உதய்பூரில் பாலேஸ்வரி மாதாவுக்கு ரூ.51 லட்சத்தில் அலங்காரம் https://ift.tt/Lp7u1KS
உதய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரிலுள்ள பாலேஸ்வரி மாதா தேவி சிலைக்கு பக்தர்கள் ரூ.51 லட்சம் மதிப்புள்ள கரன்சி நோட்டுகளால் அலங்காரம் செய்து உள்ளனர். புவானா பகுதியில் பிரசித்தி பெற்ற பாலேஸ்வரி மாதா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்போது நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி பாலேஸ்வரி மாதாவுக்கு ரூ.51,51,551 மதிப்புடைய கரன்சி நோட்டுகளால் நேற்று முன்தினம் பக்தர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50 நோட்டுகளால் இந்த அலங்காரம் நடைபெற்றதாக கோயிலை நிர்வகிக்கும் பாலேஸ்வர் யுவ மண்டல் கமிட்டி தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்