இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெண் காவலரிடம் நகை பறிப்பு: வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது https://ift.tt/wriVdLs

படம்
சென்னை: பெண் காவலரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வழிப்பறி கொள்ளையர்கள் இருவரை எழும்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை, புதுப்பேட்டையில் வசிப்பவர் ஆயுதப்படை பெண் காவலர் பிரியா (25). இவர் கடந்த 18-ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் எழும்பூர், பழைய காவல் ஆணையாளர் அலுவலக சாலையில் சென்று கொண்டிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை | ரூ.50 கோடி மோசடி: 2 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை https://ift.tt/Q4DxLi1

படம்
சென்னை: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய கன்டெய்னர்களை வாடகைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி ரூ.50 கோடி வரை மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சென்னை ஆவண மோசடி புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திராவில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து - ஆட்டோவில் சென்ற 6 பெண்கள் உயிரிழப்பு https://ift.tt/6AcB7Si

படம்
அனந்தபூர் : ஆந்திர மாநிலம், சத்யசாய் மாவட்டத்தைச் சேர்ந்த 11 விவசாய கூலி தொழிலாளர்கள் நேற்று காலை ஒரு ஷேர் ஆட்டோவில் வேலைக்குச் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, ஆட்டோவின் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. ஆனால், 5 பேர் ஆட்டோவில் உடல் கருகியும், மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்தனர். ஆட்டோ ஓட்டுநர் உட்பட மீதியுள்ள 7 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். இது தொடர்பாக தாடிமர்ரி போலீஸார் மற்றும் மின்சார அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அணில் ஒன்று ஆட்டோ வருவதை கண்டு பயந்துபோய் சாலையில் இருந்து மின் கம்பம் மீது ஏறி அதில் இருந்த இரும்பு கிளாம்பும், மின் கம்பியும் இணையும் இடத்தில் உட்கார்ந்ததால், அந்த கம்பி அறுந்து ஆட்டோ மீது விழுந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 5 லட்சம் நஷ்ட ஈடு வழங்குவதாகவும் மின் வாரியத்துறை அதிகாரி ஹரிநாராயண ராவ் அறிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Dai...

மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி 7 வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு https://ift.tt/JVpfosP

படம்
இம்பால் : மணிப்பூர் மாநிலத்தில் ஜிரிபம் மற்றும் இம்பால் இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. நோனே மாவட்டம் துபுல் ரயில் நிலையம் அருகே கட்டுமானப் பணி நடைபெறுவதால் அப்பகுதியில் பாதுகாப்புப் பணிக்காக, 107 டெரிடோரியல் ஆர்மி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் கன மழை பெய்ததால் நேற்று முன்தினம் இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது - ககன்யான், சந்திராயன்-3 ஏவுதல் எப்போது? https://ift.tt/BCGE5T4

படம்
சென்னை : பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் நாட்டின் ‘டிஎஸ்-இஓ’ உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்கள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. விண்வெளி ஆய்வில் தனியார் துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதற்காக 2019-ம் ஆண்டு என்எஸ்ஐஎல் என்ற அமைப்பும், 2020-ல் இன்ஸ்பேஸ் என்ற அமைப்பும் நிறுவப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆர்எஸ்எஸ் தொண்டர் டு மகாராஷ்டிர முதல்வர் - யார் இந்த ஏக்நாத் ஷிண்டே? https://ift.tt/ECstWYX

படம்
மும்பை : மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா அதிருப்தி அணி இணைந்து புதிய கூட்டணி அரசை அமைத்துள்ளன. சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, மாநிலத்தின் புதிய முதல்வராக நேற்று பதவியேற்றார். முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்ட பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதுச்சேரியில் சொத்து தகராறால் பெற்றோரை எரித்துகொன்ற வளர்ப்பு மகள், மருமகன் - இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு https://ift.tt/9yj1b8s

படம்
புதுச்சேரி : சொத்து தகராறால் வளர்ப்பு பெற்றோரை எரித்து கொன்ற மகள், மருமகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. புதுச்சேரி மேட்டுபாளையம் தருமாபுரி அகத்தியர் கோட்டத்தைச் சேர்ந்த தம்பதி நாராயணசாமி (74) - வசந்தா (62). நாராயணசாமி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் நாராயணசாமி தனது தங்கை மகள் ஆனந்தியை தத்தெடுத்தார். அதன் பின்னர் நாராயணசாமி-வசந்தா தம்பதியுடன் ஆனந்தி, அவரது கணவர் முருகவேல் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடந்த மே மாதத்தில் ஊரக வேலைவாய்ப்பில் 2.61 கோடி குடும்பம் பயன் https://ift.tt/oJbp0uP

படம்
புதுடெல்லி : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (எம்ஜி - என்ஆர்இஜிஏ) கீழ், கடந்த மே மாதம் 2 கோடியே 61 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளன. இது கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 39 லட்சம் குடும்பத்தினர் கூடுதலாகும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (என்ஆர்இ ஜிஎஸ்) கீழ், ஊரக பகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் வயது வந்தோர், ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்கள் வேலைபெற்று ஊதியம் பெறுகின்றனர். இது தொடர்பாக என்ஆர்இஜிஏ இணையளத்தில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிலியில் நிறுவனம் தவறுதலாக அனுப்பிய 286 மாத ஊதிய பணத்துடன் தலைமறைவான ஊழியர்

படம்
சான்டியாகோ : தென் அமெரிக்க நாடான சிலியில் கான்சார்சியோ இன்டஸ்டிரியல் டி அலிமென்டோஸ் (சியால்) நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர் ஒருவருக்கு மாத ஊதியம் 5,00,000 பெசோஸ் (சிலி நாட்டு கரன்சி) ஆகும். இந்திய மதிப்பில் ரூ.43 ஆயிரம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அசாமுக்கு ரூ.51 லட்சம் நிதியுதவி https://ift.tt/wIf684r

படம்
குவாஹாட்டி : அசாம் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மாகாராஷ்டிராவை சேர்ந்த சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் ரூ.51 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளனர். மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். இந்நிலையில் சிவசேனா மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அக்கட்சி அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என அவர்கள் கோரினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹாரில் ஒவைசி கட்சியின் 4 எம்எல்ஏ ஆர்ஜேடியில் ஐக்கியம் https://ift.tt/JjB8SnZ

படம்
பாட்னா : பிஹாரில் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏ.க்கள் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் (ஆர்ஜேடி) சேர்ந்தனர். பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சியாக ஆர்ஜேடி உள்ளது. இந்நிலையில், அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த ஷாநவஸ் ஆலம் (ஜோகிஹட் தொகுதி), முகமது அன்சர் நயீமி ((பஹதூர்பூர்), முகமது இசார் அஸ்பி (கோச்சாதாமன்) சையித் ருக்னுதீன் அகமது (பைசி) ஆகிய 4 எம்எல்ஏ.க்கள் நேற்று எதிர்க்கட்சித் தலைவரும் லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் ஆர்ஜேடியில் சேர்ந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இறுதிக்கட்டத்தை நெருங்கும் மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் - கோவா திரும்பினர் அதிருப்தி எம்எல்ஏக்கள் https://ift.tt/6Mv3qlw

படம்
மும்பை : மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, முதல்வர் பதவியிலிருந்து உத்தவ் தாக்கரே விலகினார். மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி (மகா விகாஸ் அகாடி) ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். இந்நிலையில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 38 எம்எல்ஏக்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். அவர்கள் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தனர். சில சுயேச்சை எம்எல்ஏக்களும் அவர்களுடன் உள்ளனர். மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் இணைந்து புதிய ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் ஷிண்டே வலியுறுத்தி வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமி...

உதய்ப்பூர் தையல்காரர் கொலை - அலட்சியம் காட்டினாரா ராஜஸ்தான் போலீஸார்? https://ift.tt/fOBrIHp

படம்
புதுடெல்லி : உதய்ப்பூரில் தையல்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிடிபட்ட குற்றவாளிகளுக்கு பாகிஸ்தான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முகம்மது நபியை விமர்சித்த நுபுர் சர்மா, பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவு தெரிவித்து ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் தையல் கடை வைத்திருந்த கன்னையா லால் டெலி (40) என்பவர், கடந்த 10-ம் தேதி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தார். அதைக் கண்டித்து 3 முஸ்லிம் அமைப்புகள், கன்னையா மீது புகார் அளித்திருந்தன. அதன்பேரில் தானியமண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பன்வர்லால் விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னையா, சில தினங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். தான் வசிக்கும் பகுதியில் உள்ள முஸ்லிம்களிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாக போலீஸில் கன்னையா புகார் அளித்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisa...

'சிவசேனா தொண்டர்கள் ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை' - உத்தவ் தாக்கரே உருக்கமான பேச்சு https://ift.tt/Q1oUlOc

படம்
மும்பை : "எதிர்பாராத விதமாக அதிகாரத்துக்கு வந்தவன் நான். அதே பாணியில் இப்போதும் வெளியேறவும் செய்கிறேன்" என மகாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே பேசியுள்ளார். மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த தீர்ப்பு வெளியாகும் முன்பாக, மகாராஷ்டிரா முதல்வர் மாநில மக்களுக்கு சமூக வலைதளம் உரையாற்றினார். தனது உரையில், "இந்த தருணத்தில், என்னை ஆதரித்த என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த சகாக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சரத் பவார் மற்றும் சோனியா காந்தி ஆகியோருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஔரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத் என பெயர் மாற்றம் செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை இன்று எடுத்தபோது, ​​மாநில அமைச்சரவையில் சிவசேனாவில் இருந்து அனில் பராப், சுபாஷ் தேசாய் மற்றும் ஆதித்யா தாக்கரே ஆகியோர் மட்டுமே என்னுடன் இருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவ...

வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக புகார்: பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மறுப்பு https://ift.tt/HQ70ZGp

படம்
சென்னை : உத்தர பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜ் முகம்மது என்பவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இவர் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் உறுப்பினர் என கைது செய்த ஏடிஎஸ் போலீஸார் தெரிவித்தனர். ஆனால், எங்கள் அமைப்புக்கும் இவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மறுத்துள்ளது.  from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஓஎன்ஜிசி ஊழியர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு https://ift.tt/6qv5dEQ

படம்
மும்பை : மும்பை கடல் பகுதியில் இருந்து 50 நாட்டிகல் மைல் தொலைவில் அமைந்துள்ள ஓன்ஜிசி நிறுவனத்தின் சாகர் கிரண் என்ற எண்ணெய் கிணறு பகுதிக்கு, ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்கள் 7 பேர், பவன் ஹன்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டரில் சென்றனர். அதில் பைலட் இருவரையும் சேர்த்து 9 பேர் பயணம் செய்தனர். எண்ணெய் கிணறு பகுதிக்கு அருகே ஹெலிகாப்டர் சென்றபோது, திடீரென கோளாறு ஏற்பட்டது. அதனால் ஹெலிகாப்டரை பைலட் அவசரமாக எண்ணெய் கிணறு பகுதியில் தரையிறக்க முயன்றார். ஆனால் அதற்குள் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து அரபிக் கடலில் விழுந்து, மிதவை உபகரண உதவியால் மிதந்தது. இதையடுந்து கடற்படை ஹெலிகாப்டர் சம்பவ இடத்துக்கு விரைந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களை மீட்டு பவான் ஹன்ஸ் விமான தளத்துக்கு கொண்டு சென்றது. கடலில் விழுந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் 4 பேர் இறந்த நிலையில் கொண்டுவரப்பட்டதாக மும்பை நானாவதி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதில் 3 பேர் ஓன்ஜிசி நிறுவன ஊழியர்கள். ஒருவர் ஒப்பந்த ஊழியர். 2 பைலட்டுகள் உட்பட மற்ற 5 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. from இந்து தமி...

பிஎஸ்எல்வி-சி53 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது - கவுன்ட்-டவுன் இன்று தொடக்கம் https://ift.tt/OTCMINl

படம்
சென்னை : இந்தியாவுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி, சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்-இஒ, நியூசர் உட்பட 3 செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி-சி53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை

படம்
அபுதாபி : ஜெர்மனியில் இருந்து டெல்லி திரும்பும் வழியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஐக்கிய அரபு அமீரக தலைநகரம் அபுதாபி சென்றார். அந்நாட்டின் மரபுப்படி, மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் விமானநிலையத்துக்கு வந்து, உலகத் தலைவர்களை வரவேற்பது வழக்கம். ஆனால், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது, மரபுகளை உடைத்து, நேரடியாக விமானநிலையத்துக்கு வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். இரு தலைவர்களும் ஆரத்தழுவி, வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அந்நாட்டின் அரச குடும்பத்தினரும் விமானநிலையத்துக்கு வந்திருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கூட்டறிக்கை - கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க அமெரிக்கா, இந்தியா நாடுகள் உறுதி

படம்
முனிச் : ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்போம் என்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் உறுதியேற்றன. ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய 7 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் உச்சிமாநாடு ஜெர்மனியில் நடைபெற்றது. இதில், இந்தியப் பிரதமர் மோடி, இந்தோனேசியா, அர்ஜென்டினா, தென்னாப்பிரிக்கா, செனகல் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மும்பை திரும்பும் எம்எல்ஏக்கள் ஆட்சி அமைக்க பாஜக தீவிரம் - ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவி https://ift.tt/Eg1oXCp

படம்
குவாஹாட்டி : அசாம் மாநிலம் குவாஹாட்டியில் முகாமிட்டுள்ள, சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழுவினர் விரைவில் மும்பை வந்து, மகாராஷ்டிர ஆளுநரை சந்திக்க உள்ளனர். அதே நேரத்தில் மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைக்க பாஜகவும் தயாராகி வருகிறது. மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கக் கோரி, அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ.க்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ.க்கள் சிலரும் தற்போது குவாஹாட்டியில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா தடுப்பில் தீவிர நடவடிக்கை தேவை: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் https://ift.tt/vTD7MyA

படம்
புதுடெல்லி: நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் பலவகையானப் பண்டிகைகள் மற்றும் யாத்திரைகள் தொடங்கவுள்ள நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோவிட்-19 தொற்று கணிசமான அளவு குறைந்திருந்தது. தற்போது ஒருசில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அக்னி வீரர்களின் ஓய்வு வயதை 65 ஆக அதிகரிக்க வேண்டும் - மம்தா பானர்ஜி வலியுறுத்தல் https://ift.tt/j6Ywums

படம்
புர்த்வான் : ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைகளுக்கு வீரர்களை தேர்வு செய்வதற்காக அக்னி பாதை என்ற திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதன் கீழ் தேர்வு செய்யப்படுவோர் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி புர்த்வான் நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பருவநிலை, எரிசக்தி, உக்ரைன் குறித்து ஜி7 தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு - இன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்

படம்
முனிச் : பருவநிலை மாறுபாடு, எரிசக்தி, உக்ரைன் விவகாரம் குறித்து ஜி7 தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று அவர் ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். ஜெர்மனியின் பவேரியன் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் மிட்டன்வால்ட் நகர் அருகே அமைந்துள்ள ஸ்லாஸ் எல்மவ் பேலஸ் ஓட்டலில் நேற்று முன்தினம் ஜி7 மாநாடு தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஜெர்மனியின் முனிச் நகருக்கு சென்றார். முதல் நாளில் இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் பங்கேற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சமாஜ்வாதியின் கோட்டையான ஆஸம்கரில் வெற்றி - பாஜகவில் 3-வது எம்.பி.யான போஜ்புரி மொழி நடிகர் நிரவ்வா https://ift.tt/gWUp9jK

படம்
புதுடெல்லி : உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதி மற்றும் பிஹார் மாநிலத்தில் போஜ்புரி மொழி பேசுவோர் அதிகம் உள்ளனர். இதனால், கடந்த 20 ஆண்டுகளாக உ.பி., பிஹாரில் போஜ்புரி மொழி திரைப்படங்கள் வெளியாகி பிரபலமாகி வருகின்றன. போஜ்புரி கதாநாயகர்களுக்கும் மக்களிடம் செல்வாக்கு கூடி வருகிறது. அதனால், அவர்களை தேர்தல்களில் நிற்க வைத்து பாஜக பலனடைந்து வருகிறது. அந்த வகையில், தற்போது நடந்து முடிந்த உ.பி.யின் கிழக்கு பகுதியிலுள்ள ஆஸம்கர் தொகுதியின் மக்களவை இடைத்தேர்தலில் போஜ்புரி நடிகர் நிரவ்வா எனும் தினேஷ்லால் யாதவ் வென்றுள்ளார். இவர் பாஜக சார்பில் மக்களவையில் நுழையும் 3-வது எம்.பி.யாவார். இவருக்கு முன் டெல்லி வடகிழக்கு தொகுதியில் போஜ்புரி நடிகர் மனோஜ் திவாரியும், உ.பி.யின் கோரக்பூரில் போஜ்புரி நடிகர் ரவி கிஷணும் எம்.பி.யாகி உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜோர்டான் துறைமுகத்தில் விஷ வாயு கசிவு - 10 பேர் உயிரிழப்பு; 251 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

படம்
அகாபா : ஜோர்டான் நாட்டின் துறைமுகத்தில் விஷவாயு கசிந்தது 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டானின் தெற்கு துறைமுக நகரம் அகாபா. இங்கு தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 251 பேருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் பைசல் அல்-ஷாபூல் உறுதிப்படுத்தியுள்ளார். விஷ வாயு நிரப்பப்பட்ட தொட்டி கொண்டுசெல்லும் போது விழுந்ததில் கசிவு ஏற்பட்டு விபத்து உண்டானது. விஷ வாயு கசிந்ததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டவர்களை அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர் அந்த பகுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், மேகாலயாவுக்கு 96 டன் நிவாரணப் பொருட்கள் https://ift.tt/wln7RG3

படம்
புதுடெல்லி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், மேகாலயா மாநிலங்களுக்கு ஒரே நாளில் சுமார் 96 டன் அளவிலான நிவாரண பொருட்கள் விமானப்படை விமானங்கள் மூலம் வழங்கப்பட்டன. அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் பெய்த தொடர் கனமழையால் சுமார் 33 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த 4 நாட்களாக விமானப்படை மூலம் குடிநீர், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்ய தங்கத்தை இறக்குமதி செய்ய தடை: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்

படம்
முனிச்: உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக, ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த, அந்நாட்டிலிருந்து தங்கம் இறக்குமதி செய்வதற்கு தடைவிதிப்பதற்கான அறிவிப்பை ஜி-7 நாடுகள் வெளியிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் ஆகிய 7 நாடுகள் உறுப்பினர்களாக ஜி-7 அமைப்பின் 48-வது உச்சி மாநாடு ஜெர்மனியின் ஸ்லாஸ் எல்மவ் ஓட்டலில் நேற்று தொடங்கி 28-ம் தேதிவரை நடக்கிறது. இதில் இந்தியா உட்பட சில நாடுகள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருவல்லிக்கேணியில் கொலை திட்டத்துடன் விடுதியில் பதுங்கி இருந்த 11 மாணவர்கள் உட்பட 14 பேர் கைது https://ift.tt/56cpHdM

படம்
சென்னை: திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் சந்தேகப்படும்படியாக 10-க்கும் மேற்பட்டோர் தங்கி இருப்பதாக திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து, அங்கு தங்கியிருந்த 14 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த சரத்குமார் (25), பரத்குமார், சாய்காந்த் (19) மற்றும் 11 பள்ளி மாணவர்கள் என்பது தெரியவந்தது. கடந்த ஆண்டு ஐஸ் அவுஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். அதில், தொடர்புடையவரை பழிக்குப் பழி வாங்குவதற்காக இந்த 14 பேரும் கொலை திட்டத்துடன் விடுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அவசரநிலை காலத்தில் ஜனநாயகத்தை முடக்க நடந்த சதி முறியடிப்பு - ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கருத்து https://ift.tt/kcUu0zD

படம்
புதுடெல்லி: அவசரநிலை காலத்தில் ஜனநாயகத்தை முடக்க நடந்த சதி முறியடிக்கப்பட்டது. அந்த அவசரநிலையின் இருண்ட காலத்தை நாம்மறந்துவிடக்க கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்குபிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அதன்படி,இந்த மாதத்துக்கான (90-வது) ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது. கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. அப்போது தனிநபர் சுதந்திரம் உள்ளிட்ட நாட்டு மக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. ஜனநாயகத்தை ஒடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

6 மாநில இடைத் தேர்தல் முடிவுகள்: உ.பி, திரிபுராவில் பாஜக வெற்றி; பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி தோல்வி https://ift.tt/XGbqICp

படம்
புதுடெல்லி: பஞ்சாப், உத்தர பிரதேசம், ஆந்திரா, டெல்லி, ஜார்கண்ட், திரிபுரா ஆகிய 6 மாநிலங்களில், 3 மக்களவை தொகுதிகளுக்கும், 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நடந்த இடைத் தேர்தலில் பா.ஜ 2 மக்களவை தொகுதிகளிலும், 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வென்றது. காங்கிரஸ் ஜார்கண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டப்பேரவை தொகுதியில் வென்றது. பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் ராஜினாமா செய்த சங்ரூர் மக்களவை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. உத்தரப் பிரதேசம் சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக, ராம்பூர் மக்களவை தொகுதி எம்.பி பதவியை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும், அசம்கர் மக்களவை தொகுதி எம்.பி பதவியை மூத்த தலைவர் அசம் கானும் ராஜினாமா செய்தனர். இதனால் அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. சமாஜ்வாதியின் கோட்டையாக இருந்து ராம்பூர் தொகுதியில் பா.ஜ வேட்பாளர் கான்ஷ்யாம் லோதி 42,000 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் அசிம் ராஜாவை தோற்கடித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema,...

அசாமில் தங்கியுள்ள சிவசேனா கட்சியின் 15 எம்எல்ஏக்கள் வீடுகளுக்கு கமாண்டோ பாதுகாப்பு: அமித் ஷாவுடன் ஏக்நாத் ஷிண்டே ரகசிய ஆலோசனை https://ift.tt/N3J5Lub

படம்
மும்பை: அசாமில் சொகுசு ஓட்டலில் தங்கியுள்ள சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரின் வீடுகளுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரை சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சிநடந்து வருகிறது. ‘மகா விகாஸ்அகாடி’ என்ற பெயரில் கூட்டணிஉருவாக்கப்பட்டு ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கினார். காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் இருந்துவிலகி, பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகாவில் போலி இணையதளம் நடத்தி ரூ.20 கோடி மோசடி செய்த அர்ச்சகர்கள் https://ift.tt/HW6dU12

படம்
பெங்களூரு : கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டம் அஃப்சல்பூர் அருகிலுள்ள தேவலக்னாபூர் தத்தாரேயா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. சில அர்ச்சகர்கள் கோயில் பெயரில் 5 போலி இணையதளங்களை தொடங்கி, ஆன்லைனில் பூஜை, சிறப்பு வழிபாடு செய்வதற்காக பக்தர்களிடம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்துள்ளனர். இதுதவிர கோயிலுக்கு நிதியுதவி, அன்னதானம், சிறப்பு யாகம் ஆகியவற்றுக்கு கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பரிந்துரைக்காமல், தங்களது இணையதளத்தை பரிந்துரைத்துள்ளனர். அதன் மூலமாக ஏராளமானோரிடம் லட்சக்கணக்கில் ப‌ணம் வசூலித்துள்ளனர். இதுகுறித்து கர்நாடக இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்ததை தொடர்ந்து அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். இதையடுத்து அறநிலையத்துறை இணை ஆணையர் யஷ்வந்த் குருகர் கூறும்போது, ' 7 ஆண்டுகளாக கோயில் பேரில் 8 போலி இணையதளங்கள் நடத்தி ரூ.20 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில் 5-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு தொடர்பு இருக்கிறது. இதுகுறித்து போலீஸார் 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற‌னர்.முதல் கட்ட விசாரணையில் இந்த மோச...

மகாராஷ்டிராவில் சிவசேனா அரசுக்கு நெருக்கடி - அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேருக்கு நோட்டீஸ் https://ift.tt/TuHnYaK

படம்
மும்பை : சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 16 பேருக்கு நேற்று தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பிய மகாராஷ்டிரா துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வல், நாளை மாலைக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறித்து, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கக் கோரி சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் சுயேச்சை எம்எல்ஏ.க்கள் சிலர் ஆதரவுடன் அசாம் மாநிலம் குவாஹாட்டி நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். இதையடுத்து, சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்யும்படி மகாராஷ்டிர துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வலிடம், சிவசேனா கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி செல்கிறார் பிரதமர் மோடி - 15-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் https://ift.tt/SBr5C6E

படம்
புதுடெல்லி : ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, 15-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 7 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டது ஜி7 அமைப்பு. இதன் 48-வது உச்சி மாநாட்டை ஜெர்மனி நடத்துகிறது. இந்த மாநாடு ஸ்க்லாஸ் எல்மாவ் நகரில் இன்று (ஜூன் 26) முதல் வரும் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்குமாறு இந்தியா, அர்ஜென்டினா, இந்தோனேசியா, செனகல், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜெர்மனி செல்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குடியரசுத் தலைவர் தேர்தல் - யஷ்வந்த் சின்ஹாவுக்கு சந்திரசேகர ராவ் ஆதரவு https://ift.tt/gywcxiG

படம்
ஹைதராபாத் : காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார். இதேபோல, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், மத்திய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

'பாஜகவுக்கான ஆதரவு கிடையாது இது' - திரவுபதி முர்முவை ஆதரிப்பதற்கான காரணத்தை விளக்கிய மாயாவதி https://ift.tt/GyfmsU6

படம்
டெல்லி : குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு (64), தனது வேட்புமனுவை நேற்றுமுன்தினம் தாக்கல் செய்தார். பாஜக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டவுடன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முழு ஆதரவை தெரிவித்தார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோரும் அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத் கலவர வழக்கு | அமித் ஷா பேட்டியை அடுத்து சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா கைது https://ift.tt/9nRYcgo

படம்
மும்பை : குஜராத் கலவர வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இந்த வழக்கில் மனுதாரர்களில் ஒருவராக இருந்த சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பில் 58 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள குல்பர்க் சொசைட்டியில் கலவரம் ஏற்பட்டது. அதில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இசான் ஜாப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணை குழு (எஸ்ஐடி) தீவிர விசாரணை நடத்தியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2002-ம் ஆண்டு குஜராத் கலவர வழக்கு - மோடிக்கு எதிராக ஆதாரமில்லை https://ift.tt/N3kT9mM

படம்
புதுடெல்லி : குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பில் 58 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள குல்பர்க் சொசைட்டியில் கலவரம் ஏற்பட்டது. அதில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இசான் ஜாப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணை குழு (எஸ்ஐடி) தீவிர விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் அப்போதைய குஜராத் முதல்வர் மோடி மற்றும் உயரதிகாரிகள் பலர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த எஸ்ஐடி, அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி உட்பட 64 பேருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி வழக்கை முடித்துக் கொண்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா தடுப்பூசிகளால் இந்தியாவில் 42 லட்சம் பேரின் மரணம் தடுக்கப்பட்டுள்ளது - லேன்செட் மருத்துவ இதழ் ஆய்வில் தகவல் https://ift.tt/kWMblVg

படம்
புதுடெல்லி : கரோனா தடுப்பூசி செலுத்தியதன் காரணமாக இந்தியாவில் 42.10 லட்சம் பேரின் மரணம் தடுக்கப்பட்டுள்ளது என்று மருத்துவ இதழான லேன் செட் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 5.24 லட்சம் பேர் கரோனாவால் இறந்ததாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், கரோனா தொற்றால் பல லட்சம் பேர் இறந்துள்ளதாக ராகுல் உட்பட பலர் குற்றம் சாட்டினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெடிகுண்டு மிரட்டல் வழக்கு - தமிழக இளைஞரிடம் உ.பி. போலீஸார் விசாரணை https://ift.tt/MvdaE60

படம்
புதுடெல்லி : உத்தரப் பிரதேசம் லக்னோ, உன்னாவ் மற்றும் கர்நாடகாவில் 4 இடங்களில் உள்ள ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அலுவலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக உ.பி. சுல்தான்பூர் கல்லூரி உதவிப் பேராசிரியர் நீல்காந்த் மணி பூஜாரி புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் தமிழகத்தின் புதுக்கோட்டைடை சேர்ந்த ராஜ் முகம்மது (22) என்பவரை கைது செய்திருந்தனர். தற்போது லக்னோ ஏடிஎஸ் படை காவலில் ராஜ் முகம்மது இருக்கிறார். இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஏடிஎஸ் வட்டாரம் கூறும்போது, ‘கடந்த 2018 முதல் 2021 வரையில் ராஜ் முகம்மது, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவிலும் பின்னர் எஸ்டிபிஐ.யிலும் இணைந்துள்ளார். ஹிஜாப் பிரச்சினைக்காக கர்நாடகா, கியான் வாபி மசூதிக்காக உ.பி. ஆர்எஸ்எஸ் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்’’ என்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

6 மணி நேரத்தில் ரூ.2 லட்சம் அபராதம் வசூலித்த பெங்களூரு போக்குவரத்து காவலர் https://ift.tt/GSm0hwC

படம்
பெங்களூரு : பெங்களூருவில் உள்ள காமாட்சிபாளையா போக்குவரத்து காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் எம்.சிவண்ணா. இவர் கடந்த 21-ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஞானபாரதி சந்திப்பில் பணியில் ஈடுபட்டார். இந்த‌ 6 மணி நேரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்க‌ளிடம் 249 போக்குவரத்து விதிமீறல்களுக்காக ரூ.2.04 லட்சம் அபராதமாக வசூலித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை: மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/vGjd9ZK

படம்
மதுரை : சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேருக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மதுரை மாவட்டம், சோழவந்தான் காவல் நிலையத்தில் கடந்த 2017-ல் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக முள்ளிப்பள்ளம் நாச்சியப்பன் (47), தென்கரை மணிகண்டன்(28) ஆகிய இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை இன்று விசாரித்த மதுரை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம், குற்றம் புரிந்த நாச்சியப்பனுக்கு ஆயுள் தண்டனை, ரூ. 6 ஆயிரம் அபராதமும், மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விருத்தாச்சலம் அருகே ஐம்பொன் சிலைகள் மீட்பு; இருவர் கைது: மதுரை சிலைக்கடத்தல் தடுப்பு போலீஸார் நடவடிக்கை   https://ift.tt/xvABSMN

படம்
மதுரை: விருத்தாச்சலம் அருகே ரூ. 2 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளை கடத்தி விற்க முயன்ற இருவரை மதுரை சிலைகடத்தல் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் பகுதியில் மாரியம்மன், பெருமாள் ஆகிய ஐம்பொன்னால் ஆன இரண்டு சாமி சிலைகளை சிலர் பதுக்கி வைத்து விற்க முயற்சிப்பதாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை இயக்குநர் ஜெயந்த் முரளி, ஐஜி தினகரன் ஆகியோர் உத்தரவின் பேரில், மதுரை சிலைக்கடத்தல் தடுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மலைச்சாமி தலைமையில், ஆய்வாளர் பிரேமா சாந்தகுமாரி, உதவி ஆய்வாளர்கள் கார்த்திகேயன், முருகபூபதி, பாண்டியராஜன், சிறப்பு எஸ்ஐக்கள் செல்வராஜ், சந்தனகுமார் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்மு பிரதமர் மோடியுடன் சந்திப்பு https://ift.tt/avs3z6l

படம்
புதுடெல்லி : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் முடிவதை முன்னிட்டு, ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு நேற்று காலை புவனேஸ்வரில் உள்ள பிஜூ பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் டெல்லி வந்தடைந்தார். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ஜூலை மத்தியில் ஆஜராக சோனியாவுக்கு மீண்டும் சம்மன் https://ift.tt/YbrBmUo

படம்
புதுடெல்லி : நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ராகுல் காந்தியிடம் 51 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் அவரால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. இதைத் தொடர்ந்து நேற்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. கரோனாவில் இருந்து முழுமையாக குணமாகும்வரை கால அவகாசம் வழங்குமாறு சோனியா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை அமலாக்கத் துறை ஏற்றுக் கொண்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிங்கப்பூரின் 3 செயற்கைக்கோள்களை 30-ம் தேதி விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ https://ift.tt/Kf0OADx

படம்
சென்னை : சிங்கப்பூரின் ‘டிஎஸ்-இஒ’ உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்கள், பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் ஜூன் 30-ம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளன. நம் நாட்டுக்குத் தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள், இஸ்ரோ மூலம் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. மேலும், வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பு பொருளாதாரத்தை மீட்க உதவும் - பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு https://ift.tt/D49krOe

படம்
புதுடெல்லி : பிரிக்ஸ் நாடுகளின் 14-வது உச்சி மாநாட்டை சீனா காணொலி மூலம் நேற்று நடத்தியது. இதில் சீன அதிபர் ஜீ ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, பிரேசில் அதிபர் ஜெயர் பல்சோநரோ, ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார். இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: உலக பொருளாதாரத்தை நிர்வகிப்பதில், பிரிக்ஸ் உறுப்புநாடுகள் ஒரே மாதிரியான அணுகுமுறையை பின்பற்றுகின்றன. கரோனா பெருந்தொற்றின் பக்க விளைவுகள் தற்போது குறைந்துள்ளன. ஆனாலும், அதன் பாதிப்பை உலகளாவிய பொருளாதாரத்தில் இன்னும் காண முடிகிறது. நமது பரஸ்பர ஒத்துழைப்பால், கரோனா தொற்றுக்கு பிந்தைய உலகளாவிய பொருளாதார மீட்பு நடவடிக்கைக்கு பயனுள்ள பங்களிப்பை அளிக்க முடியும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

'24 மணிநேரத்தில் மும்பை வந்தால் கூட்டணியில் இருந்த வெளியேற தயார்' - சிவசேனா அறிவிப்பு https://ift.tt/4tTIEL6

படம்
மும்பை : 24 மணிநேரத்துக்குள் அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பை வந்தால் மகாவிகாஸ் கூட்டணியிலிருந்து விலக தயார் என சிவசேனா அறிவித்துள்ளது. மகாராஷ்ட்ரா அரசியல் நிலவரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதுவரை 37 அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே முகாமில் இருந்துள்ளனர். இவர்கள் அஸாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர். இவர்களின் கோரிக்கையாக, சிவசேனா மகாவிகாஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது இருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தெருவிளக்கில் படித்த ஏழை சிறுவன் - சொந்த செலவில் பள்ளியில் சேர்த்து உதவிய வாரணாசி போலீஸ் அதிகாரி https://ift.tt/jN1CltW

படம்
புதுடெல்லி : அரசு பணியில் இருக்கும் உயர் அதிகாரிகள் நினைத்தால் ஏழை சமூகத்தை உயர்த்தலாம். இதற்கு உதாரணமாக உத்தரப்பிரதேசம் வாரணாசியில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியான இங்கு காவல்துறை கூடுதல் ஆணையராக சுபாஷ் சந்திர துபே பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன் இருட்டிய மாலைபொழுதில் பதனி கேட் பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்தியின் கோரிக்கைக்கு செவிசாய்த்த அமலாக்கத் துறை https://ift.tt/G9D0cKo

படம்
புதுடெல்லி : நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தியை அமலாக்கத் துறை அதிகாரிகள் 5 நாட்கள் விசாரித்தனர். இந்த வழக்கில் கடந்த ஜூன் 2-ம் தேதி ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்ததால் ஆஜராக முடியவில்லை. இதையடுத்து அவரை ஜூன் 23-ம்தேதி (இன்று) ஆஜராகுமாறு புதிய சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்