இடுகைகள்

நவம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திரிணமூல் எம்எல்ஏ, கவுன்சிலர் வீடுகளில் சிபிஐ சோதனை https://ift.tt/bkYy1jW

படம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ, 2 கவுன்சிலர் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டோம்கால் தொகுதி எம்எல்ஏ ஜஃபிகுல் இஸ்லாம், கொல்கத்தா மாநகராட்சி கவுன்சிலர் பபாதித்யா தாஸ்குப்தா, பிதான்நகர் மாநகராட்சி கவுன்சிலர் தேப்ராஜ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்கள் மருந்தகம் எண்ணிக்கை 25,000 ஆக அதிகரிக்கிறது: திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் https://ift.tt/BpyM1vf

படம்
புதுடெல்லி: நாடு முழுவதிலும் மக்கள் மருந்தகம் எண்ணிக்கையை 10,000-ல்இருந்து, 25,000 ஆக உயர்த்தும் திட்டம், மகளிர் ட்ரோன் திட்டம் ஆகியவற்றை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மத்திய அரசின் முன்னணி திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம், அவற்றை மேலும் செறிவூட்டும் நோக்கில் ‘வளர்ந்த இந்தியா சபத யாத்திரை’ (விக்‌ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா) நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசு திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் கலந்துரையாடினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாத: மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு https://ift.tt/ZJcnuXC

படம்
கொல்கத்தா: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது பேரணியில் அவர் பேசியதாவது: இந்த பிரம்மாண்ட பேரணியில் அதிகப்படியான மக்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இது மக்களின் மனநிலையை குறிக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்தை சீரழித்து விட்டார். வரவிருக்கும் 2026 சட்டப் பேரவை தேர்தலில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இங்கு ஆட்சிக்கு வரும். அதற்கு முன்னதாக 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறுவதை நீங்கள் அனைவரும் உறுதி செய்ய வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நான் வாக்குறுதி அளித்தபடி கடவுளுக்கு நன்றி தெரிவிக்க கோயிலுக்கு செல்வேன்: சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ் கருத்து https://ift.tt/Busxp7t

படம்
உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், வாக்குறுதி அளித்தபடி கடவுளுக்கு நன்றி தெரிவிக்க கோயிலுக்கு செல்ல உள்ளேன் என சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ் தெரிவித்துள்ளார். உத்தராகண்டில் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 12-ம் தேதி திடீரென மண் சரிந்ததில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. இதற்காக, சர்வதேச சுரங்க நிபுணரும் ஆஸ்திரேலிய பேராசியருமான அர்னால்ட் டிக்ஸ் வரவழைக்கப்பட்டார். அவர் அங்கேயே தங்கியிருந்து மீட்புக் குழுவுக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கினார். 17 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு 41 தொழிலாளர்களும் நேற்று முன்தினம் பத்திரமாக மீட்கப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்: பிரதமரிடம் 41 தொழிலாளர்கள் நன்றி https://ift.tt/0Dmjs1X

படம்
புதுடெல்லி/ டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் மருத்துவ பரிசோதனைக்காக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ்மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த பிரதமர் மோடியிடம் அவர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாரா அருகே சுரங்கப் பாதையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் திடீரென ஏற்பட்ட மண்சரிவு காரணமாக கடந்த 12-ம் தேதி சுரங்கத்துக்குள் சிக்கினர். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நடந்த மீட்பு பணிகளை தொடர்ந்து, 17 நாட்களுக்கு பிறகு, 41 பேரும் நேற்று முன்தினம் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, அடிப்படை மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“அற்புதமான முன்மாதிரி” - சுரங்க மீட்பு குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி https://ift.tt/VXoKYG3

படம்
புதுடெல்லி: உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது: “ உத்தரகாசியில் சிக்கியிருந்த நமது தொழிலாளர் சகோதரர்கள் மீட்கப்பட்டது நம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தராகண்ட் சுரங்க மீட்புப் பணியின் ஹீரோ- யார் இந்த அர்னால்ட் டிக்ஸ்?  https://ift.tt/9sIKXLl

படம்
டேராடூன்: 17 நாட்கள் பெரும் போராட்டத்துக்குப் பின் உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் இன்று மீட்கப்பட்டனர். இந்த அபார மீட்புப் பணியில் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான மீட்புக் குழுவினர் ஈடுப்பட்டிருந்தனர். அதில் ஒருவர்தான் சர்வதேச சுரங்க நிபுணர் அர்னால்ட் டிக்ஸ். யார் இந்த அர்னால்ட் டிக்ஸ்? - பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி கூட்டமைப்பின் தலைவர். கட்டுமான ஆபத்துகள், பாதுகாப்பு செயல்திறன் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். மேலும் நிலத்தடி கட்டுமானங்கள் தொடர்பான அபாயங்கள் பற்றிய ஆலோசனைகளை வழங்கி வரும் டிக்ஸ், உலகின் முன்னணி நிலத்தடி சுரங்கப்பாதை நிபுணராக அறியப்படுகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொறியியல், புவியியல், இடர் மேலாண்மை ஆகிய துறைகளில் டிக்ஸ் கவனம் செலுத்தி வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமி...

“இன்றுதான் எங்களுக்கு தீபாவளி” - மீட்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி https://ift.tt/7nl8H3G

படம்
டேராடூன்: கடந்த தீபாவளி (நவ.12) அன்று உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் 17 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட நிலையில், இன்றுதான் தங்களுக்கு உண்மையான தீபாவளி என்று சுரங்க தொழிலாளர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஒருவர் பின் ஒருவராக பத்திரமாக மீட்டனர். இந்த அபார மீட்புப் பணியின் வெற்றியை நாடே மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது. தொழிலாளர்கள் வெளியே வந்தபோது, சுரங்கத்தின் வெளியே காத்திருந்த அவர்களது உறவினர்கள், பொதுமக்கள், ஓட்டுநர்கள் என அனைவரும் கைகளைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கித் தவிக்கும் 41 பேரை மீட்க ‘எலி வளை' தொழிலாளர்கள் தீவிர முயற்சி https://ift.tt/pKY1m4O

படம்
டேராடூன்: உத்தராகண்டில் சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க 16-வது நாளாக நேற்றும் மீட்புப் பணி தொடர்ந்தது. சுமார் 60 மீட்டர் தொலைவுக்கு மணல், கடினமான பாறைகள் சுரங்கத்தை மூடியிருக்கிறது. இதில் அமெரிக்க தயாரிப்பு இயந்திரம் மணல் குவியலின் பக்கவாட்டில் 47 மீட்டர் தொலைவுக்கு துளையிட்டு இரும்பு குழாய்களை பொருத்தியது. இன்னும் 13 மீட்டர் தொலைவுக்கு துளையிட வேண்டிய நேரத்தில் இயந்திரம் உடைந்தது. அந்த இயந்திர கழிவுகளை அகற்றுவதில் நிபுணத்துவம் பெற்ற 7 பேர் குழு மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்டது. அந்தகுழுவினர் அமெரிக்க இயந்திரத்தின் 14 மீட்டர் நீளம் கொண்ட பிளேடு கழிவுகளை சேகரித்து அகற்றினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த டிசம்பர் 2-ல் அனைத்து கட்சி கூட்டம்: மத்திய அரசு அழைப்பு https://ift.tt/VBf4ztr

படம்
புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி நிறைவடைகிறது. இந்த கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதத்தை ஆளும் பாஜக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்திய குற்றவியல் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரீக் சுரக் ஷா, பாரதிய சாக் ஷியா ஆகிய 3 மசோதாக்களை இரு அவைகளிலும் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொள் ளும் என்று தெரிகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டிசம்பர் முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் மலேசியா செல்லலாம்

படம்
கோலாலம்பூர்: இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் இனி விசா இன்றி மலேசியாவுக்கு வருகை தரலாம் என அந்த நாட்டின் பிரதமர்அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார். அந்நிய செலவாணியை அதிகரிக்கும் நோக்கில் மலேசிய அரசு இத்திட்டத்தை அறிவித்துள்ளது. புத்ரஜெயாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் நீதிக் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: மலேசியாவில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கூடுதல் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதன் மூலம் அதிக அளவில் அந்நியச் செலாவணி வருவாயினை பெற முடியும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“காசாவின் புனரமைப்புக்கு உதவுவேன்” - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தெரிவித்த எலான் மஸ்க்

படம்
டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான மோதல் காரணமாக உருகுலைந்து போயுள்ள பாலஸ்தீனத்தின் காசா பகுதியின் புனரமைப்புக்கு உதவுவேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அவர் தற்போது இஸ்ரேல் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர் கடந்த சில நாட்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருதரப்பிலும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், மேலும் சில பிணைக் கைதிகளை விடுவிக்கத் தோதாக போர் நிறுத்தம் இன்னும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது. இந்த சூழலில் காசா புனரமைப்புக்கு உதவுவேன் என மஸ்க் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் மஸ்க் இடையிலான கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் இது நேரலையில் வெளியானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பல்கலைக்கழக இசை நிகழ்ச்சியில் 4 மாணவர்கள் உயிரிழப்பு: விசாரணை நடத்த கேரள முதல்வர் பினராயி உத்தரவு https://ift.tt/fJveQ1p

படம்
கொச்சி: கேரள மாநிலம் களமசேரியில் அமைந்துள்ள கொச்சி பல்கலைக்கழகத்தில், நேற்றுமுன்தினம் பாடகி நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சி நடந்தது. இசை நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு வெளியே நிறைய மாணவர்கள் நின்றிருந்ததாகவும், அந்த சமயத்தில் மழை பெய்ததால் மாணவர்கள் கூட்டமாக அரங்கத்தினுள் நுழைய முயன்றனர் என்றும்கூறப்படுகிறது. அப்போது நெரிசல்அதிகமாகி 4 மாணவர்கள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர்காயமடைந்துள்ளனர். இந்நிகழ்வு குறித்து அதிகாரிகள் கூறுகையில், “நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் ஒரே வாசலே இருந்துள்ளது. இதனால், மாணவர்கள் அரங்கில் நுழைந்தபோது நெரிசல் அதிமாகியுள்ளது. இதனால், மாணவர்கள் ஒருவர் மேல் ஒருவர் சரிந்து விழுந்தனர்” என்று தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கருக்கு சிலை https://ift.tt/0w4p3Ct

படம்
புதுடெல்லி : அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, நேற்று டெல்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைத்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஓய் சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2-வது கட்டமாக 17 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

படம்
ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஹமாஸ் தீவிரவாதிகள் 17 பிணைக் கைதிகளை சனிக்கிழமைவிடுவித்தனர். இதில், இஸ்ரேலியர்கள் 13 பேரும், தாய்லாந்தைச் சேர்ந்த 4 பேரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் நேற்று இஸ்ரேலை வந்தடைந்தனர். அதற்கு பதிலாக 33 சிறார்கள் உட்பட 39 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தராகண்ட் சுரங்கப் பாதை | 41 பேரை மீட்க களமிறங்கியது ராணுவம்: 86 மீ ஆழத்துக்கு செங்குத்தாக துளையிடும் பணி தொடக்கம் https://ift.tt/Lb9BSU1

படம்
டேராடூன் : உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறங்கி உள்ளது. அப்பகுதியில், பக்கவாட்டில் துளையிட்ட ஆகர் இயந்திரம் பழுதடைந்ததால், செங்குத்தாக துளையிடும் பணி தொடங்கி உள்ளது. உத்தராகண்டில் சில்க்யாரா - பர்கோட் இடையே அமைக்கப்படும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ம்தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில்,41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்பதற்காக, அமெரிக்க தயாரிப்பான ஆகர் இயந்திரம் மூலம் பக்கவாட்டில் துளையிடப்பட்டது. ஆனால், அந்த இயந்திரத்தின் பிளேடு, கம்பிகளில் சிக்கி உடைந்து சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்டது. இதனால், அந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பக்கவாட்டில் துளையிடும் முயற்சி கைவிடப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேஜஸ் போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி: வீடியோ, படங்கள் வெளியீடு https://ift.tt/crFo2AS

படம்
பெங்களூரு: இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானத்தில் பெங்களூருவில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல் நிறுவனத்தின் சார்பில் 'தேஜஸ்' இலகு ரகு போர் விமானங்கள், இன்ஜின், உதிரி பாகங்கள் ஆகியவை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் விமானங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விறுவிறுப்பாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்: ராஜஸ்தானில் 70% வாக்குப் பதிவு https://ift.tt/fdYg0Ak

படம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 199 தொகுதிகளில் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 70% சதவீத வாக்குகள் பதிவாகின. ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. கங்காநகர் மாவட்டத்தின் காரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் இறந்ததால், அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 51,756 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.25 கோடி. இந்த தேர்தலில் 1,862 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.70 லட்சத்துத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டனர். இங்கு வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையில் இருந்தே மக்கள் உற்சாகத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிணைக் கைதிகளை விடுவிப்பதில் தாமதம்: ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுவதாக ஹமாஸ் குற்றச்சாட்டு

படம்
டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் மற்றும் காசா மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகள், இஸ்ரேலில் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுவிப்பது என இரு தரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில் பிணைக் கைதிகளை ஒப்பந்தத்தின் படி இரண்டாவது நாளன்று விடுவிப்பதில் ஹமாஸ் தாமதம் காட்டி வருவதாக தகவல். ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறி உள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளது ஹமாஸ். அதுவே தாமதத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் ஆலோசகர் தாஹிர் அல்-நோநோ தெரிவித்துள்ளார். வடக்கு இஸ்ரேல் பகுதிக்கு வேண்டிய உதவிகளை இஸ்ரேல் விநியோகிக்காமல் உள்ளது என்றும், சிறையில் நீண்ட கால தண்டனையில் உள்ள கைதிகளை விடுவிக்க மறுப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது இஸ்ரேல். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு - ஆந்திர முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் https://ift.tt/iIE4lKb

படம்
அமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கடந்த 2004 முதல் 2009 வரை ஆந்திர முதல்வராக பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் ஜெகன்மோகன் தனது வருமானத்திற்கு அதிகமாக பல நூறு கோடி சொத்துகளை சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஜெகன்மோகனை சிபிஐ கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் கைது செய்தது. 15 மாதங்களுக்கு பிறகு ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா சிறையில் இருந்து 2013-ம் ஆண்டு செப்டம்பரில் ஜெகன் ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த 2019-ல், ஜெகன் ஆந்திர முதல்வராக பதவியேற்ற பிறகு, சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜஸ்தானில் இன்று சட்டப்பேரவை தேர்தல்: மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் https://ift.tt/LlV9AyE

படம்
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்குள்ள கங்காநகர் மாவட்டத்தின் காரன்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் இறந்ததால், அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டீப்ஃபேக் தொழில்நுட்ப பிரச்சினை - சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு 7 நாட்கள் கெடு https://ift.tt/UsOdp6e

படம்
புதுடெல்லி : டீப்ஃபேக் தொழில்நுட்ப பிரச்சினையில் சமூக வலைதளங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை 7 நாட்கள் கெடு விதித்துள்ளது. டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான முறையில் வீடியோ, புகைப்படங்களில் ஒரு நபரை தவறாக சித்தரிப்பது அல்லது ஆள்மாறாட்டம் செய்வதாகும். சமீபத்தில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராஷ்மிகா மந்தனா, கஜோல் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளை தவறாக சித்தரித்து போலி வீடியோக்கள் வெளியாகின. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தற்காலிக போர் நிறுத்தம் தொடங்கியது: 25 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

படம்
காசா : முதல் குழுவாக 25 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. கடந்த அக்.7-ம் தேதி பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து, இஸ்ரேல் நடத்திய போரில் காசா பகுதியில் இதுவரை13,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், போர் நிறுத்தம் தேவை என அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டீப்ஃபேக் வீடியோக்களை தடுக்க புதிய சட்டம்: மத்திய ஐடி துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் https://ift.tt/aBIti7Y

படம்
புதுடெல்லி : சமூக வலைதளங்களில் டீப்ஃபேக் உள்ளடக்கங்கள் பகிரப்படுவதைத் தடுக்க புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். புதிய விதிமுறைகளை உருவாக்கும் பணி உடனடியாக தொடங்கப்பட இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து வருகிற நிலையில், அவற்றைப் பயன்படுத்தி அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் போலி புகைப்படங்கள், வீடியோக்களை உருவாக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இத்தகைய போலி உருவாக்கங்கள் ‘டீப்ஃபேக்’ என்று அழைக்கப்படுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கிய தொழிலாளர்களை நெருங்கியது தேசிய பேரிடர் மீட்புக் குழு https://ift.tt/CUInY9K

படம்
உத்தரகாசி : உத்தராகண்ட் சுரங்கப் பாதைக்குள் 51 மீட்டர் தூரத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நெருங்கிவிட்டனர். தொழிலாளர்கள் எந்நேரத்திலும் வெளியே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 கி.மீ தூரத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணியை மாநில சாலை மற்றும்போக்குவரத்து துறை மேற்கொண்டது. இங்கு கடந்த 12-ம் தேதி மண் சரிவு ஏற்பட்டதால், சுரங்கப் பாதைக்குள் பணியாற்றிய 41 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கினர். இவர்களை மீட்கும் முயற்சி கடந்த 12 நாட்களாக நடந்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு - ராகுல் காந்தி பதில் அளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் https://ift.tt/xSiUG9b

படம்
புதுடெல்லி : தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் நாளை (நவ.25) நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த 22-ம் தேதி ராஜஸ்தானின் பார்மேர் மாவட்டம், பய்டோ பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சார கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். இக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் ராகுல் பேசியதாக பாஜக சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விநாடிக்கு 2,700 கனஅடி நீர் காவிரியில் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை https://ift.tt/oGyw93h

படம்
புதுடெல்லி/ பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் டிச‌ம்பர் மாத இறுதி வரை விநாடிக்கு 2,700 கனஅடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. கடந்த அக்.30-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், நவ.22-ம் தேதி வரை தமிழகத்துக்கு விநாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, இதை மறுபரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தது. இருப்பினும், தமிழகத்துக்கு விநாடிக்கு சுமார் 3,000 கனஅடி நீரை திறந்துவிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிணை கைதிகளை விடுவிக்க ஏதுவாக இஸ்ரேல் 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் அறிவிப்பு

படம்
ஜெருசலேம்: பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக, 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். கடந்த அக்.7-ம் தேதி பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து, இஸ்ரேல் நடத்திய போரில் காசா பகுதியில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போர் 40 நாட்களை கடந்து தீவிரமாக நடந்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தராகண்ட் சுரங்கப் பாதை | ”காலை 8 மணிக்குள் பணிகள் முடியலாம்” - தேசிய பேரிடர் மீட்பு படை நம்பிக்கை https://ift.tt/lGiRfFZ

படம்
டேராடூன் : உத்தராகண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி இந்த சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. அதனால் சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். இவர்களை மீட்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எப்படியும் அடுத்த சில மணி நேரங்களில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தகவலை மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரி தெரிவித்துள்ளார். உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் தொடர்பு கொண்டு வருவதாகவும், அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது. செங்குத்தாகவும், பக்கவாட்டிலும் துளையிடப்பட்டு வருகிறது. தொடர்ந்து இரும்பு குழாய்களும் அதில் பொருத்தப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தராகண்ட் சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளனர்: கேமரா முன்பு பேசும் காட்சி வெளியாகியுள்ளது https://ift.tt/IqL03W7

படம்
உத்தரகாசி: உத்தராகண்டில் சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பான முதல் வீடியோ வெளியாகியுள்ளது. விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள் என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே, சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 கி.மீ. சுரங்கப் பாதை அமைக்கும்பணி நடந்து வந்தது. அங்கு கடந்த 12-ம்தேதி மண் சரிவு ஏற்பட்ட நிலையில்,சுரங்கப் பாதைக்குள் வேலை செய்துகொண்டிருந்த 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இளைஞர்கள் திடீர் உயிரிழப்புக்கு தடுப்பூசி காரணம் அல்ல: கரோனா தொடர்பான ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல் https://ift.tt/UETObyu

படம்
சென்னை: இளைஞர்கள் திடீரென உயிரிழப்பதற்கு கரோனா தடுப்பூசி காரணம் அல்ல என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) விளக்கம் அளித்துள்ளது. கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, இளம் வயதில், குறிப்பாக18-45 வயதினரில் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருவதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, உடற்பயிற்சி கூடங்களில் பயிற்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் பலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“உலகக் கோப்பை இறுதிப் போட்டி லக்னோவில் நடந்திருந்தால் இந்தியா வென்றிருக்கும்” - அகிலேஷ் யாதவ் https://ift.tt/HdBvhMa

படம்
எட்டாவா: உலகக் கோப்பை இறுதிப் போட்டி லக்னோவில் நடைபெற்றிருந்தால் இந்தியா வென்றிருக்கும் என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் எட்டாவாவில் அவர் இதனை தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.19) இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா. இந்த சூழலில் இது குறித்து அரசியல் ரீதியாக பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார் அகிலேஷ். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் பலி

படம்
பெய்ரூட்: லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரும் அந்த நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் இயங்கி வரும் அல்-மயாதீன் எனும் அரபு மொழி தொலைக்காட்சிக்காக பணியாற்றி வந்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது அவர்கள் லெபனான் - இஸ்ரேல் எல்லை நிலவரம் தொடர்பாக செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவல் அந்த நாட்டின் தகவல் துறை அமைச்சர் ஜியாத் மக்காரி உறுதி செய்துள்ளார். இந்த தாக்குதலில் லெபனான் நாட்டை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார். அந்த நாட்டில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்புடன் இணைந்து அல்-மயாதீன் தொலைக்காட்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவுடனான 100 ஒப்பந்தங்கள் மறுஆய்வு: மாலத்தீவு அதிபர்

படம்
மாலி: மாலத்தீவு நாட்டின் அதிபராக 2018 முதல் இப்ராஹிம் முகமது சோலி (மாலத்தீவு ஜனநாயக கட்சி) பதவி வகித்தார். இவரது பதவிக் காலத்தில் மாலத்தீவு இந்தியாவின் நட்பு நாடாக விளங்கியது. அங்கு 77 இந்தியவீரர்கள் பாதுகாப்புப் பணிக்காக முகாமிட்டுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முகமது முய்சு கடந்த 17-ம் தேதி அதிபராக பொறுப்பேற்றார். சீன ஆதரவு தலைவராக கருதப்படும் முய்சு அதிபராக பொறுப்பேற்ற மறுநாளே இந்தியா தனது ராணுவ வீரர்களை திரும்பப் பெறவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில், அதிபர்அலுவலக செயலாளர் முகமது பிருசுல் அப்துல் கலீல் அளித்தபேட்டியில், “சோலி ஆட்சியில்இந்தியாவுடன் செய்து கொண்ட100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள்மறுஆய்வு செய்யப்படும்” என தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்த பிறகு 10 மசோதாவை திருப்பி அனுப்பியது ஏன்? - தமிழக ஆளுநருக்கு தலைமை நீதிபதி அமர்வு கேள்வி https://ift.tt/VSJmNRP

படம்
புதுடெல்லி: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக வந்த மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்த பிறகு 10 மசோதாக்களையும் தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏன் என்று தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிவைத்த மசோதாக்கள், அரசின் கொள்கை முடிவுகள் உள்ளிட்ட கோப்புகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டு வைத்துள்ளதாகவும், ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம்செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதுபோல, கேரளா, பஞ்சாப் ஆளுநர்களுக்கு எதிராகவும் அந்தந்த மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு கிச்சடி உணவு: தகவல் தொடர்புக்காக வாக்கி-டாக்கி https://ift.tt/gB6plJ3

படம்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி இந்த சுரங்கப்பாதையில் மண் சரிந்தது. அதனால் சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தொழிலாளர்களுக்கு கிச்சடி உணவு மற்றும் தகவல் தொடர்புக்காக வாக்கி டாக்கியும் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, பக்கவாட்டில் இயந்திரம் மூலம் துளையிட்டு மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில் செங்குத்தாக துளையிட்டு தொழிலாளர்களை மீட்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஓபன் ஏஐ நிறுவனத்தில் இருந்து வெளியேறப் போவதாக ஊழியர்கள் போர்க்கொடி: சாம் ஆல்ட்மேனுடன் செல்ல முடிவு?

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத், ராஜஸ்தானில் 5 கோயில்களை காண பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் https://ift.tt/tLUMe1T

படம்
சென்னை: தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு ரயில்வே சார்பில், பாரத் கவுரவ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி நாகர்கோவில் இருந்து வரும் டிச.10-ம் தேதி புறப்படும் பாரத் கவரவ் சுற்றுலா ரயில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக குஜராத் மற்றும் ராஜஸ்தான் செல்கிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகாதீஷ் கோயில், ராஞ்சோத்ரைஜி கோயில், ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத் ஜி கோயில், துவாராகாதீஷ் கோயில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சாட் ஜிபிடியை உருவாக்கிய ‘ஓப்பன் ஏஐ’ சிஇஓ சாம் ஆல்ட்மேன் நீக்கம்

படம்
சான்பிரான்சிஸ்கோ: சாட்ஜிபிடி செயலியை உருவாக்கிய ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வாக பதவி வகித்து வந்தவர் சாம் ஆல்ட்மேன். இவர் நிறுவனத்துடன் வெளிப்படைத்தன்மையுடனும் சரியான முறையிலும் தொடர்பில் இல்லை என்று குற்றம்சாட்டி கடந்த வெள்ளிக்கிழமை, ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் இயக்குநர் குழு, சாம் ஆல்ட்மேனை நிறுவனத்திலிருந்து நீக்கியது. அவருக்குப் பதிலாக, அந்நிறுவனத்தின் மீரா முராதி சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார். சாம் ஆல்ட்மேனின் நீக்கம் சர்வதேச அளவில் தொழில் நுட்பத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“என்றும் உங்கள் பக்கம் நிற்போம்” - இந்திய அணிக்கு பிரதமர் மோடி ட்வீட் https://ift.tt/CM0QrxB

படம்
அகமதாபாத்: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்த சூழலில் இந்திய அணிக்கு எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்து ஆறுதல் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்திய அணி முதலில் பேட் செய்து 240 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி அரைசதம் கடந்தனர். கேப்டன் ரோகித் சர்மா 47 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தவறினர். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. வார்னர், மார்ஷ் மற்றும் ஸ்மித் ஆகியோர் விரைந்து விக்கெட்டை இழந்தனர். இருந்தும் ஹெட் மற்றும் லபுஷேன் இணைந்து 192 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது அந்த அணிக்கு வெற்றி கூட்டணியாக அமைந்தது. இதன் மூலம் ஆறாவது முறையாக உலக சாம்பியன் ஆனது ஆஸ்திரேலியா. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தீவிரவாதிகள் தலைதூக்குகிறார்கள்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு https://ift.tt/Z1ed0fp

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய ராணுவத்துக்காக சென்னை எம்ஐடி தயாரித்த ட்ரோன்கள்: மலை பகுதிகளில் உணவு கொண்டு செல்ல உதவும் https://ift.tt/cdixZXs

படம்
சென்னை: இந்திய ராணுவத்துக்காக மலை பகுதிகளில் உணவு கொண்டு செல்ல உதவும் ட்ரோன்களை சென்னை எம்ஐடி நிறுவனம் தயாரித்துள்ளது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் (எம்ஐடி) மேம்பட்ட வான்வெளி ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் இயங்கி வரும் கலாம் மேம்பட்ட ஆளில்லா விமான ஆராய்ச்சி மையம், நவீனதொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட ட்ரோன் எனப்படும் ஆளில்லாவிமானங்களை வடிவமைத்து இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காக அனுப்பி வைத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலக கழிவறை தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 1.5 லட்சம் பொது கழிவறைகளை சுத்தம் செய்யும் திட்டம்: மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார் https://ift.tt/5FyczA2

படம்
புதுடெல்லி: உலக கழிவறை தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பொது இடங்களில் உள்ள 1.5 லட்சம் கழிவறைகளை சுத்தம் செய்தல் மற்றும் பராமரித்தல் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. உலக கழிவறை தினம் ஆண்டுதோறும் நவம்பர் 19-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ‘பாதுகாப்பான சுகாதார மாற்றத்தை முடுக்கி விடுதல்’ என்பது உலக கழிவறை தினத்துக்கான இந்த ஆண்டின் கருப்பொருளாக உள்ளது. இதையொட்டி, ‘சுத்தமான கழிவறை சவால்’ என்ற இயக்கத்தை மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“இந்தியா தனது ராணுவ வீரர்களை திரும்பப் பெற வேண்டும்” - மாலத்தீவின் புதிய அதிபர்

படம்
மாலே: இந்தியா தனது ராணுவ வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என மாலத்தீவின் புதிய அதிபர் முகமது மூயிஸ் முறைப்படி இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு மாலத்தீவு மக்களின் ஆதரவு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விறுவிறுப்பாக நடந்த சட்டப்பேரவை தேர்தல் - ம.பி.யில் 71%, சத்தீஸ்கரில் 68% வாக்குப்பதிவு https://ift.tt/vKZR5dq

படம்
போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவைகளுக்கு நேற்று ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில், 70 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. மத்திய பிரதேசத்தில் 71.16%, சத்தீஸ்கரில் 68.15% வாக்குகள் பதிவாகின. மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் படேல், ஃபகன் சிங் குலாஸ்தே உட்பட பாஜக, காங்கிரஸ், ஆத் ஆத்மி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 2,533 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

100 கோடி மக்களை சென்றடைந்த பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி https://ift.tt/5RvGh8K

படம்
புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) 100 கோடி மக்களை சென்றடைந்துள்ளதாக ரோத்தக் ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருகிறார். மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகிறது. கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபரில் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இதன் 100-வது நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் ஒலிபரப்பானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கிரிக்கெட்டிலும் அரசியல்... - இந்திய அணியை வைத்து பன்முகத்தன்மை பாடமெடுத்த காங்கிரஸ் https://ift.tt/eIviJFW

படம்
புதுடெல்லி : வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் நடப்பு உலகக் கோப்பை இறுதிப் போட்டி யில் விளையாட உள்ளன. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய 10 போட்டிகளிலும் வெற்றிபெற்று இறுதிப்போட்டியை அடைந்துள்ளது. இதையடுத்து இந்திய அணியின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். இதனிடையே, இந்திய அணியின் தனித்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வரைபடம் கவனம் ஈர்த்துள்ளது. அந்த வரைபடத்தில், நடப்பு உலகக் கோப்பை தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் இடம்பெற்று உள்ளன. அதன் கூடவே அப்பதிவில், from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜகவில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இணைந்தார்! https://ift.tt/YevJzAb

படம்
ஹைதராபாத் : பாஜகவில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இணைந்துள்ளார். காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துக் கொண்டார். தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக திகழ்ந்த நடிகை விஜயசாந்தி, பாஜக வில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பிறகு தனிக்கட்சி தொடங்கிய அவர், அக்கட்சியை தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியுடன் இணைத்தார். பிறகு அக்கட்சியை விட்டு வெளியேறி காங்கிரஸில் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த 2020-ல் மீண்டும் பாஜகவுக்கு திரும்பிய அவர் அக்கட்சியில் தேசிய செயற்குழு உறுப்பினராக செயல்பட்டுவந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நிலக்கரி சுரங்க அலுவலகத்தில் தீ: சீனாவில் 26 பேர் உயிரிழப்பு

படம்
பெய்ஜிங்: வடக்கு சீனாவின் ஷாங்சி மாகாணம் லுலியாங் நகரில் யோங்ஜு நிலக்கரி நிறுவனத்தின் அலுவலகம், 5 மாடி கட்டிடம் ஒன்றில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்தக் கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் நேற்று காலையில் தீப்பற்றியது. இத்தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியி்ல் ஈடுபட்டனர். எனினும் தீ விபத்தில்26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர்காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை காப்பாற்ற அமெரிக்க இயந்திரம் மூலம் மீட்பு பணி தீவிரம் https://ift.tt/ZQlmyMW

படம்
டேராடூன்: உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி சுரங்கப்பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். பல்வேறு துறைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். சுரங்கப் பாதையில் சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் சுவாசிப்பதற்காக குழாய் வழியாக தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. மற்றொரு குழாய் வழியாக உணவு பொருட்கள், குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்