இடுகைகள்

ஆகஸ்ட், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இண்டியா கூட்டணி தலைவர்கள் மும்பை வருகை - பிரதமர் வேட்பாளர் தேர்வில் குழப்பம் https://ift.tt/2FhtBjZ

படம்
மும்பை: இண்டியா கூட்டணியின் 2 நாள் ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. இக்கூட்டணியில் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதில் குழப்பம் நீடிக்கும் நிலையில், இன்று பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள ‘இண்டியா’ கூட்டணியின் ஆலோசனை கூட்டம் பாட்னா, பெங்களூருவில் கடந்த ஜூன், ஜூலையில் நடந்த நிலையில், 3-வது ஆலோசனை கூட்டம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நேற்று மாலை தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘இண்டியா’வின் மும்பை கூட்டம் | செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தொகுதி பங்கீடு: எதிர்க்கட்சிகள் முடிவு https://ift.tt/MILG0y7

படம்
மும்பை : எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மும்பையில் தொடங்கியுள்ள நிலையில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கின. இதன் முதல் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. தற்போது மூன்றாவது கூட்டம் மும்பையில் தொடங்கி உள்ளது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் 3 மாதங்களில் 19 லட்சம் வீடியோவை நீக்கி யூடியூப் நடவடிக்கை https://ift.tt/XFJEc4h

படம்
புதுடெல்லி : இந்தியாவில் 3 மாதங்களில் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்களை யூடியூப் நீக்கியுள்ளது. இது தொடர்பாக யூடியூப் சமூக வலைதள நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி சமூக விதிமுறைகளை மீறியதற்காக இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை உலகம் முழுவதிலும் 64.8 கோடி வீடியோக்களை யூடியூப் நீக்கியுள்ளது. இந்தியாவில் இதே காலகட்டத்தில் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நிலவில் லேண்டர் கலனை படம் பிடித்தது ரோவர் வாகனம் - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என அறிவியல் ஆர்வலர்கள் கருத்து https://ift.tt/Et9lBjR

படம்
சென்னை : சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் பாகத்தை, ரோவர் வாகனம் நேவிகேஷன் கேமரா மூலம் படம் பிடித்து அனுப்பியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர் பாகம் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதன்மூலம், நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் பெருமையை இந்தியா பெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய அனுப்பப்படும் ஆதித்யா விண்கலத்தின் ஏவுதல் ஒத்திகை வெற்றி https://ift.tt/5trmsWA

படம்
சென்னை : சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக அனுப்பப்படும் `ஆதித்யா எல்-1' விண்கலத்தின் ஏவுதலுக்கான ஒத்திகை ஸ்ரீஹரிகோட்டாவில் நேற்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரம் காட்டுகிறது. இதற்காக ஆதித்யா எல்-1 என்ற அதிநவீன விண்கலத்தை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காவிரி விவகாரம் | தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு - கர்நாடகாவில் விவசாயிகள் நள்ளிரவில் போராட்டம் https://ift.tt/6ZB2u1d

படம்
பெங்களூரு : காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகள் சிலர் இரவு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மாண்டியாவில் நேற்று காலை முதலே போராட்டம் நடத்திய கர்நாடக விவசாயிகள் இரவும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேச்சை எம்எல்ஏ தர்ஷன் புட்டனையாவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

'என்டிஏ-வில் மோடியை விட்டால் வேறு யார்?' - பிரதமர் வேட்பாளர் குறித்து உத்தவ் தாக்கரே கேள்வி https://ift.tt/sXhcu8i

படம்
மும்பை : மத்திய அரசு சிலிண்டர் விலையைக் குறைத்ததன் நோக்கத்தை அனைவரும் அறிவார்கள். கடந்த 9 ஆண்டுகளாக சகோதரிகளைப் புறக்கணித்த அவர்கள், ரக்‌ஷா பந்தனுக்காக இப்போது சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்திருக்கிறீர்கள் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். 26 எதிர்க்கட்சிகள் ‘இண்டியா’ கூட்டணியின் மூன்றாவது கூட்டம் வியாழக்கிழமை மும்பையில் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவது முக்கிய அங்கம் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, தேர்தலுக்கு முன்பாக கட்சிகளுக்குள் இருக்கும் பிரச்சினைகள் குறித்தும், ஒருங்கிணைப்புக் குழுவின் தேவைகள் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இக்கூட்டத்துக்குப் பின்னர் ‘இண்டியா’ கூட்டணியின் லோகோ வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத்தில் கோடீஸ்வரர் எண்ணிக்கை 49% அதிகரிப்பு https://ift.tt/uqywp5x

படம்
அகமதாபாத்: குஜராத்தில் ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவோர் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 49% அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சிபிடிடி) புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2021-22 மதிப்பீட்டு ஆண்டில் குஜராத்தைச் சேர்ந்த 9,300 பேர் ரூ.1 கோடி அல்லது அதற்கு மேல் வருவாய் ஈட்டியதாக தங்கள் வருமான வரி தாக்கல் படிவத்தில் தெரிவித்திருந்தனர். இது 2022-23 மதிப்பீட்டு ஆண்டில் 49% அதிகரித்துள்ளது. அதாவது கூடுதலாக 4,500 பேர் (மொத்தம் 13,800) ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியதாக தெரிவித்திருந்தனர். கடந்த 5 ஆண்டுக்கு முன்பு 7 ஆயிரமாக இருந்த இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீன புதிய வரைபடத்தில் அருணாச்சல பிரதேசம்: உண்மை நிலையை மாற்ற முடியாது என இந்தியா கண்டனம்

படம்
பெய்ஜிங்: சீனா வெளியிட்டுள்ள புதிய வரை படத்தில் இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், அக்‌ஷய் சின் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. சீனாவின் இயற்கை வளத்துறை அமைச்சகம் தேசிய வரைபட விழிப்புணர்வு வாரத்தை ஜெஜியாங் மாகாணத்தின் டெகிங் பகுதியில் நேற்று கொண்டாடியது. இதை முன்னிட்டு இந்தாண்டுக்கான தேசிய வரைபடம் வெளியிடப்பட்டது. அதில் அருணாச்சல பிரதேசத்துக்கு தெற்கு திபெத் என பெயரிட்டும், கடந்த 1962-ம்ஆண்டு போரில் ஆக்கிரமித்த பகுதியை அக் ஷய் சின் என்றும் சீனா கூறியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 உடனடி குறைப்பு: மத்திய அரசு https://ift.tt/62KTQor

படம்
புதுடெல்லி: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், உஜ்வாலா திட்டத்தின்கீழ் சமையல் எரிவாயுக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இந்த விலைக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது, நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையில் ரூ.200 குறைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நிலவின் தென்துருவத்தில் கந்தகம் இருப்பதை உறுதி செய்த ரோவர்: இஸ்ரோ https://ift.tt/cEFAPTZ

படம்
அகமதாபாத்: நிலவின் தென்துருவத்தின் மேற்பரப்பில் கந்தகம் (சல்ஃபர்) இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி தென்துருவத்தில் தரையிறங்கியது. பிறகு லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கியது. லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தும், ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் ஆய்வு செய்து வருகின்றன. செப்டம்பர் 3-ம் தேதி வரை லேண்டரும் ரோவரும் ஆய்வு பணியில் ஈடுபடும் என்று எதிர்பார்ப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சூரியனை ஆய்வு செய்வதற்காக செப்.2-ல் விண்ணில் பாய்கிறது ஆதித்யா-எல்1: மக்கள் நேரில் பார்க்க ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ ஏற்பாடு https://ift.tt/Op1KxUW

படம்
பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ள ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் ராக்கெட் மூலம் செப்.2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. லேண்டர் கலன், இறங்கிய இடத்தில் இருந்தபடியும், அதில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்ட ரோவர் வாகனம், ஊர்ந்து சென்றபடியும் நிலவில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்க ஒழுங்காற்று குழு பரிந்துரை: செப்.7-ம் தேதி நேரில் ஆய்வு https://ift.tt/hZFkAcL

படம்
புதுடெல்லி: தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் நீரை திறந்துவிட காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு நீர் திறக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த 14‍-ம் தேதி வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், கர்நாடக‌ அணைகளின் நீர் இருப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகாராஷ்டிரா | பாம்புகள் நிறைந்த நீர் தேக்கத்தில் தெர்மாகோலில் மிதந்தபடி பள்ளி செல்லும் குழந்தைகள் https://ift.tt/w6OCBou

படம்
சத்ரபதி சாம்பஜிநகர்: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் உரிய சாலை வசதி இல்லாததால் உயிரை பணயம் வைத்து தெர்மகோல் படகில் மாணவர்கள் தினமும் பள்ளிக்குச் செல்லும் அவலநிலை உள்ளது. இதுகுறித்து மாணவர் பிரஜக்தா கூறுகையில், "ஒளரங்காபாத் மாவட்டத்தின் பிவ் தனோரா கிராமத்தைச் சேர்ந்த நானும், எனது நண்பர்கள் 15 பேரும் நீர்த்தேக்கத்தின் குறுக்கே உள்ள நீர்பிடிப்பு பகுதியை கடந்து தினமும் பள்ளி செல்வதற்கு தெர்மகோல் படகைத்தான் பயன்படுத்தி வருகிறோம். போகும் வழியில் தண்ணீர் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் தெர்மகோல் படகில் ஏறுவதை தடுக்க மூக்கில் குச்சிகள் அல்லது தற்காலிக துடுப்புகளை உடன் எடுத்து செல்கிறோம். ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது" என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேசிய சராசரியை விஞ்சிய வளர்ச்சி: ஸ்டாலின் பெருமிதம் https://ift.tt/UQMNAWH

படம்
சென்னை: இந்திய பொருளாதாரத்தின் ஆற்றல் மிகு மையமாக தமிழகம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக, பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு: பெரும் பெருமிதத்துடன் தேசிய சராசரியை விஞ்சிய வளர்ச்சி. நமது திராவிட மாடல் அரசு தமிழகத்தை புதிய உயரங்களுக்கு இட்டுச்செல்கிறது. நமது அயராத முயற்சிகள் 2021-22-ம் ஆண்டுகளில் 8 சதவீதம் என்று சிறப்பான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை உறுதி செய்து, இந்திய பொருளாதாரத்தின் ஆற்றல் மிகு மையமாக தமிழகத்தை நிலைநிறுத்தியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுந்தர் பிச்சை, சத்ய நாதெள்ளா, சாந்தனு நாரயண்... | சர்வதேச நிறுவனங்களின் சிஇஓ.வாக அதிகளவில் இந்தியர்கள்: எலான் மஸ்க் வியப்பு

படம்
கலிபோர்னியா: கூகுள், மைக்ரோசாஃப்ட் உட்பட சர்வதேச அளவில் முக்கியமான நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவது அதிகரித்து வருகிறது. இதை பார்த்து எலான் மஸ்க் வியந்துள்ளார். சர்வதேச நிறுவனங்களில் தலைமை பொறுப்பு வகிக்கும் இந்தியர்களின் பட்டியல் ஒன்று எக்ஸ் தளத்தில் (ட்விட்டர்) பகிரப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் வியப்பைத் தருவதாக எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சத்ய நாதெள்ளா, யூடியூப் நிறுவனத்தில் நீல் மோகன், அடோப் நிறுவனத்தில் சாந்தனு நாரயண் தலைமைச் செயல் அதிகாரிகளாக உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேற்கு வங்கத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு https://ift.tt/dOSgvCl

படம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலம் 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள துத்தாபுகூர் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நேற்று காலை 10.40 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய அரசின் கொள்கைகளால் கடந்த 5 ஆண்டுகளில் 13.50 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்: பிரதமர் மோடி https://ift.tt/s9ATyNC

படம்
புதுடெல்லி: வறுமையை ஒழிக்கும் நோக்கில், ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகளை இந்திய அரசு கடைபிடிப்பதால், கடந்த 5 ஆண்டுகளில் 13.50 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என்று ஜி20 அமைப்பின் வர்த்தக அமைப்பான பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜி20 நாடுகளின் வர்த்தக அமைப்பான ‘பிசினஸ் 20’ (பி20) அமைப்பு கடந்த 2010-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஜி20 நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் பங்கேற்கின்றன. டெல்லியில் பி20 அமைப்பின் உச்சி மாநாடு கடந்த 3 நாட்கள் நடந்தது. இதில் 55 நாடுகளை சேர்ந்த 1,500 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஜி20 அமைப்பில் சமர்ப்பிப்பதற்கான 54 பரிந்துரைகள் மற்றும் 172 கொள்கை நடவடிக்கைகள் பி20 அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை” - அஜித் பவார் விளக்கம் https://ift.tt/WNcn1hK

படம்
மும்பை: மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவே பாஜக மற்றும் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி கூட்டணியில் இணைந்துள்ளதாக மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார், பாஜகவோடு கூட்டணி அமைத்து அம்மாநில துணை முதல்வராக பதவியேற்றார். அவரோடு, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதையடுத்து, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு இருதரப்பும் உரிமை கோரின. எனினும், இந்த சம்பவங்களை அடுத்து சரத் பவாரை, அஜித் பவார் நேரில் சந்தித்துப் பேசி இருந்தார். இந்த சூழலில் அஜித் பவார் தெரிவித்தது… from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நிலவில் லேண்டர் தரையிறங்கிய இடத்துக்கு ‘சிவசக்தி’ என பெயர் சூட்டிய பிரதமர் மோடி: ஆகஸ்ட் 23-ம் தேதியை தேசிய விண்வெளி தினமாக அறிவித்தார் https://ift.tt/7AviI5W

படம்
பெங்களூரு: சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடத்துக்கு 'சிவசக்தி' எனப் பெயர் சூட்டப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து வாழ்த்த பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்தார். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா சென்றிருந்த அவர், ஒருநாள் பயணமாக கிரீஸ் நாட்டுக்கும் சென்றார். அங்கிருந்து நேரடியாக நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பெங்களூரு வந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தெலங்கானா புதிய தலைமை செயலகத்தில் கோயில், சர்ச், மசூதி திறப்பு: ஆளுநர், முதல்வர் பங்கேற்பு https://ift.tt/2xZ1QyL

படம்
ஹைதராபாத்: தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் புதிய தலைமை செயலக கட்டிட திறப்பு விழாவிற்கு ஆளுநரான தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு முதல்வர் கே. சந்திரசேகர ராவ் அழைப்பு விடுக்கவில்லை என்பது பெரும் விவாதமானது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தன்று, புதிய தலைமை செயலகத்தில் கோயில், மசூதி மற்றும் சர்ச் திறப்பு விழாவில் கலந்துக்கொள்ளுமாறு அரசு சார்பில் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது. இதற்கு அவரும் சம்மதித்தார் என்பதால், முதலில் புதிய தலைமை செயலகத்திற்கு முதல்வர் சந்திரசேகர ராவ் வருகை தந்தார். அவரை தொடர்ந்து ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் வந்தார். அவரை முதல்வர் மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாணவர் கன்னத்தில் அறையப்பட்ட விவகாரம்: உ.பி. அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு https://ift.tt/zPlATMN

படம்
லக்னோ: உத்தர பிரதேசத்தின் முசாபர் நகரில் நேகா பப்ளிக் ஸ்கூல் என்ற பெயரில் தனியார் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியை திருப்தா தியாகி என்ற பெண் ஆசிரியை நடத்தி வருகிறார். இவர் மாற்றுத் திறனாளி ஆவார். கடந்த 24-ம் தேதி ஆசிரியை திருப்தா தியாகி, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். அப்போது 7 வயது சிறுவனிடம் அவர் கணித வாய்ப்பாடு சொல்லுமாறு கூறினார். அந்த சிறுவனால் வாய்ப்பாட்டை சரியாக சொல்ல முடியவில்லை. ஆத்திரமடைந்த ஆசிரியை, சக மாணவர்களை அழைத்து அந்த மாணவரை கன்னத்தில் அறையுமாறு கூறினார். இதன்படி சக மாணவர்கள், வாய்ப்பாடு கூற முடியாத மாணவரின் கன்னத்தில் அறைந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்துத்துவா அமைப்புகள் யாத்திரையால் நூ மாவட்டத்தில் 2 நாள் இணைய சேவைக்கு தடை https://ift.tt/MCjAfpe

படம்
சண்டிகர்: ஹரியணாவின் நூ மாவட்டத்தில் கடந்த ஜூலை 31-ம் தேதி நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) ஊர்வலத்தின்போது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு 2 சமூகத்தினரிடையே மதக் கலவரம் மூண்டு பெரிய கலவரமாக மாறியது. இந்தக் கலவரம் அருகிலுள்ள குருகிராம் மாவட்டம் சோனா நகருக்கும் பரவியதால் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹைதராபாத் | போட்டியில் பங்கேற்று விளையாடியபோது உயிரிழந்த செஸ் வீரர் https://ift.tt/hPblcIk

படம்
ஹைதராபாத்: செஸ் போட்டியில் பங்கேற்று விளையாடியபோது உயிரிழந்துள்ளார் வி.எஸ்.டி.சாய் எனும் நபர். எல்ஐசி நிறுவனத்தில் பணியாற்றி அவர் ஓய்வு பெற்றுள்ளார். 72 வயதான அவர், செஸ் போட்டிகளில் ஆர்வமுடன் தொடர்ச்சியாக பங்கேற்று விளையாடி வந்துள்ளார். ஹைதராபாத் செஸ் மையத்தின் செயற்குழு உறுப்பினராகவும் அவர் செயல்பட்டு வந்துள்ளார். சனிக்கிழமை அன்று கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் அவர் பங்கேற்று விளையாடி உள்ளார். இதன் 5-வது சுற்றுப் போட்டியில் விளையாடியபோது சரிந்து விழுந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரள மாநிலம் வயநாட்டில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து 9 பெண்கள் உயிரிழப்பு https://ift.tt/OESjeKH

படம்
வயநாடு : கேரளாவின் வயநாடு பகுதியில் ஜீப் ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் தோட்ட வேலை செய்யும் 9 பெண்கள் உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர். கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள கம்பமாலா என்ற இடத்தில் தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு பணியாற்றிய பெண் தொழிலாளர்கள் 13 பேர் தங்கள் வேலையை முடித்து விட்டு நேற்று மாலை, தேயிலை நிறுவனத்தின் ஜீப்பில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் பதில் அளிக்க காவிரி ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/K6SkAM7

படம்
புதுடெல்லி : காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தொடுத்த வழக்கில், காவிரி மேலாண்மை ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய நீரை வழங்கவில்லை. இதனால் தமிழக அரசு, கடந்த வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், ‘‘ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி நீரை உடனடியாக திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். குறுவை சாகுபடிக்காக தினமும் 24,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும். இவ்வழக்கை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும்'' என்று கோரியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம்: விசாரணை நிறைவடைந்துவிட்டதாக செபி தகவல் https://ift.tt/Utzv0K8

படம்
புதுடெல்லி : அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பான விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டதாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதானி குழுமங்களின் 24 விவகாரங்களை ஆய்வு செய்ததாகவும், அவற்றில் 22 விவகாரங்கள் மீதான ஆய்வு நிறைவு பெற்றுவிட்டதாகவும் செபி தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அதானி குழுமத்துக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த மக்கள் பாதிப்பை எதிர்கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நிலவில் 8 மீட்டர் தூரத்தை கடந்த ரோவர் - இஸ்ரோ அறிவிப்பு https://ift.tt/FeObgXx

படம்
டெல்லி : நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கிய ரோவர் 8 மீட்டர் தூரத்தை கடந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும் இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், "திட்டமிட்டபடி ரோவர் சிறப்பாக இயங்கி வருகிறது. ரோவரில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கருவிகளும் சிறப்பாக செயல்படுகிறது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விமானம் நொறுங்கி விபத்து - ரஷ்யாவுக்கு எதிராக கிளர்ச்சி செய்த வாக்னர் குழு தலைவர் உயிரிழப்பு

படம்
மாஸ்கோ : ரஷ்யாவில் நிகழ்ந்த ஜெட் விமான விபத்தில் தனியார் ராணுவமான வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஷின் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். வாக்னர் குழு ரஷ்யாவில் இயங்கிவந்த தனியார் ராணுவம் ஆகும். வாக்னர் குழுவை சில நாடுகள் ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்துவது உண்டு. உக்ரைன் உடனான போரில், ரஷ்யா வாக்னர் குழுவை பயன்படுத்தியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘விண்வெளியின் சூப்பர் பவர் இந்தியா' - சர்வதேச ஊடகங்கள் புகழாரம் https://ift.tt/DRZz6ls

படம்
புதுடெல்லி : 'விண்வெளியின் சூப்பர் பவர் இந்தியா' என்று சர்வதேச ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன. நிலவின் தென்துருவத்தை சென்றடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. இதுதொடர்பாக சர்வதேச ஊடகங்கள் இந்தியாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நிலவில் ஆய்வு தொடங்கியது ரோவர் - அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கிறது என இஸ்ரோ தகவல் https://ift.tt/8jXJS3f

படம்
சென்னை : நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3 லேண்டர், ரோவர் கலன்கள் ஆய்வுப் பணிகளை தொடங்கிவிட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய சந்திரயான்-3 விண்கலம், எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பல்வேறு கட்டமாக, 41 நாள் பயணத்துக்கு பிறகு, நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கலன் நேற்று முன்தினம் மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் சாதனையை இந்தியா படைத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அனைத்தும் நார்மல்; ஆராய்ச்சியைத் தொடங்கியது பிரக்யான் ரோவர்! - இஸ்ரோ அறிவிப்பு https://ift.tt/1K06vDf

படம்
பெங்களூரு : பிரக்யான் ரோவர் தனது ஆராய்ச்சியைத் தொடங்கியது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில் பிரக்யான் ரோவர் மெல்லமெல்ல அடியெடுத்து வைத்து நிலவில் கால்பதித்தது. விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்ட ஆறு மணி நேரம் கழித்து இந்த நிகழ்வு நடந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சந்திரயான்-3 செல்லும் பாதையை கண்டறிய நாசா, ஐரோப்பிய விண்வெளி மையம் உதவி

படம்
பெங்களூரு அருகில் உள்ள பெயலாலு என்ற இடத்தில் பிரம்மாண்ட ஆன்ட்டனா மூலம் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பாதை கண்காணிக்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பெரிய இந்த ஆண்டனா 38 மீட்டர் குடை வடிவத்தில் உள்ளது. இந்நிலையில், விக்ரம் லேண்டர் நிலவின் இருண்ட அல்லது அடர்த்தியான நிழல் படர்ந்த பகுதியில் தரையிறங்கும்போது, பெங்களூருவில் இருந்து ஆன்ட்டனா மூலம் அதன் பாதையை துல்லியமாக கணிக்க இயலாது. இதற்குதான் நாசாவும், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமும் (இஎஸ்ஏ) இஸ்ரோவுக்கு உதவ முன்வந்தன. அதன்படி, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது, அது எந்தப் பாதையில் செல்கிறது, தூரம், நேரம் போன்ற அனைத்து தகவல்களையும் நாசா மற்றும் இஎஸ்ஏ கண்டறிந்து இஸ்ரோவுக்கு உடனுக்குடன் தகவல் அளித்தது. அதற்காக பயன்படுத்தும் அதிநவீன ஆன்ட்டனாக்கள் மற்றும் விக்ரம் லேண்டரின் பாதையை கண்காணித்து தகவல் அளிக்க எத்தனை மணி நேரம் ஆகிறதோ, அதற்கேற்ப கட்டணத்தை இஸ்ரோவிடம் இருந்து நாசாவும் இஎஸ்ஏ.வும் பெற்றுக் கொள்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழ...

புதிய பாடத்திட்டத்தின்படி மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு https://ift.tt/bHMAWEN

படம்
புதுடெல்லி: தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதியப் பாடத்திட்டங்கள் தயாராகிவிட்டதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் 2024-ம்கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இனி பள்ளி பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும். தற்போது ஆண்டுக்கு ஒரு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதனால், மாணவர்கள்அதிக பாடச் சுமையை எதிர்கொள்கின்றனர். பாடச் சுமையை குறைக்கும் வகையில், பொதுத்தேர்வுகள் ஒரே தேர்வாக இல்லாமல், இரண்டு செமஸ்டர்களாக நடத்தப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சர்வதேச அளவில் இஸ்ரோவின் அந்தஸ்தை உயர்த்திய சந்திரயான்-3: திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பெருமிதம் https://ift.tt/BFGPbnU

படம்
சென்னை : சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், விழுப்புரத்தை சேர்ந்தவர். சந்திரயான்-3 வெற்றிபயணத்தை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இஸ்ரோ குழுவினருக்கு இதுமகிழ்ச்சியான தருணம். இத்திட்டத்தை வெற்றிகரமாக சாத்தியப்படுத்தியது திருப்தி அளிக்கிறது. திட்டம் தொடக்கம் முதல் தரையிறக்கம் வரை எவ்வித சிக்கலும் இன்றி திட்டமிட்டபடி நடந்து முடிந்துள்ளது. நிலவில்தரையிறங்கிய 4-வது நாடு, தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் பெருமையை பெற்றுள்ளோம். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. உலக அளவில் இஸ்ரோவின் மதிப்பு, அந்தஸ்தை சந்திரயான்-3 திட்டம் உயர்த்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நிலவில் வெற்றிகரமாக இறங்கியது சந்திரயான்-3: தென்துருவத்தை சென்றடைந்த முதல் நாடு எனும் புதிய சரித்திரம் https://ift.tt/5CrbW82

படம்
சென்னை : சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர்கலன் நிலவில் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் புதிய சரித்திரத்தை பெற்று இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்வதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.250 கோடியில் வடிவமைத்தது. இது 3,895 கிலோ எடை கொண்டது. ஏற்கனவே சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவை சுற்றிவருவதால் இம்முறை விண்கலத்தில் லேண்டர், ரோவர் பாகங்கள் மட்டும் இடம்பெற்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விமான விபத்தில் வாக்னர் குழு தலைவர் மரணம்: புதினுக்கு எதிராக கிளர்ச்சி செய்தவருக்கு நேர்ந்த துயரம்

படம்
மாஸ்கோ : விமான விபத்தில் ரஷ்யாவின் வாக்னர் குழு தலைவர் உட்பட 9 பேர் மரணமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுளளது. சில மாதங்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டது இந்த வாக்னர் குழு. ட்வெர் பிராந்தியத்தில் நடந்த விமான விபத்தில் இறந்தவர்களில் வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினும் அடக்கம். ரஷ்ய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ரோசாவியாட்சியா யெவ்ஜெனி பிரிகோஜின் இறந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சந்திரயான்-3 லேண்டரில் இருந்து ரோவர் பிரக்யான் நிலவில் தரையிறக்கும் பணி தொடக்கம் https://ift.tt/qv4CNpK

படம்
புதுடெல்லி : சந்திரனின் தென் துருவத்திற்கு அருகே சந்திரயான்-3 லேண்டரில் இருந்து ரோவர் பிரக்யான் வெளியேறியது. ரோவர் தரையிறங்கும் பணி இரவு 10 மணியளவில் தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 என்ற விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த ஜூன் 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்து, விக்ரம் லேண்டர் மாலை 6:04 மணியளவில் நிலவில் தரை இறங்கியது. இச்சாதனை நிகழ்வை பல்வேறு தரப்பினரும் தொலைக்காட்சிகளிலும், செல்போன்களிலும் கண்டு மகிழ்ந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சந்திரயான்-3 மிஷன் வெற்றி பெறுவது நிச்சயம்: இஸ்ரோ தலைவர் நம்பிக்கைப் பேட்டி https://ift.tt/I2iMQSN

படம்
ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் அளித்துள்ள பேட்டியில், சந்திரயான்-3 மிஷனின் வெற்றி நிச்சயம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ரூ.615 கோடியில் வடிவமைத்தது. எல்விஎம்-3 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 40 நாள் பயணத்துக்கு பிறகு, விண்கலம் தற்போது நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வங்கிகளிடமிருந்து ரூ.4,760 கோடி கடன்பெற்று மோசடி: ஜிடிஎல் நிறுவனம், 13 வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு https://ift.tt/hYJCFUf

படம்
மும்பை: வங்கிகளிடமிருந்து கடன்பெற்று முறையாக திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில் தொலைத் தொடர்பு நிறுவனமான ஜிடிஎல் இன்பிராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் மீதும் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, பிஎன்பி உட்பட 13 வங்கிகளின் அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஜிடிஎல் இன்பிராஸ்ட்ரக்சர் நிறுவனம், தொலைத் தொடர்பு கட்டமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நாடு முழுவதும் 27,729 செல்போன் கோபுரங்களை இந்நிறுவனம் கொண்டிருக்கிறது. இந்நிறுவனம் 2009 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் வங்கிகளிடமிருந்து கடன்பெற்று ரூ.4,760 கோடி மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி: தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் முன்னிலை

படம்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் முன்னிலையில் உள்ளார். சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் அடுத்த மாதம் 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது. தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் (66) மற்றும் இங் கொக் சொங் (76), டான் கின் லியான் (75) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்கள் 3 பேரும் அதிகாரபூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதால் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

40% வரி விதிப்பை எதிர்த்து மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம் எதிரொலி: வெங்காயம் குவிண்டாலுக்கு ரூ.2,410-க்கு கொள்முதல் https://ift.tt/j3GwDPM

படம்
புதுடெல்லி: வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கிலும், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் நோக்கிலும் மத்திய அரசு கடந்த வாரம், வெங்காய ஏற்றுமதிக்கு 40% வரி விதித்தது. ஏற்றுமதி வரி அதிகரிப்பால், வளைகுடா நாடுகள் இந்தியாவுக்குப் பதிலாக பாகிஸ்தானிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் சூழல் உருவாகும். இதனால், தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்று கூறி, மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் வெங்காய உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் கடந்த திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். நாசிக்கில் உள்ள ஆசியாவின் மிகப் பெரிய வெங்காய சந்தையில் வெங்காயத்துக்கான ஏலம் காலவரையறையின்றி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா சென்றார் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச வாய்ப்பு

படம்
ஜோகன்னஸ்பர்க் : பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜோகன்னஸ்பர்க் நகரில் அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் மோடி சந்தித்து பேசி, எல்லை பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘பிரிக்ஸ்’ அமைப்பில் பிரேசில்,ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் 15-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்று தொடங்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இன்று நிலவில் தரையிறங்கும் சந்திரயான்-3: உ.பி. அரசு பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு https://ift.tt/MOcQ58L

படம்
லக்னோ: சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் இன்று மாலை தரையிறங்குவதை அனைத்து அரசு பள்ளிகளிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை எல்விஎம்-3 ராக்கெட் மூலம் இஸ்ரோ கடந்த மாதம் 14-ம் தேதி அனுப்பியது. புவி சுற்றுவட்ட பாதைகள், நிலவின் சுற்றுவட்ட பாதைகளை கடந்து சந்திராயன்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 மணிக்கு தரையிறங்குகிறது. இதற்கான பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியை இஸ்ரோ தனது வெப்சைட், யூட்யூப் சேனல் மற்றும் தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 லேண்டர் கலன் இன்று மாலை தரையிறங்குகிறது: இஸ்ரோ அறிவிப்பு https://ift.tt/PR2fb5O

படம்
சென்னை: சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், திட்டமிட்டபடி இன்று மாலை 6 மணி அளவில் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்குகிறது. நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ரூ.615 கோடியில் வடிவமைத்தது. எல்விஎம்-3 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 40 நாள் பயணத்துக்கு பிறகு, விண்கலம் தற்போது நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்’: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி https://ift.tt/wC9drNn

படம்
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் கூட்டமைப்பு ‘பிரிக்ஸ்’ (BRICS) எனப்படுகிறது. இதன் தலைமை பொறுப்பை தற்போது தென்னாப்பிரிக்கா வகிப்பதால், அந்நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் 15-வது பிரிக்ஸ் மாநாடு 24-ம் தேதி வரை நடக்கிறது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “உலகப் பொருளாதார சூழ்நிலையில் கொத்திப்பான நிலை இருந்தாலும், உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது. விரைவில், இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும், வரும் ஆண்டுகளில் உலகத்துக்கான வளர்ச்சி இயந்திரமாக இந்தியா மாறும் என்பதில் சந்தேகமில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 https://ift.tt/K2isJeY

படம்
சூரியன், நமக்கு அருகில் உள்ள ஒரு நட்சத்திரமாகும். இது சூரிய குடும்பத்தில் மிகப்பெரியது. இதன் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள் என கணக்கிடப்படுகிறது. சூரியனில் உள்ள ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் எரிந்து தொடர்ந்து வினைபுரிந்து கொண்டே இருக்கின்றன. சூரியன்,பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரிய ஒளி பூமியை வந்தடைய 8நிமிடங்கள் ஆகிறது. சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களுக்கும் சக்தி தரக்கூடிய மிகப் பெரிய ஆற்றல் கொண்டது சூரியன். சூரியனின் ஆற்றல் இல்லாமல் பூமியில் உயிர்கள் வாழ்வது கடினம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

40 நாள் பயணத்துக்கு பிறகு சந்திரயான்-3 நாளை நிலவில் தரையிறங்குகிறது - மக்கள் நேரலையில் காண இஸ்ரோ ஏற்பாடு https://ift.tt/MiWdZhB

படம்
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்து நிலவுக்கு அனுப்பியுள்ள சந்திரயான்-3 விண்கலம் 40 நாள் பயணத்துக்கு பிறகு, நிலவின் தென் துருவத்தில் நாளை மாலை தரையிறங்க உள்ளது. இதை பொதுமக்கள் நேரலையில் காண இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது. நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில்செலுத்தப்பட்டது. அதன்பிறகு, பூமியை சுற்றிவந்த விண்கலம் கடந்த ஆக.1-ல்புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும்படி அதன் பயணப் பாதை மாற்றப்பட்டது. ஆக. 5-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி இன்று தென்னாப்பிரிக்கா பயணம் https://ift.tt/HWI1KeP

படம்
புதுடெல்லி : பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தென்னாப்பிரிக்கா செல்கிறார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் கூட்டமைப்பு ‘பிரிக்ஸ்’ (BRICS) எனப்படுகிறது. இதன் தலைமை பொறுப்பை தற்போது தென்னாப்பிரிக்கா வகிப்பதால், அந்நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் 15-வது பிரிக்ஸ் மாநாடு இன்று தொடங்கி24-ம் தேதி வரை நடக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சந்திரயான்-3 லேண்டரை நிலவுக்கு  வரவேற்ற சந்திரயான்-2 ஆர்பிட்டர் https://ift.tt/87Ya6f3

படம்
சென்னை : சந்திரயான் 3 லேண்டரை தொடர்புகொண்ட சந்திரயான் 2 ஆர்பிட்டர் அதனை நிலவுக்கு வரவேற்றுள்ளது. நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்ய கடந்த 2019-ல் இந்தியா சந்திரயான் 2 விண்கலத்தை ஏவியது. ஆனால் சந்திரயான் 2-ன் லேண்டர் வேகமாக நிலவின் மேற்பகுதியில் மோதி தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் , திட்டம் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில்தான் நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்யும் நோக்கில் சமீபத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை இந்தியா செலுத்தியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்