இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் ஒரே நாளில் 1.33 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தி சாதனை: கரோனா தொற்றும் அதிகரிப்பு https://ift.tt/2WEd8C7

படம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.33 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதே நேரம், கரோனா தொற்றும் அதிகரித்து 42 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2 வாரங்களில் மீண்டும் காஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு: மக்கள் கடும் அதிர்ச்சி https://ift.tt/2Y4hGlJ

படம்
வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் காஸ் சிலிண்டர் விலையில் 25 ரூபாயை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி விலை உயர்த்தப்பட்ட நிலையில் இரு வாரங்களுக்குள் 2-வது முறையாக சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

30 லட்சம் இந்திய வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம் https://ift.tt/3t1Lc7h

படம்
2021, ஜூன் 16 முதல் ஜூலை 31-ம் தேதி வரை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன, 594 புகார்கள் வந்துள்ளன என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டம் கடந்த மே மாதம் நடைமுறைக்கு வந்தபின், 2-வது முறையாக வாட்ஸ் அப் நிறுவனம் அறிக்கை வெளியிடுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆதாரமில்லா வகையில் தேசிய கட்சிகளுக்கு ரூ.3,370 கோடி நிதி : பாஜகவுக்கு ரூ,2,642 கோடி: ஏடிஆர் தகவல் https://ift.tt/3mPMa5x

படம்
கடந்த 2019-20ம் நிதியாண்டில் அறியப்படாத, ஆதாரங்கள் இல்லாத வகையில் ரூ.3ஆயிரத்து 377.41 கோடி நிதியை தேசியக் கட்சிகள் பெற்றுள்ளன. தேசிய கட்சிகள் பெற்ற நிதியில் 70 சதவீதம் அறியப்படாத வகையில் வந்துள்ளது என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்)தகவல் தெரிவி்த்துள்ளது. ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்) வெளியி்ட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்ற தலிபான் தலைவர்; கத்தாரில் இந்தியத் தூதருடன் பேச்சில் பங்கேற்றார்

படம்
கத்தாரில் இந்தியத் தூரர் தீபக் மிட்டலைச் சந்தித்து நேற்று பேச்சுவார்த்தையில் பங்ேகற்ற தலிபான் தீவிரவாத அமைப்பின் பிரதிநிதி ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் இந்திய ராணுவ அகாடெமியில் பயிற்சி பெற்றவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரி்க்க, நேட்டோ படைகள் முழுமையாக வெளியேறயதையடுத்து, அங்கு தலிபான் தீவிரவாத அமைப்பினர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். இன்னும் தலிபான்கள் தரப்பில் எந்தவிதமான அதிகாரபூர்வ ஆட்சியும் அமைக்கப்படவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எந்த நாட்டுக்கு எதிராகவும் ஆப்கன் மண்ணை பயன்படுத்த கூடாது; தீவிரவாதிகளுக்கு புகலிடம் தரக் கூடாது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றம்

படம்
எந்த நாட்டுக்கு எதிராகவும் ஆப்கன் மண்ணை பயன்படுத்தக்கூடாது என்றும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் தரக் கூடாது என்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் (யுஎன்எஸ்சி) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அந்த மண்ணிலிருந்து அமெரிக்கப் படைகள் கடந்த மாதம் வெளி யேறத் தொடங்கின. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் வசப்படுத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தெலங்கானாவில் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு https://ift.tt/3ztPAhH

படம்
தெலங்கானாவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. தெலங்கானா மாநிலம் விகாராபாத்தில் மணமக்கள் நவாஸ் ரெட்டி – பிரவல்லிகா ஆகியோருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு இவர்கள் காரில் ஹைதராபாத் நோக்கி வந்துகொண்டிருந்தனர். இவர்களுடன் மேலும் 4 பேர் காரில் இருந்தனர். வழியில் இந்த கார் வெள்ளத்தில் சிக்கியதில் அனைவரும் நீரில் மூழ்கினர். இதில் பிரவல்லிகா மட்டும் பிறகு சடலமாக மீட்கப்பட்டார். மற்றவர்களை தேடும் பணி தொடர்கிறது. இதுபோல் மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் கனமழைக்கு 6 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 11 பேரை காணவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைனில் இலவச தரிசன டோக்கன்: பக்தர்களின் கோரிக்கை மீது விரைவில் தேவஸ்தானம் முடிவு https://ift.tt/3t4Rvag

படம்
திருப்பதி ஏழுமலையான் கோயி லில் கடந்த மே மாதம் 5-ம் தேதி முதல், கரோனா 2-ம் அலையால் இலவச தரிசனம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. இதனால், சாமானிய பக்தர்கள் சுவாமியை தரிசிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், ரூ.300 சிறப்பு தரிசனம் மட்டும் 2-ம் அலையிலும் இதுவரை நிறுத்தப்படாமல் தொடர்ந்து ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெங்களூருவில் நடைபாதை தூண் மீது கார் மோதிய விபத்தில் ஒசூர் திமுக எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் உயிரிழப்பு https://ift.tt/3ytnYb3

படம்
பெங்களூருவில் நேற்று நள்ளிரவில் நடைபாதை தூண் மீது கார் மோதிய விபத்தில், ஒசூர் திமுக‌ எம்எல்ஏ ஒய்.பிரகாஷின் மகன் கருணா சாகர், 3 இளம்பெண்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். ஒசூர் திமுக‌ எம்எல்ஏ ஒய்.பிரகாஷின் மகன் கருணா சாகர் (25). இவர் நேற்று முன் தினம் மாலை 5 மணியளவில் நண்பர்களை சந்திப்பதற்காக பெங்களூரு சென்றார். அங்கு நண்பர்கள் ரோஹித் (25), உத்சவ் (25), தனுஷ் (20) ஆகியோரை சந்தித்தார். பின்னர் அவர்களுடன் சென்று தனது உறவினரின் மகள் பிந்து (28), அவரது தோழிகள் இஷிதா (21), அக் ஷயா கோயல் (25) ஆகியோரையும் சந்தித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு - காஷ்மீரில் ஆட்சி அமைப்போம்: என்சிபி தலைவர் ஃபரூக் அப்துல்லா உறுதி https://ift.tt/3kEYX8a

படம்
காஷ்மீரில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரமளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய மாநாடு கட்சியின் (என்சிபி) தலைவர் ஃபரூக் அப்துல்லா பேசியதாவது: காஷ்மீரில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் அவர்களை தீவிரவாதிகள் குறி வைக்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க காஷ்மீர் துணைநிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதிகள் தலைதூக்கி வருகிறார்கள். இதனால் மாநில மக்களின் எதிர்காலம் என்னவாகும் என்பது தெரியவில்லை. காஷ்மீரில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் என்சிபி கட்சி பங்கேற்காதது வருத்தம் அளிக்கிறது. அந்த தேர்தலில் நாங்கள் பங்கேற்றிருக்க வேண்டும். காஷ்மீரில் அடுத்து நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்சிபி கட்சி பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும். இதனை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், காஷ்மீரில் தற்போது இருக்கும் க...

வெளியுறவுக் கொள்கை பற்றிய சிந்தனையை தூண்டும் நூல்: மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் ‘இந்திய வழி’ நூல் குறித்து பிரபலங்கள் கருத்து https://ift.tt/3BycuVV

படம்
வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் ‘இந்திய வழி’ என்ற நூல் நமது வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனையை தூண்டுவதாக உள்ளது எனபிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். வெளியுறவு அமைச்சரான எஸ்.ஜெய்சங்கர், முன்னாள் வெளியுறவு செயலாளர் ஆவார்.1977-ல் ஐஎப்எஸ் அதிகாரியான இவர் ஒரு தமிழர். பல்வேறு நாடுகளில் இந்திய தூதரகங்களில் பணியாற்றியவர். இவர்தனது பணியின்போது, இந்தியாவுக்கு இருந்த சவால்களை உற்றுநோக்கி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசியுள்ளார். அவரது முக்கிய கருத்துகள் தொகுக்கப்பட்டு, ‘India Way –Strategies for an Uncertain world’ என்ற ஆங்கில நூலாக வெளியாகியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ம.பி. விவசாயி குவாரியில் 6-ம் முறை வைரம் கண்டெடுப்பு https://ift.tt/3zxQqdl

படம்
மத்திய பிரதேச விவசாயியின் குவாரியில் கடந்த 2 ஆண்டுகளில் 6-வது முறையாக விலைஉயர்ந்த வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பிரகாஷ் மஜும்தார். அந்த மாவட்டத்தின் ஜாரூவாபூர் கிராமத்தில் அரசு நிலத்தை அவர் குத்தகைக்கு எடுத்து குவாரி நடத்தி வருகிறார். அங்கு நேற்று முன்தினம் 6.47 காரட் வைரம் கண்டெடுக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேகேதாட்டு,குண்டாறு இணைப்பு திட்டம் பேசப்படவில்லை; தமிழகத்துக்கு 30.6 டிஎம்சி தண்ணீர்: உடனடியாக திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு https://ift.tt/3kFtG4L

படம்
காவிரியில் தமிழகத்துக்கு வழங்கவேண்டிய 30.6 டிஎம்சி நீரை உடனடியாக வழங்கும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மேகேதாட்டு, காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கவில்லை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 13-வது கூட்டம் டெல்லியில் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சார்பில் பொதுப் பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், உறுப்பினர் பட்டாபிராமன் ஆகியோரும் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளின் பிரதிநிதிகளும் ப‌ங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி: உளவுத்துறை எச்சரிக்கை https://ift.tt/3zAb1O0

படம்
காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை கடந்த இரு வாரங்களில் 10 முறை உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 15-ம் தேதி அதிபர் அஷ்ரப் கானி நாட்டைவிட்டுச் சென்றபின் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான் தீவிரவாதிகள் மீது ஈர்ப்புடன் இருப்போர் தற்போது இந்தியாவைத் தாக்க சரியான நேரத்தை எதிர்நோக்கியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதுராவில் மது, மாமிசம் விற்பனைக்கு தடை: முதல்வர் யோகியின் புதிய உத்தரவு https://ift.tt/3kDTKNL

படம்
உத்தரப்பிரதேசத்தின் மதுரா மற்றும் அதனை சுற்றியுள்ள தெய்வீக நகரங்களான ஏழு ஊர்களில் மது, மாமிசம் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கானப் புதிய உத்தரவை அம்மாநில பாஜகவின் முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார். நேற்று முடிந்த கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட முதல்வர் யோகி மதுரா வந்திருந்தார். அங்கு ஸ்ரீகிருஷ்ணர் பிறந்ததாகக் கருதப்படும் ஜென்மபூமியின் கோயிலில் வழிபட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விதிமுறை மீறி கட்டப்பட்ட 40 மாடி குடியிருப்பு: இடித்து தள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/3yu3AH2

படம்
டெல்லி அருகே நொய்டாவில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுரங்களை கொண்ட 40 மாடி கட்டடத்தை இடித்துத் தள்ள உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. டெல்லியின் புறநகர் பகுதியான உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான சூப்பர்டெக் 40 மாடிகளை கொண்ட இரட்டை கோபுரங்களில் அடுக்குமாடி குடியிருப்பை கட்டியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆப்கனில் ஒரு கோடி குழந்தைகளுக்கு உடனடி மனிதநேய உதவி தேவை; 550 குழந்தைகள் உயிரிழப்பு: யுனிசெஃப் தகவல்

படம்
தலிபான்கள் பிடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக மனிதநேய அடிப்படையில் உதவி தேவைப்படுகிறது என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிவிட்ட நிலையில், அந்நாடு முழுவதும் தலிபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. ஏறக்குறைய 20 ஆண்டுகளாகத் தலிபான்களுக்கும், அமெரிக்க, நேட்டோ படைகளுக்கும் இடையே நடந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தொலைக்காட்சித் தொகுப்பாளருக்குப் பின்னால் துப்பாக்கியுடன் நிற்கும் தலிபான்கள்: வைரலாகும் வீடியோ

படம்
தொலைக்காட்சித் தொகுப்பாளருக்குப் பின்னால் துப்பாக்கியுடன் தலிபான்கள் நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்த நிலையில், ஆப்கனில் இன்னமும் ஊடக சுதந்திரம் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வரலாற்றில் முதன்முறை; உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் இன்று பதவியேற்பு https://ift.tt/3zBvpyo

படம்
உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே ஒரே நாளில் 9 நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம் பரிந்துரையை ஏற்று, 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக அண்மையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் நியமிக்கப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தினசரி கரோனா பாதிப்பு: 30,941 ஆக குறைந்தது https://ift.tt/3mJhtPn

படம்
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,941 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றைய பாதிப்பை ஒப்பிடுகையில் 12 ஆயிரம் என்ற அளவில் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜாலியன் வாலாபாக் தியாகிகளுக்கு அவமானம்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு https://ift.tt/3Bu8mWD

படம்
ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தைப் புதுப்பித்த மத்திய அரசின் செயல் உயிர்த் தியாகம் செய்த தியாகிகளை அவமானப்படுத்துவதாகும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஜாலியன் வாலாபாக் நினைவிட வளாகத்தைப் புதுப்பித்து அதை தேசத்துக்காகக் கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடி அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியின்போது, நினைவிடத்தில் உள்ள டிஜிட்டல் அருங்காட்சியகத்தையும் பிரதமர் மோடி திறந்துவைத்தார். ஜாலியன் வாலாபாக் பகுதியில் பல்வேறு புனரமைப்புப் பணிகளையும் மத்திய அரசு செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆப்கனிலிருந்து வெளியேறிய பெண் பத்திரிகையாளர்: தலிபான் தலைவரை நேர்காணல் செய்தபின் அச்சம்

படம்
தலிபான் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவரை கடந்த 17-ம் தேதி நேர்காணல் செய்த டோலோ சேனலின் பெண் பத்திரிகையாளர் பேஹஸ்டா அர்கான்ட் நாட்டை விட்டு வெளியேறினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் தலிபான்கள் பிடிக்குள் முழுமையாக வந்துவிட்டதால், இனிமேல் பெண் பத்திரிகையாளர்களுக்கு சுதந்திரம் இருக்காது, உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை உணர்ந்த பஷேஸ்டா அர்காணட் ஆப்கனிலிருந்து வெளியேறியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆப்கனுக்கு முழு சுதந்திரம் கிடைத்துவிட்டது: தலிபான்கள் அறிவிப்பு

படம்
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து ஆப்கனுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்துவிட்டது என தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தலிபான்களுக்கு எதிராக அமெரிக்க, நேட்டோ படைகள் நடத்தி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கனிலிருந்து வெளியேறும் என்று அறிவித்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆப்கனிலிருந்து வெளியேறிவிட்டோம்; 20 ஆண்டு இருப்பு முடிந்தது; அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

படம்
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க ராணுவத்தின் இருப்பு முடிந்துவிட்டது. அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிவிட்டன என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாக விலக்கப்படும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். அதைத் தொடர்ந்து புதிய அதிபராகவந்த ஜோ பைடன், ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கனிலிருந்து வெளியேறும் என்று அறிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

20 ஆண்டுப் போர் முடிந்தது: ஆப்கனிலிருந்து வெளியேறின அமெரிக்கப் படைகள்

படம்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக கடந்த 20 ஆண்டுகளாக செய்த போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் கடைசி விமானம் காபூலில் உள்ள ஹமீது கர்சாய் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றது. கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரி்க்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் தகர்த்தனர். அந்தத் தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்க உறுதிபூண்டது. அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுத்திருந்த தலிபான்கள் மீது போர் தொடுத்து, அவர்களின் ஆட்சியை அமெரிக்க படைகள் அகற்றின. ஜனநாயக ரீதியிலான அதிபர் தேர்தல் நடத்தி , புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறுவப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விவசாயிகள் மீது தடியடி: ஹரியாணா முதல்வர் விளக்கம் https://ift.tt/3sZ04mN

படம்
ஹரியாணா மாநிலத்தில் பாஜக தலைவர்களுக்கு எதிராகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் 2 நாட்களுக்கு முன்பாக கர்னால் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தடையை மீறியதால் அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இந்நிலையில், போராட்டம் நடத்திய விவசாயிகளின் மண்டையை உடைக்கும்படி போலீஸாரிடம் கர்னால் மாவட்ட துணைக் கோட்ட ஆட்சியர் ஆயுஷ் சின்ஹா உத்தரவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாயின. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியதாவது: போராட்டம் நடத்திய விவசாயிகளின் மண்டையை உடைக்குமாறு அதிகாரி கூறிய வார்த்தைகள் தவறானதுதான். அதே நேரத்தில் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி.யின் பெரோஸாபாத்தில் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு 46 பேர் உயிரிழப்பு: தொகுதி பாஜக எம்எல்ஏ மணிஷ் அசிஜா புகார் https://ift.tt/3sZHJWI

படம்
உ.பி.யில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பெரோஸாபாத் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி, உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 4 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பெரோஸாபாத் பாஜக எம்எல்ஏ மணிஷ் அசிஜா நேற்று கூறும்போது, “இன்று காலை எனக்கு கிடைத்த தகவலின்படி 6 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு இறந்துள்ளனர். மாவட்டத்தில் கடந்த 22-ம் தேதி முதல் இதுவரை 46 பேர் இறந்துள்ளனர். தாழ்வான இடங்களில் குப்பைகளுடன் கலந்து மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சியில் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தானுக்கு இந்தியா தகுந்த பதிலடி: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி https://ift.tt/2WDLzJo

படம்
சண்டிகரில் அமைந்துள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் காணொலி வாயிலாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: கடந்த 1965, 1971-ம் ஆண்டுகளில் நடைபெற்ற போர்களில் பாகிஸ்தான் தோற்கடிக்கப்பட்டது. போரில் இந்தியாவை எதிர்கொள்ள முடியாது என்பதால் மறைமுக போரில் பாகிஸ்தான் ஈடுபட்டிருக்கிறது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அனைத்து சதிகளையும் இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா வைரஸ் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நிலை இதயத்தை பிழிகிறது: உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை https://ift.tt/3DxbUcD

படம்
‘‘கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நிலை இதயத்தை பிழிகிறது. எனினும், அவர்களுக்கு உதவ மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளன’’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். தாய், தந்தை இருவருமே இறந்ததால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆதரவற்றவர்களாக உள்ளனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் நீதிபதி அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதி நாகேஸ்வர ராவ் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருமண மண்டபங்களை குத்தகைக்கு விட ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம் முடிவு https://ift.tt/3Duoz03

படம்
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் 299 திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் 177 திருமண மண்டபங்கள் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ளன. ஆனால், கோடிக்கணக்கில் செலவு செய்து திருமண மண்டபங்கள் கட்டினாலும் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால், இதுகுறித்து தேவஸ்தானம் விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டது. இவர்கள் கொடுத்த அறிக்கை தேவஸ்தான அதிகாரிகளை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சில திருமண மண்டபங்களில் அவ்வூர் மக்கள் மாடுகளை கட்டி அவைகளை மாட்டுக் கொட்டகைகளாக மாற்றி விட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போதைப் பொருள் வழக்கில் கன்னட நடிகை உட்பட 3 பேருடைய வீடுகளில் சோதனை: கஞ்சா சிக்கியதால் விரைவில் கைதாக வாய்ப்பு https://ift.tt/3sWUEZy

படம்
பெங்களூருவில் போதைப்பொருள் தடுப்பு வழக்கில் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட 16 பேர் கைதுசெய்யப்பட்டன‌ர். அவர்கள்போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் நைஜீரியா நாட்டை சேர்ந்த தாமஸ்(31) பிரபலங்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. கடந்தசனிக்கிழமை அவரை கைது செய்தபோலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் நேற்று பெங்களூருவில் உள்ள கன்னட நடிகை சோனியா அகர்வாலின் வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் 40 கிராம் கஞ்சா, 12 மது பாட்டில்கள் சிக்கின. இதே போல தொழிலதிபர் பரத், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வசனா சின்னப்பா ஆகியோரின் வீடுகளின் நடத்திய சோதனையிலும் கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உடலியல் அம்சங்கள் உரிமைகளை கட்டுப்படுத்துமா? https://ift.tt/3gIf8jK

படம்
"ராணுவத்தில் பெண்களை உயர் பதவிகளில் அமர்த் தாமல் இருப்பதற்கு 101 காரணங்களை தேடாதீர்கள்; பெண்களுக்கு உயர் பதவி வழங்காமல் இருப்பதற்கு நாங்கள் எந்த காரணத்தையும் இந்த வழக்கில் பார்க்க இயலவில்லை உங்களுடைய ஆணாதிக்க மனப்பான்மையை தவிர! உடல் சார்ந்த விஷயங்களை வைத்து பெண்களின் உரிமை சார்ந்த விஷயங்களை நிர்ணயிக்க முடியாது; பாலின பாகுபாடு பார்ப்பதற்கு அரசு ஒரு முடிவு கட்ட வேண்டும்" என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆண்களின் கோட்டையான ராணுவத்தில் நீண்ட காலம் பெண்கள் நுழைய இயலவில்லை. இதற்கு உடல் பலம் ஒரு காரணமாக காட்டப்பட்டது. சட்டம் மாறிய போதும் சமூக கண்ணோட்டம் மாறவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விரல் நுனியில் கரோனா தகவல்கள்: கவனம் குவிக்கும் கேரள அரசு பணியாளர் https://ift.tt/3gNaFMD

படம்
தேசிய அளவில் கரோனா குறித்த தகவல்களை மக்களுக்கு வழங்கி வரும் கேரள அரசுப் பணியாளரின் செயல் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸால் கவுர விக்கப்பட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறையில் இளநிலை எழுத்தராக பணிபுரிபவர் கிருஷ்ண பிரசாத்(40). எம்பிஏ பட்டதாரியான இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கரோனா குறித்த புள்ளிவிவரங்களை பொழுதுபோக்காக சேகரிக்க தொடங்கினார். ஆனால், அதுவேஇப்போது நாடெங்கிலும் உள்ள மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள் அனைவராலும் கவனிக்கப் படக்கூடிய விஷயமாக மாறியுள் ளது. இவரது கரோனா குறித்த தரவு சேகரிப்புகளுக்காகவே, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸிலும் இடம்பிடித்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ண பிரசாத், இந்து தமிழ்திசையிடம் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தந்தை வழியில் தலைமை நீதிபதி ஆகப் போகும் பி.வி.நாகரத்னா: நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமை கிடைக்கும் https://ift.tt/2UZaA0H

படம்
உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நீதிபதி பி.வி.நாகரத்னா ‘இந்தியா வின் முதல் பெண் தலைமை நீதி பதி’ எனும் பெருமையை பெற இருக்கிறார். இதனால் அவரது உறவினர்களும் சக பெண் வழக்கறிஞர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம் பரிந்துரையை ஏற்று, 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக அண்மையில் நியமிக்கப்பட்டனர். இதில் ஒருவரான கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னாவுக்கு வரும் 2027-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி, தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு இருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜீன்ஸ் ஆடையில் பசையாக பூசி தங்கத்தை நூதன முறையில் கடத்தியவர் கேரளாவில் கைது https://ift.tt/3yphXwc

படம்
இரண்டு அடுக்கு ஜீன்ஸ் பேன்ட்-க்கு இடையில் தங்கத்தை பசையாக பூசி, நூதன முறையில் கடத்தி வந்தவரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று காலையில் பயணிகளிடம் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையிலான பயணி ஒருவரை சோதனையிட்டனர். இதில் அவர் 2 லேயர் துணியால் தைக்கப்பட்டிருந்த ஜீன்ஸ் அணிந்திருந்தது தெரியவந்தது. மேலும் அந்த ஜீன்ஸில் ஒரு துணிக்கும் மற்றொரு துணிக்கும் இடையில் தங்கத்தை பசையாக பூசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா பாதிப்பு குறைந்ததால் 17 மாதத்துக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தில் நாளை முதல் வழக்குகள் நேரடி விசாரணை https://ift.tt/38rkMlQ

படம்
கரோனா பாதிப்பு குறைந்ததால், உச்ச நீதிமன்றத்தில் 17 மாதங் களுக்குப் பிறகு குறிப்பிட்ட சில வழக்குகள் மீதான விசா ரணை மட்டும் நாளை முதல் நேரடியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற வழக்குகள் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேற்குவங்கத்தில் பாஜகவுக்கு பின்னடைவு: எம்எல்ஏ தன்மய் கோஷ் திரிணமூல் காங்கிரஸுக்கு தாவல்  https://ift.tt/3sXazqJ

படம்
மேற்குவங்க மாநிலத்தில் எதிர்க்கட்சியான பாஜகவுக்கு மேலும் ஒரு பின்னடைவாக பிஷ்ணுபூர் தொகுதியில் வெற்றி பெற்ற எம்எல்ஏ தன்மய் கோஷ், ஆளும் திரிணாமுல் காங்கிரஸில் இன்று சேர்ந்தார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அடுத்த நிலையில் பொதுச் செயலாளராக இருந்தவர் முகுல் ராய். இவருக்கும் மம்தாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு முற்றியது. இதனால் கட்சி நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த முகுல்ராய், கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருக்கு தேசிய துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் கரோனாவுக்குப் பின் திறக்க தயாராகும் யுபிஎஸ்சி தேர்வு பயிற்சி வகுப்புகள் https://ift.tt/3juXZfn

படம்
டெல்லியில் ஒன்றரை வருடங்களாக கரோனாவால் யுபிஎஸ்சி தேர்வின் பயிற்சி வகுப்புகள் மூடிக் கிடக்கின்றன. பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த இவை விரைவில் மீண்டும் திறக்கத் தயாராகி வருகின்றன. தலைநகரான டெல்லியின் முகர்ஜிநகர், ஷாலிமார்பாக், கரோல்பாக், உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் யுபிஎஸ்சி தேர்விற்கானப் பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பங்குச்சந்தைகள் வரலாறு காணாத உயர்வு  https://ift.tt/2Wtx3UB

படம்
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இதுவரை இல்லாத வகையில் 765 புள்ளிகள் உயர்ந்து 56,889.76 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு அதிரடியாக உயர தொடங்கியது. முதலில் 349 புள்ளிகள் உயர்ந்திருந்த நிலையில், அடுத்த 5 நிமிடங்களில் 400 புள்ளிகள் உயர்ந்து 56,526 புள்ளிகளாக இருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவிட் தடுப்பூசி; மொத்த எண்ணிக்கை 63.43 கோடியைக் கடந்தது https://ift.tt/2WuCB1a

படம்
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 63.43 கோடியைக் கடந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘‘இந்திய விளையாட்டுத் துறைக்கு இது சிறப்பான தருணம்’’- பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்கள்; பிரதமர் மோடி பெருமிதம் https://ift.tt/2WtIvzD

படம்
டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு பிரதமர்நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தில் “அபராமான விளையாட்டு அவனி லெகாரா @AvaniLekhara! உங்கள் கடின உழைப்பினால் உங்களுக்குத் தகுதியான தங்கத்தை வென்றதற்கு வாழ்த்துக்கள். உங்கள் சுறுசுறுப்பான தன்மையினாலும், துப்பாக்கிச் சுடுதல் மீதான உங்கள் ஆர்வத்தின் காரணமாகவுமே இது சாத்தியமானது. இந்திய விளையாட்டுத் துறைக்கு உண்மையிலேயே இது ஒரு சிறப்பான தருணம். உங்களது எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். #Paralympics", என்று கூறியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ட்ரோன் தாக்குதல்: அமெரிக்கா எங்களுக்கு முன்பே தெரிவித்திருக்க வேண்டும்: தலிபான்கள்

படம்
அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காபூலில் உயிரிழப்பு ஏற்படுவதற்குக் காரணம் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீனத் தொலைக்காட்சிக்கு சபிஹுல்லா அளித்த பேட்டியில், “நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காபூலில் தற்கொலைப்படை தீவிரவாதியைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானம் (ட்ரோன்) தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் பலியானார்கள். உயிரிழப்பு ஏற்படுவதற்கு அமெரிக்காவின் தாக்குதலே காரணம். இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் எந்த முன் அறிவிப்பையும் அமெரிக்கா எங்களிடம் முன்பே தெரிவிக்கவில்லை. அமெரிக்கா தெரிவித்திருக்க வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒரே இணையதளத்தில் டெல்லி அரசு மருத்துவமனைகள்: வரிசையில் நிற்கத் தேவையில்லை https://ift.tt/3jrlLsw

படம்
டெல்லியின் அனைத்து அரசு மருத்துவமனைகளும் ஒரே இணையதளத்தில் இணைக்கத் திட்டமிட்டுள்ளது முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அரசு. இதனால், வரிசையில் நிற்காமல் வீட்டிலிருந்தபடி மருத்துவர்களிடம் நேரம் கேட்கும் வசதி செய்யப்பட உள்ளது. டெல்லியிலுள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் எந்நேரமும் நோயாளிகளின் கூட்டம் அதிகம் இருப்பது உண்டு. இதனால், பொதுமக்களுக்கு அதிகமான சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தலைக்கு ரூ.50,000 பரிசு அறிவிக்கப்பட்ட ரவுடி: போலீஸ் என்கவுன்ட்டரில் பலி https://ift.tt/3Bt7gL3

படம்
உத்தரப்பிரதேச, ஆக்ராவில் தலைக்கு ரூ.50,000 பரிசு அறிவிக்கப்பட்ட ரவுடி என்கவுன்டரில் பலியாகி உள்ளார். அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான(எஸ்எஸ்பி) தமிழர் ஜி.முனிராஜ் தலைமையில் இச்சம்பவம் நடைபெற்றது. ராஜஸ்தானின் தோல்பூரை சேர்ந்தவர் முகேஷ் தாக்கூர்(). கடந்த 2014 முதல் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டவர் ராஜஸ்தானில் மூன்று கொலை வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை அடைந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஏமனில் பயங்கரத் தாக்குதல்: 30 ராணுவ வீரர்கள் பலி

படம்
ஏமனில் ஈரான் ஆதரவு ஹவுத்தி படைகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 30 பேர் பலியாகினர். 60க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஏமனின் தென் பகுதியில் ஈரான் ஆதரவு ஹவுத்தி படைகள் தாக்குதல் நடத்தின. இரு அடுத்தடுத்த ஏவுகணைத் தாக்குதலைக் கிளர்ச்சியாளர்கள் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் காரணமாக ஏமனின் தென் பகுதிகளில் கடுமையான பதற்றம் நிலவுகிறது” என்று செய்தி வெளியாகியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காபூல் விமான நிலையத்தை தகர்க்க முயற்சி; ராக்கெட் குண்டு வீச்சு: உறுதிப்படுத்தியது அமெரிக்கா

படம்
காபூல் விமான நிலையத்தை நோக்கி ஐந்து ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்த முயற்சி நடந்ததாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையும் உறுதிபடுத்தியுள்ளது. கடந்த 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசம் வந்தது. அதன் பின்னர் அங்கிருந்து மக்கள் அலை கடலென திரண்டு வெளிநாடுகளில் தஞ்சம் புக விமான நிலையத்தில் குவிந்தனர். இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

லாலாபேட்டை அருகே இளைஞர் அரிவாளால் வெட்டி, கழுத்தறுத்துக் கொலை: 3 பேர் கைது, போலீஸ் குவிப்பு https://ift.tt/3sXtuBD

படம்
கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே இளைஞர் அரிவாளால் வெட்டி, கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக லாலாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து பாதுகாப்புக்காக அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மேட்டு மகாதானபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஜோதிவேல் (33), அருண்குமார் (23). நந்தன்கோட்டையைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி (27), வினோத் (24). கீழசிந்தலவாடியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (23). from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘‘வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்’’- வெள்ளிப்பதக்கம் வென்ற யோகேஷ் கதுனியாவுக்கு பிரதமர்  மோடி வாழ்த்து https://ift.tt/38lHhsi

படம்
டோக்கியோவில் நடைபெற்றும் வரும் பாராலிம்பிக்கில் ஆடவா் வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற யோகேஷ் கதுனியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆப்கனில் நெருங்கும் கெடு: ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு பிறகு காபூலில் இருந்து மக்கள் வெளியேறுவதில் சிக்கல்?

படம்
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் மக்களை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப் பிறகும் தலிபான்கள் தடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட 100 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். அதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் ஆப்கானிஸ் தான் தலைநகர் காபூலையும் தலிபான்கள் கைப்பற்றினர். தலிபான் ஆட்சிக்கு அஞ்சி, ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்