இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தோனி அரசியல் களத்தை கருத்தில் கொள்ள வேண்டும் - ஆனந்த் மஹிந்திரா ட்வீட் https://ift.tt/Lo72Pbv

படம்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, அரசியல் களத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்வீட் செய்துள்ளார். அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் 2023 சீசன் தான் தோனியின் கடைசி சீசன் என சொல்லப்பட்டது. ஆனால், இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதும் ரசிகர்களுக்காக வேண்டி இன்னும் ஒரு சீசன் விளையாட விரும்புவதாக தோனி தெரிவித்தார். இந்தச் சூழலில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இதனை தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கார் தீப்பிடித்ததில் புதுமணத் தம்பதி உட்பட 4 பேர் உயிரிழப்பு https://ift.tt/OGbwVeY

படம்
போபால் : மத்தியபிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தார் நேற்று திருமண நிகழ்வுக்கு சென்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை கார் வேகமாக சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி தீப்பிடித்தது. இதில் காரில் இருந்த 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் புதுமணத் தம்பதியும் அடங்குவர். இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

'நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்து தேசிய உணர்வுகளை காங்கிரஸ் அவமதித்தது' - ராஜஸ்தானில் பிரதமர் மோடி சாடல் https://ift.tt/gftmY8o

படம்
அஜ்மீர் : ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் மற்றும் லோக் சபா தேர்தலையொட்டி பாரதீய ஜனதா கட்சியின் ஒரு மாத கால பான்-இந்தியா பிரச்சாரமான 'மஹா ஜன்சம்பர்க்'-ஐ பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் தொடங்கிவைத்தார். இதில் பேசிய பிரதமர் மோடி, "ஒன்பது ஆண்டுகால பாஜக அரசு நாட்டு மக்களுக்கு சேவை, நல்லாட்சி, ஏழைகளின் நலன் ஆகியவற்றிற்காக அர்ப்பணித்துள்ளது. 2014க்கு முன், நாட்டு மக்கள் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. காங்கிரஸ் அரசு எல்லையில் சாலைகள் அமைக்க பயந்தது. எனினும், 2014ல் உங்களின் ஒரு வாக்கு மூலம் அனைத்தையும் மாற்றிவிட்டீர்கள். இப்போது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி பேசுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“மக்களை அச்சுறுத்துகிறது பாஜக” - அமெரிக்காவில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு https://ift.tt/Mun10GS

படம்
சான் ஃபிரான்சிஸ்கோ: இந்தியாவில் மக்களை அச்சுறுத்தக்கூடியதாக பாஜக அரசு உள்ளது என்று அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரின், சான்டா க்ளாராவில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது, "பாஜக அரசு அனைத்து மக்களையும் அச்சுறுத்துகிறது. அரசு நிறுவனங்களைத் தவறான வழியில் பயன்படுத்துகிறது. மக்களைத் தொடர்பு கொள்ளக்கூடிய அரசின் அனைத்து அமைப்புகளையும் பாஜகவும் ஆர்எஸ்எஸும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அதானால்தான் இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கையாளப்பட்ட விதத்திற்கு ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு கண்டனம்

படம்
லோசான்: இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் கையாளப்பட்டு வரும் விதத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு (UWW). அறவழியில் நீதிகேட்டு போராடி வரும் மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் கவலை அளிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பிரிஜ் பூஷண் சரண் சிங், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய மல்யுத்த வீராங்கனைகள் குற்றச்சாட்டு வைத்தனர். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த மாதம் முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். இதில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் உட்பட உலக அளவில் பதக்கம் வென்ற சாக்சி மாலிக், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியா ஆகியோர் அடங்குவர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் - பிரிஜ் பூஷன் சிங் கருத்து https://ift.tt/f6rnqaR

படம்
புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகள் தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கையில் வீச முடிவெடுத்து, பின்னர் அதனை கைவிட்டது குறித்து பிரிஜ் பூஷன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ்போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல் போாரட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 28-ம் தேதி, புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற இவர்களை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்து சிறுமியை மதம்மாற்றி திருமணம் செய்த பாகிஸ்தானியர்

படம்
புதுடெல்லி: பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியை கடத்திச் சென்று இஸ்லாம் மதத்துக்கு மாற்றி திருமணம் செய்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிகழ் வுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இம்மாத தொடக்கத்தில் பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியை, அவளது வீட்டிலிருந்து 55 வயது மிக்க முஸ்லிம் நபர் ஒருவர் கடத்திச் சென்றார் என்றும், அவர் அந்தச் சிறுமியை கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்நிகழ்வுக்கு எதிராக இந்திய தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹாரை சேர்ந்தவர்கள் புனித யாத்திரை சென்றபோது காஷ்மீரில் பஸ் கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு https://ift.tt/1M0JgjC

படம்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பஸ் பள்ளத்தில் விழுந்து உருண்டதில் பிஹாரைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஜம்மு-நகர் தேசிய நெடுஞ்சாலையில் அமிர்தசரஸிலிருந்து கத்ரா நோக்கி நேற்று காலை ஒரு பஸ் சென்றது. ஜஜ்ஜார் கோட்லி அருகே உள்ள பாலத்தில் பஸ் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

10 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றார் ராகுல் காந்தி https://ift.tt/3ZzyU0A

படம்
சான் பிரான்சிஸ்கோ : 10 நாட்கள் சுற்றுப்பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அம்மாநில முதல் அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலும், வரவிருக்கும் தேர்தலை இருவர் தலைமையிலும் காங்கிரஸ் சந்திப்பது என்றும் ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“பதக்கங்களை கங்கையில் வீசிவிட்டு, சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்” - மல்யுத்த வீராங்கனைகள் அதிரடி https://ift.tt/g71pj9Q

படம்
புதுடெல்லி: "நாங்கள் ஒலிம்பிக் உள்பட சர்வதேசப் போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசிவிட்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்" என்று மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை எதிர்த்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிக் கொண்டிருந்த அவர்கள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் போராட்டத்தை தீவிரமாக்கியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூரில் அமைதி நிலவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் வலியுறுத்தல் https://ift.tt/UvPmaN1

படம்
புதுடெல்லி: மணிப்பூரில் அமைதி நிலவ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் மைத்திஸ் சமூகத்தவர்களுக்கும், குகிஸ் சமூகத்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக பலர் உயிரிழந்திருக்கிறார்கள். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு மோதல் நிகழ்ந்து வருவதால் அங்கு அமைதியை நிலைநாட்ட மத்திய, மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான குழுவினர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை இன்று (மே 30) சந்தித்து இது தொடர்பாக 4 பக்க மனுவை அளித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“மணிப்பூர் நிலைமை சீராக சிறிது காலமாகும்” - முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தகவல் https://ift.tt/ITM6ej1

படம்
புனே: மணிப்பூரில் எதிர்கொள்ளக் கூடிய சவால்கள் இன்னும் சரியாகிவிடவில்லை என்றும், அங்கு நிலைமை சீராக சில காலம் ஆகலாம் என்றும் முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும், வடகிழக்கு மாநிலங்களில் தற்போதுள்ள சூழல் வன்முறையுடன் தொடர்புடையதாக இல்லை என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு அகாடமியில் இருந்து தேர்ச்சி பெற்று செல்லும் 144-வது பேட்ஜ்ஜின் அணிவகுப்பினை மதிப்பாய்வு செய்வதற்காக முப்படைத் தளபதி புனே சென்றிருந்தார். அப்போது மணிப்பூர் நிவலரம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அனில் சவுகான், "கடந்த 2020-ம் ஆண்டுக்கு முன்பே மணிப்பூரில் ராணுவம், அசாம் ரைஃபில் படை நிலைநிறுத்தப்பட்டன. வடக்கு எல்லைகளில் சவால்கள் அதிகமாக இருந்த காரணத்தினால் ராணுவத்தினை நாம் திருப்ப அழைத்தோம். அங்கு வன்முறைச் சம்பவங்கள் குறையைத் தொடங்கியதைத் தொடர்ந்து அதனை நாம் செய்ய முடிந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாடப் புத்தகங்கள் மூலம் குழந்தைகளின் மனதை மாசுபடுத்துவதை அனுமதிக்க முடியாது: கர்நாடகா முதல்வர் https://ift.tt/TvgU0YR

படம்
பெங்களூரு: பாடப் புத்தகங்கள் மூலம் குழந்தைகளின் மனதை மாசுபடுத்துவதை அனுமதிக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். பெங்களூருவில் நேற்று (திங்கள்கிழமை) நடந்த எழுத்தாளர்களுடனான சந்திப்பில் சித்தராமையா இதனைத் தெரிவித்தார். இந்த சந்திப்பில் 40க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகளும் கலந்து கொண்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்முவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி; காயம் 20 https://ift.tt/jgGNoQ0

படம்
ஸ்ரீநகர்: ஜம்முவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர். விபத்துக்குள்ளான பேருந்து கட்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜஜ்ஜார் கோட்லி பகுதியில் விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் தரப்பில், "மாதா வைஷ்ணோதேவி கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்டவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஜஜ்ஜார் கோட்லி அருகே விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அசாம் கல்லூரி மாணவர்கள் 7 பேர் விபத்தில் உயிரிழப்பு https://ift.tt/jSp61uA

படம்
குவாஹாட்டி : அசாம் மாநிலத்தின் குவாஹாட்டி நகரில் மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் 7 பொறியியல் மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர். அசாம் மாநிலத்தின் குவாஹாட்டி நகரில் அசாம் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் 10 மாணவர்கள் நேற்று காலையில் ஒரு காரில் கல்லூரி வளாகத்தை விட்டு புறப்பட்டனர். காரில் அதிக வேகத்தில் இவர்கள் சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் நகரின் ஜலுக்பாரி மேம்பாலம் அருகில் இவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிரில் வந்த மினி லாரி மீது மோதியது. இதில் கார் முற்றிலும் உருக்குலைந்து, 7 மாணவர்கள் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 3 மாணவர்களும் மினி லாரியில் வந்த மூவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் குவாஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜக 9 ஆண்டு ஆட்சியில் பணவீக்கம் - கார்கே குற்றச்சாட்டு https://ift.tt/ngTZtAc

படம்
புதுடெல்லி : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவு மற்றும் வீடியோவில் கூறியிருப்பதாவது: பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியில் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஏழை, நடுத்தர குடும்பங்களின் பட்ஜெட் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக் கிறது. கடந்த 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சமையல் காஸ், பெட்ரோல்-டீசல் உட்பட அத்தியாவசிய பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

துருக்கி அதிபர் தேர்தல் 2023: மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் எர்டோகன்

படம்
அங்காரா: துருக்கி நாட்டின் அதிபராக மீண்டும் எர்டோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று நடந்த மறு தேர்தலில் அவர் பெரும்பான்மையைப் பெற்று மீண்டும் அதிபராகியுள்ளார். 69 வயதாகும் தய்யீப் எர்டோகன் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சி செய்து வருகிறார். 2003 முதல் 2014 வரை துருக்கியின் பிரதமராக இருந்த அவர், 2014-ஆம் ஆண்டு அப்பதவியை கலைத்து நாட்டின் உச்ச அதிகாரமாக அதிபர் பதவியை கொண்டு வந்தார். அதன்பிறகு தற்போது வரை துருக்கியின் அதிபராக அந்நாட்டை ஆட்சி செய்து வந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூர் செல்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா: 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக முதல்வர் தகவல் https://ift.tt/LUBgZjW

படம்
இம்பால்: மணிப்பூரில் கடந்த 4 நாட்களில் 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில முதல்வர் பைரன் சிங் கூறியுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மணிப்பூர் செல்கிறார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மேதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குக்கி உள்ளிட்ட பழங்குடியினர் கலவரத்தில் ஈடுபட்டனர் இதில் 70 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.மணிப்பூரில் 3 வாரத்துக்கும் மேலாக ஆங்காங்கே வன்முறையும் பதற்றமும் நீடித்தது. இந்நிலையில் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செங்கோல் குறியீட்டிற்கு ஏற்றவாறு பிரதமர் மோடி செயல்பட வேண்டும்: வேளாக்குறிச்சி ஆதீனம் சக்திஞான மகாதேவ தேசிக பரமாச்சாரி சுவாமி கருத்து https://ift.tt/u9jECyl

படம்
புதுடெல்லி: புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் செங்கோலை நிறுவுவதற்காக தமிழகத்தின் சைவ ஆதீனங்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் முக்கியமானவரான 18-வது குருசபையில் திருக்கயிலாயப் பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் சக்திஞான மகாதேவ தேசிக பரமாச்சாரி சுவாமி, செங்கோலின் குறியீட்டிற்கு ஏற்றவாறு பிரதமர் நரேந்திர மோடி செயல்பட வேண்டும் என்பதே தங்கள் அவா என, ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிற்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார். வாரணாசியில் காசி தமிழ் சங்கமத்திற்கு பின் மீண்டும் நீங்கள் அனைவரும் டெல்லியில் மத்திய அரசால் கவுரவிக்கப்படுவதை எப்படி உணர்கிறீர்கள்? from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களவையில் செங்கோலை நிறுவியது பொருத்தமானது https://ift.tt/FjK7M9Z

படம்
சீனா தன்னை ‘‘சீன மக்கள் குடியரசு’’ என அழைத்துக்கொள்கிறது. குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெற்றால் மட்டுமே ஒரு நாடு ஜனநாயக நாடாக மிளிர முடியும். எனவே சீனா ஜனநாயக நாடாக முடியாது. பரம்பரையாக வரும் ராஜா அல்லது ராணியை தலைமையாக கொண்டிருக்கும் ஒரு நாடு குடியரசாக முடியாது. இங்கிலாந்து ஜனநாயக நாடாக திகழ்ந்த போதிலும், மன்னர் ஆட்சி நடைபெறுவதால் அந்த நாடு குடியரசாக முடியாது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஏழை, எளியவர்களும் எளிதாக பயணிக்கும் வகையில் புல்லட் ரயில் சேவை இந்தியாவிலும் வரவேண்டும்: ஜப்பானில் புல்லட் ரயிலில் சென்ற முதல்வர் ஸ்டாலின் விருப்பம்

படம்
சென்னை: ஜப்பானின் ஒசாகாவில் இருந்து தலைநகர் டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். இதற்கு இணையான ரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வரவேண்டும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைந்து. அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கவும் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் சென்றுள்ளார். சிங்கப்பூரில் 25-ம் தேதி வரை இருந்த முதல்வர், அதன்பின் ஜப்பான் சென்றுள்ளார். ஒசாகா நகரில் தொழிலதிபர்களை சந்தித்து பேசினார். அங்குள்ள தொழிற்சாலைகளை நேரில் சென்று பார்வையிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழ் வேத மந்திரங்கள் முழங்க, சர்வமத பிரார்த்தனையுடன் புதிய நாடாளுமன்றத்தை திறந்தார் பிரதமர் மோடி https://ift.tt/KoZNH8D

படம்
புதுடெல்லி: தமிழ் வேத மந்திரங்கள் முழங்க, சர்வமத பிரார்த்தனையுடன் புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். சிறப்பு வழிபாட்டுக்கு பிறகு, தமிழக ஆதீனத் தலைவர்கள் வழங்கிய செங்கோலை மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே அவர் நிறுவினார். டெல்லியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க, பிரதமர் மோடி நேற்று காலை 7.30 மணி அளவில் புதிய நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்தடைந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் நிறுவப்பட்டது செங்கோல் https://ift.tt/45ZJHs3

படம்
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு வலப்புறத்தில் செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி நிறுவினார். புதிய நாடாளுமன்றக் கட்டிடம் இன்று திறப்பு விழா காண உள்ளது. இதை முன்னிட்டு, நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் செங்கோல் நிறுவும் வைபவம் இன்று நிகழ்ந்தேறியது. செங்கோல் நிறுவப்படுவதற்கு முன்பாக அதற்கு முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டன. திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் முன்னிலையில் வேத மந்திரங்களும் தேவாரமும் ஓத செங்கோலுக்கு பூஜை மேற்கொள்ளப்பட்டது. மேலும், செங்கோலுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து, புனித செங்கோல் முன்பாக பிரதமர் நரேந்திர மோடி விழுந்து வணங்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடாளுமன்றத்தில் செங்கோல் | விழாவை புறக்கணித்தவர்கள் தமிழுக்கு துரோகம் செய்திருக்கிறார்கள்: தமிழிசை சவுந்தரராஜன் https://ift.tt/a0BQDVX

படம்
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் புனித செங்கோல் நிறுவப்பட்ட விழாவை புறக்கணித்தவர்கள் தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் துரோகம் செய்து மிகப் பெரிய வரலாற்று பிழையை ஆற்றியிருக்கிறார்கள் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார். புதிய நாடாளுமன்றம் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், முன்னதாக நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கையின் வலப்புறத்தில் புனித செங்கோல் நிறுவப்பட்டது. சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், "நம் நாடாளுமன்றத்தில் நம் மனதை ஆளும் தமிழ் ஒலித்தபடியே நம் தமிழ் அரசர்கள் பயன்படுத்திய செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது. புதிய நாடாளுமன்றத்தில் முதன்முதலில் புகுந்தது நம் தமிழ். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ம.பி.யில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ள 3 பேரை கைது செய்தது என்ஐஏ https://ift.tt/Eb5ZVPn

படம்
போபால்: மத்திய பிரதேசத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக 3 வழக்கறிஞர்கள் உட்பட பலரிடம் என்ஐஏ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புஇந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கால் பதித்து ரகசியமாக ஆட்களை சேர்த்து வருவதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) தகவல் கிடைத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை இன்று திறக்கிறார் பிரதமர் https://ift.tt/vx8IDiB

படம்
புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் அதிநவீன வசதிகளுடன், 5 ஸ்டார் அந்தஸ்தில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என மக்களவையிலும், மாநிலங்களவை யிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி அடிக்கல் நாட்டினார். இந்த கட்டிடத்தை அதிநவீன வசதிகளுடன் டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் கட்டி முடித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் கலாச்சாரத்தை சித்தரிக்கும் செங்கோல் - தமிழக ஆதீனங்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு https://ift.tt/zgcCh6U

படம்
புதுடெல்லி: செங்கோலை புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் வைப்பது நாட்டின் கலாச்சாரத்தை சித்தரிப்பதாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். நாடு சுதந்திரம் அடைந்த போது, தமிழக ஆதீனத்தால் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. அந்த செங்கோலை தான் தற்போது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவ முடிவு செய்துள்ளனர். ஜனநாயகத்தின் சின்னமான மக்களவையில், மக்களவைத் தலைவர் இருக்கைக்கு அருகில் இந்தியா விடுதலை அடைந்த போது தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட தமிழ் வாசகங்கள் பொறிக்கப்பட்ட செங்கோல் வைக்கப்பட உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியா 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கு அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி https://ift.tt/iy7rqt0

படம்
புதுடெல்லி: நிதி ஆயோக் அமைப்பின் 8-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை எட்ட மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது அவசியம் என்று பிரதமர் மோடி இக்கூட்டத்தில் வலியுறுத்தினார். மத்திய அரசின் சிந்தனை அமைப்பான ‘நிதி ஆயோக்’ அமைப்பின் 8-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் அதன் தலைவரான பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், யோகி ஆதித்யநாத் (உ.பி.), புஷ்கர் சிங் தாமி (உத்தராகண்ட்), சிவராஜ் சிங் சவுகான் (ம.பி.) மனோகர் லால் கட்டார் (ஹரியாணா) உள்ளிட்ட பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மோடி மீண்டும் பிரதமராக 49% மக்கள் விருப்பம்: சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தகவல் https://ift.tt/0tV5U1W

படம்
புதுடெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று 49 சதவீத மக்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக ஏபிபி நிறுவனம் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து நேற்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதனை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். மூன்றாவது முறையாக மீண்டும் மோடிதான் பிரதமர் என்பதை கடந்த 25ஆம் தேதி அசாமில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி செய்துள்ளார். இன்னொரு புறம், தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழக மேம்பாட்டு திட்டங்களில் முதலீடு - ஜப்பான் நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு https://ift.tt/XuG64Fp

படம்
சென்னை : தமிழகத்தில் உற்பத்தி சார்ந்த துறைகள் மட்டுமின்றி, மேம்பாட்டுத் திட்டங்களிலும் ஜப்பான் நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும், பொருளாதார, வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் ஜப்பானின் ஒசாகா நகருக்குச் சென்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜக அரசின் 9 ஆண்டு கால ஆட்சி - பிரதமர் மோடியிடம் 9 கேள்விக்கு பதில் கோருகிறது காங்கிரஸ் https://ift.tt/UvXBQya

படம்
புதுடெல்லி : பாஜக அரசு ஆட்சியில் அமர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி தாங்கள் கேட்கும் 9 கேள்விகளுக்கு மனம் திறந்து பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்று மே 30-ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த சந்தர்ப்பத்தில் பிரதமரிடம் 9 கேள்விகளை கேட்க காங்கிரஸ் விரும்புகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் அவசர கதவை பயணி திறந்ததால் பரபரப்பு

படம்
சியோல் : தென் கொரியாவை சேர்ந்த ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று தென்கொரியாவில் உள்ள ஜெஜூ தீவிலிருந்து டேகு நகருக்கு 194 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. விமானம் பறந்து கொண்டிருந்த போது, அவசர கால கதவை பயணி ஒருவர் திடீரென்று திறந்தார். கதவு திறந்த நிலையில் காற்று வேகமாக விமானத்துக்குள் வீச ஆரம்பித்தது. இதனால், பயணிகள் நிலைதடுமாறி அச்சத்தில் உறைந்தனர். சிலர் மயக்கமடைந்து விழுந்தனர்.சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக விமானம் டேகு சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீனாவில் புதிய கரோனா அலை தீவிரம் - வாரத்துக்கு 6.5 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை

படம்
பெய்ஜிங் : கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அங்கிருந்து 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது கரோனா வைரஸ் பரவல் குறைந்திருப்பதால் சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு நீக்கியிருக்கிறது. எனினும் கரோனா பெருந்தொற்று முழுமையாக ஓயவில்லை. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் உள்ளிட்டோர் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சூழலில் கடந்த ஏப்ரல் இறுதியில் தொடங்கி சீனா முழுவதும் கரோனாவின் ஒமிக்ரான் எக்ஸ்.பி.பி. வகை வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. தற்போது வாரத்துக்கு 4 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. வரும் ஜூன் மாதத்தில் சீனாவில் கரோனா தொற்று உச்சத்தை எட்டும். அப்போது வாரத்துக்கு 6.5 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Ne...

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறப்பதற்கு எதிரான மனு தள்ளுபடி https://ift.tt/2khDevN

படம்
புதுடெல்லி : டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார். இந்த விழாவை புறக்கணிக்க 19 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ஜெயா சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

யுபிஎஸ்சி தேர்வில் ஒரே பெயர், ரோல் நம்பர், ரேங்க்கை இருவர் எடுத்ததாக சர்ச்சை - யார் சரியான நபர்? https://ift.tt/cTVaLEk

படம்
இந்தூர்: அண்மையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) குடிமைப் பணிகள் தேர்வு 2022-ன் தேர்வு முடிவை வெளியிட்டது. இந்த தேர்வை எதிர்கொண்ட தேர்வர்கள் அதற்கான முடிவை தெரிந்து கொள்ள ஆர்வம் செலுத்தினர். அதில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இரண்டு தேர்வர்களும் அடங்குவர். ஒரே முதல் பெயர், ஒரே ரோல் நம்பர் மற்றும் ஒரே ரேங்கை அவர்கள் இருவரும் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இந்த விவரத்தை அவர்கள் இருவரும் அறிந்து கொண்டபோது அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் ஒருவர் மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான ஆயிஷா பாத்திமா. மற்றொருவர் அதே மாநிலத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான ஆயிஷா மக்ரானி. இருவரும் 184-வது இடத்தை பிடித்துள்ளனர். அவர்கள் இருவரும் தாங்கள் தான் அசலான தேர்வர் என்பதை நிரூபிக்க காவல் துறையில் புகார் தெரிவித்தனர். இதனை யுபிஎஸ்சி கவனத்திற்கும் கொண்டு சென்றனர். நீதி வேண்டும் என சொல்லி ஆயிஷா மக்ரானி இதை செய்திருந்தார். சுமார் இரண்டு ஆண்டு காலம் இதற்காக மிகக் கடுமையாக அவர் பயின்றுள்ளார். மறுபக்கம் எதிர்காலத்தில் இது போன்ற குழப்பம் நடைபெற கூடாது எனவும், ...

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் https://ift.tt/T83i4Ym

படம்
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒரு கொள்கை முழக்கத்தை உருவாக்கியிருக்கிறார். ஹிந்தியில் ‘ஜித்னி அபாடி உத்னா ஹக்' அதாவது ‘மக்கள் தொகைக்கேற்ப உரிமைகள்’ என்பதே அந்த கொள்கை முழக்கம். இந்தியாவில் சுமார் 70% இந்தியர்கள் (ஓபிசி/எஸ்சி/எஸ்டி) ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளில் அவர்களின் பிரதிநிதித்துவம் தோராயமாக 70% ஆக இருக்க வேண்டும். இந்த கொள்கையையே ராகுல் காந்தி வலியுறுத்துகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகாராஷ்டிரா | விபத்தில் 150 ஆடுகள், 4 பேர் உயிரிழப்பு https://ift.tt/ZhWqAjG

படம்
அவுரங்காபாத்: மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் டைல்ஸ் ஏற்றிவந்த லாரியின் பின்னால் ஆடுகள் ஏற்றி வந்த லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 150 ஆடுகள் இறந்தன. நான்டெட் - கலம்னுரி சாலையில் உள்ள மாலேகான் பாட்டா என்ற இடத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஒய்எஸ்ஆர் காங்., தெலுங்கு தேசம் பங்கேற்பு https://ift.tt/zyHjTDE

படம்
அமராவதி : வரும் 28-ம் தேதி டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஆனால், குடியரசுத் தலைவர் இல்லாமல் பிரதமர் எப்படி கட்டிடத்தை திறந்து வைக்கலாம் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. நாடாளுமன்றத்தில் சில புதிய கட்டிடங்கள் கட்டப்பட்ட போது, அப்போதைய பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் கட்டிடங்களை திறந்து வைத்துள்ளனர் என பாஜக சார்பில் கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் | டெல்லியில் கார்கேவுடன் சித்தராமையா, சிவகுமார் ஆலோசனை https://ift.tt/6v3sfBz

படம்
பெங்களூரு: கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம், துறை பங்கீடு ஆகியவை குறித்து மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் நேற்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த 20-ம் தேதி சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர். அமைச்சரவையில் இடம் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டதால் முதல் கட்டமாக 8 அமைச்சர்கள் மட்டும் அன்றைய தினம் பதவி ஏற்றனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் துறைகள் ஒதுக்கப்படவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2025-ல் இந்தியாவில் காசநோய் ஒழிக்கப்படும்: சுகாதாரத் துறை அமைச்சர் உறுதி https://ift.tt/Aj6BYLX

படம்
புதுடெல்லி: சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் 76-வது உலக சுகாதார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது: சர்வதேச அளவில் 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலத்தில் காச நோய் பாதிப்பு 10 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. இதே காலத்தில் இந்தியாவில் 13 சதவீதம் அளவுக்கு காசநோய் பாதிப்பு குறைக்கப்பட்டு உள்ளது. வரும் 2025-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூரில் ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு https://ift.tt/Yea4Joc

படம்
புதுடெல்லி: மணிப்பூரில் வெவ்வேறு இனக் குழுக்களுக்கு இடையே வன்முறை வெடித்துள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வன்முறை பாதித்த பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அங்குள்ள வணிகர்கள் ஏப்ரல் மாதத்திற்கான கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜிஎஸ்டிஆர்-1, ஜிஎஸ்டிஆர்-3பி மற்றும் ஜிஎஸ்டிஆர்-7 ஆகிய பிரிவுகளில் மாதாந்திர ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை இம்மாதம் இறுதி வரை அதாவது மே 31-ம் தேதி வரை நீட்டித்து சிபிஐசி உத்தரவிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி திஹார் சிறையில் மயங்கி விழுந்த சத்யேந்திர ஜெயின் https://ift.tt/VcL1iTu

படம்
புதுடெல்லி: டெல்லி முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி மூத்த தலைவர்களில் ஒருவருமான சத்யேந்திர ஜெயின், சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைக் கைதியாக டெல்லி திஹார் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் சிறையில் உள்ள குளியல் அறையில் தலைச்சுற்றல் காரணமாக அவர் நேற்று மயங்கி விழுந்ததாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தது.இதுகுறித்து ஆம் ஆத்மி வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: சத்யேந்திர ஜெயின் முதலில் தீன் தயாள் உபாத்யாய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு சுவாச பிரச்சினை காரணமாக லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி, ஆஸி. பிரதமர் அந்தோணி அல்பானிஸ் முன்னிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையே குடியேற்ற ஒப்பந்தம்

படம்
சிட்னி: பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் இறுதியாக கடந்த 22-ம் தேதி இரவு ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் ஆகியோர் நேற்று தனியாக சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், தாதுப் பொருட்கள், கல்வி, குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டும் பாஜக - மத்திய அரசின் 9-ம் ஆண்டு நிறைவில் அஜ்மீர் வருகிறார் பிரதமர் மோடி https://ift.tt/o3K6wVh

படம்
புதுடெல்லி: ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டுகிறது. தனது அரசின் 9-ம் ஆண்டு நிறைவில் அங்குள்ள அஜ்மீருக்கு மே 31-ல் பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார். காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கிறது. இதற்கான பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் வகையில் வரும் மே 31-ல் பிரதமர் நரேந்திர மோடி அஜ்மீர் வருகிறார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகிறார். கடந்த ஒரு மாதத்தில் பிரதமர் மோடி ராஜஸ்தானுக்கு மூன்றாவது முறையாக வருகிறார். இக்கூட்டம் பிரதமர் மோடி அரசின் 9-ம் ஆண்டு நிறைவு விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வங்கதேசத்திடம் 20 ரயில் இன்ஜின்கள் ஒப்படைப்பு https://ift.tt/Qe2Luxn

படம்
புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு அக்டோ பரில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது, அவரிடம் 20 அகலப்பாதை (பிஜி) ரயில் இன்ஜின்களை தயாரித்து அளிப்பதாக இந்தியா சார்பில் உறுதியளிக்கப்பட்டது. அந்த உறுதிமொழியை நிறைவேற்றும் விதமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 20 இன்ஜின்கள் வங்கதேசத்திடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன. இந்த இன்ஜின்களை பயணிகள் மற்றும் சரக்கு ஆகிய இரண்டு ரயில் போக்குவரத்துக்கும் பயன்படுத்தலாம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் வாகனங்களை ஏஜென்ட் மூலம் பறிமுதல் செய்வது சட்டவிரோதம் - பாட்னா உயர் நீதிமன்றம் https://ift.tt/r1JlizG

படம்
பாட்னா: கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் வாகனங்களை, மீ்ட்பு ஏஜென்ட்டுகள் மூலம் வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்வது சட்ட விரோதம் எனவும், இது போன்ற நடவடிக்கைகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்யவும் பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிஹார் மாநிலத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று வாகனங்கள் வாங்கிய 5 பேர், கடன் தவணையை திருப்பிச் செலுத்தவில்லை. அவர்களது வாகனங்களை, மீட்பு ஏஜென்ட்டுகள் வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக வாகனங்களை பறிகொடுத்த 5 பேரும் பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அடுத்த பெருந்தொற்று கரோனாவை விட மிகவும் மோசமானதாக இருக்கும் - உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை https://ift.tt/PWsTwYV

படம்
புதுடெல்லி: அடுத்த பெருந்தொற்று கரோனா வைரஸை விட மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் 76-வது உலக சுகாதார கூட்டம் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 22-ம் தேதி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் ஆதானோம் கேப்ரியேசஸ் பேசியதாவது: கரோனா வைரஸின் சர்வதேச சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், இதன் மூலம் கரோனா வைரஸின் சுகாதார அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. மேலும் ஒரு பெருந்தொற்று உருவாகி வருகிறது. இந்த பெருந்தொற்றானது மிகவும் மோசமான அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுதந்திரத்தின்போது நேருவுக்கு வழங்கியது | புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர்கால மாதிரி செங்கோல்: அமித் ஷா தகவல் https://ift.tt/c0pUOIP

படம்
புதுடெல்லி : சுதந்திரத்தின்போது நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சோழர்கால மாதிரி செங்கோலை, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர நிறுவ உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28-ம் தேதி திறக்கப்படுகிறது. இதில் வரலாற்று சிறப்புமிக்க சோழர் கால மாதிரி செங்கோலை மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே பிரதமர் மோடி நிறுவ உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நிர்வாக வசதிக்காகவே ரூ.2,000 நோட்டுகள் வாபஸ்: உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதில் https://ift.tt/yOgDZUl

படம்
புதுடெல்லி: ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த வாரம் திடீரென அறிவிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “ரூ.2,000 திரும்பப் பெறுதல் தொடர்பான ரிசர்வ் வங்கியின் அறிவிக்கை மற்றும் எஸ்பிஐயின் ஆதாரம் இல்லாமல் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு ஊழலை ஒழிக்க இயற்றப்பட்ட சட்டங்களுக்கு எதிரானவை" என்று கூறப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பென்டகன் அருகே வெடிவிபத்து போல் போலி புகைப்படம்: அமெரிக்க பங்குச் சந்தை சரிந்து மீண்டது

படம்
வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அருகே வெடிவிபத்து ஏற்பட்டதாக திங்கள்கிழமை அன்று செய்தி பரவியது. பென்டகன் அலுவலக கட்டிடத்துக்கு அருகே வெடிவிபத்தால் கரும்புகை பரவுவது போன்ற படம் ஒன்று இணையதளத்தில் வைரலானது. இதையடுத்து அன்றைய தினம் அமெரிக்க பங்குச் சந்தையில் சில நிமிடங்கள் கடும் சரிவு ஏற்பட்டது. 500 பில்லியன் டாலர் (ரூ.41 லட்சம் கோடி) அளவில் அமெரிக்க பங்குச் சந்தை சரிந்தது. பின்னர், அந்தப் படம் போலியானது என்று தெரியவந்தது. இதன் பிறகு பங்குச் சந்தை மீண்டெழுந்தது. இந்தப் படம் ட்விட்டரில் நீல நிறக்குறியிட்ட உறுதிசெய்யப்பட்ட கணக்கு மூலம் பகிரப்பட்டதால், பலரும் இந்தச் செய்தியை உண்மை என்று நம்பினர். மக்கள் பதற்றத்துக்கு உள்ளாகி பங்குகளை விற்க ஆரம்பித்தனர். இதனால், சில நிமிடங்களுக்கு அமெரிக்கப் பங்குச்சந்தை கடும் சரிவுக்கு உள்ளானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்