமிக்கு உதவி செய்யாமல், சுற்றி நிற்பவர்கள் அவரை தங்களின் செல்போனில் வீடியோ எடுக்கும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கனோஜ் மாவட்டத்தில் ஞாயிற்றுகிழமை வீட்டை விட்டு காணாமல் போனதாக கூறப்பட்ட 13 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு அருகில் தலை உட்பட உடலில் பல இடங்களில் படுகாயங்களுடன் விழுந்து கிடக்கும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்...” - ரிஷி சுனக் வெற்றி குறித்து இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி கருத்து https://ift.tt/x32KONz

படம்
புதுடெல்லி: " நாங்கள் அவர் குறித்து பெருமைப்படுகிறோம் மேலும் அவர் வெற்றி பெற வாழ்த்துகிறோம்" என்று பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக்கின் மாமனாரும், இன்ஃபோதிஸ் இணைநிறுவனருமான நாராயணன் மூர்த்தி தெரிவித்துள்ளார். இன்ஃபோசிஸ் இணை நிறுவனரும், இந்திய பில்லினியருமான நாராயண மூர்த்தி, தனது மருமகன் ரிஷி சுனக், பிரிட்டன் பிரதமராக தேர்வானத்தைத் தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாராயணமூர்த்தி, "ரிஷிக்கு வாழ்த்துக்கள். நாங்கள் அவர் குறித்து மிகவும் பெருமைப்படுகிறோம். அவர் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம். இங்கிலாந்து மக்களுக்கு அவர் தன்னாலான அனைத்து நன்மைகளையும் செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வங்கதேசத்தை தாக்கிய சித்ராங் புயல்: 7 பேர் பலி; வடகிழக்கு மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

படம்
டாக்கா: வங்கதேசத்தில் சிட்ராங் புயல் காரணமாக 7 பேர் பலியாகினார். வெள்ளம் புகுந்த பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த சித்ராங் புயல் நேற்று மாலை முதல் மணிக்கு 28 கிமீ வேகத்தில் மேலும் வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்தது. டிங்கோனா தீவு மற்றும் சாண்ட்விப் பகுதிகளுக்கு நேற்று பின்னிரவில் கரையைக் கடந்தது.இதனையொட்டி பெய்த கனமழை காரணமாக சுவர் இடித்து விழுந்தது, மரம் முறிந்து விழுந்தது என நடந்த விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர். புயல் பாதிப்பு காரணமாக காக்ஸ் பஜார் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தன.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலரும் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தடையை மீறி பட்டாசு வெடித்த மக்கள்: டெல்லியில் காற்றின் தரம் கடும் சரிவு https://ift.tt/4q8sPrd

படம்
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் தடையை மீறி மக்கள் தீபாவளியன்று பட்டாசுகளை வெடித்ததால் காற்றின் தரம் மிகவும் குறைந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரம் 323 என்றளவில் இருந்தது.டெல்லியின் குருகிராம், நொய்டா, ஃபரிதாபாத் பகுதிகளில் காற்றின் தரம் மிக மோசமாக குறைந்தது. காற்றின் தரத்தை அளக்கு அமைப்பானது, காற்றின் தரக் குறியீடு 50 என்றிருந்தால் அது நல்ல நிலைமை, 100 முதல் 101 என்றளவில் இருந்தால் திருப்திகரமான தரம், 101 முதல் 200 வரை இருந்தால் அது மிதமானது, 201 முதல் 300 வரை இருந்தால் அது மோசமான தரம், 301 முதல் 400 வரை இருந்தால் மிகவும் மோசமான தரம், 401 முதல் 500 என்றிருந்தால் அதிபயங்கர மோசம் என்று நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரம் 323 என்றளவில் இருந்தது. இருப்பினும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் டெல்லியில் கடந்த 4 தீபாவளிகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு காற்றின் தரம் பரவாயில்லை என்றே கூற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. 2020ல் டெல்லியில் தீபாவளிக்குப் பிந்தைய காற்றின் தரம் 414 ஆகவும், 2019ல் 337...

பிரிட்டனின் புதிய பிரதமர்: யார் இந்த ரிஷி சுனக்?

படம்
இங்கிலாந்து பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததிலிலிருந்தே பிரிட்டன் அரசியல் களம் பரபரப்பு மிகுந்ததாகவே இருந்துவருகிறது. சொல்லப்போனால் இந்தப் பரபரப்பை ஏற்படுத்தியவர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த ரிஷி சுனக். அவரே முதலில் போர்க்கொடி தூக்கி போரிஸை ராஜினாமா செய்ய வைத்தார். இதன்பின் லிஸ் ட்ரஸ் பதவிக்கு வந்தது தனிக்கதை. ஆனால் 45 நாட்களில் லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவியை துறக்க, ரிஷி சுனக் போட்டியின்றி அந்த அரியணைக்கு தேர்வாகியுள்ளார். இங்கிலாந்தின் பிரதமராக தேர்வாகியுள்ள ரிஷி சுனக் ஒரு இந்திய வம்சாவளி. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னையில் தனியார் மருந்து கிடங்கில் தீ விபத்து: கார், சரக்கு ஆட்டோக்கள் எரிந்து சேதம்  https://ift.tt/ZrcvEBe

படம்
சென்னை: சென்னை அசோக்நகரில் உள்ள தனியார் மருந்து நிறுவனம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மருந்து கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் கார் மற்றும் சரக்கு ஆட்டோக்கள் தீயில் கருகி சேதமடைந்தன. சென்னை அசோக்நகர் இரண்டாவது அவென்யூவில் உள்ள தனியார் மருந்து கிடங்கு உள்ளது. கடந்த ஓராண்டாக இந்த மருந்து கிடங்கில் இருந்து மருத்துவமனைகளுக்கு மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை மருந்து கிடங்கில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அருகில் வசிக்கும் பொதுமக்கள் தீ விபத்து குறித்து காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போட்டியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகல்: பிரிட்டன் பிரதமர் ஆக ரிஷி சுனக்குக்கு வாய்ப்பு

படம்
லண்டன்: பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இருந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் விலகி இருக்கிறார். இதனால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல், கடந்த செப்டம்பர் மாதம் பிரதமராக பதவி ஏற்ற லிஸ் ட்ரஸ் கடந்த 20-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சூடான் நாட்டில் இரு பிரிவு மோதல்: 200 பேர் உயிரிழப்பு

படம்
ப்ளூ நைல்: சூடானில் கடந்தாண்டு ராணுவ தளபதி அப்தெல் பதா அல்-புர்ஹான் ஆட்சியை கைப்பற்றினார். அதன்பின் புதிய பழங்குடியினர் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஹவுசா என்ற பிரிவினருக்கு நில உரிமை மறுக்கப்படுகிறது. இதனால், எத்தியோபியா எல்லையில் உள்ள புளூ நைல் பகுதியில் ஹவுசா இனத்தினருக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே கடந்த வாரம் மோதல் வெடித்தது. துப்பாக்கிச் சூடு, தீ வைப்பு சம்பவங்கள் ஆங்காங்கே நடந்ததால், 2 நாட்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஆக அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதிய ஆங்லர் மீனுக்கு அப்துல் கலாம் பெயர் https://ift.tt/zemcSNr

படம்
கொச்சி: கேரளாவின் கொச்சியில், மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சூழலியல் மையம் உள்ளது. இங்கு விஞ்ஞானியாக பணியாற்றும் எம்.பி.ராஜேஷ் குமார், புதிய வகை ஆங்லர் மீன் ஒன்றை அந்தமான் நிகோபார் தீவு கடலில் அண்மையில் கண்டறிந்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவாக இந்த மீனுக்கு ‘ஹிமான்டோ லோபஸ் கலாமி’ என அவர் பெயர் சூட்டியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்