இடுகைகள்

ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கேரளா, திரிபுராவுக்கு தலா ரூ.15 கோடி: சத்தீஸ்கர் அரசு நிதியுதவி https://ift.tt/RYhzItD

படம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் அலுவலகம் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட திரிபுரா மற்றும் கேரளா மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.15 கோடி வழங்க முதல்வர் தீர்மானித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் முதல்வர் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், “திரிபுரா மற்றும் கேரளாவில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் பெரியளவில் உயிரிழப்பு மற்றும் உடைமைகள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சூழ்நிலையில் இரு மாநிலங்களுக்கும் உதவ சத்தீஸ்கர் அரசு தயாராக உள்ளது” என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீரில் 2 இடங்களில் 4-ம் தேதி ராகுல் பிரச்சாரம் https://ift.tt/gLmx4aW

படம்
அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, 2 இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றுகிறார். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் குலாம் அகமது மிர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் வரும் 4-ம் தேதி தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி உரையாற்றுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் பங்கேற்க வேண்டும் என்பது மக்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களின் விருப்பம். அதனால் ராகுல் காந்தி காஷ்மீருக்கு 4-ம் தேதி வருகிறார். தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவைக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர்: நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலினுக்கு அசாம் முதல்வர் வலியுறுத்தல் https://ift.tt/iLqySt6

படம்
புதுடெல்லி: சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேச அகதிகள், தமிழ்நாட்டில் கோவையை குறிவைத்து அங்குள்ள ஜவுளித் தொழிற்சாலைகளில் வேலையில் சேர முயல்வதாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இத்தகைய சட்டவிரோத ஊடுருவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஹிமந்தா பிஸ்வாசர்மா கூறியதாவது: வங்கதேசத்தில் கலவரச் சூழல் உருவாகியுள்ள நிலையில், அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி வருகின்றனர். கடந்த 27-ம் தேதி அசாம் எல்லை வழியாகநுழைய முயன்ற 3 வங்கதேச அகதிகளை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி மீண்டும் அவர்களை வங்கதேசத்துக்கு அனுப்பியுள்ளனர். இதுவரையில் அசாம் வழியாக நுழைய முயன்ற 50 வங்கதேச அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் திரிபுராவிலும் அகதிகள் தடுக்கப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இலங்கை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு

படம்
கொழும்பு: இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு குறித்து ஆலோசிப்பதற்காக கொழும்பு பாதுகாப்பு மாநாடு, இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, மாலத்தீவு மற்றும் மொரீசியஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், துணை ஆலோசகர்கள் பங்கேற்றனர். வங்கதேசம் மற்றும் செஷல்ஸ் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பார்வையாளர்களாக பங்கேற்றனர். இதில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கை சென்றார். அவர் அந்நாட்டு அதிபர் ரனில் விக்ரமசிங்கேவை நேற்று சந்தித்து இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அசாம் சட்டப்பேரவையில் முஸ்லிம்களுக்கான தொழுகை நேரம் ரத்து: ஹிமந்த பிஸ்வா சர்மா வரவேற்பு https://ift.tt/704L9oQ

படம்
குவாஹாட்டி: அசாம் சட்டப்பேரவையில் பல ஆண்டுகாலம் நடைமுறையில் இருந்த முஸ்லிம் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கான வெள்ளிக்கிழமை தொழுகை நேர இடைவேளை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அசாம் சட்டப்பேரவை விதிகள் கமிட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அசாம் சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது முதல், வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம் உறுப்பினர்கள் தொழுகைக்கு செல்வதற்காக பேரவை அமர்வு காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்படுவது வழக்கம். அவர்கள் தொழுகை முடித்து வந்தபிறகு மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் அவை தொடங்கும். மற்ற நாட்களில் இதுபோன்ற எந்தவித ஒத்திவைப்பும் இன்றி அவை நடக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘அசாம், உ.பி., பிஹார், ஒடிசா, டெல்லி பற்றி எரியும்’ - மம்தா மிரட்டல் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் https://ift.tt/FepI9LX

படம்
புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினால், அசாம், வடகிழக்கு மாநிலங்கள், உத்தர பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா,டெல்லி ஆகிய மாநிலங்களும் பற்றி எரியும் என்று கொல்கத்தாவில் நடந்த திரிணமூல் மாணவர் அணிகூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின்மாணவர் அணி தொடங்கப்பட்ட தினம் நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில், கட்சித் தலைவரும், மாநிலமுதல்வருமான மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘‘மோடி பாபு! நீங்கள்உங்களது தொண்டர்கள் மூலம்மேற்கு வங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். மேற்கு வங்கத்தை எரித்தீர்களானால், அசாம், வடகிழக்கு மாநிலங்கள் உத்தர பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, டெல்லி ஆகிய மாநிலங்களும் பற்றி எரியும்’’ என்று ஆவேசத்துடன் பேசினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspap...

கொல்கத்தா போராட்டத்தில் போலீஸார் பீய்ச்சியடித்த தண்ணீரின் வேகத்தை தாங்கி நின்ற முதியவர் https://ift.tt/ry8Jtu6

படம்
கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்றனர். ஹவுரா பாலத்தில் மாணவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார்அவர்களை கலைக்க அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அப்போது மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் காவி உடை அணிந்த முதியவர் ஒருவர் தேசியக்கொடியை அசைத்தவாறு அந்த இடத்தை விட்டு சற்றும் அகலாமல் நின்றிருந்தார். போலீஸார் பீய்ச்சியடித்த தண்ணீரை அவர் தனி ஆளாக நின்று எதிர்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் ரூ.28,600 கோடியில் 12 தொழில் நகரங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் https://ift.tt/pt9ZCn4

படம்
புதுடெல்லி: நாடு முழுவதும் ரூ.28,600 கோடி முதலீட்டில் 12 ஸ்மார்ட் தொழில் நகரங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழகத்தில் 11 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 234 நகரங்களில் தனியார் எஃப்.எம். வானொலி சேவைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஸ்மார்ட் தொழில் நகரங்கள், புதிய ரயில்வே திட்டங்கள், எஃப்.எம். வானொலி சேவை விரிவாக்கம் உள்ளிட்டவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி விரைவில் சிங்கப்பூர் செல்ல உள்ள நிலையில் இரு நாட்டு அமைச்சர்கள் கலந்துரையாடல் https://ift.tt/ROChBf1

படம்
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த சில நாட்களில் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் செல்லவுள்ள நிலையில் இருநாட்டு அமைச்சர்கள் சந்திப்பு நேற்றுமுன்தினம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான இருதரப்பு உறவைமேம்படுத்துவது குறித்து நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இந்தியாவிலிருந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை https://ift.tt/IFpHCXb

படம்
புதுடெல்லி: மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இலக்கை எட்டியுள்ளது. மாநிலங்களவையில் காலியாக இருந்த 9 மாநிலங்களை சேர்ந்த 12 உறுப்பினர்களுக்கான தேர்தல் செப்டம்பர் 3-ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், பாஜக உறுப்பினர்கள் 9 பேர், தே.ஜ கூட்டணியில் இருந்து 2 பேர், காங்கிரஸில் இருந்து ஒருவர் என 12 பேரும் போட்டியின்றி தேர்வாகினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட மாணவர் பேரணியில் வன்முறை https://ift.tt/kYOTwcJ

படம்
கொல்கத்தா: பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு நீதி கேட்டு மேற்கு வங்க தலைமைச் செயலகம் நோக்கி ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, தண்ணீரை பீய்ச்சியடித்தனர். கண்ணீர்புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் கொல்கத்தா, ஹவுரா பகுதிகள் வன்முறை களமாக மாறின. போலீஸ் தாக்குதலை கண்டித்து இன்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் கடந்த 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார் கவிதா: ‘ஜெய் தெலங்கானா’ என முழக்கம்! https://ift.tt/qCFPzoJ

படம்
புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளில் பாரத் ராஷ்ட்ர சமிதி மூத்த தலைவர் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து அவர் திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார். சிறையிலிருந்து வெளியே வந்த அவரை பாரத் ராஷ்ட்ர சமிதி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். வெளியே வரும்போது அவர் தனது கையை உயர்த்தி ‘ஜெய் தெலங்கானா’ என முழக்கமிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘யுபிஎஸ்’ ஓய்வூதியம் ஏற்பு: முதல் மாநிலமாக மகாராஷ்டிரா அறிவிப்பு https://ift.tt/CvtFH31

படம்
புதுடெல்லி : ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (யுபிஎஸ்) மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்புகள் வலியுறுத்திய சில மணி நேரங்களுக்குள், நாட்டிலேயே முதல் மாநிலமாக இத்திட்டத்தை ஏற்பதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு மற்றும் அதற்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த 24-ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, பணவீக்கத்தை சரி செய்தல் மற்றும் பிற சலுகைகளுடன், கடைசி 12 மாத சராசரி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு குறையாமல் மத்திய அரசில் பணிபுரிந்தோருக்கு இத்திட்டம் மூலம் குறைந்தபட்சம் ரூ.10,000 ஓய்வூதியமாக கிடைக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரஷ்யா தாக்குதலால் இருளில் மூழ்கியது உக்ரைன்: இரு நாடுகள் இடையே மீண்டும் போர் தீவிரம்

படம்
மாஸ்கோ: ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. உக்ரைனின் மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நேற்று மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது. இதனால், உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரி முதல் போர் நடந்து வருகிறது. கடந்த 6-ம் தேதி ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் 1,263 சதுர கி.மீ. பரப்பளவை உக்ரைன் ராணுவம் கைப்பற்றியது. அப்போதுமுதல் இரு நாடுகள் இடையே போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி திறந்து வைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை முற்றிலும் சேதம் @ மகாராஷ்டிரா https://ift.tt/QkoA8wD

படம்
மகராஷ்டிரா: மகராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்தாண்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி , கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி, கடற்படை தினத்தை ஒட்டி மகராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜியின் சிலையைத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். இந்நிலையில், சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. இருப்பினும் சிலை இடிந்து விழுந்ததற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை மன்னிக்க முடியாது: பாலியல் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் https://ift.tt/KzX0QWV

படம்
ஜல்கான்: மகாராஷ்டிராவில் நடைபெற்ற ‘லட்சாதிபதி சகோதரிகள்’ நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு ரூ.2,500 கோடி சுழல் நிதி மற்றும் ரூ.5,000 கோடி வங்கிக் கடனை பிரதமர் மோடி நேற்று விடுவித்தார். ‘‘பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாதவை. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அவர் உறுதிபட தெரிவித்தார். கடந்த ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 90.86 லட்சம் சுயஉதவி குழுக்கள் செயல்படுகின்றன. இதில் 10.05 கோடி பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுகின்றனர். இவர்கள் ‘லட்சாதிபதி சகோதரிகள்’ என அழைக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கையை 3 கோடியாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராக்கெட்களை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல்: இஸ்ரேலில் அவசரநிலை அறிவிப்பு

படம்
டெல் அவிவ்: இஸ்ரேலின் வடக்கு, மத்திய பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு 320 ஏவுகணைகளை சரமாரியாக வீசியது. 20-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் பகுதிகள் மீது குண்டுகளும் வீசப்பட்டன. இதையடுத்து, இஸ்ரேலில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. லெபனான் நாட்டின் பிரதான அரசியல்கட்சியாகவும், துணை ராணுவ படையாகவும் ஹிஸ்புல்லா செயல்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஹிஸ்புல்லாவை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. ஈரானின் கைப்பாவையாக செயல்படும் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹிஸ்புல்லா தாக்குதலும் பதிலடியும்: இஸ்ரேல் 48 மணி நேர அவசர நிலை பிரகடனம் - முழு விவரம்

படம்
ஜெருசலேம்: இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இது உலக அளவில் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. இந்நிலையில், லெபனான் மீதான தாக்குதல் தங்கள் தேசத்தை தற்காத்துக் கொள்வதற்கான உரிமை என இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் ராணுவத் தளங்களைக் குறிவைத்து சுமார் 300-க்கும் மேற்பட்ட கணைகளை ஏவி தாக்குதல் மேற்கொண்டதாக ஹிஸ்புல்லா அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இஸ்ரேல் தரப்பிலும் லெபனான் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேக்கடிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு https://ift.tt/mZbeHwU

படம்
குமுளி: தொடர் விடுமுறை காரணமாக தேக்கடிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தமிழகத்தின் தேனி மாவட்ட எல்லையில் கேரளத்தின் குமுளி அருகே தேக்கடி அமைந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக பகுதியான இங்கு படகு சவாரி, பசுமை நடை, மலையேற்றம், யானை சவாரி உள்ளிட்ட சுற்றுலா வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக படகு சவாரி மேற்கொள்ள ஏராளமான சுற்றுலா பயணிகள் தேக்கடி வருகின்றனர். தினமும் காலை 7.30, 9.30, 11.15, 1.45, பிற்பகல் 3.30 மணிக்கு படகுகள் இயக்கப்படுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உக்ரைனில் போரில் உயிர்நீத்த குழந்தைகள் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி

படம்
கீவ்: உக்ரைன் சென்றிருந்த பிரதமர் மோடி நேற்று முன்தினம் கீவ் நகரில் போரில் உயிர்நீத்த குழந்தைகள் நினைவிடத்தில் அந்நாட்டு அதிபருடன் இணைந்து அஞ்சலி செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க பயணமாக நேற்று முன்தினம் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டுக்குச் சென்றார். போலந்து நாட்டிலிருந்து ரயில் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றடைந்த மோடி, அங்குள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஊழியர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது” - பிரதமர் மோடி https://ift.tt/rfR98dn

படம்
புதுடெல்லி: ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்த அவரது தலைமையிலான அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது. “தேசத்தின் முன்னேற்றத்துக்காக கடுமையாக உழைக்கும் அரசு ஊழியர்களை எண்ணி பெருமை கொள்கிறேன். அவர்களது கண்ணியத்தையும், நிதி பாதுகாப்பையும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் உறுதி செய்கிறது. அவர்களது நலன் சார்ந்தும், எதிர்காலம் சார்ந்தும் இந்த அரசு கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டை இது பிரதிபலிக்கிறது” என பிரதமர் மோடி தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“2025-ல் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார்” - நாசா அறிவிப்பு

படம்
வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் உள்ள சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரியில் பூமிக்கு திரும்புவார் என நாசா அறிவித்துள்ளது. சனிக்கிழமை அன்று இந்த தகவலை நாசா தெரிவித்தது. பத்திரிகையாளர் சந்திப்பில் நாசாவின் அட்மினிஸ்ட்ரேட்டர் பில் நெல்சன் தெரிவித்தது. “விண்வெளிப் பயணம் மிகவும் ஆபத்தானது. அது பாதுகாப்பான விண்கலனாக இருந்தாலும் ஆபத்து என்பது உள்ளது. அதுவும் சோதனை அடிப்படையிலான பயணம் பாதுகாப்பானது அல்ல. அதனால் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்க வைப்பது என முடிவு செய்துள்ளோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாதம் ரூ.6.16 லட்சம் ஜீவனாம்சம் கோரி வழக்கு: ஒரு மாதத்துக்கு இவ்வளவு செலவா? - பெண்ணின் வழக்கறிஞருக்கு அறிவுரை கூறிய நீதிபதி https://ift.tt/u2mVScL

படம்
பெங்களூரு: டெல்லியை சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் தீபிகா நாராயண் பரத்வாஜ் சில தினங்களுக்கு முன்பு தனது எக்ஸ் பக்கத்தில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் காணொலி ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் விவாகரத்து பெற்ற மனைவி ஒருவர் தனது கணவரிடம் ஜீவனாம்சம் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘‘தனது முழங்கால் வலி சிகிச்சைக்கு ரூ.4-5 லட்சம், ஆடைகள் வாங்க ரூ.15 ஆயிரமும், வீட்டின் உணவு செலவுக்காக ரூ.60 ஆயிரமும், வெளியே சென்று சாப்பிட ரூ.20 ஆயிரமும் முன்னாள் கணவர் மாதம்தோறும் வழங்க வேண்டும்'' என்று கோரினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பட்டமளிப்பு விழாவில் பாரம்பரிய உடை அணிய மத்திய அரசு அறிவுரை https://ift.tt/nZdjBN1

படம்
புதுடெல்லி: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவ கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: பட்டமளிப்பு விழாக்களில் பாரம்பரிய உடைகளை அணிவது குறித்தும், காலனி ஆதிக்கத்தின் நினைவுகளை அழிப்பது தொடர்பாகவும் பிரதமர் மோடி 5 அறிவுரைகளை கூறியிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரஷ்யா உடனான போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் உக்ரைன் அதிபருடன் மோடி முக்கிய ஆலோசனை

படம்
கீவ்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். அப்போது உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரைநிறுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர். கடந்த 2022 பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இந்த போரில் உக்ரைனின் 25 சதவீத பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி, தன்னுடன் இணைத்துக் கொண்டது. போரை நிறுத்த சீனா, துருக்கி, பிரேசில், நார்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகள்தீவிர முயற்சி எடுத்தும், இதுவரைசுமுக தீர்வை எட்ட முடியவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்த இந்திய ராணுவத்தின் மினி ட்ரோன் https://ift.tt/BbV5CtS

படம்
பூஞ்ச்: இந்திய ராணுவத்தின் மினி ட்ரோன் (யூஏவி) வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் விழுந்தது. அதனை இந்தியா வசம் திரும்ப தருமாறு பாகிஸ்தானுக்கு ஹாட்லைன் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று காலை 9.25 மணி அளவில் அந்த ட்ரோன் இந்திய எல்லையில் வழக்கமான பயிற்சி மிஷனில் இருந்துள்ளது. இந்திய எல்லைக்குள் இயக்கப்பட்ட அந்த ட்ரோன், தொழில்நுட்பக் கோளாறால் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து அந்த ட்ரோன் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அறிவியல் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு https://ift.tt/acsN3v2

படம்
புதுடெல்லி: அறிவியல் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு, ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று வழங்கினார். ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினத்தில் ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுகள் வழங்கப்படும் என மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்பில் சாதனை படைப்பவர்களை அங்கீகரிக்கும் வகையில், விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் , விஞ்ஞான் யுவ-சாந்திஸ்வரூப் பட்னாகர் மற்றும் விஞ்ஞான் குழு ஆகிய 4 பெயர்களில் இந்த விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மழைகாலத்தில் காவிரியில் கர்நாடகா திறந்த உபரி நீரை கணக்கில் கொள்ள கூடாது: மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் https://ift.tt/6ELjRNq

படம்
புதுடெல்லி: கர்நாடக அரசு மழை காலங்களில் திறந்துவிட்ட உபரி நீரை கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது என டெல்லியில் நடந்த‌ காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 33-வ‌து கூட்டம் டெல்லியில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சார்பில்நீர்வளத் துறை செயலர் மணிவாசன், காவிரிதொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெண் மருத்துவர் கொலையில் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்: நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் https://ift.tt/PrBp75e

படம்
புதுடெல்லி: கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டதால், டெல்லி, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களிலும் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மேற்கு வங்கத்தில் மட்டும் மருத்துவர்கள் வாபஸ் பெற மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர்மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல்வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘ஹரியாணாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்” - முதல்வர் நயாப் சிங் சைனி நம்பிக்கை https://ift.tt/hpbVgG4

படம்
குருகிராம்: ஹரியாணா மாநிலத்தில் மூன்றாவது முறையாக பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் வரும் அக்டோபர் 1-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. “தேர்தல் தொடர்பாக நாங்கள் தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். மத்தியில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளார். அதன் பின்னர் ஹரியாணா மக்களின் ஆதரவு எங்களுக்கு அமோகமாக உள்ளது. அந்த வகையில் மாநிலத்தில் மூன்றாவது முறையாக பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்” என நயாப் சிங் சைனி தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஐரோப்பிய நாடுகளில் 3 நாள் அரசுமுறை பயணம்: போலந்தில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

படம்
வார்சா: அரசுமுறை பயணமாக போலந்து சென்றுள்ள பிரதமர் மோடிக்கு தலைநகர் வார்சாவில் நேற்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளான போலந்து மற்றும் உக்ரைனுக்கு 3 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி நேற்று புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் போலந்து சென்றடைந்த அவருக்கு தலைநகர் வார்சா விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. போலந்து நாட்டின் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜார்க்கண்ட்டில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் முன்னாள் முதல்வர் சம்பய் சோரன் புதிய கட்சி தொடங்க திட்டம் https://ift.tt/Jh3KpDt

படம்
ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்குள் அவமானத்தை சந்தித்ததால், தனி கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் சம்பய் சோரன் அறிவித்துள்ளார். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நிதி மோசடி வழக்கில் கைதானதால், கடந்த பிப்ரவரி 2-ம் தேதி முதல்வராக சம்பய் சோரன் பதவியேற்றார். சிறையில் இருந்து ஹேமந்த் சோரன் கடந்த ஜூலை மாதம் வெளியே வந்ததும், முதல்வர் பதவியை சம்பய் சோரன் ராஜினாமா செய்தார். ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்புவார்’ - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை https://ift.tt/IiFf2v8

படம்
சென்னை: சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் உள்ள சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு பத்திரமாக திரும்புவார் இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்தது. “சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்ப பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் மிஷன் அல்லது ரஷ்யாவின் Soyuz கேப்ஸ்யூல் போன்றவற்றை பயன்படுத்தி அவர் பூமிக்கு திரும்புவதற்கான சாத்தியங்கள் உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருமணம் ஆகாதவர்களும் இனி தத்தெடுக்கலாம்: பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல் https://ift.tt/CF4jYl1

படம்
புதுடெல்லி: திருமணம் ஆகாதோர், இணையரை இழந்தவர், விவாகரத்து செய்தவர், சட்டப்படி பிரிந்து வாழ்பவர் உள்ளிட்டோரும் இனி குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் புதிய வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. முன்னதாக ‘2016 மாதிரி குழந்தை வளர்ப்பு’ வழிகாட்டுதலின்படி திருமணம் முடித்த குழந்தையில்லா தம்பதிகள் மட்டுமே தத்தெடுக்க முடியும். இந்த விதிகளை திருத்தி திருமணம் ஆகாத தனிநபர்களும் தத்தெடுக்க புதிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 35 வயதிலிருந்து 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆதரவற்ற இல்லங்களில் வளர்ந்து வரும் 6 வயது நிரம்பிய குழந்தைகளை தத்தெடுக்கலாம். முதல் 2 ஆண்டுகள் குழந்தை பராமரிப்புக்கு பிறகு தத்தெடுத்து வளர்க்க அனுமதி அளிக்கப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உயர் அதிகாரிகள் நேரடி நியமனம் தொடர்பான விளம்பரத்தை திரும்ப பெற யுபிஎஸ்சி-க்கு உத்தரவு https://ift.tt/pIHgVOt

படம்
புதுடெல்லி: கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக, உயர் அதிகாரிகள் நேரடி நியமனம் தொடர்பான விளம்பரத்தை திரும்ப பெறுமாறு யுபிஎஸ்சி-க்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுவாக குடிமைப் பணி (ஐஏஎஸ்) அதிகாரிகளில் அனுபவம் வாய்ந்தவர்களை அரசுத் துறைகளின் செயலர்கள், இணை செயலர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளில் நியமிப்பது வழக்கமாக உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ம.பி.யில் சிபிஐ சோதனை: நிலக்கரி சுரங்க அதிகாரிகள் வீட்டில் ரூ.3.8 கோடி பறிமுதல் https://ift.tt/J6wGj5y

படம்
போபால்: மத்திய பிரதேசத்தில் நிலக்கரி சுரங்க நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ நேற்று முன்தினம் சோதனை நடத்தியது. இதில் ரூ.3.8 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய பிரதேசத்தில் ‘நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்' (என்சிஎல்) என்ற பெயரில் நிலக்கரி சுரங்க நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ம.பி.யின் சிங்ராலி மாவட்டத்தில் இந்தநிறுவனத்தின் தலைவர் மற்றும்மேலாண் இயக்குநர், முதன்மை விஜிலென்ஸ் அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ நேற்று முன்தினம் சோதனை நடத்தியது. மொத்தம் 25 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் ரூ.3.8கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கொல்கத்தா பெண் மருத்துவர் உடலில் 25 இடங்களில் காயம், கழுத்தை நெரித்ததில் மூச்சு திணறி உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் https://ift.tt/EazlmFh

படம்
கொல்கத்தா: கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. கையால் கழுத்தை நெரித்ததில் மூச்சு திணறி அவர் உயிரிழந்ததாகவும் உடலின் உள்ளே 9 இடங்கள், வெளியே 16 இடங்களில் காயம் இருந்ததாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் மறுநாள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மா.கம்யூன்ஸிட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி https://ift.tt/NwgUnpS

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெண் மருத்துவர் கொலை குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை https://ift.tt/lZYGdWf

படம்
புதுடெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதி கேட்டு அரசு, தனியார் மருத்துவர்கள் அன்றாட பணிகளை புறக்கணித்து தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு போராடிய கால்பந்து ரசிகர்கள் மீது கொல்கத்தா போலீஸ் தடியடி https://ift.tt/ufOIDLb

படம்
கொல்கத்தா: கொல்கத்தாவில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு ஞாயிற்றுக்கிழமை அன்று மோஹன் பகான் மற்றும் ஈஸ்ட் பெங்கால் கால்பந்து கிளப் அணிகளின் ரசிகர்கள் போராட்டம் மேற்கொண்டனர். அப்போது போலீஸார் அவர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தினர். கடந்த ஆக.9-ம் தேதி 31 வயதான முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம் https://ift.tt/wGIh7Zi

படம்
புதுடெல்லி: கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை கண்டித்தும், உடனடியாக நீதி வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும் நாடு முழுவதும் நேற்று மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதனால் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘போராட்டம் இன்னும் ஓயவில்லை’ - வினேஷ் போகத் உறுதி https://ift.tt/FqguIbl

படம்
புதுடெல்லி: டெல்லி திரும்பிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், தனது போராட்டம் இன்னும் ஓயவில்லை என அவர் தெரிவித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை அதிகரித்திருப்பதாக கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு நொறுங்கியது. அவர், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததன் மூலம் குறைந்த பட்சம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட் பயணம் வெற்றி: 2 செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தம் https://ift.tt/dEJN04v

படம்
சென்னை: எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட் மூலம்இஓஎஸ்-08 உள்ளிட்ட 2 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ வடிவமைத்த அதிநவீன இஓஎஸ்-08செயற்கைக் கோள் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் ‘எஸ்ஆர்-டெமோசாட்’ நானோ செயற்கைக் கோள் ஆகிய இரண்டையும் சிறிய ரக எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு: செப். 18-ல் தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது https://ift.tt/gjQVO81

படம்
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 என 3 கட்டமாக அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஹரியானாவில் ஒரே கட்டமாக அக்டோபர் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2 மாநிலங்களிலும் அக்டோபர் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதுதொடர்பாக டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும் 2024 மக்களவை தேர்தல் அமைதியாக நடத்தப்பட்டது. பெண்கள், இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களித்தனர். இத்தேர்தலில் பல வரலாற்று சாதனைகள் படைக்கப்பட்டன. இந்தியாவின் ஜனநாயகம் உலகம் முழுவதும் பறைசாற்றப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதச்சார்பற்ற சிவில் சட்டங்கள் அவசியம்: செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி பிரதமர் மோடி உரை https://ift.tt/YR6cwWn

படம்
புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது மதச்சார்பற்ற சிவில் சட்டங்கள் அவசியம் என்று அவர் உறுதிபட தெரிவித்தார். நாட்டின் 78-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தொடர்ச்சியாக 11-வது முறை தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆகஸ்ட் 17-ல் நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தம்: இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு https://ift.tt/u5D4V2a

படம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 17 அன்று 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “கொல்கத்தா ஆர்.ஜி. மருத்துவ கல்லூரியில் நடந்த கொடூர குற்றம் மற்றும் சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் ஆகஸ்ட் 17 அன்று காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

116 நாடுகளில் பரவும் குரங்கு அம்மை: பொது சுகாதார அவசரநிலையாக அறிவிப்பு

படம்
புதுடெல்லி: கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியதையடுத்து உலக சுகாதார அமைப்பின் (WHO) அவசரக் குழுக் கூட்டம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

78-வது சுதந்திர தின விழா களைகட்டியது: நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு https://ift.tt/2L9OwVs

படம்
புதுடெல்லி / சென்னை: நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னை புனிதஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலினும் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகின்றனர். நாடு முழுவதும் முக்கிய நகரங்கள், எல்லை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் இளைஞர்கள், பழங்குடியின சமூகத்தினர், விவசாயிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என 6,000-க்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவை துச்சமாக பார்க்கிறது ‘ஹிண்டன்பர்க்’ - உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே விமர்சனம் https://ift.tt/Gx6eOEY

படம்
புதுடெல்லி: அதானி குழுமம் தொடர்புடைய நிறுவனங்களில் பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியத்தின் (செபி)தலைவர் மாதபி புரி புச் பங்குகளைக் கொண்டிருந்தார் என்றும்இதன் காரணமாக அதானி நிறுவனங்கள் மீது செபி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது. இதுகுறித்து உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் அதானியின் முன்னாள் வழக்கறிஞருமான ஹரிஷ் சால்வே, கூறும்போது, ‘‘ஹிண்டன்பர்க் வெளியிடும் அறிக்கைகளை மற்ற நாடுகள் மதிப்பதேயில்லை. ஆனால், இந்தியாவில்அரசியல் கட்சியினர் ஹிண்டன்பர்க் அறிக்கையை தீவிரமாக எடுத்துக்கொண்டு விவாதிப்பது வெட்கக்கேடானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேற்கு வங்க பெண் மருத்துவர் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/IZlmLbj

படம்
கொல்கத்தா: பெண் மருத்துவர் கொலை வழக்கில் மேற்கு வங்க போலீஸாரின் விசாரணையில் திருப்தி இல்லை. எனவே வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பு பயின்ற பெண் மருத்துவர் (31) கடந்த 8-ம் தேதி இரவுபணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையின் கருத்தரங்க கூடத்தில் தூங்கிய அவர், கடந்த 9-ம் தேதி காலையில் சடலமாக மீட்கப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்