இடுகைகள்

நவம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிரதமர் மோடியை மீண்டும் புகழ்ந்த காங். எம்.பி.சசி தரூர் https://ift.tt/xwkmGvt

படம்
புதுடெல்லி: முன்​னாள் மத்​திய அமைச்​சரும் திரு​வனந்​த​புரம் மக்​களவை தொகுதி காங்​கிரஸ் எம்​.பி.​யு​மான சசி தரூர் சமீப கால​மாக பிரதமர் நரேந்​திர மோடியை புகழ்ந்து பேசி வரு​கிறார். இது காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் மத்​தி​யில் அதிருப்​தியை ஏற்படுத்தி உள்​ளது. காங்​கிரஸ் கட்​சிக்​கும் அவருக்​கும் இடையே விரிசல் ஏற்​பட்​டுள்ள நிலை​யில், சசி தரூர் எக்ஸ் தளத்​தில் நேற்று கூறிய​தாவது: Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி குண்டுவெடிப்பு: 25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை; அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் கைது https://ift.tt/SeB4vhD

படம்
புதுடெல்லி: டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் அல் - பலா மருத்துவக் கல்லூரி தொடர்புடைய 25 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். கடந்த 10-ம் தேதி இரவு டெல்லி செங்கோட்டை அருகே ஒரு கார் வெடித்துச் சிதறியது. காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் நபி கார் குண்டு தாக்குதலை நடத்தியது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. காஷ்மீர், டெல்லி, ஹரியானா, குஜராத், உத்தர பிரதேச போலீஸாரும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2015-ல் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தவரை அடித்துக் கொன்ற கும்பல்: வழக்கை வாபஸ் பெற உ.பி. அரசு மனு https://ift.tt/ITzSed8

படம்
புதுடெல்லி: கடந்த 2015-ல் உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்த காரணத்துக்காக முகமது அக்லாக் என்பவர் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. கிரேட்டர் நொய்டாவில் நடந்த அக்லக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைத்து குற்றவாளிகள் மீதான வழக்குகளையும் வாபஸ் பெறும் பணியை உத்தரப் பிரதேச அரசு தொடங்கியுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது தாத்ரியின் படுகொலை சம்பவம். மாட்டிறைச்சியை வீட்டில் வைத்திருந்ததாகக் கூறி முகமது அக்லாக், கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதினா புனித யாத்திரையின்போது டீசல் டேங்கர் மோதி பேருந்து தீக்கிரை: சவுதியில் 45 இந்தியர்கள் உயிரிழப்பு - நடந்தது என்ன? https://ift.tt/COiobac

படம்
ஹைதராபாத்: சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய யாத்ரீகர்கள் 45 பேர், பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். டீசல் டேங்கர் மீது பேருந்து மோதியதில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மல்லேபல்லி, பஜார் காட், ஆசிஃப் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தார், புனித ஹஜ் யாத்திரை செல்ல தீர்மானித்தனர். அதன்படி 4 சுற்றுலா ஏஜென்சிகள் மூலம் மொத்தம் 54 பேர், ஹைதராபாத்தில் இருந்து கடந்த 9-ம் தேதி சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை: வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் முக்கிய தீர்ப்பு

படம்
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1971-ம் ஆண்டு போரின்போது பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடாக உதயமானது. அப்போது, பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர்த் தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு வங்கதேச அரசு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச மாணவர்கள் கடந்த 2024 ஜூன், ஜூலையில் பல போராட்டங்களில் ஈடுபட்டனர்.போராட்டத்தை அடக்க அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா, போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நடந்த போலீஸ் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் சுமார் 1,400 மாணவர்கள் உயிரிழந்தனர். 25,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 2024 ஆகஸ்டில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. தலைநகர் டாக்காவில் உள்ள நாடாளுமன்றம், பிரதமரின் அதிகாரப்பூர்வ வீடு ஆகிய இடங்களை மாணவர்கள் முற்றுகையிட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹார் தேர்தல் வெற்றி எதிரொலி: நாடு முழுவதும் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை 1800 ஆக உயர்த்த திட்டம் https://ift.tt/lgo6Etn

படம்
பிஹார் தேர்தல் வெற்றியின் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள சட்டப் பேரவைகளில் உள்ள பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 1,800-ஆக உயர்த்த பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி வெளியான பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளில், 101 இடங்களில் போட்டியிட்ட பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து பிஹாரில் மீண்டும் தேசியஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கைய உயர்த்த பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் அமித் மாள்வியா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலக வங்கியிடம் பெற்ற ரூ.14 ஆயிரம் கோடி கடனை தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்திய நிதிஷ் அரசு: ஜன் சுராஜ் கட்சி தலைவர் உதய் சிங் குற்றச்சாட்டு  https://ift.tt/3DKamzc

படம்
பாட்னா: உலக வங்​கி​யிடம் பெற்ற ரூ.14 ஆயிரம் கோடியை நிதிஷ் குமார் தலை​மையி​லான அரசு தேர்​தல் வெற்​றிக்​காக பயன்​படுத்தி உள்​ள​தாக ஜன் சுராஜ் கட்சி குற்​றம்​சாட்டி உள்​ளது. பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) அமோக வெற்றி பெற்று ஆட்​சியை தக்​க​வைத்​துக் கொண்​டது. மொத்​தம் உள்ள 243 இடங்​களில் என்​டிஏ 202, மெகா கூட்​டணி 35 இடங்​களில் வெற்றி பெற்​றது. பிர​சாந்த் கிஷோர் தலை​மையி​லான ஜன் சுராஜ் கட்சி படு​தோல்வி அடைந்​தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

10-வது முறையாக பிஹார் முதல்வராகிறார் நிதிஷ்குமார்: நவ.19-ல் பதவியேற்பு விழா https://ift.tt/qTxuz3R

படம்
பாட்னா: பிஹாரில் வரும் 19-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) அரசு பதவி​யேற்​கிறது. நிதிஷ் குமார் 10-வது முறை​யாக மீண்​டும் முதல்​வ​ராக பதவி​யேற்​பார் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக தலை​மையி​லான ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களை கைப்​பற்றி அமோக வெற்றி பெற்​றிருக்​கிறது. ஆர்​ஜேடி, காங்​கிரஸ் அடங்​கிய மெகா கூட்​ட​ணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​துள்​ளன. இதையடுத்து பிஹாரில் புதிய அரசு அமைப்​பது தொடர்​பாக பாஜக மற்​றும் ஐக்​கிய ஜனதா தள தலை​வர்​கள் தீவிர ஆலோ​சனை நடத்தி வரு​கின்​றனர். பிஹார் முதல்​வரும் ஐக்​கிய ஜனதா தள தலை​வரு​மான நிதிஷ் குமார் பாட்​னா​வில் நேற்று கட்​சி​யின் மூத்த தலை​வர்​களு​டன் ஆலோ​சனை நடத்​தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி: கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை https://ift.tt/a3yixhW

படம்
புதுடெல்லி: பிஹார் தேர்​தல் தோல்வி தொடர்​பாக டெல்​லி​யில் நேற்று காங்​கிரஸ் தலைவர் கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் உள்​ளிட்ட கட்​சிகள் அடங்​கிய மெகா கூட்​டணி படு​தோல்வி அடைந்​திருக்​கிறது. குறிப்​பாக 61 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட காங்​கிரஸ் 6 தொகு​தி​களில் மட்​டுமே வெற்றி பெற்​றிருக்​கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீவிரவாத மருத்துவர்களிடம் இருந்து கைப்பற்றிய வெடிபொருள் வெடித்து காஷ்மீரில் 9 பேர் பரிதாப உயிரிழப்பு: 32 பேர் படுகாயம் https://ift.tt/lHPLECN

படம்
புதுடெல்லி: தீவிரவாத மருத்துவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை ஜம்மு - காஷ்மீரில் உள்ள காவல் நிலையத்தில் ஆய்வு செய்தபோது திடீரென வெடித்ததில் போலீஸார், தடயவியல் நிபுணர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் காவல் நிலையக் கட்டிடம் பலத்த சேதமடைந்தது. ஜம்மு - காஷ்மீரில் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்து புன்போரா, நவ்காம் உள்ளிட்ட இடங்களில் கடந்த அக்டோபர் மாத மத்தியில் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் ஆதில் என்ற மருத்துவரை சிறப்பு விசாரணைக் குழுவினர் முதலில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள அல் பலா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய மருத்துவர் முஜம்மில் ஷகீல் கைது செய்யப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் சஸ்பெண்ட்: பாஜக மேலிடம் நடவடிக்கை https://ift.tt/vuPmJ7C

படம்
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங், கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமாக இருந்தவர் ஆர்.கே. சிங். பிஹார் அரசியல் களத்தில் மூத்த அரசியல்வாதியாகத் திகழ்கிறார். அர்ரா தொகுதியின் முன்னாள் எம்.பி.யாக இருக்கிறார். இந்நிலையில் கட்சியிலிருந்து ஆர்.கே.சிங்கை சஸ்பெண்ட் செய்து பாஜக மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளார் என கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது. பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வந்து ஒரு நாள் மட்டுமே ஆனநிலையில் அவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹாரில் தனித்து போட்டியிட்ட ஒவைசி கட்சி 5 இடங்களில் வெற்றி https://ift.tt/j3YJnEz

படம்
பாட்னா: பிஹாரில் தனித்​துப் போட்​டி​யிட்ட அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்சி 5 இடங்​களில் வெற்றி பெற்​றது. பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் ஹைத​ரா​பாத் எம்​.பி. அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்​சி, எதிர்க்​கட்​சிகளின் மகா கூட்​ட​ணி​யில் சேர விரும்​பியது. ஆனால் ஆர்​ஜேடி தலை​வர் தேஜஸ்வி யாதவுக்கு இதில் விருப்​பம் இல்​லாத​தால் கூட்​டணி ஏற்​பட​வில்​லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“அடுத்து மேற்கு வங்கத்திலும் காட்டாட்சியை அகற்றுவோம்” - பிரதமர் மோடி உறுதி https://ift.tt/pSXmOJk

படம்
புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் நடக்கும் காட்டாட்சியை பாஜக வேரோடு அகற்றும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 200+ தொகுதிகளை வசப்படுத்திய ஐக்கிய ஜனதா தளம் - பாஜக இணைந்த என்டிஏ மகத்தான வெற்றியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பெரும்பான்மைக்கு 122 இடங்களின் வெற்றி தேவை எனும் நிலையில், என்டிஏ பதிவு செய்திருப்பது வரலாற்று வெற்றியாக கருதப்படுகிறது. அதேவேளையில், 35 இடங்களை வெல்லவே திக்குமுக்காடிய ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸின் மகா கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘மோடியை பழிப்பது சுலபம்; ஆனால்…’ - ராகுலை விமர்சித்த ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம் https://ift.tt/ObdG1JX

படம்
புதுடெல்லி: பிஹார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள என்டிஏ கூட்டணியின் செயல்பாட்டை புகழ்ந்தும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்தும் உள்ளார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம். பிஹார் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக, ஜேடியு அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி. இந்நிலையில், பிஹார் தேர்தலை குறிப்பிட்டு வீடியோ ஒன்றை ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

3 அரசு ஊழியர்கள் உட்பட 15 பேரிடம் விசாரணை https://ift.tt/uKCGIrV

படம்
ஸ்ரீநகர்: ஒ​யிட் காலர் தீவிர​வாத சதி திட்​டம் தொடர்​பாக காஷ்மீரில் 3 அரசு ஊழியர்​கள் உட்பட 15 பேரை பிடித்து போலீஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்​பவத்​தில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த டாக்​டர்​கள் ஈடு​பட்​டுள்​ளது தெரிய​வந்​துள்​ளது. இது ஒயிட் காலர் தீவிர​வாத சதி என அழைக்​கப்​படு​கிறது. இது தொடர்​பாக டாக்​டர்​கள் உட்பட 7 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இந்த வழக்கை என்ஐஏ விசா​ரித்து வரு​கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் பேருந்தின் டயர் வெடித்ததால் மக்கள் பீதி https://ift.tt/iDkeb8q

படம்
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த திங்கட்கிழமை மாலை கார் குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில், தென்மேற்கு டெல்லியின் மகாபால்பூரில் உள்ள ராடிசன் அருகே வெடிகுண்டு வெடித்தது போன்ற பலத்த சத்தம் கேட்டதாக காலை 9.19 மணிக்கு டெஹி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. எனினும் விரிவான சோதனைக்கு பிறகும் சம்பவ இடம் எதையும் தீயணைப்பு வீரர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், தவுலா குவான் நோக்கிச் சென்ற டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்தின் பின்புற டயர் வெடித்ததாகவும், அதிலிருந்து சத்தம் வந்ததாகவும் தெரியவந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக துருக்கியில் 2 மருத்துவர்கள் சதி திட்டம்: ஜெய்ஷ் இ முகமது அமைப்புடனான தொடர்புகள் அம்பலம் https://ift.tt/6zTBedE

படம்
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 மருத்துவர்களில் 2 பேர், துருக்கியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர்களை சந்தித்து சதி ஆலோசனையில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை கார் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாயின. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ‘ஒயிட் காலர் தீவிரவாதத்தை’ முறியடிக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல் துறை இணைந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செங்கோட்டை கார் வெடிப்பு: பயங்கரவாத சம்பவம் என மத்திய அரசு அறிவிப்பு https://ift.tt/kWP1Xne

படம்
புதுடெல்லி: டெல்லி - செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் புதன்கிழமை (நவ.12) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் என அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விசாரணை விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என விசாரணை அமைப்புகளுக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி குண்டுவெடிப்பு இடத்தில் 42 முக்கிய தடயங்களைச் சேகரித்தது என்ஐஏ: ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்குத் தொடர்பு https://ift.tt/VRk4qCb

படம்
புதுடெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று 42 முக்கிய தடயங்களை சேகரித்தனர். டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சிக்னலில் நேற்று முன்தினம் மாலை ஒரு கார் வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சாலையில் வெடித்து சிதறிய காரை, காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி ஓட்டி வந்துள்ளார். குண்டுவெடிப்பில் அவர் உடல் சிதறி உயிரிழந்தார். அவரும் ஹரியானாவின் அல் பலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செங்கோட்டை கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - டெல்லி அரசு https://ift.tt/VglCoOE

படம்
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே திங்கட்கிழமை மாலை நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தார்களுக்கு நிவாரண உதவி அறிவித்துள்ளது டெல்லி யூனியன் பிரதேச அரசு. “டெல்லியில் அரங்கேறிய துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஒட்டுமொத்த நகரையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது. இதில் தங்களது உறவுகளை பிரிந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை டெல்லி அரசு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் காயமடைந்தவர்கள் விரைந்து குணம்பெற வேண்டும். இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக டெல்லி அரசு நிற்கும். இந்த நேரத்தில் உடனடியாக நிவாரணம் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செங்கோட்டை அருகே சிக்னலில் நின்றபோது பயங்கரம்: டெல்லி கார் வெடிப்புச் சம்பவத்தில் நடந்தது என்ன? - முழு விவரம் https://ift.tt/GadkED4

படம்
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்ற கார் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததை அடுத்து, மும்பை, சென்னை உட்பட நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை பகுதியில் நேற்று மாலை 6.30 மணி அளவில் வாகனங்கள் வழக்கம்போல சென்றுகொண்டு இருந்தன. அப்போது, சிக்னலில் நின்ற கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், அருகே நின்றிருந்த சிலகார்களிலும் தீப்பிடித்தது. இதில் 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: பிரதமர் மோடி இரங்கல் https://ift.tt/obyt3s4

படம்
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இன்று மாலை டெல்லியில் நடந்த வெடிப்பு சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற அதிகாரிகளுடன் நிலைமை குறித்து ஆலோசித்தேன்” என்று தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராகுல் குற்றச்சாட்டுக்கு: அமைச்சர் அமித் ஷா பதில் https://ift.tt/BqjuQkY

படம்
அர்வால்: பாஜக வெற்றி பெறுவதற்காக வாக்குகள் திருடப்படுகின்றன என பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில், மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல முறை குற்றம் சாட்டினார். பிஹாரில் நாளை இரண்டாவது மற்றும் இறுதி கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் பிஹாரின் அர்வல் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹாரில் 2-ம் கட்ட தேர்தல் | 122 தொகுதிகளில் பிரச்சாரம் நிறைவு: நாளை வாக்குப்பதிவு; 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை https://ift.tt/XTcI5QM

படம்
பாட்னா: பிஹாரில் இரண்​டாம் கட்​ட​மாக 122 தொகு​தி​களில் நாளை சட்டப்பேரவை தேர்​தல் நடைபெறுகிறது. இந்த தொகு​தி​களில் நேற்று மாலை​யுடன் பிரச்​சா​ரம் நிறைவடைந்​தது. பிஹாரில் மொத்​தம் 243 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. அங்கு இரண்டு கட்​டங்​களாக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடத்​தப்​படும் என்று தலை​மைத் தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது. இதன்​படி கடந்த 6-ம் தேதி 121 தொகு​தி​களில் வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. இதில் 65.08 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தான் அணுசக்தி மையத்தை தாக்க இந்திரா அனுமதிக்கவில்லை: அமெரிக்க முன்னாள் சிஐஏ அதிகாரி தகவல் 

படம்
வாஷிங்டன்: ‘‘இஸ்​ரேலும் இந்​தி​யா​வும் சேர்ந்து பாகிஸ்​தான் அணுசக்தி மையத்தை தாக்​கு​வதற்​கு, அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்தி அனு​ம​திக்​க​வில்​லை. இது மிக​வும் அவமானகர​மானது’’ என்று அமெரிக்​கா​வின் உளவுத் துறை​யான சிஐஏ முன்​னாள் அதி​காரி தெரி​வித்​துள்​ளார். அமெரிக்​கா​வின் சிஐஏ அதி​காரி​யாக பணி​யாற்​றிய​வர் ரிச்​சர்ட் பார்​லோ. இவர் தனி​யார் செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1980-ம் ஆண்​டு​களில் பாகிஸ்​தான் அணுசக்தி ஆராய்ச்​சி​யில் ஈடு​பட்டு வந்​தது. குறிப்​பாக அணுஆ​யுதம் தயாரிப்​ப​தற்கு தேவை​யான யுரேனி​யத்தை கஹுவா அணுசக்தி மையத்​தில் செறிவூட்​டும் நடவடிக்​கை​யில் பாகிஸ்​தான் ஈடு​படு​வ​தாக சந்​தேகம் எழுந்​தது. ஆனால், பாகிஸ்​தான் கைகளில் அணுஆ​யுதம் இருப்​பதை இஸ்​ரேல் உட்பட பல நாடு​கள் விரும்​ப​வில்​லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது: உலகம் முழுவதும் உடனடி அமல்

படம்
வாஷிங்டன்: இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், நரம்பியல் பாதிப்பு, மனநிலை பாதிப்பு இருப்பவர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டு உள்ளது. உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் புதிய கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 7 மாதங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிச. 1-ல் தொடக்கம் https://ift.tt/VFWXNlQ

படம்
புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். இதன்படி டிசம்பர் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும். இந்த கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாக, அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும். நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். மக்களுக்கு சேவையாற்றும் வகையில் குளிர்கால கூட்டத் தொடர் அமைய வேண்டும். இவ்வாறு அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புனே பெண் பிஹாரில் வாக்களித்ததாக காங். புகார் https://ift.tt/Eux16z3

படம்
புனே: புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் உர்​மி. இவர் தனது சமூக வலை​தளபக்​கத்​தில் பிஹார் முதல்​கட்ட தேர்​தலில் மோடிக்கு வாக்களித்து விட்​ட​தாக கூறி விரலில் அடை​யாள மையுடன் புகைப்​படம் ஒன்றை வெளி​யிட்​டார். இவர் முன்​னர் புனே​வில் நடை​பெற்ற தேர்​தலிலும் இதேபோன்று ஓட்​டளித்​து​விட்டு புகைப்​படம் ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார். இதனை காங்​கிரஸ் கட்​சி​யினர் தோண்டி எடுத்து ஒரு நபர் இரண்டு மாநிலங்​களில் வாக்​களிக்​கலாம் என்​ப​தற்கு இதுவே சிறந்த உதா​ரணம் என்று தெரி​வித்​துள்​ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் பொது இடங்களில் திரியும் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/v4Ul8VR

படம்
புதுடெல்லி: ​நாடு முழு​வதும் பொது இடங்​களில் திரி​யும் தெரு நாய்​களுக்கு முறையாக கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு, காப்​பகங்​களில் அடைக்குமாறு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தெரு நாய் மேலாண்மை திட்​டங்களை செயல்​படுத்த 4 வாரங்​களுக்​குள்வழி​காட்டு செயல்​முறை​களை உரு​வாக்​கு​மாறு இந்​திய விலங்​கு​கள் நல வாரி​யத்​துக்​கும் உத்​தர​விடப்பட்​டுள்​ளது. டெல்​லி​யில் சிறு​வர்​களை தெரு நாய்​கள் கடித்து ரேபிஸ் தொற்று ஏற்​பட்​டது குறித்து ஊடகங்​களில் செய்​தி​கள் வெளி​யாகின. நாடு முழு​வதும் இந்த பிரச்​சினை இருப்​ப​தாக பலரும் சமூக வலை​தளங்​களில் கருத்​துகளை பதிவிட்​டனர். இதையடுத்து, உச்ச நீதி​மன்​றமே தாமாக முன்​வந்து வழக்கு பதிவு செய்​தது. ‘விலங்​கு​கள் கருத்​தடை விதி​கள் நாடு முழு​வதும் ஒரே மாதிரி​யாக இருக்​கின்​றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாக்கு திருட பாஜக முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு https://ift.tt/QRo5PEs

படம்
புர்னியா: பிஹார் தேர்தலில் வாக்குகளை திருட பாஜக முயற்சிக்கும் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். பிஹாரில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள புர்னியா நகரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “நாட்டில் எங்கு தேர்தல் நடந்தாலும், வாக்குகளை திருடி பாஜக வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் ஹரியானாவில் நடந்த தேர்தலில் பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து வாக்குகளை எப்படி திருடின என்பது குறித்து இந்த உலகத்துக்கு விரிவாக எடுத்துரைத்தேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹார் தேர்தலில் 64% வாக்குப்பதிவு: முதல்கட்டமாக 121 தொகுதிகளில் அமைதியாக நடைபெற்றது https://ift.tt/aI510Cy

படம்
பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்டமாக 121 தொகுதிகளில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 64.46 சதவீத வாக்குகள் பதிவாகின. பிஹாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 122 பெண்கள் உட்பட 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 48, ஐக்கிய ஜனதா தளம் 57, எல்ஜேபி (ஆர்)13, ஆர்எல்எம் 2, எச்ஏஎம் 1 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மெகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 72, காங்கிரஸ் 24, விஐபி 6, கம்யூனிஸ்ட் கட்சிகள் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீக்கியர் அல்லாத 14 பேருக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு

படம்
புதுடெல்லி: சீக்​கிய மதத்தை நிறு​விய குரு​நானக் தேவ் பிறந்த இடமான நான்​கானா சாகிப், பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலத்​தில் உள்​ளது. குரு​நானக் ஜெயந்​தியை முன்​னிட்டு சுமார் 2,100 பக்​தர்​கள் பாகிஸ்​தான் செல்ல மத்​திய உள்​துறை அமைச்​சகம் அனு​மதி வழங்​கி​யிருந்​தது. இவர்​கள் அனை​வருக்​கும் பாகிஸ்​தான் அரசு பயண ஆவணங்​களை வழங்​கியது. இவர்​களில் 1,900 பேர் நேற்று வாகா எல்லை வழி​யாக பாகிஸ்​தான் சென்​றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு: 121 தொகுதிகளில் 122 பெண்கள் உட்பட 1,314 பேர் போட்டி https://ift.tt/SrhnUBc

படம்
புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேர​வைக்கு நவம்​பர் 6, 11 தேதி​களில் 2 கட்​ட​மாக தேர்​தல் நடை​பெறும் என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​திருந்​தது. இதன்​படி, மொத்தம் உள்ள 243-ல் 121 தொகு​தி​களில் இன்று முதல்​கட்ட தேர்​தல் நடை​பெறுகிறது. இதற்காக பிரதமர் மோடி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி, காங்கிரஸின் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. 18 மாவட்​டங்​களை உள்​ளடக்​கிய இந்த தொகு​தி​களில் மொத்​தம் 122 பெண்​கள் உள்​ளிட்ட 1,314 வேட்​பாளர்​கள் போட்​டி​யில் உள்​ளனர். வாக்​காளர்​கள் எண்​ணிக்கை 3.75 கோடி. மொத்​தம் 45,341 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்: மோடி, அமித் ஷா மீது ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு https://ift.tt/sfi62yx

படம்
புதுடெல்லி: ஹரி​யா​னா​வில் கடந்த ஆண்டு நடை​பெற்ற தேர்​தலில் 25 லட்​சம் வாக்​கு​களை திருடி பாஜக ஆட்​சி​யைப் பிடித்​த​தாக ஆதா​ரங்​களை வெளி​யிட்டு ராகுல் காந்தி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். குறிப்​பாக, பிரதமர் மோடி, உள்​துறை அமைச்​சர் அமித் ஷா ஆகியோருடன் சேர்ந்​து, தேர்​தல் ஆணை​யம் சதி செய்​த​தாக அவர் தெரி​வித்​துள்​ளார். பிஹார் மாநில முதல்​கட்ட தேர்​தல் இன்று நடை​பெறும் நிலை​யில், டெல்​லி​யில் உள்ள காங்​கிரஸ் தலை​மையகத்​தில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹாரில் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 121 தொகுதியில் நாளை வாக்குப்பதிவு https://ift.tt/9ds2uY8

படம்
பாட்னா: பிஹாரில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அந்த மாநிலத்தில் நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பிஹாரில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் நிலவுகிறது. பிஹாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 101 தொகுதிகள், லோக் ஜன சக்தி - ராம் விலாஸ் - 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹார் தேர்தல் காரணமாக நிரம்பி வழியும் ஓட்டல்கள் https://ift.tt/BiajpkG

படம்
பாட்னா: பிஹாரில் வரும் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைநகர் பாட்னாவில் உள்ள பிரபல ஓட்டல்களில் தங்கி உள்ளனர். குறிப்பாக மவுரியா ஓட்டலில் உள்ள அனைத்து அறைகளையும் அரசியல் கட்சிகள் முன்பதிவு செய்துள்ளன. இதுபோல சாணக்யா ஓட்டலில் தங்குவதற்கான அறையை முன்பதிவு செய்ய முயற்சித்தால், 'விற்றுத் தீர்ந்துவிட்டது' என தகவல் வருகிறது. மற்ற பெரிய ஓட்டல்களிலும் இதை நிலைதான் உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கொடிக் கம்பங்களை அகற்ற தடை கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு https://ift.tt/nDGP5if

படம்
புதுடெல்லி: தமிழ்கத்தில் அரசி​யல் கட்​சிகளின் கொடிக் கம்​பங்​களை அகற்ற தடைகோரி இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. தமிழகத்தில் பொதுஇடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை வைப்பதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தேசிய பொதுச் செய​லா​ளர் டி.ராஜா சார்​பில் வழக்​கறிஞர் ராம் சங்​கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்​முறை​யீடு மனு தாக்​கல் தாக்​கல் செய்​தார். அதில், தமிழகத்​தில் கட்​சிகளின் கொடிக் ​கம்​பங்​களை அகற்ற பிறப்​பித்த சென்னை உயர் நீதி​மன்ற கிளை உத்​தர​வுக்கு தடை விதிக்க கோரப்​பட்​டுள்​ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆர்ஜேடி தேர்தல் சுவரொட்டிகளில் லாலுவின் படத்தை ஏன் காணவில்லை? - தேஜஸ்விக்கு பிரதமர் மோடி சூசகமான கேள்வி https://ift.tt/6sg0Ied

படம்
புதுடெல்லி: பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு காரண​மானவரின் (லாலு பிர​சாத்) படங்​களை ஏன் பயன்​படுத்​த​வில்லை என்று பிரதமர் மோடி மறை​முக​மாக ஆர்​ஜேடி தலை​வர் தேஜஸ்வி யாதவுக்கு கேள்வி எழுப்பி உள்​ளார். கதி​ஹாரில் நடை​பெற்ற பிரச்​சார கூட்​டத்​தில் பிரதமர் மோடி இதுகுறித்து பேசி​ய​தாவது: பிஹாரில் ஒட்​டப்​பட்​டுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) மற்​றும் காங்​கிரஸ் கட்​சிகளின் சுவரொட்​டிகளில், பிஹாரில் கட்​டாட்​சியை கொண்டு வந்த நபரின் படங்​கள்(லாலு பிர​சாத்) முற்​றி​லு​மாக காண​வில்​லை. ஒரு சில இடங்​களில் தொலைநோக்​கி​யில் கூட காண​முடி​யாத அளவுக்கு மிகச் சிறிய​தாக உள்​ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அனில் அம்பானியின் ரூ.7,500 கோடி சொத்துகள் முடக்கம்: பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை நடவடிக்கை - பின்னணி என்ன? https://ift.tt/lSit2J3

படம்
மும்பை: தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.7,500 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள், வங்கிகளில் பெற்ற ரூ.20 ஆயிரம் கோடி கடனை முறையாக திருப்பிச் செலுத்தவில்லை என புகார் எழுந்தது. இதுகுறித்து, அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதில், கடன் தொகையை முறையாக பயன்படுத்தாமல் போலி நிறுவனங்களுக்கு மாற்றிவிட்டது விசாரணையில் தெரியவந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மாவோயிஸ்ட் தலைவர் அழைப்பு https://ift.tt/baT71PV

படம்
கட்​சிரோலி: மாவோ​யிஸ்ட் அமைப்​பில் பொலிட் பீரோ மற்​றும் மத்​தி​யக் குழு உறுப்​பின​ராக இருந்​தவர் வேணுகோ​பால் ராவ் என்ற பூப​தி. இவர் கடந்த மாதம் 14-ம் தேதி போலீ​ஸார் முன் ஆயுதங்​களை ஒப்​படைத்​து​விட்டு சரணடைந்​தார். இவருடன் சேர்ந்து ரூபேஷ் என்ற முக்​கி​யத் தலை​வரும் சரணடைந்​தார். இந்​நிலை​யில் தன்​னுடன் இருந்த மாவோ​யிஸ்ட் தோழர்​களுக்கு வீடியோ மூலம் வேண்​டு​கோள் ஒன்றை பூபதி விடுத்​துள்​ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மனைவி கிறிஸ்தவத்துக்கு மாறவில்லை: அமெரிக்க துணை அதிபர் கருத்துக்கு கடும் எதிர்ப்பு

படம்
வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் இரு தினங்​களுக்கு முன்பு நடை​பெற்ற டர்​னிங் பாயின்ட் யுஎஸ்ஏ நிகழ்ச்​சி​யில் பேசி​னார். அப்​போது, தன்​னுடைய மனை​வி​யின் மதப் பின்​னணி குறித்த கேள்விக்கு வான்ஸ் கூறும்​போது, “என் மனைவி உஷா எப்​போ​தாவது என்​னுடன் தேவால​யத்​துக்கு வரு​வார். ஒரு நாள் கத்​தோலிக்க திருச்​சபை​யால் மனமாற்​றம் அடைந்து கிறிஸ்​தவத்தை ஏற்​றுக் கொள்​வார் என்று நம்​பு​கிறேன்” என்​றார். இவருடைய இந்த கருத்​துக்கு சமூக வலை​தளங்​களில் சிலர் கடும் எதிர்ப்​பும் சிலர் ஆதர​வும் தெரி​வித்து வரு​கின்​றனர். “உஷா வான்ஸ் ஒரு இந்​து. மத நம்​பிக்​கையற்​றவர் அல்ல. இவர்​கள் இந்து வேத முறைப்​படி திரு​மணம் செய்து கொண்​டனர். இவர்​களு​டைய ஒரு குழந்​தை​யின் பெயர் விவேக். ஜே.டி.​வான்ஸ் போலி​யானவர்” என ஒரு​வர் பதி​விட்​டுள்​ளார். மேலும் சிலர், அவரது மனைவி கிறிஸ்தவ மதத்​துக்கு மாறு​வார் என தெரி​வித்​துள்​ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சத்தீஸ்கரில் பொற்காலம் தொடக்கம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்  https://ift.tt/fUBSlg2

படம்
ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரில் பொற்​காலம் தொடங்​கி​யிருக்​கிறது என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். கடந்த 2000-ம் ஆண்டு நவம்​பர் 1-ம் தேதி சத்​தீஸ்​கர் மாநிலம் உதய​மானது. கடந்த 2005-ம் ஆண்​டில் அந்த மாநில தலைநகர் ராய்ப்​பூர் அருகே நயா ராய்ப்​பூர் நகரம் உரு​வாக்​கப்​பட்​டது. அங்கு 52 ஏக்​கர் பரப்​பள​வில் ரூ.324 கோடி செல​வில் பிரம்​மாண்ட சட்​டப்​பேரவை கட்​டப்​பட்டு உள்​ளது. புதிய சட்​டப்​பேர​வையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்​து​வைத்​தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஸ்ரீகாகுளம் கோயிலில் கூட்ட நெரிசல்: 8 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு - நடந்தது என்ன? https://ift.tt/ljAmGwp

படம்
ஸ்ரீகாகுளம் : ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள், 12 வயது சிறுவன் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர். ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் காசிபுக்கா கிராமத்தில்  வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இதனை ஹரிமுகுந்த் பண்டா என்பவர் கட்டினார். இவருக்கு தற்போது 96 வயதாகிறது. தனது சொந்த ஊரில் தனக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் வெங்கடேச பெருமாள் கோயிலை கட்டினார். பக்தர்களிடம் ரூ.20 கோடி வரை நன்கொடை பெற்றார். 4 ஆண்டுகள் முன்பு திருப்பணிகள் தொடங்கப்பட்டு, கடந்த மே மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுப்புற கிராம மக்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டின் வளர்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்கு அளப்பரியது: கார்கேவுக்கு அமித்ஷா பதிலடி! https://ift.tt/NDHGqua

படம்
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடைவிதிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிய கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அமித்ஷா, “நாட்டை சிறந்த இடமாக மாற்ற என்னைப் போன்ற லட்சக்கணக்கான இளைஞர்களை ஊக்குவித்த அமைப்பு ஆர்எஸ்எஸ் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அது தேசபக்தி மற்றும் ஒழுக்கத்தின் மதிப்புகளை விதைத்துள்ளது. ஆர்எஸ்எஸ் உருவாக்கிய இரண்டு பேர் (அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி) இந்த நாட்டின் பிரதமர்களாகி விட்டதையும் நாம் காண வேண்டும். அவர்கள் இருவரும் இந்த நாட்டின் சிறந்த பிரதமர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்