இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் 75 லட்சத்தை நெருங்குகின்றனர்: புதிதாக 46 ஆயிரம் பேருக்கு தொற்று https://ift.tt/3kNgpGl

படம்
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 75 லட்சத்தை நெருங்குகின்றது. ஒட்டுமொத்த பாதிப்பு 82 லட்சத்தை தொடவுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் புதிதாக 46 ஆயிரத்து 963 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 81 லட்சத்து 84 ஆயிரத்து 82 ஆக அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஞ்சாப்பில் தயாராகிறது சுற்றுச்சூழலுக்கு உகந்த அகல் விளக்குகள்:  மாட்டு சாணத்தில்  புது முயற்சி https://ift.tt/2TJLxui

படம்
தீபாவளி வருவதை முன்னிட்டு பஞ்சாப் மாநிலத்தில் புது முயற்சியாக சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மாட்டுச் சாணத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி கொண்டாட்டம் இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் மொஹாலி மாவட்டத்தில் மாடுகளை வளர்க்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களின் நலனுக்கான கொள்கைகளை வகுத்தாலும் செயல்படுத்துவதில் கவனம் தேவை: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல் https://ift.tt/3816ZDw

படம்
பொதுமக்களின் தேவைகளை சிறப்பான முறையில் பூர்த்தி செய்ய செயலாக்கம் மற்றும் விநியோக அமைப்புக்கு புத்தாக்கம் அளித்து முறைப்படுத்துவது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார். காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்ற இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் 66-வது வருடாந்திர பொதுக்குழுவுக்கு தலைமை தாங்கிய நாயுடு, மக்களின் நலனுக்கான கொள்கைகளை அரசு வகுத்தாலும், அவற்றை சிறப்பான முறையில் செயல்படுத்துவது அவசியம் என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருமணத்துக்காக மதம் மாறுவது செல்லாது: அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/31XS2y3

படம்
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு இந்துவை திருமணம் செய்து கொண்டார். இதற்கு அந்தப் பெண்ணின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்தப் பெண் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “எங்கள் திருமண வாழ்க்கையில், என் தந்தையும் குடும்பத்தினரும் குறுக்கிடுகின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி, திருமணத்துக்காக மதம் மாறுவது செல்லாது என கடந்த செப்டம்பர் 23-ம் தேதி உத்தரவிட்டார். அந்த உத்தரவில், “மணமகள் கடந்த ஜூன் 29-ம் தேதி மதம் மாறியுள்ளார். அடுத்த ஒரு மாதத்தில், ஜூலை 31-ம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதன்மூலம் திருமணத்துக்காகவே அந்தப் பெண் மதம் மாறியது தெளிவாகத் தெரிகிறது. எனவே, இந்த மனு நிராகரிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திரைப்படத்தில் நடிக்க கர்நாடக அரசு ஊழியர்களுக்கு தடை https://ift.tt/380VQTm

படம்
கர்நாடக அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள் 2020 என்ற புதிய‌ வரைவை அம்மாநில அரசு உருவாக்கியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேர்தலில் வாக்குச் சாவடிகள் அமைப்பது போல் ஒவ்வொரு பள்ளியிலும் கரோனா தடுப்பூசி முகாம்: மாநிலங்களில் செயலாக்க குழுக்களை அமைக்க உத்தரவு https://ift.tt/3ecnCgG

படம்
தேர்தல் நடைமுறையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கரோனா தடுப்பூசி போட மத்திய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக அனைத்து மாநிலங்களிலும், மாநில, மாவட்ட அளவில் செயலாக்க குழுக்களை உருவாக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் 150 கரோனா தடுப்பூசிகள் பரிசோதனை நிலையில் உள்ளன. இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2கரோனா தடுப்பூசிகளும் பிரிட்டன், ரஷ்யாவின் தலா ஒரு கரோனா தடுப்பூசியும் 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘அலாவுதீனின் அற்புத விளக்கு’ வாங்க உத்தரபிரதேசத்தில் ரூ.2.5 கோடிக்கு விலை பேசி ஏமாந்த மருத்துவர்: மோசடியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீஸார் https://ift.tt/35LpuZK

படம்
அரபு நாட்டு கதைகளில் வரும், ‘அலாவுதீனின் அற்புத விளக்கு’ என்று கூறி ரூ.2.5 கோடிக்கு விலை பேசி உத்தர பிரதேசத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதை நம்பி ஏமாந்த மருத்துவர் அளித்த புகாரின் பேரில் இருவர் மீரட் நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர். நவீன காலத்தில் நன்கு படித்தவர்களும் ஏமாறும் காலம் தொடர்கிறது. இதில் ஒருவராக உ.பி.யின் மீரட் புறநகரில் வசிக்கும் யுனானி மருத்துவர் லேய்க் அகமது கான் இருந்துள்ளார். இவரை, தம் நோய்வாய்பட்ட தாய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டி அனீஸ் கான் எனும் இளைஞர் முதல் முறையாக சந்தித்துள்ளார். இதற்காக அனீஸின்வீட்டுக்கு அடிக்கடி சென்ற மருத்துவருக்கு லேய்க்குடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டது.தனது வீட்டில் அனீஸ் வைத்திருந்த முகலாயர் காலத்து பல்வேறு பழம் பொருட்களை பார்த்த மருத்துவர் லேய்க் அகமது கான், அவற்றில் தனது விருப்பத்தையும் காட்டியுள்ளார். இதை பயன்படுத்திய அனீஸ்,தனது நண்பர் இக்ராமுத்தீனுடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, ‘அலாவுதீனின் அற்புத விளக்கு இருக்கிறது. அதை தேய்த்து பல கோடி சம்பாதிக்கலாம்’ என்று கூறிஆசை காட்டியு...

பிரதமர் மோடியின் ‘பயோபிக்’ திரைப்படத்தை மீண்டும் வெளியிடுவது தேர்தல் விதிமுறைமீறலில் வராது: தேர்தல் ஆணையம் விளக்கம் https://ift.tt/3kMeSA5

படம்
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கம் திரைப்படத்தை மீண்டும் ரீலீஸ் செய்வது எந்தவிதத்திலும் தேர்தல் நடத்தை விதிமுறை மீறலில் வராது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. பிஹார் மாநிலத்தில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. மத்தியப்பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கும் தேர்தல் வரும் 3-ம் தேதி நடக்கிறது. இதில் பிஹார் மாநிலத்தில் முதல்கட்டமாக 71 தொகுதிகளுக்கு கடந்த 28-ம் தேதி தேர்தல் நடந்துவிட்டது. அடுத்தஇருகட்டத் தேர்தல் வரும் 3ம் தேதி 7-ம் தேதிகளில் நடைபெறுகிறது, 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இங்கிலாந்தில் மீண்டும் லாக்டவுன்: கரோனா தொற்று 10 லட்சத்தைக் கடந்ததால் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அறிவிப்பு

படம்
இங்கிலாந்தில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததையடுத்து, மீண்டும் ஊரடங்கை பிரதமர் போரிஸ் ஜான்ஸன் நேற்று நள்ளிரவு அறிவித்தார். இந்த ஊரடங்கு உத்தரவு நவம்பர் 5-ம் தேதிமுதல் டிசம்பர் 2-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வானில் பறக்கும் ஸ்போர்ட்ஸ் கார்: ஸ்லோவாகியா நிறுவனம் சாதனை

படம்
ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான ‘மேன் வித் தி கோல்டன் கன்’ என்றபடத்தில் ஒரு காட்சி வரும். அதில் வில்லன் தப்பிச் செல்வதற்காக பயன்படுத்தும் கார், திடீரென வானில் பறக்கும். திரைப்படத்தில் சாத்தியமானதை தற்போது உண்மையில் சாத்தியமாக்கி உள்ளது ஸ்லோவாகியாவைச் சேர்ந்த கிளெய்ன் விஷன் நிறுவனம். இந்நிறுவனம் வடிவமைத்துள்ள ஸ்போர்ட்ஸ் கார் ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் விமானமாக மாறி 1,500 அடி உயரம் பறந்துசாதனை புரிந்துள்ளது. இந்நிறுவனம் வடிவமைத்துள்ள ஏர் கார் எனும்ஸ்போர்ட்ஸ் கார் தொடர்ந்து 1,000 கி.மீ. தூரம் பறக்கும் திறன் கொண்டது. வான்வெளி கணக்கின்படி இது 620 மைல் ஆகும். இந்த ஸ்போர்ட்ஸ்காரில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 1.61 இன்ஜின் உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி.யில் லவ் ஜிகாத்தைத் தடுக்க கடும் சட்டம் கொண்டுவரப்படும்: முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை https://ift.tt/2TFcfUP

படம்
உத்தரப்பிரதேசத்தில் எங்கள் சகோதரிகளுடன் வாழ்க்கையில் விளையாடுபவர்களுக்கு எதிராகவும், லவ் ஜிகாத்தைத் தடுக்கவும் கடும் சட்டம் கொண்டுவரப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். லக்னோ அருகே ஜூனாபூரில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று முதல்வர் ஆதித்யநாத் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் “ மாநிலத்தில் இந்துப் பெண்களைப் பாதுகாக்கவும், லவ் ஜிகாத்துக்கு எதிராகவும் கடும் சட்டம் இயற்றப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் பெற பக்தர்களிடையே தள்ளுமுள்ளு https://ift.tt/37VBs5X

படம்
இலவச தரிசனம் மூலம் திருப்பதி ஏழுமலை யானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் டோக்கன் வாங்குவதில் நேற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திருப்பதி திருமலை கோயிலில் இலவச டோக்கன் மூலம் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, கடந்த 5 நாட் களாக திருப்பதி அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் தினமும் 3 ஆயிரம் இலவச தரிசன டோக்கன் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. இதைப் பெறுவதற்காக முதல்நாள் இரவு முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தற்கொலை செய்த இளைஞரின் உடலை வாங்க மறுத்து சிவகங்கை அரசு மருத்துவமனை முற்றுகை https://ift.tt/2HHXtus

படம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடலை வாங்க மறுத்து சிவகங்கை அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மானாமதுரை அருகே கீழப்பிடாவூரைச் சேர்ந்த ரமேஷ் (24) கடந்த அக்.27-ம் தேதி விஷm குடித்தார். ஆபத்தான நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெண் வேட்பாளரை அவதூறாகப் பேசியதற்காக கமல்நாத்தை மக்களே மன்னிப்பு கேட்கவைப்பார்கள்: பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா  https://ift.tt/34HTo1J

படம்
பெண் வேட்பாளரை அவதூறாகப் பேசியதற்காக மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தை மக்களே மன்னிப்பு கேட்கவைப்பார்கள் என்று பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் டப்ரா சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் இமர்தி தேவி போட்டியிடுகிறார். இத்தொகுதியில நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசிய கமல்நாத், பாஜக வேட்பாளர் இமர்தி தேவியைத் தரக்குறைவாகப் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதற்குப் பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். தேசிய மகளிர் ஆணையமும் கமல்நாத்துக்குக் கண்டனம் தெரிவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா தொற்று: இறப்பு விகிதம் 1.5 சதவீதத்துக்கு கீழே குறைந்தது https://ift.tt/2GekLqQ

படம்
இந்தியாவில் கரோனா தொற்று காரணமாக உயிரிழப்போரின் விகிதம் 1.5 சதவீதத்துக்கு கீழே குறைந்துள்ளது. உலகளாவிய பெருந்தொற்றுக்கு எதிரான கூட்டு முயற்சியின் விளைவாக இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது. கரோனா தொற்று காரணமாக உயிரிழப்போரின் விகிதம் 1.5 சதவீதத்துக்கு கீழே சரிந்துள்ளது. தொடர்ந்த சரிவின் காரணமாக இன்று உயிரிழந்தோரின் விகிதம் 1.49 சதவீதம் ஆக இருக்கிறது. இந்தியாவில் 10 லட்சம் மக்கள் தொகைக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை என்பது 88 பேர் ஆக உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சபர்மதி ஆற்றுப்படுகையில் கடல்-விமான சேவை தொடக்கம் https://ift.tt/2HHnLNn

படம்
அகமதாபாத்தின் கேவடியாவில் இருந்து சபர்மதி ஆற்றுப்படுகை வரையிலான கடல்-விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. கேவடியாவில் உள்ள நீர் விமான நிலையம் மற்றும் கேவடியாவில் உள்ள ஒற்றுமை சிலையையும் அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றுப் படுகையையும் இணைக்கும் வகையிலான கடல்-விமான சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டை தற்சார்புள்ளதாக ஆக்கிட உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் https://ift.tt/3mKOnMl

படம்
தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு ஊக்கம் தருவது என்ற மந்திரத்தைப் பின்பற்றுமாறு சிவில் சர்வீஸ் அதிகாரிகளை பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்திய சிவில் சர்வீஸ் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சியில் இருக்கும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். குஜராத் மாநிலம் கேவடியாவில் இருந்து முசோரியில் இருக்கும் லால் பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள பயிற்சி அதிகாரிகளுடன் காணொலி மூலம் அவர் உரையாடினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா வைரஸ்; முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவதற்கான சட்டம்: ராஜஸ்தானில் அறிமுகம் https://ift.tt/37YBnOI

படம்
முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவதற்கான ஒரு சட்டத்திருத்த மசோதாவை ராஜஸ்தான் அரசு சட்டப்பேரவையில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஓரளவுக்குக் குறைந்து வந்தாலும் அதன் பாதிப்பு கணிசமான அளவில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இன்னும் சில மாதங்கள் இதன் தாக்கம் இருக்கும் என்பதால் ராஜஸ்தான் அரசு முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய வியட்நாமில் புயலுக்கு 27 பேர் பலி

படம்
மத்திய வியட்நாமில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இதுவரை 27 பேர் பலியாகினர். பலர் மாயமாகி உள்ளனர். இதுகுறித்து வியட்நாம் தேசிய பேரிடர் மேலாண்மை தரப்பில், “வியட்நாமில் மோலாவே புயல் தாக்கியதில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மத்திய வியட்நாமில் மட்டும் 27 பேர் பலியாகினர். 50 பேர் மாயமாகினர். 67 பேர் காயமடைந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாங்கிய நாள் முதல் கோளாறு; ரூ.2.4 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ் கார் எரிப்பு: ரஷ்ய உரிமையாளர் கோபம்

படம்
ரஷ்யாவைச் சேர்ந்த ‘யூ டியூப்’ பயனாளர் மிகைல் லிட்வின் என்பவர், மெர்சிடஸ்-ஏஎம்ஜி ஜிடி 63எஸ் மாடல் காரை புதிதாக வாங்கினார். இதன் விலை ரூ.2.4 கோடி. புதிய காரை வாங்கிய நாள் முதல் அடிக்கடி காரில் கோளாறு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. அதனால், அதிகாரப்பூர்வ டீலரிடம் காரை சரி செய்வதற்கு பல முறை அனுப்பி வைத்துள்ளார். கோளாறு ஏற்பட்டதும், சர்வீஸ் மையத்துக்கு அனுப்புவதும், அங்கிருந்து வந்த சில நாட்களில் கார் மீண்டும் கோளாறு ஏற்படுவதுமாக இருந்துள்ளது. இதுபோல் 5 முறை நடந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜெர்மனியில் கரோனா பாதிப்பு 5 லட்சத்தைக் கடந்தது

படம்
ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 19,059 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து ராபர்ட் கோட்ச் ஆராய்ச்சி நிறுவனம் கூறும்போது, “ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 19,059 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,18,753 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை 10,452 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 3 மசோதாக்கள் அறிமுகம் https://ift.tt/3oLMLn5

படம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக, ராஜஸ்தான் அரசும் 3 மசோதாக்களை சட்டப்பேரவையில் இன்று அறிமுகம் செய்தது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள், விவசாய அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் எனும் வாக்குறுதி தேர்தல் நடத்தை விதிமுறை மீறலில் சேராது: தேர்தல் ஆணையம் விளக்கம் https://ift.tt/38aDkIj

படம்
பிஹாரில் கரோனா வைரஸ் தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்திருப்பது தேர்தல் நடத்தை விதிமுறை மீறலில் சேராது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. பிஹாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. முதல்கட்டத் தேர்தல் கடந்த 28-ம் தேதி 71 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துள்ளது. அடுத்த இரு கட்டங்கள் நவம்பர் 3, 7-ம் தேதிகளில் நடக்கிறது, 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

துருக்கியில் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்குதல்

படம்
துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி தாக்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. துருக்கியில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆகப் பதிவானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புல்வாமா தீவிரவாதத் தாக்குதலின் உண்மை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது: பிரதமர் மோடி தாக்கு  https://ift.tt/2THrhd0

படம்
புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கான காரணமும், உண்மையும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த நேரத்தில் சிலர் அரசியல் லாபத்துக்காக அசிங்கமான அரசியல் செய்ததை மறந்துவிட முடியாது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். பாகிஸ்தான் நாடாளுமன்றம் என்று நேரடியாகக் குறிப்பிடாமல் அண்டை நாட்டின் நாடாளுமன்றத்தில் என்று பாகிஸ்தானைக் குற்றம் சாட்டி மோடி பேசினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரசிகர்கள் வருகை இல்லை: மலேசியத் திரையரங்குகள் மூடல்

படம்
எதிர்பார்த்தபடி ரசிகர்கள் கூட்டம் வராததால் மலேசியாவில் நவம்பர் மாதம் முதல் மீண்டும் திரையரங்குகளை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்க உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. திரையரங்குகள், மால்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் பல மாதங்கள் மூடப்பட்டிருந்தன. ஒருசில நாடுகளில் மட்டும் பல கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதில் மலேசியாவும் ஒரு நாடு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

படம்
திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். அருப்புக்கோட்டையை சேர்ந்த வேல் பாண்டியன் தனது குடும்பத்தினருடன் சென்னை, வேளச்சேரியில் தனது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர், சென்னையில் இருந்து காரில் அருப்புக்கோட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் வந்த கார், திண்டிவனம் அடுத்த கன்னிகாபுரம் அருகே இன்று (அக். 31) அதிகாலை 5 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் கரோனா பாதிப்பு 81 லட்சத்தைக் கடந்தது: குணமடைந்தோர் 74 லட்சமாக அதிகரிப்பு: உயிரிழப்பு அதிகரிப்பு https://ift.tt/321ZJDI

படம்
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு 81 லட்சத்தைக்கடந்தது. குணமடைந்தோர் எண்ணிக்கை 74 லட்சத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் புதிதாக 48 ஆயிரத்து 648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 81 லட்சத்து 37 ஆயிரத்து 119 ஆக அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எதிரி போர்க் கப்பல்களை அழிக்கும் ஏவுகணை சோதனை முழு வெற்றி: இந்திய கப்பல் படை பலம் அதிகரிப்பு https://ift.tt/2Gexxpj

படம்
எதிரிகளின் போர்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையை, இந்திய கப்பல் படை நேற்று சோதித்து பார்த்தது. இந்த ஏவுகணை சோதனை முழு வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து இந்திய கப்பல் படை செய்தித் தொடர்பாளர் நேற்று அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ‘‘வங்கக் கடலில் இருந்து எதிரி போர்க் கப்பல்களை தாக்கி அழிக்கும் (ஏஎஸ்எம்) ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. திட்டமிட்டபடி மாதிரி கப்பலை ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்தது. இந்த சோதனை ஐஎன்எஸ் கோரா கப்பலில் இருந்து நடத்தப்பட்டது. ஏவுகணை தாக்கியதும் மாதிரி கப்பல் முற்றிலும் சேதம் அடைந்து தீப்பிடித்து எரிந்தது’’ என்று தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீனாவில் முதலீடு, பணப் பரிவர்த்தனை பற்றி பேடிஎம் நிறுவனத்திடம் தீவிர விசாரணை: நாடாளுமன்ற குழு சரமாரி கேள்வி https://ift.tt/3oJVXIz

படம்
இந்தியாவைச் சேர்ந்த இணையதள நிதி நிறுவனமான பேடிஎம் சீனாவில் மேற்கொண்ட முதலீடு, பணப் பரிவர்த்தனைகள் குறித்து நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தியது. கூகுள், அமேசான், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களாகும். ஆனால் பேடிஎம் மட்டுமே இந்திய நிறுவனமாகத் திகழ்கிறது. இந்நிறுவனம் சீனாவில் இருந்து பெறப்பட்ட முதலீடுகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் சீனாவுக்கு நிதி திரும்ப அனுப்பப்பட்டது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேடிஎம் நிறுவனத்திடம் நாடாளுமன்ற குழு கேள்வியெழுப்பியது. அத்துடன் இந்த ஆண்டு தொடக்கத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட பந்தய செயலி குறித்தும் கேள்விகள் கேட்டகப்பட்டன. இந்த பந்தய செயலியானது கூகுள் நிறுவனத்தின் விதிகளுக்குப் புறம்பானதாக இருந்ததால் அது நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நிதி பற்றாக்குறை இருந்தாலும் சலுகைகள் வழங்க அரசு தயங்கவில்லை: குற்றச்சாட்டுகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான விளக்கம் https://ift.tt/35KTk0C

படம்
கரோனா ஊரடங்கு படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வந்த போதிலும், நாட்டின் பொருளாதார நிலை இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. பெரும்பாலான துறைகள் அரசின் உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. சலுகைகள் அளிப்பதால் அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என்ற அச்சமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால் அரசு அளிக்கும் சலுகைகளையும், நிதிப் பற்றாக்குறையையும் சரியான விகிதத்தில் கையாள முடியும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அனைத்து துறைகளுடனான கலந்தாய்வு அணுகுமுறை காரணமாக அனைத்துத் தரப்பினரின் குரலுக்கும் செவிமடுக்கும் அரசாக இது செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். காணொலி மூலம் ‘பிசினஸ் லைன்’ நாளிதழுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியின் சுருக்கமான விவரம் வருமாறு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘ஆரோக்கிய சேது’ செயலி பற்றி பதில் தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு https://ift.tt/3oHEe4y

படம்
கரோனா தொற்று பரவலை கண்காணிக்க 'ஆரோக்கிய சேது' செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்தச் செயலியை உருவாக்கியது யார் என்ற ஆர்டிஐ கேள்விக்கு தங்களிடம் தகவல் இல்லை என தேசிய தகவல் மையம் (என்ஐசி) அண்மையில் கூறியது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு என்ஐசி-க்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தொழில் மற்றும் கல்வித் துறை நிபுணர்களுடன் இணைந்து மிகவும் வெளிப்படையான முறையில் ஆரோக்கிய சேது செயலியை என்ஐசி உருவாக்கியது. இந்த செயலி குறித்தோ அல்லது கரோனா பரவல் கட்டுப்பாட்டில் இதன் பங்கு குறித்தோ எவ்வித சந்தேகமும் வேண்டாம்” என விளக்கம் அளித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது ஆந்திராவில் வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு https://ift.tt/3oJVTbN

படம்
திருமண விழாவுக்கு சென்று வீடு திரும்பும்போது மலையில் இருந்து வேன் கவிழ்ந்ததில் 2 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், டாகூர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணமகனுக்கும், வெலுகுபண்டா கிராமத்தைச் சேர்ந்த மணப் பெண்ணுக்கும் நேற்று முன்தினம் இரவு, கோகவரம் தண்டிகொண்டா மலைப்பகுதியில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் திருமணம் நடந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி. அரசியலில் தீவிரம் காட்டும் பிரியங்கா: 7 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளில் பலன் தெரியும் https://ift.tt/2TH9T7Y

படம்
காங்கிரஸ் கட்சியினரின் பல ஆண்டு கால எதிர்பார்ப்புக்கு பிறகுபிரியங்கா, கடந்த ஆண்டு பிப்ரவரியில் தீவிர அரசியலில் குதித்தார். பிரியங்கா வரவால் உ.பி.யில் காங்கிரஸ் மீண்டும் புத்துயிர் பெறும் என கட்சியினர் நம்பிக்கை வைத்தனர். எனினும் அமேதியில் 3 முறை எம்.பி.யாகஇருந்த ராகுல் காந்தியே கடந்த மக்களவைத் தேர்தலில் தோற்கும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் மனம் தளராத பிரியங்கா தொடர்ந்து உ.பி. அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசைகடுமையாக விமர்சித்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

துருக்கியில் பயங்கர நிலநடுக்கத்துக்குப் பிறகு 196 முறை பின்னதிர்வில் கட்டிடங்கள் குலுங்கின

படம்
துருக்கியில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆகப் பதிவானது. ஏஜியன் கடலை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 16.5 கிலோ மீட்டர் ஆகும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்த்தார்பூர் நடைபாதை கோவிட் விதிமுறைகளின்படி விரைவில் திறக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு https://ift.tt/2TDokde

படம்
கோவிட் விதிமுறைகளின்படி கர்த்தார்பூர் நடைபாதை விரைவில் திறக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் குருநானக் ஜெயந்தி வருவதை முன்னிட்டு கர்த்தார்பூர் நடைபாதையை மீண்டும் திறக்க மத்திய வெளியறவுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா வீட்டைவிட்டு வெளியேறத் தடை? கட்சி நிர்வாகிகள் புகார் https://ift.tt/3e9Kw8b

படம்
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவை, வீட்டை விட்டு வெளியே செல்லாதவாறு அதிகாரிகள் தடுக்கிறார்கள். மிலாது நபி நாளான இன்று தொழுகைக்கு அவர் வெளியே வரமுடியவில்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சி நிர்வாகிகள் புகார் தெரிவிக்கின்றனர். ஆனால், பரூக் அப்துல்லா வீட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளாரா என்று அதிகாரிகளிடம் நிருபர்கள், ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலகம் முழுவதும் கரோனா தொற்று 4.5 கோடியை நெருங்குகிறது

படம்
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை நெருங்கியுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. “உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,42,003 ஆக உள்ளது. மேலும் கரோனாவால் 11,80,277 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 3,02,36,155 பேர் குணமடைந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சவுதி அரேபியா கரன்சியில் காஷ்மீரைத் தனித்துக் காட்டி சர்ச்சை: இந்தியா புகார் https://ift.tt/3kNeemg

படம்
சவுதி அரேபியா சமீபத்தில் வெளியிட்ட கரன்சி நோட்டில் காஷ்மீரை இந்தியாவுடன் சேராத தனித்த பகுதியாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருப்பது இந்தியாவுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்திய இறையாண்மைக்குள்ளான பகுதியை சவுதி அரேபியா, ‘ஒட்டு மொத்தமாக தவறாகச் சித்தரித்துள்ளது’ என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுரக் ஸ்ரீவஸ்தவா கண்டனம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சவுதி அரேபியாவிடம் இந்த விவகாரத்தை இந்தியா எடுத்து சென்றுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பயிர்க் கடன், டிராக்டர் கடனுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி பொருந்தாது: மத்திய நிதியமைச்சகம் விளக்கம் https://ift.tt/3e6mnj2

படம்
மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்த வட்டிக்கு வட்டி (கூட்டு வட்டி) தள்ளுபடி அறிவிப்பு பயிர்க் கடன், டிராக்டர் கடன் பெற்றவர்களுக்குப் பொருந்தாது என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. கரோனா காலத்தில் வங்கியில் கடன் பெற்றவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சலுகை அளித்திருந்தது. ஆனால், அந்தச் சலுகை காலத்தில் கடன் தவணையைச் செலுத்தாமல், ஒத்திவைப்புச் சலுகை பெற்றவர்களுக்குக் கூட்டு வட்டி விதிக்கப்பட்டது. வட்டிக்கு வட்டி விதிப்பதைத் தள்ளுபடி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத் வருகை: முதல்வர், ஆளுநர் வரவேற்பு https://ift.tt/2HMb0B2

படம்
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று காலை குஜராத்துக்கு வருகை தந்துள்ளார். குஜராத் முதல்வரும், ஆளுநரும் அவரை வரவேற்றனர். குஜராத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி குஜராத்துக்கு வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தானுக்கு வழியில்லை: ஏர் மார்ஷல் பெருமிதம் https://ift.tt/3jCV6pD

படம்
ஓய்வுப் பெற்ற விமானப் படை தலைமை மார்ஷல் பி.எஸ்.தனோவா கூறியதாவது: நானும் அபிநந்தனின் தந்தையும் நீண்ட நாள் நண்பர்கள். இருவரும் ஒன்றாக விமானப் படை பயிற்சி வகுப்புகளில் சேர்ந்தோம். கடந்த 1999-ம் ஆண்டு கார்கில் போரின் போது, என்னுடைய விமானப் படை கமாண்டர் அஹுஜா பாகிஸ்தானிடம் பிடிபட்டார். அவரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றது. அதேபோல் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டதும், அந்த நினைவு என் மனதில் ஓடியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆன்லைனில் மேலும் 3 ஆர்ஜித சேவை டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம் புதிய திட்டம் https://ift.tt/2JeN2yB

படம்
கரோனா வைரஸ் பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்ய பல நிபந்தனைகள் அமலில் உள்ளன. சிறப்பு தரிசன டிக்கெட்கள், விஐபி தரிசனம், அறங்காவலர் குழுவின்சிபாரிசு, இலவச தரிசனம் ஆகியவை மூலம் ஒரு நாளைக்கு சுமார் 25 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். தற்போது பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் டோலோற்சவம் ஆகிய மேலும் 3 ஆர்ஜித சேவைகளுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட்கள் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த டிக்கெட்களை பெற்ற பக்தர்கள், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களையும் ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த டிக்கெட் மூலம் சுவாமியை 90 நாட்களுக்குள் தரிசனம் செய்து கொள்ளலாம். ஆர்ஜித சேவைக்கான பிரசாதம் பக்தரின் வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும். மேலும், சேவையில் ஆன்லைன் மூலம் முன்பணம் செலுத்திய பக்தர்களின் பெயர் பட்டியல் மூலவரின் பாதங்களில் வைத்து பூஜை செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் நவம்பரில் சோதனை அடிப்படையில் தொடங்க உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, ...

சசிகலா எப்போது விடுதலை ஆவார்?- சிறைத்துறையின் பதிலுக்காக காத்திருக்கும் டிடிவி தினகரன் https://ift.tt/34FYUC7

படம்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான‌ சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதை உச்ச நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு உறுதி செய்தது. இதையடுத்து சசிகலா, சுதாகரன் உள்ளிட்டோர் அதே ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சரணடைந்தனர். மூவரின் தண்டனை காலமும் 2021-ம் ஆண்டு பிப்.14-ம் தேதியுடன் நிறைவடைகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திராவில் நவம்பர் 2 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு https://ift.tt/3mzjxpz

படம்
ஆந்திராவில் வரும் நவம்பர் 2-ம் தேதி பள்ளிகள், ஜூனியர் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. இதற்கான அட்டவணையை மாநில ்்அரசு வெளியிட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20 -ம் தேதிமுதல் ஆந்திராவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. இப்போது கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பள்ளிகளை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, வரும் நவம்பர் மாதம் 2-ம்தேதி பள்ளிகள், ஜூனியர் கல்லூரிகள் (பிளஸ் 1, 2) திறக்கப்படும் என ஆந்திர அரசு ஏற்கெனவே அறிவித்தது. இந்நிலையில், நேற்று இதற்கான அட்டவணையை மாநில முதன்மைச் செயலாளர் நீலம் சாஹ்னி வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தராகண்ட் முதல்வருக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை https://ift.tt/2TBXthH

படம்
உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த உமேஷ் சர்மா என்பவர், ‘சமச்சார் பிளஸ்' என்ற பெயரில் செய்தி சேனல் நடத்தி வருகிறார். கடந்த ஜூன் 24-ம் தேதி இவர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் மீது ஊழல் புகார் கூறியுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டில் ஜார்க்கண்ட் மாநில பாஜக மேலிட பொறுப்பாளராக பணியாற்றிய திரிவேந்திர சிங், அம்மாநில அரசின் பசு சேவா ஆயோக் தலைவராக அம்ரித்திஷ் சவுகான் என்பவரை நியமிக்க மறைமுகமாக லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டினார். இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், சுபாஷ் ரெட்டி, எம்.ஆர். ஷா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

யுஜிசி நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு https://ift.tt/34EcHZN

படம்
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நவம்பர் மாத நெட் தேர்வின் ஹால் டிக்கெட்டைத் தேர்வர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆண்டுதோறும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில், பல்வேறு உயர்கல்விப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட்) ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் நடக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் நுழைவுத் தேர்வு: நவ.13 வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் https://ift.tt/2HCYFzd

படம்
பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் நவ.13-ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று ஐஐடி மும்பை அறிவித்துள்ளது. ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளில் சேருவதற்கு கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தேர்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 27 பாடப் பிரிவுகளில் நடத்தப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்