இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் ராஜ்நாத் சிங் இன்று பேச்சுவார்த்தை: சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு யோசனை https://ift.tt/3fQsGrU

படம்
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான மத்திய அரசு குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த சட்டங்களில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ என்ற நடை முறையை இந்த சட்டங்கள் நிர்மூலமாக்கி விடும் எனவும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர். இந்தக் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்த போதிலும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பஞ்சாப்பை சேர்ந்த விவசாயிகள் கடந்த 2 மாதங்களாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கொலம்பியாவில் அதிகரிக்கும் கரோனா

படம்
கொலம்பியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,430 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,16,806 அக அதிகரித்துள்ளது. இதுகுறித்து கொலம்பியா சுகாதாரத் துறை தரப்பில்,” கடந்த 24 மணி நேரத்தில் 8,430 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொலம்பியாவில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13, 16,806 ஆக அதிகரித்துள்ளது.. மேலும் நேற்று மட்டும் 182 பேர் பலியாக, கரோனாவுக்கு 36,766 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுவரை 12,10,489 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செஞ்சி அருகே மனைவி விஷம் அருந்தி தற்கொலை; தாங்க முடியாமல் கணவரும் தற்கொலை https://ift.tt/3ohGUFj

படம்
செஞ்சி அருகே மனைவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதை தாங்க முடியாமல் கணவரும் தற்கொலை செய்துகொண்டார். செஞ்சியை அடுத்த ஆர்.நயம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (64). இவரது மனைவி குணசாலி (59). முத்துகிருஷ்ணன் நேற்று (நவ. 30) மதியம் சாப்பிடும்போது குழம்பு சரியில்லை என மனைவி குணசாலியை திட்டி உள்ளார். இதில் மனவேதனை அடைந்த குணசாலி பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடுங்குளிரோடு கடும் வேதனையில் போராடும் விவசாயிகள் கோரிக்கை; மத்திய அரசு ஏன் செவிசாய்க்கவில்லை: பஞ்சாப் முதல்வர் கேள்வி https://ift.tt/2JAosZ9

படம்
கடுங்குளிரில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசு ஏன் செவிசாய்க்கவில்லை என்று பஞ்சாப் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் நேற்று முன்தினம் தெரிவித்தபடி புராரி மைதானத்திற்கு சென்றால் மட்டுமே பேச்சுவார்த்தை என்பதை விவசாயிகள் ஏற்கவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்; மக்கள் வாக்களித்து வலிமையை காட்ட வேண்டும்: ஒவைசி வலியுறுத்தல் https://ift.tt/36pjhnT

படம்
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் மக்கள் வாக்களித்து தங்கள் வலிமையை காட்ட வேண்டும் என ஹைதராபாத் எம்.பி.யும், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவருமான ஒவைசி அழைப்பு விடுத்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பாஜக, காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை தீவிரமாகப் பிரச்சாரம் செய்தன/ from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடுமுழுவதும் கரோனா தொற்று: கணிசமாக குறைந்தது https://ift.tt/2Jfufnv

படம்
நாடுமுழுவதும் கரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 31,118 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் நாடுமுழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 94,62,810 ஆக அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பேச்சுவார்த்தை நடத்துவதில் திடீர் சிக்கல்: டெல்லியில் போராடும் விவசாயிகள் நிபந்தனை https://ift.tt/36ql2RT

படம்
அனைத்து விவசாய குழுக்களும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடப்படும் வரையில் நாங்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள போவதில்லை என டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாய சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த சட்டங்களில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ என்ற நடை முறையை இந்த சட்டங்கள் நிர்மூலமாக்கி விடும் எனவும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல்: காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு https://ift.tt/36qY9xQ

படம்
பரபரப்பான சூழலில் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பாஜக, காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை தீவிரமாகப் பிரச்சாரம் செய்தன/ from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘பிரதமர் மோடி- சீக்கியர்களுடனான சிறப்பு உறவு’ - புத்தகம் வெளியீடு https://ift.tt/33vcebz

படம்
மத்திய விமான போக்குவரத்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஹர்தீப் சிங் புரியுடன் இணைந்து, 'பிரதமர் மோடி மற்றும் அவரது அரசின் சீக்கியர்களுடனான சிறப்பு உறவு' என்னும் புத்தகத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். இந்தி, பஞ்சாபி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய புரி, இப்புத்தகத்தை வெளியிட்டதற்காக ஜவடேகர் மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தை பாராட்டினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எப்போதெல்லாம் தேச நலனில் மாற்றங்கள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தேவையற்ற எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன: பிரதமர் மோடி வேதனை https://ift.tt/39tEGhH

படம்
எப்போதெல்லாம் சமூகத்திலும் தேசிய நலனிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றனவோ அப்போதெல்லாம் தேவையற்ற எதிர்ப்புக் குரல்கள் எழுவதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி வாரணாசியில் நடைபெற்ற தேவ் தீபாவளி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் காசியிலிருந்து களவுபோன தேவி அன்னபூரணி சிலை மீண்டும் கிடைக்கப் பெறவிருப்பதால் காசிக்கு இது மற்றொரு சிறப்புத் தருணம் என்று கூறினார். காசிக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று அவர் தெரிவித்தார். இதுபோன்ற பழங்கால சிலைகள் நமது விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் நம்பிக்கைச் சின்னங்கள் என்று அவர் குறிப்பிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம்- ம.பி. முதல்வர் சிவராஜ் சவுகான் அறிவிப்பு https://ift.tt/3obac8f

படம்
மத்தியபிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாஜக பயிற்சித் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டார். இவ்விழாவில் அவர் பேசும்போது, “மாநில அரசின் நலத்திட்டங்கள் மீண்டும் தொடங்கப்பட்டு அது உரிய பயனாளிகளைச் சென்றடையும். இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டங்களில் ஒன்றான முதல்வர் விவசாயி நலத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு இனி ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இந்தத் திட்டம் விரைவில் அமலுக்கு வரும். மத்தியபிரதேச மாநிலம்தான் எனது கோயில். மாநில மக்கள்தான் எனது கடவுள். நான் அந்தக் கடவுளின் பூசாரியாக இருக்கிறேன். மாநில மக்கள் அனைவரும் தங்களது மகன், மகள்களை கண்டிப்பாக படிக்க வைக்க வேண்டும். ஐஐஎம், ஐஐடி, மருத்துவம் உள்ளிட்ட எந்தப் படிப்பாக இருந்தாலும், கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்காக அரசே அந்தக் கட்டணத்தைச் செலுத்தும்” என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அலகாபாத், பைஸாபாத் பெயர்களை மாற்றியதுபோல ஹைதராபாத்தை பாக்யா நகர் என மாற்ற வேண்டும்: உ.பி. முதல்வர் கோரிக்கைக்கு அகில இந்திய சாதுக்கள் சபை ஆதரவு https://ift.tt/39sP8pE

படம்
ஹைதராபாத் பெயரை பாக்யா நகர் என மாற்ற வேண்டும் என்ற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோரிக்கைக்கு அகில இந்திய சாதுக்கள் சபை ஆதரவு தெரிவித்துள்ளது. ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலை பாஜக முதன்முறை யாக பெரும் சவாலாக எடுத்து பிரச்சாரம் செய்தது. பாஜகவின் முக்கிய பிரச்சாரகரான உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த 28-ம் தேதி ஹைதராபாத்தில் பேசினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டிசம்பர் மாதத்தில் ஏழுமலையானை தரிசிக்க ரூ.300: ஆன்லைன் டிக்கெட்கள் வெளியீடு https://ift.tt/2KWkUkT

படம்
திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் ரூ.300 சிறப்பு தரிசனம் மூலம் பக்தர்கள் தரிசிப்பதற்கான டிக்கெட்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் நேற்று வெளியிட்டது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம்செய்ய தற்போது அண்டை மாநிலங்களான தமிழகம், புதுவை, கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வரத் தொடங்கி உள்ளனர். கரோனா நிபந்தனைகள் காரணமாகவும், போக்குவரத்து வசதிகள் தடை செய்யப்பட்டதாலும் இதுவரை ஏழுமலையான் கோயிலுக்கு வெளிமாநில பக்தர்கள்கார்கள் மூலமாக மட்டுமே வந்து சென்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பணத்தை திருப்பி அனுப்புவதாக கூறி ஆன்லைன் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை https://ift.tt/3mtvyxa

படம்
ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குபவர்களை குறிவைத்து ஏமாற்றும் மோசடி கும்பல் குறித்துவிழிப்புடன் இருக்குமாறு சைபர்கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர். ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றம் செய்ய புதுப்புது செயலிகள் வந்துள்ளன. இந்த செயலிகள் மூலம் வாங்கும் பொருட்களில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், பணத்தை திரும்ப அனுப்பக் கோரி வாடிக்கையாளர்கள் புகார் செய்வது வழக்கம். இப்படி புகார் செய்யும் பட்சத்தில், ஒரு சில நாட்களில் பணம் அவர்களின் வங்கிக்கணக்குக்கு வந்துவிடும். ஒரு சிலருக்கு பணம் திரும்ப கிடைப்பதில் பிரச்சினை ஏற்படும்போது, குறிப்பிட்ட செயலியின் சேவைப்பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசுவார்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாகிறது: தென் தமிழகத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை https://ift.tt/3qdrUtD

படம்
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்தம் மேற்கு நோக்கி நகர்ந்து குமரி முனையை டிசம்பர் 3ம் தேதி அன்று நெருங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக தென்தமிழகம் மற்றும் கேரளாவில் தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் இலங்கை சிறையில் கலவரம்: கைதிகள் 8 பேர் உயிரிழப்பு

படம்
இலங்கை தலைநகர் கொழும்பு அருகே பாதுகாப்பு மிகுந்த மகர மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது தொடர்பாக கைதிகள் நேற்று முன்தினம் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். சமையல் அறைகளுக்கு தீ வைத்த கைதிகள், 2 வார்டன்களை பிணைக் கைதிகளாக பிடித்துக் கொண்டனர். இதையடுத்து அங்கு ஆயுதம் தாங்கிய போலீஸார் வரவழைக்கப்பட்டனர். நிலைமையை கட்டுப்படுத்த அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 கைதிகள் உயிரிழந்தனர். மேலும் 55 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடியின் சீர்திருத்தங்கள் ஜிடிபி வளர்ச்சிக்கு வழி வகுக்கும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை https://ift.tt/2JqRJWi

படம்
‘‘பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகள், அடுத்த காலாண்டில் ஜிடிபி.யை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2 சாலை மேம்பாலங்களைத் திறந்து வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டிப் போட்டுக் கொண்டு கேரளாவில் இளம்பெண்களை களம் இறக்கும் அரசியல் கட்சிகள் https://ift.tt/2VisBDV

படம்
கேரளாவில் வரும் 8, 10, 14-ம் தேதிகளில் 3 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது.மொத்தமுள்ள 14 மாவட்டங்களிலும் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறது. வழக்கமாக உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து வந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ, இளைஞர் அமைப்பான டிஒய்எப்.யை சேர்ந்தோருக்கு அதிகளவில் வாய்ப்பு கிடைத்து வந்தது. இதனால் கேரளத்தில் அடுத்தடுத்த தலைமுறையில் மார்க்சிய சிந்தனையாளர்களும் உருவாகிக் கொண்டிருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக கட்சிகளும் அதிகளவில் இளம்பெண்களை வேட்பாளர்களாக களம் இறக்கியுள்ளன. அதனால், கேரளத்தில் சகல கட்சிகளும் அழகிப் போட்டி நடத்துவது போல் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இ...

ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வென்று பொறியியல் படிக்க தேர்வாகியும் மும்பை ஐஐடி.யில் ‘சீட்’ இழந்த ஆதரவற்ற இளைஞர் https://ift.tt/3mooB0o

படம்
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் சித்தாந்த் பத்ரா, வயது 18. அப்பா இல்லை. அம்மாவிடம் வளர்ந்து வந்தார். அவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். அதன்பின், ஆதரவற்ற நிலையில் இருந்து வருகிறார். எனினும், பொறியியல் படிப்பில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதினார். அதில், அகில இந்திய அளவில் 270-வது இடத்தைப் பிடித்தார். அதன்பின், பாம்பே ஐஐடி.யில் மின்சார பொறியியல் படிக்க பி.டெக் தேர்ந்தெடுத்தார். ஆனால், 2 வாரங்களில் அவருடைய ‘சீட்’ ரத்து செய்யப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வேளாண் சட்டங்கள் தொடர்பான விவாதத்தின் போது மாநிலங்களவை ‘ஆடியோ' பாதித்தது ஏன்?- ஆர்டிஐ கேள்விக்கு மத்திய பொதுப் பணித் துறை விளக்கம் https://ift.tt/2HYlk9g

படம்
‘‘மாநிலங்களவையில் வேளாண் சட்டங்கள் மீதான விவாதத்தின் போது, எம்.பி.க்கள் மைக்ரோபோன்களை சேதப்படுத்தியதால் ஆடியோ சேவை பாதிக்கப்பட்டது’’ என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதிகளை ஏற்படுத்தித் தருதல்) சட்டம், விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம், வேளாண் சேவைகள் ஒப்பந்த சட்டம் ஆகியவை மக்களவையில் கடந்த செப்டம்பர் 17-ம் தேதி நிறைவேற்றப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜன்தன், பண பரிவர்த்தனையால் ஏடிஎம்.களின் பயன்பாடு அதிகரிப்பு https://ift.tt/3o7wh7R

படம்
மத்திய அரசின் ஜன்தன் கணக்கு மற்றும் அரசின் நேரடி பண பரிமாற்றம் (டிபிடி) ஆகியவை காரணமாக கிராமப் பகுதிகளில் ஏடிஎம்.களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள பகுதிகளில் இயங்கும் ஏடிஎம்.கள் கூட அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் 2 சதவீத அளவுக்கு பயன்படுத்தப்பட்ட ஏடிஎம்.கள் தற்போது 12 சதவீத அளவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் டெபிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. செப்டம்பர் 2020 நிலவரப்படி டெபிட் கார்டு பயன்படுத்துவோர் 86 கோடியாகும். இவற்றில் பிரதமரின் ஜன்தன் கணக்குக்கு வழங்கப்பட்ட ரூபே கார்டுகளின் அளவு 35 சதவீதம். அதாவது 30 கோடி கார்டுகள் புழக்கத்தில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐஎம்ஏ நிதிநிறுவன மோசடி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீரிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம் https://ift.tt/2ViC3H9

படம்
ஐஎம்ஏ நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்கை தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமதுவை விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஐஎம்ஏ நிதி நிறுவனம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.4 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளது. இவ்வழக்கில் அந்நிறுவனத்தின் தலைவர் முகமது மன்சூர்கான் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்கை கைது செய்தனர். முன்னாள் ஐஜிபி ஹேமந்த் நிம்பல்கரையும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த வாரம் விசாரித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எல்லைகளை முற்றுகையிட போவதாக எச்சரிக்கை; வேளாண் துறை அமைச்சருடன் அமித் ஷா அவசர ஆலோசனை: விவசாயிகள் போராட்டத்தால் தலைநகர் ஸ்தம்பித்தது https://ift.tt/37CtFbB

படம்
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தலைநகரில் உள்ள 5 எல்லைகளை முற்றுகை யிட போவதாக எச்சரித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இனி தோலிகளில் சுமந்துவர வேண்டாம்: தொலைதூரக் கிராம கர்ப்பிணிப் பெண்களுக்காக மகாராஷ்டிராவில் புதிய திட்டம் https://ift.tt/2Joqg7Q

படம்
மகாராஷ்ராவின் தொலைதூர மலைக்கிராமங்களில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்காக புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சாதாரணமாக குக்கிராமங்களில் வசிக்கும் பெண்களுக்கு பிரசவ வேதனை ஏற்பட்டால் அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. மலைக்கிராமங்களில் இப்பிரச்சினைகள் குறித்துச் சொல்லவே வேண்டாம். அவர்கள் இன்னும்கூட தோலிகளிலும் கூடைகளிலும்தான் கர்ப்பிணிப் பெண்களை பிரசவத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே மிகப்பெரிய அணை கட்டுகிறது சீனா: மிகப்பெரிய நீர்மின்நிலையம் அமைக்கத் திட்டம்

படம்
திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே மிகப்பெரிய அணையை எழுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இந்த அணையில் மிகப்பெரிய நீர்மின்திட்டத்தைச் செயல்படுத்தவும் சீனா முடிவு செய்துள்ளது. சீனாவின் 14-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அணை கட்டும் திட்டம் இருப்பதாகவும், அடுத்த ஆண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் சீன அரசின் அதிகாரபூர்வ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வட இந்தியாவில் கடும் குளிர் நிலவும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை https://ift.tt/3mkxxE0

படம்
வட இந்தியாவில் குளிர்காலத்தில் 2020 டிசம்பர் முதல் 2021 பிப்ரவரி வரை இயல்புக்கும் குறைவான வெப்ப நிலை நிலவுவதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய அறிவியல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய வானிலைத் துறை கடந்த 2016ம் ஆண்டு முதல் பருவகால முன்னறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. குளிர்கால வெப்பநிலை குறித்து இந்திய வானிலைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவிட்-19 தடுப்பூசி: தயாரிப்பு திட்டத்துக்கு 3-ம் கட்டமாக ரூ.900 கோடி நிதியுதவி https://ift.tt/3fPrrJB

படம்
இந்திய கோவிட்-19 தடுப்பூசி மேம்பாட்டு திட்டமான கொவிட் சுரக்‌ஷா திட்டத்துக்கு 3-வது முறையாக ரூ.900 கோடி நிதியுதிவியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய கோவிட்-19 தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக, உயிரி தொழில்நுட்ப துறைக்கு இந்த நிதி வழங்கப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதமாற்றத்துக்கு எதிரான உ.பி.யின் புதிய சட்டத்தில் நிறைய சந்தேகங்கள்; மறுபரிசீலனை செய்க: மாயாவதி https://ift.tt/33uvmGG

படம்
மதமாற்றத்திற்கு எதிராக ஏற்கெனவே நிறைய சட்டங்கள் உள்ளதாகவும், உத்தரப் பிரதேச அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தில் நிறைய சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் மாயாவதி தெரிவித்துள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அமைச்சரவை நவம்பர் 24ஆம் தேதி லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்ட மசோதாவை இயற்றியது. இச்சட்டத்திற்கு மாநில ஆளுநர் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் திருமணத்திற்காக மதம் மாறுவது அல்லது கட்டாய மத மாற்றத்திற்காக இப்புதிய சட்டத்தில் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. ரூ.15,000 அபராதம் விதிக்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதுரையில் 2 மகள்களுடன் தாய் தற்கொலை; செல்ல நாய்க்குட்டிக்கும் விஷம் கொடுத்த பரிதாபம்- போலீஸ் விசாரணை https://ift.tt/3lkEpjz

படம்
மதுரையில் 2 மகள்களுடன் தாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். செல்லமாக வளர்த்த நாய்க்குட்டிக்கும் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஒத்தக்கடை அருகிலுள்ள மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் அருண். இவரது மனைவி பெயர் வளர்மதி (39). இவர்களுக்கு அகிலா (20), பிரீத்தி (17) ஆகிய மகள்கள் இருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதுரையில் 2 மகள்களுடன் தாய் தற்கொலை; செல்ல நாய்க்குட்டிக்கும் விஷம் கொடுத்த பரிதாபம்- போலீஸ் விசாரணை https://ift.tt/3lkEpjz

படம்
மதுரையில் 2 மகள்களுடன் தாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். செல்லமாக வளர்த்த நாய்க்குட்டிக்கும் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஒத்தக்கடை அருகிலுள்ள மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் அருண். இவரது மனைவி பெயர் வளர்மதி (39). இவர்களுக்கு அகிலா (20), பிரீத்தி (17) ஆகிய மகள்கள் இருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லிக்குள் வரும் 5 எல்லைகளையும் தடுப்போம்: 5-வது நாளாக வலுக்கும் விவசாயிகள் போராட்டம்: கடும் போக்குவரத்து நெரிசலால் திணறும் டெல்லி  https://ift.tt/3obMsB9

படம்
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் புறநகரில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தால், டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. டெல்லிக்கு வரும் 5 நுழைவுவாயில்களையும் தடுப்போம் என்று விவசாயிகள் கூறியிருப்பதால், 5-வது நாளாகப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தெற்கு டெல்லியில் உள்ள புராரி மைதானத்துக்குச் சென்றபின்புதான் பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கோரிக்கையை ஏற்க விவசாயி அமைப்புகள் மறுத்துவிட்டன. நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு மட்டுமே சம்மதிப்பதாகத் தெரிவித்துள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மம்தா பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் கேட்க வாய்ப்ப்பு: மேற்கு வங்க பாஜக எம்.பி. தகவல் https://ift.tt/3mm6J6s

படம்
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதல்வர் மம்தா பானர்ஜியிடம் மேற்கு வங்க ஆளுநர் கேட்க வாய்ப்புள்ளதாக பாஜக எம்.பி. சவுமித்ர கான் தெரிவித்துள்ளார். கடந்த பல மாதங்களாக, மேற்கு வங்க ஆளுநர் தங்கருக்கும் மம்தாவுக்கும் உரசல் போக்கு இருந்து வருகிறது. தனது மாநிலத்தில் ஒரு இணை நிர்வாகத்தை நடத்துவதாக ஆளுநர் மீது மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் கரோனா பாதிப்பு 94 லட்சத்தைக் கடந்தது: இந்த மாதத்தில் 7-வது முறையாகத் தொற்று 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது https://ift.tt/33tbJyI

படம்
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 94 லட்சத்தைக் கடந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 88.50 லட்சத்தை நெருங்குகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா தடுப்பு மருந்து பரிசோதனை செய்துகொண்ட சென்னை தன்னார்வலருக்குப் பக்க விளைவு?: ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு சீரம் நிறுவனத்துக்கு நோட்டீஸ் https://ift.tt/37jQ8tF

படம்
கரோனா தடுப்பு மருந்தை உடலில் செலுத்திக்கொண்ட தன்னார்வலருக்குப் பக்க விளைவு ஏற்பட்டதாகக் கூறி, ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு சீரம் மருந்து நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், சீரம் மருந்து நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. எந்தப் பக்கவிளைவும் ஏற்பட வாய்ப்பில்லை. பொய்யான பிரச்சாரங்களை வெளியிட்டால் ரூ.100 கோடி இழப்பீடு கோரப்படும் என்று பதில் அளித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனாவால் பாதிக்கப்பட்ட ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ காலமானார்: பிரதமர் மோடி இரங்கல் https://ift.tt/2Ju2l6B

படம்
கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜஸ்தான் மாநில பாஜக எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி(வயது59) சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எம்எல்ஏ மகேஸ்வரி, குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த சில நாட்களாகச் சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் அளி்க்காமல் நேற்று நள்ளிரவு காலமானார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விவசாயிகளைத் தீவிரவாதிகளைப் போல் மத்திய அரசு நடத்துகிறது: சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு https://ift.tt/36oNkfL

படம்
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை தீவிரவாதிகளை நடத்துவதுபோல் மத்திய அரசு நடத்துகிறது. அவர்களை டெல்லிக்குள் வரவிடாமல் தடுக்கிறது என்று சிவசேனா கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளார்கள்.. டெல்லியை நோக்கி ஹரியானா, பஞ்சாப், உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள்,விவசாய சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லிக்கு படையெடுத்துள்ளார்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காங்கிரஸுக்குள் முரண்பாடு: பிரதமர் மோடியைப் புகழ்ந்த ஆனந்த் சர்மா: விமர்சித்த ரன்தீப் சிங் சுர்ஜேவாலா https://ift.tt/36iQpxv

படம்
கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் இருக்கும் மருந்து நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி நேரடியாகச் சென்று ஆய்வு நடத்திய சம்பவத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஆனந்த் சர்மா புகழ்ந்துள்ளார். ஆனால், அதேசமயம், அந்தக் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார். கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், அகமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் பயோடெக் பார்க், புனேயில் உள்ள சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் ஆகியவை ஈடுபட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காவல் துறை தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார்; உ.பி., நொய்டாவில் 2 காவலர் உள்ளிட்ட 9 பேர் கைது: ஏற்கெனவே 100 பேரை பணியில் சேர்த்தது அம்பலம் https://ift.tt/3q6Hl73

படம்
காவல் துறை தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்து சுமார் 100 பேரை பணியமர்த்தியதாக உத்தரபிரதேசம் நொய்டாவில் டெல்லியைச் சேர்ந்த 2 காவலர் கள் உட்பட 9 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் செக்டர் 62 பகுதியில் டெல்லி காவல் துறையின் காவலர்கள் பணிக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதில், நேற்று முன்தினம் தேர்வுஎழுத வந்த அர்பித், அமன் மற்றும் தினேஷ் சவுத்ரி ஆகியோர்சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தமையால் நிறுத்தி வைக்கப்பட்டனர். ஹரியாணாவின் பல்வலை சேர்ந்த இவர்களை விசாரிக்க நொய்டா காவல் துறையின் துணை ஆணையரும் தமிழருமான சு.இ.ராஜேஷ் ஐபிஎஸ் தம் படையுடன் வந்தார்.இவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹைதராபாத்தை தொழில்வளம் மிக்க நகரமாக உருவாக்குவோம்: மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா வாக்குறுதி https://ift.tt/33t1qdS

படம்
நவாப்புகளின் நகரமாக உள்ள ஹைதராபாத்தை தொழில்வளம் மிக்க நகரமாக பாஜக மாற்றும் என அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்தார். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. 150 வார்டுகள் உள்ள இந்த மாநகராட்சியில் சுமார் 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தெலங்கானா மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தனது உருவத்தை வரைந்து அனுப்பிய 6-ம் வகுப்பு மாணவனுக்கு பிரதமர் மோடி பாராட்டு https://ift.tt/2JnBCch

படம்
மகாராஷ்டிர மாநிலம் பர்பானியில் உள்ள பால்வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருபவர் அஜய் டேக். இவர் அண்மையில் பிரதமர் மோடியின் உருவத்தை தத்ரூபமாக வரைந்தார். அந்த ஓவியத்துடன் ஒரு கடிதம் எழுதி பிரதமருக்கு அனுப்பி வைத்தார். ஓவியத்தைப் பார்த்து வியந்த பிரதமர் மோடி சிறுவனுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “உங்களதுஓவியத் திறமை மிகவும் அபாரம்.கடிதத்தில் நீங்கள் வெளிப்படுத்திய நாட்டைப் பற்றிய உங்கள்கருத்துகள் உங்கள் எண்ணங்களின் அழகை விளக்குகின்றன. சமூகத்தின் முன்னேற்றத்துக்காக உங்களது படைப்பாற்றலைப் பயன்படுத்த வேண்டும். சமூகத்தில் தொடர்புடைய பிரச்சினைகள்குறித்த விழிப்புணர்வை உங்கள்நண்பர்களிடம் ஏற்படுத்த திறமையைப் பயன்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நோட்டாவுக்கு அதிக வாக்கு கிடைத்தால் தேர்தலை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் வழக்கு https://ift.tt/3mgocNw

படம்
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மின்னணு வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்களுக்கான சின்னங்களைப் போல நோட்டாவும் கடைசியில் இடம்பெற்றிருக்கும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் வாக்காளர்கள் அனைவருக்குமான உரிமையே நோட்டாஎன்பதாகும். எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் நோட்டாவுக்கான பொத்தானை அழுத்தலாம். இதன் மூலம் அந்தத் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விரும்பவில்லை என்று அர்த்தம் கொள்ளப்படும். அண்மையில் நடைபெற்ற பிஹார் பேரவைத் தேர்தலில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் நோட்டாவுக்கு வாக்களித்திருந்தனர். பாஜக மூத்த தலைவரும் வழக்கறிருமான அஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் லடாக்கில் கட்டுமானப் பணிகளை தொடரும்: சீனா அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி தகவல்

படம்
இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதியில், ஆத்திரமூட்டும் வகையில் சீனா தொடர்ந்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்று அமெரிக்காவின் எம்.பி.தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா தொடர்ந்துமுயற்சித்து வருகிறது. லடாக்கில் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே (எல்ஏசி) சீன வீரர்கள் ஆக்கிரமித்த போது, இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர். இதையடுத்து அங்கு இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் இதுவரை 8 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இருதரப்பும் படைகளை குறைத்துக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. 9-வது சுற்றுப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உயர் கல்வி படித்து பணக்கார நாடுகளுக்கு இடம்பெயர்வோரில் இந்தியர்கள் முதலிடம் https://ift.tt/33tdagz

படம்
உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி படித்துவிட்டு பணக்கார நாடுகளுக்கு இடம் பெயர்வோர் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். உலகில் உள்ள 32 நாடுகள் இணைந்து பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பை (ஓஇசிடி) ஏற்படுத்தியுள்ளன. இந்த ஓஇசிடி நாடுகள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளாக உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், நார்வே, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை விவசாயிகள் புரிந்து கொள்ளாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்: நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் கருத்து https://ift.tt/3mmcoJM

படம்
நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் ரமேஷ் சந்த் செய்திநிறுவனத்துக்கு அளித்த பேட்டி யில் கூறியதாவது: புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகளின் வருமானம் பலமடங்கு அதிகரிக்கும். விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் 3 கருத்துகளைக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அவர்கள் புதிய சட்டத்தை முற்றிலும் தவறாக, அதில் உள்ள சாதக அம்சங்களுக்கு எதிர்ப்பதமாக நினைத்துக் கொண்டு போராடுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

லண்டன் அரண்மனைக்கு அடுத்ததாக மும்பையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ‘அன்டிலியா’ பங்களா புகைப்படம் வெளியிட்டார் முகேஷ் அம்பானி https://ift.tt/3fRiWh8

படம்
மும்பை மாநகரின் முக்கிய அடையாளங்களில் உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் உள்ள முகேஷ் அம்பானியின் அன்டிலியா பங்களாவும் ஒன்று. மிகவும் விலை மதிப்பு மிக்க தனியார் சொத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடி. இந்த பங்களாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார். தனது மனைவி நீட்டா மற்றும் 3 குழந்தைகள் ஆனந்த், ஆகாஷ் மற்றும் இஷா ஆகியோருடன் உள்ள புகைப்படங்களையும் அவர்வெளியிட்டுள்ளார். இஷா திருமணமாகி அவர் கணவர் ஆனந்த் பிரமளுடன் வோர்லி பங்களாவில் தற்போது வசிக்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியில் தொடர்ந்து பதற்றம் அமித் ஷா வேண்டுகோளை ஏற்க மறுப்பு: பேச்சுவார்த்தைக்கு அதிகாரம் படைத்த அமைச்சர்கள் குழுவை நியமிக்க வலியுறுத்தல் https://ift.tt/36liQuV

படம்
விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வேண்டுகோளை ஏற்க மறுத்துள்ள விவசாய சங்கங்கள், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அதிகாரம் படைத்த அமைச்சர்கள் குழுவைநியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக கூறி 3 புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த செப்டம்பரில் இயற்றியது. இந்த சட்டங்கள், விவசாயிகளின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால், இந்த சட்டங்களில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள், முழுக்க முழுக்க பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், தங்கள் நலனுக்கு எதிராக இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். குறிப்பாக, விளைபொருட்களுக்கான ஆதார விலை நிறுத்தப்படும் என அச்சம் தெரிவித்தனர். அதை மத்திய அரசு மறுத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்