இடுகைகள்

டிசம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரூ.1.26 கோடி காப்பீட்டு தொகையை பெற விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய தொழிலதிபர் https://ift.tt/gb504Mi

படம்
ரூ.1.26 கோடி காப்பீட்டு தொகையை பெற விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய தொழிலதிபரை குஜராத் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டம், வட்கம் அருகேயுள்ள தன்புரா கிராமத்தின் சாலையில் கடந்த 27-ம் தேதி ஒரு கார் தீயில் எரிந்து உருக்குலைந்து கிடப்பதாக உள்ளூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து, காரின் ஓட்டுநர் இருக்கையில் இருந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சடலம் தீயில் எரிந்து எலும்பு கூடாக காட்சியளித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தென்கொரிய விமான விபத்தில் 2 பேர் மட்டும் உயிர் தப்பியது எப்படி?

படம்
கடந்த 29-ம் தேதி தென்கொரியாவின் முவான் நகர சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானம் விபத்துக்கு உள்ளானது. விமானத்தில் பயணம் செய்த 181 பேரில் 179 பேர் உயிரிழந்தனர். 2 விமான ஊழியர்கள் மட்டும் உயிர் தப்பினர். இதுகுறித்து தென்கொரிய விமான போக்குவரத்துத் துறை நிபுணர்கள் கூறியதாவது: விமானத்தின் முன்பகுதி இருக்கைகள் பிசினஸ் கிளாஸ் (முதல் வகுப்பு) என்று அழைக்கப்படுகின்றன. இந்த இருக்கைகளுக்கான கட்டணம் அதிகம். பின் பகுதி இருக்கைகள் எக்னாமிக் கிளாஸ் என்று அழைக்கப்படுகிறது. இதற்கான கட்டணம் குறைவு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தானில் தாய்க்கு 2-வது திருமணம் செய்து வைத்த மகன்: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு

படம்
தாய்க்கு 2-வது திருமணம் செய்து வைத்த மகனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளைஞர் அப்துல் அஹத். இவரும், இவரது தாயாரும் இஸ்லாமாபாதில் வசித்து வருகின்றனர். அப்துல் அஹத்துக்கு தந்தை இல்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விண்வெளியில் 16 முறை புத்தாண்டு கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்! 

படம்
சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் 16 முறை புத்தாண்டு கொண்டாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பூமிக்கு மேல 400 கி.மீ உயரத்தில் மிதந்து கொண்டிருக்கும் எக்ஸ்பெடிஷன் 72 குழுவினர், பூமியைச் சுற்றி வரும்போது 2025 பிறக்கும் தருணத்தில் 16 சூரிய உதயங்களையும் அஸ்தமனங்களையும் காண்பார்கள் என்று சர்வதேச விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எல்லை பிரச்சினை காரணமாக பாகிஸ்தான், தலிபான் இடையே கடும் சண்டை

படம்
எல்லை பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஆப்கானிஸ்தானின் தலிபான் வீரர்களுக்கு இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 46 பேர் உயிரிழந்தனர். தலிபான் வீரர்களின் தாக்குதலில் 19 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டில் ஆப்கானிஸ்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின. இதைத் தொடர்ந்து அந்த நாட்டில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினர். தலிபான்களின் மூத்த தலைவர் முகமது ஹசன் அகுந்த் புதிய பிரதமராக பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுனாமி தாக்கிய போது போர்க்கப்பலில் பிறந்த குளோரிக்கு கடற்படையில் இணைந்து சேவை செய்ய விருப்பம் https://ift.tt/8wqE5zR

படம்
குட்டி அந்தமான் என்று அழைக்கப்படும் ஹட் பே தீவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பலராமன், லட்சுமி தம்பதி. இவர்களை கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 26-ல் சுனாமி தாக்கிய போது அருகில் உள்ள குன்றின் மீது ஏறி உயிர்தப்பினர். அப்போது, லட்சுமி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். தனது கிராமம் அழிவதை கண் முன்னால் கண்ட லட்சுமி சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் வாடியிருந்த நான்கு நாட்களுக்குப் பிறகு அவரை காப்பாற்ற ஏஞ்சல் போல ஐஎன்எஸ் கரியல் போர்க்கப்பல் வந்தது. அந்த கப்பலில் ஏறிய பிறகு லட்சுமிக்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து, போர்ட் பிளேர் செல்வதற்கு முன்பாகவே அவரு்க்கு பிரசவம் பார்க்க வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டது. கொஞ்சமும் முன் அனுபவம் இல்லாத கப்பலில் இருந்த மருத்துவர் மற்றும் அவரது உதவியாள லட்சுமிக்கு பிரசவம் பார்த்தனர். டிசம்பர் 29, 2004 மாலை 7 மணிக்கு லட்சுமிக்கு அழகான குளோரி என்ற பெண் குழந்தை பிறந்தது. போர்க் கப்பலில் பிறந்த முதல் குழந்தை இது. இப்போது குளோரிக்கு 20 வயது ஆகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், “ இந்திய கடற்படை போர்க்கப்பலின் உதவியால் பிறப்பெடுத்தேன். தற்போதும் அவர...

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்! https://ift.tt/LObMuSF

படம்
ஸ்ரீஹரிகோட்டா: விண்வெளி ஆய்வு மையத் திட்டத்தின் முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்​தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்​ ஒருபகுதியாக ஸ்பேடெக்ஸ் திட்டம் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்டத்தின் கீழ் விண்ணில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகா கும்பமேளாவில் 2,000 டிரோன்களில் வானில் வண்ண மயமான லேசர் கண்காட்சி https://ift.tt/fs8vQ1R

படம்
மகாகும்ப நகர்: உத்தர பிரதேசத்​தின் பிரயாக்​ராஜில் அடுத்த மாதம் ஜனவரி 13-ம் தேதி முதல் பிப்​ரவரி 26-ம் தேதி வரை மகா கும்​பமேளா நடைபெறுகிறது. இது 12 ஆண்டு​களுக்கு ஒரு முறை கொண்​டாடப்​படு​கிறது. கும்​பமேளா​வின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்​சி​யின் போது, சங்கம் முனைப் பகுதி​யில் இரவு நேரத்​தில் ட்ரோன்கள் மூலம் லேசர் கண்காட்​சிக்கு உத்தர பிரதேச சுற்றுலாத்​துறை ஏற்பாடு செய்​துள்ளது. இது குறித்து மாவட்ட சுற்றுலாத்​துறை அதிகாரி அபரஜிதா சிங் கூறிய​தாவது: மூன்று நதிகள் சங்கமிக்​கும் சங்கம் முனைப் பகுதி​யில் இரவு நேரத்​தில் வானில் ஒளிரும் ட்ரோன் கண்காட்​சிக்கு ஏற்பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. 2,000-க்​கும் மேற்​பட்ட ஒளிரும் ட்ரோன்​கள், கடலில் அமுதம் கடையும் ‘சமுத்ர மந்தன்’ நிகழ்ச்​சியை வானில் நடத்தி காட்டும். இது தனிச்​சிறப்பான அனுபவமாக இருக்​கும். இவ்​வாறு அபரஜிதா சிங் கூறினார்​. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

100 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் ‘பீஸ்ட் கேம்ஸ்’ டி.வி. தொடர் நிகழ்ச்சி - வெற்றி பெறும் நபருக்கு தீவு பரிசு

படம்
உலகிலேயே மிக அதிகமாக 100 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் நடத்தப்படும் ‘பீஸ்ட் கேம்ஸ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெறும் நபருக்கு 5 மில்லியன் டாலர் மெகா பரிசுடன் தனியார் தீவு ஒன்றும் பரிசளிக்கப்படுகிறது. நெட்பிளிக்ஸில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ஸ்க்விட் கேம் டி.வி தொடர் 22 மில்லியன் டாலர் செலவில் நடத்தப்பட்டது. இதேபோல் கேம் ஆப் த்ரோன்ஸ் டி.வி நிகழ்ச்சிக்கு 50 மில்லியன் டாலர் செலவானது. ‘தி லாஸ்ட் ஆஃப் அஸ்’ என்ற நிகழ்ச்சிக்கு 90 மில்லியன் டாலர் செலவானது. தற்போது அதைவிட அதிகமாக 100 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் ‘பீஸ்ட் கேம்ஸ்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி வெளிவந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீனா எல்லையில் சத்ரபதி சிவாஜி சிலை: இந்திய ராணுவம் திறப்பு https://ift.tt/uwPINxt

படம்
இந்தியா-சீனா எல்லையில் 14,300 அடி மலைச் சிகரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது. இந்த சிலையை திறந்து வைத்து இந்திய ராணுவத்தின் 14-வது படைப்பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹித்தேஷ் பல்லா, எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது: கிழக்கு லடாக் செக்டாரில் சீனாவை ஒட்டியுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு (எல்ஏசி) பகுதியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்காவின் ‘தாட்’ ஏவுகணைகளை முதல் முறையாக பயன்படுத்தியது இஸ்ரேல்

படம்
ஏமனிலிருந்து ஹவுதி தீவிரவாதிகள் ஏவிய ஏவுகணைகளை, அமெரிக்கா வழங்கிய ‘தாட்’ வான் தடுப்பு ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் நடுவானில் இடைமறித்து அழித்தது. இந்த வகை ஏவுகணைகளை இஸ்ரேல் பயன்படுத்துவது இதுவே முதல் முறை. இஸ்ரேல் மீது ஈரான் கடந்த அக்டோபர் 1-ம் தேதி பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இவற்றை இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ வான் தடுப்பு ஏவுகணைகளால் நடுவானில் இடைமறித்து அழிக்க முடியவில்லை. இதனால் இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா, ‘தாட்’ என்ற அதிநவீன வான் தடுப்பு ஏவுகணைகளை வழங்கியது. இதை இயக்குவதற்கு அமெரிக்க வீரர்களும் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இமாச்சலில் கடும் பனிப்பொழிவு: 5,000 சுற்றுலாப் பயணிகள் மீட்பு https://ift.tt/MHlzF4Q

படம்
இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக குலு பகுதியில் சிக்கித் தவித்த 5,000 சுற்றுலாப் பயணிகளை போலீஸார் மீட்டனர். இதுகுறித்து குலு காவல் துறை வெளியிட்ட எக்ஸ்பதிவில் " இமாச்சலின் குலுவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடும் பனிப்பொழிவின் காரணமாக சோலங் நல்லா என்ற இடத்தில் 1,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் பனியில் சிக்கிக்கொண்டன. இந்த வாகனங்களில் இருந்த 5,000 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களது வாகனங்களும் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ம.பி.யில் ரயில் சக்கரங்களுக்கு நடுவே 250 கி.மீ. தூரம் பயணித்த நபரிடம் விசாரணை https://ift.tt/kqb2zCn

படம்
ஜபல்பூர்: மத்தியபிரதேசத்தில் ரயிலுக்கு அடியில் சக்கரங்களுக்கு நடுவே ஒருவர் 250 கி.மீ. தூரம் பயணம் செய்துள்ளார். ம.பி.யின் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளின் கீழ் ரயில்வே ஊழியர்கள் நேற்று வழக்கமான ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு ரயிலில், ஒரு பெட்டியின் கீழே சக்கரங்களுக்கு நடுவில் ஒருவர் மறைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அந்த நபர், இடார்சியில் இருந்து 250 கி.மீ. தூரம், அதாவது 4 மணி நேரத்துக்கும் மேலாக இவ்வாறு பயணித்ததாக கூறியதை கேட்டு மேலும் அதிர்ந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீன ஆய்வகத்தில் இருந்து கரோனா பரவியதற்கான ஆதாரத்தை அதிபர் பைடன் நிறுத்தி வைத்தார்: அமெரிக்க பத்திரிகையில் தகவல்

படம்
நியூயார்க்: கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் சீனாவிலிருந்து கரோனா வைரஸ் பரவியது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டனர். சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இதன் பாதிப்பு இருந்தது. இந்நிலையில் சீனாவின் வூகான் நகரிலுள்ள ஆய்வகச் சோதனையின்போது கரோனா வைரஸ் கசிந்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது என்று அப்போது செய்திகள் வந்தன. ஆனால், இதை சீனா மறுத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தொடர்ந்து 2-வது ஆண்டாக 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கியது அமெரிக்கா https://ift.tt/3bAGqew

படம்
புதுடெல்லி: சுற்றுலா, வர்த்தகம், வேலைவாய்ப்பு, கல்வி என பல காரணங்களுக்காக அமெரிக்காவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியர்கள் ஏராளமானோர் அமெரிக்காவுக்கு விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு அமெரிக்க அரசு, விசாவை வழங்கியுள்ளது. இது நிரந்தர குடியுரிமை அல்லாத விசாவாகும். இந்த வகை விசாக்கள் எச்1-பி விசாக்கள் என்று அழைக்கப்பட்டு வருகின்றன. கடந்த நான்காண்டுகளாகவே அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடந்த 1882-ல் ரூ.20,000 ஆக இருந்த மகா கும்ப மேளா செலவு ரூ.7,500 கோடியாக உயர்வு https://ift.tt/Yr5JBWS

படம்
பிரயாக்ராஜ்: மகா கும்ப மேளா கடந்த 1882-ம் ஆண்டு நடைபெற்றபோது, அதன் செலவு ரூ.20,000-மாக இருந்தது. அது தற்போது ரூ.7,500 கோடியாக அதிகரித்துள்ளது. இந்து மதத்தில் மகா கும் பமேளா மிகவும் புனிதமான யாத்திரை. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி என்ற நான்கு நதி களின் கரையோரங்களில் அமைந்துள்ள புனித தலங்களில் கும்ப மேளா நடைபெறுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மன்மோகன் சிங்கின் வியக்கவைக்கும் கல்வித்தகுதி: வெளிநாடுகளில் பட்டங்கள் பெற்றவரின் உயரிய பதவிகள்! https://ift.tt/nL43Mbw

படம்
புதுடெல்லி : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கல்வித்தகுதி வியக்க வைக்கும் வகையில் உள்ளது. வெளிநாடுகளின் கல்வி நிலையங்களில் பல பட்டங்கள் பெற்றவர், இந்திய அரசின் பல உயரியப் பதவிகளையும் வகித்துள்ளார். வியாழக்கிழமை (டிச.26) இரவு காலமான முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் செப்டம்பர் 26, 1932 அன்று பஞ்சாபில் பிறந்தவர். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை முறையே 1952 மற்றும் 1954ல் பெற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘பலவீனமான பிரதமர்’ என விமர்சிக்கப்பட்ட மன்மோகன் சிங்: அணுசக்தி ஒப்பந்தம் விவகாரத்தில் சாதித்தார்! https://ift.tt/X9nB82e

படம்
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தனது 92 வயதில் காலமானார். பலவீனமானப் பிரதமர் என விமர்சிக்கப்பட்ட அவர், அணுகுண்டு ஒப்பதம் விவகாரத்தில் சாதித்து காட்டினார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை (டிச.26) மாலை தனது அரசு குடியிருப்பில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால், இரவு சுமார் 8 மணிக்கு அவர் டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கும்பமேளாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்: உ.பி. போலீஸார் வழக்கு பதிவு https://ift.tt/SBMft5w

படம்
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் தொடங்கவுள்ள மகா கும்பமேளாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஆண்டுதோறும் கும்பமேளாவும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இங்குள்ள திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டங்ஸ்டன் சுரங்கம் குறித்து மறு ஆய்வு செய்ய ஜிஎஸ்ஐ-க்கு மத்திய அரசு பரிந்துரை: தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு https://ift.tt/GOB7nR8

படம்
புதுடெல்லி: மதுரை மாவட்​டத்​தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து மறு ஆய்வு செய்​யு​மாறு ஜிஎஸ்​ஐ-க்கு மத்திய அரசு பரிந்​துரை செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளி​யிட்​டுள்ள அறிவிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மேலூர் அருகே​யுள்ள தெற்​குத் தெரு, முத்து​வேல்​பட்டி பகுதி​களில் டங்ஸ்​ட​னுக்கான புவி​யியல் குறிப்​பாணை (ஜிஎஸ்ஐ) 2021 செப். 14-ல் தமிழ்​நாடு அரசிடம் ஒப்படைக்​கப்​பட்​டது. அதேநேரத்​தில், டங்ஸ்டன் போன்ற முக்கிய கனிமங்களை ஏலம்விட மாநில அரசுக்கு அதிகாரம் வழங்​கப்​பட்​டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூர், கேரளா உள்ளிட்ட 5 மாநில ஆளுநர்கள் மாற்றம் - குடியரசுத் தலைவர் உத்தரவு https://ift.tt/fJnOGmd

படம்
புதுடெல்லி: மணிப்பூர் மாநில ஆளுநராக முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பல்வேறு மாநில ஆளுநர்கள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்த உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார். ஆளுநர் நியமனம் குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை தரப்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒடிசா மாநில ஆளுநர் ரகுபர் தாஸின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இந்த சூழலில் மிசோரம் மாநில ஆளுநர் ஹரி பாபு கம்பம்பட்டி, ஒடிசா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“தன்னை ஒரு சூப்பர் ஸ்டாராக நினைக்கிறார் ரேவந்த் ரெட்டி” - அல்லு அர்ஜுனுக்கு அண்ணாமலை ஆதரவு! https://ift.tt/XwT0J2l

படம்
சென்னை: தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நினைத்துக் கொள்கிறார். இப்போது கூட அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று (டிச.24) செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பேட்டி ஒன்றை பார்த்தேன். தெலங்கானாவில் சூப்பர் ஸ்டார் ஆவதற்காக அவர் போட்டி போடுகிறார் என்று நினைக்கிறேன். அல்லு அர்ஜுனை விட தான் பெரிய சூப்பர் ஸ்டார் என்று காட்டிக் கொள்ள அவர் இவ்வாறு செய்கிறார். தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்று அவர் நினைத்துக் கொள்கிறார். இப்போது கூட அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வங்கதேச இந்துக்கள் மீது தாக்குதலை நிறுத்த முன்னாள் நீதிபதிகள், தூதர்கள் 685 பேர் கடிதம் https://ift.tt/vm92MIZ

படம்
வங்கதேசத்தில் நடத்தப்படும் இந்துக்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று வங்கதேச நாட்டு மக்களுக்கு 685 முன்னாள் நீதிபதிகள், தூதர்கள் உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளனர். வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், அங்குள்ள இந்து கோயில்களும் தாக்கப்பட்டன. இதனால் அங்கு வசிக்கும் இந்துக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்களில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பரஸ்பர நிதி சங்கத்தைப் போல தேசிய ஓய்வூதிய திட்டத்தை ஊக்குவிக்க புதிய சங்கம் தொடக்கம் https://ift.tt/pr17U8s

படம்
பரஸ்பர நிதி சங்கத்தைப் போல தேசிய ஓய்வூதிய திட்டத்தை ஊக்குவிப்பதற்காக புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. பரஸ்பர நிதி நிறுவனங்களை இந்திய பங்குச் சந்தை வாரியம் கட்டுப்படுத்துகிறது. அதேநேரம் பரஸ்பர நிதி திட்டங்களை ஊக்குவிக்க பரஸ்பர நிதி சங்கம் (ஆம்பி) செயல்படுகிறது. இதுபோல, தேசிய ஓய்வூதிய நிதியை (என்பிஎஸ்) நிர்வகிக்கும் நிறுவனங்களை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (பிஎப்ஆர்டிஏ) கட்டுப்படுத்துகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் வழக்கு https://ift.tt/xeHT5qf

படம்
வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல் முறையாக போட்டியிட்ட பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார். இந்நிலையில், இதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீர் மக்களின் 20 ஆண்டு கால கனவை நனவாக்கும் திட்டம்: குமரியில் இருந்து கடைக்கோடி வரை ரயிலில் பயணிக்கும் காலம் கனிந்தது  https://ift.tt/XBGcdk8

படம்
இமயமலையில் அமைந்துள்ள குன்றுகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் 272 கி.மீ. தொலைவுக்கான ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இவற்றில், மீதமுள்ள 17 கி.மீ. ரயில் பாதை அமைக்கும் பணி ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளது. இதன்மூலம்,காஷ்மீர் மக்களுக்கு விரைவில் தடையின்றி நேரடி ரயில் சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பாதையில், செனாப் ரயில் பாலம் மிகப்பெரிய சாதனை மைல் கல்லாக அமைந்துள்ளது. நாட்டின் வடகோடியில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் உலகின் மிக உயர்ந்த பனிமலையான இமயமலை மட்டுமின்றி, சிறிய, பெரிய அளவிலான மலைகள், ஏற்ற, இறக்கத்துடன் கூடிய பள்ளத்தாக்குகள், ஆறுகள் குறுக்கும் நெடுக்குமாக செல்கின்றன. இதனால் இங்கு மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து தருவதே சவாலான காரியமாக உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உள்நாட்டில் மிக நவீனமாக தயாரிக்கப்பட்ட நீல்கிரி, சூரத் போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு https://ift.tt/if7I34R

படம்
மும்பை: கடற்படை பயன்பாட்டுக்காக பி17ஏ கிளாஸ் மற்றும் பி15பி கிளாஸ் கப்பல்கள் தயாரிக்க மும்பையில் உள்ள மசகான் டாக்ஸ் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இந்த இரு கப்பல்களின் வடிவமைப்பை இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவு உருவாக்கி கொடுத்தது. அதன்படி போர்க்கப்பல் மேற்பார்வை குழு கண்காணிப்பில், உலகத்தரத்துக்கு இணயைாக இந்த 2 போர்க்கப்பல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. நீல்கிரி கப்பல் கடலில் எந்த சூழ்நிலையிலும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பல் எதிரிநாட்டு ரேடார்களில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் நவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்கள், போர்க்கப்பல்கள், ஏவுகணைகள், விமானங்கள் நெருங்கினால் இதில் உள்ள சென்சார் கருவிகள் உடனடியாக கண்டுபிடித்து எச்சரிக்கை விடுக்கும். அவற்றை தாக்குதவதற்கு தேவையான அனைத்து ஆயுதங்களும் இந்த கப்பலில் உள்ளன. இந்த போர்க்கப்பலுக்கு உதவியாக எந்த துணை போர்க்கப்பல்களும் செல்லத் தேவையில்லை. எங்கும் தனியாக செல்லும்...

முதல்வர் பட்னாவிஸ் வசம் உள்துறை: ஷிண்டேவுக்கு பொதுப் பணித்துறை | மகாராஷ்டிரா அமைச்​சர்​களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு https://ift.tt/pe3rIQG

படம்
மும்பை: மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சனிக்கிழமை அன்று தனது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்துள்ளார். இதில் யாருக்கு எந்த துறை என்பதை பார்ப்போம். முக்கிய துறையான உள்துறையை தன்வசமே வைத்துக் கொண்டுள்ளார் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ். இதோடு எரிசக்தி, சட்டம் மற்றும் நீதித்துறை, பொது நிர்வாகத் துறை, தகவல் மற்றும் விளம்பரத் துறைகளையும் அவர் கவனித்துக் கொள்வார் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ம.பி.யில் கான்ஸ்டபிள் வீட்டில் ரூ.2.5 கோடி ரொக்கம் பறிமுதல்: கேட்பாரற்று கிடந்த காரில் ரூ.40 கோடி தங்கம் https://ift.tt/rUkqCKs

படம்
போபால்: ம.பி.​யில் பல்வேறு இடங்​களில் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, லோக் ஆயுக்தா சிறப்பு போலீ​ஸார் திடீர் சோதனை நடத்தி வருகின்​றனர். இந்நிலை​யில், போபாலின் மிண்​டோரி வனப் பகுதி​யில் கேட்பாரற்று கிடந்த காரில் இருந்து 52 கிலோ தங்கத்தை நேற்று பறிமுதல் செய்​தனர். போபாலில் திரிசூல் கன்ஸ்ட்ரக் ஷன், குவாலிட்டி குரூப், இஷான் குரூப் உட்பட 51 இடங்​களில் வருமான வரித் துறை​யினர் நடத்திய சோதனை​யில் இந்தத் தங்கம் கண்டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது. கேட்பாரற்று கிடந்த கார் போலீ​ஸாரால் தேடப்​படும் பில்டர் ஒருவரின் பெயரில் உள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெங்களூருவில் த‌மிழ்ப் புத்தகத் திருவிழா தொடங்கியது: இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் தொடங்கி வைத்தார் https://ift.tt/B1XrQ2J

படம்
பெங்களூரு: பெங்களூருவில் 3-வது தமிழ்ப் புத்தகத் திருவிழாவை இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் நேற்று தொடங்கி வைத்தார். கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக பெங்களூருவில் உள்ள சிவாஜிநகர் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 3-வது தமிழ்ப்புத்தகத் திருவிழாவை இஸ்ரோ முன்னாள் தலைவர் விஞ்ஞானி கே.சிவன் நேற்று தொடங்கி வைத்தார். இதன் தொடக்க விழாவில் பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர்வி.ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ், தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உகாண்டாவில் வேகமாக பரவும் ‘டிங்கா டிங்கா’ வைரஸ்: உடல் நடுக்கம் காரணமாக நடனமாடுவது போன்ற பாதிப்பு

படம்
உகாண்டா நாட்டில் புதுவிதமான டிங்கா டிங்கா என்ற வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது அதிக அளவில் பெண்கள், குழந்தைகளை தாக்குவதாகத் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்ந்து நடனமாடிக் கொண்டே இருக்கின்றனராம். கரோனாவை தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான வைரஸ் தொற்றுகள் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் பெண்கள் மற்றும் சிறுமிகளை தாக்கும் புதிய வைரஸ் ஒன்று உகாண்டாவில் பரவி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்திற்கு பரேலியின் முஸ்லிம் மவுலானா ஆதரவு: கோயில் - மசூதி விவகாரத்தில் அறிக்கை https://ift.tt/tcuIrgJ

படம்
புதுடெல்லி: கோயில் - மசூதி விவகாரங்களுக்கு இடமில்லை என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோஹன் பாக்வத் கருத்துக்கு பரேலியின் முஸ்லிம் மவுலானா ஆதரவளித்துள்ளார். அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தலைவரான அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். உத்தரபிரதேசத்தின் சம்பல் ஜாமா மசூதி, கோயில் இடித்துக் கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இதை தொடர்ந்து மேலும் பல மசூதிகள் மற்றும் அஜ்மீர் தர்கா, கோயில்களை இடித்து கட்டப்பட்டதாகப் புகார்கள் கிளம்பின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அம்பேத்கர் பற்றிய அமித் ஷா பேச்சை நீக்க எக்ஸ் தளத்துக்கு அழுத்தம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு https://ift.tt/H93UYtF

படம்
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதை எக்ஸ் வலைதளத்தில் இருந்து நீக்க கோரி அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், சமூக ஊடக மற்றும் டிஜிட்டல் தள தலைவர் சுப்ரியா ஸ்ரீநடே கூறியுள்ளதாவது: மாநிலங்களவையில் அம்பேத்கரை அவமரியாதை செய்யும் வகையில் அமித்ஷா பேசியதை காங்கிரஸ் தலைவர்கள், கட்சியின் சமூக வலைதள நிர்வாகிகள் எக்ஸ் வலைதளத்தில் பகிரந்துள்ளனர். இந்த நிலையில், அமித் ஷா பேசிய பகிர்வை எக்ஸ் வலைதளத்திலிருந்து நீக்க கோரி மத்திய அரசிடம் இருந்து அழுத்தம் வந்துள்ளதாக அந்த நிறுவனம் எங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய விவகாரங்களில் தீவிர ஆர்வம் காட்டும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் நோக்கம் என்ன? https://ift.tt/pa1Ai2T

படம்
ஜார்ஜ் சோரஸ்... வயது 94. அமெரிக்​கா​வில் செல்​வாக்​குள்ள தொழில​திபர். கோடிக்​கணக்​கில் பணம் சம்பா​தித்து வைத்​துள்ளார். அதை வைத்து அறக்​கட்டளை என்ற பெயரில் பணத்தை வாரி இறைக்​கிறார். ஆனால், பல நாடு​களில் இவரது பணம் பல வேலைகளை செய்​வதாக கூறுகின்றனர். நாடாளு​மன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்​கிய​தில் இருந்து தொழில​திபர் அதானிக்கு எதிராக அமெரிக்க நீதி​மன்​றத்​தில் வழக்கு பதிவு செய்​யப்​பட்டது தொடர்பாக விவா​திக்க வலியுறுத்தி எதிர்க்​கட்​சிகள் நாடாளு​மன்​றத்தை முடக்கிவருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஞ்சாபில் இன்று ரயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு https://ift.tt/KnL6Gf1

படம்
பஞ்சாபில் இன்று ரயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், வேளாண் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், வழக்குகள் வாபஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

யாசகர்கள் இல்லா இந்தூர் நகரம்; தானம் அளித்தால் வழக்கு பதிவு: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு https://ift.tt/HFYpv15

படம்
யாசகர்களுக்கு தானம் அளிப்போர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவின் தூய்மையான நகரமாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் விளங்குகிறது. தொடர்ந்து 6-வது ஆண்டாக இந்த பெருமையை இந்தூர் பெற்றிருக்கிறது. அடுத்த கட்டமாக யாசகர்கள் இல்லாத நகரம் என்ற இலக்கை எட்ட இந்தூர் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தாஜ்மகாலை கட்டியவர்கள் கை வெட்டப்பட்டதா? - யோகியின் சர்ச்சை கருத்துக்கு மறுப்பு https://ift.tt/j95rvRU

படம்
தாஜ்மகாலை கட்டியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிய கருத்துக்கு வரலாற்றாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மும்பையில் கடந்த சனிக்கிழமை உலக இந்துக்கள் பொருளாதார அமைப்பின் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், "பிரதமர் நரேந்திரமோடி, ராமர் கோயிலை கட்டிய கைவினைஞர்கள் மீது மலர்களை தூவி கவுரவப்படுத்தினார். ஆனால் ஆக்ராவில் தாஜ்மகாலை கட்டியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டன. அதுபோல், மிகவும் உயரிய வகை துணிகளை நெய்ந்தவர்களின் கைகளும் அக்கால ஆட்சியாளர்களால் துண்டிக்கப்பட்டன. இதனால் அந்த பாரம்பரியமிக்க துணி வகைகள் முற்றிலும் அழிந்துவிட்டன" என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியர்கள் சுற்றுலா விசா இல்லாமல் ரஷ்யா செல்ல இரு நாடுகளும் பேச்சு https://ift.tt/tiaTpcq

படம்
புதுடெல்லி: இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல சம்பந்தப்பட்ட நாட்டின் விசா பெற வேண்டும். இந்நிலையில், பிரதமர் மோடி அரசு சுற்றுலா துறையை மேம்படுத்த பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தற்போது 62 நாடுகளுக்கு விசா பெறாமல் இந்தியர்கள் சுற்றுலா சென்று வர முடியும். அந்த பட்டியலில் ரஷ்யாவும் இணைய உள்ளது. விசா இல்லாமல் ரஷ்யாவுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அடுத்த ஆண்டுக்குள் இது அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சத்தீஸ்கரில் 30 நக்சலைட்கள் சரண்: மத்திய அமைச்சர் அமித் ஷா மகிழ்ச்சி https://ift.tt/yEFRamB

படம்
ஜக்தால்​பூர்: சத்தீஸ்கர் மாநில காவல்​துறை​யின் 25 ஆண்டுகால தன்னலமற்ற சேவை மற்றும் அர்ப்​பணிப்பை அங்கீகரித்து, நேற்று முன்​தினம் ‘குடியரசுத் தலைவரின் காவல் வண்ண' விருதுகள் வழங்கி கவுரவிக்​கப்​பட்டன. நக்சல்​களுக்கு எதிரான காவல்​துறை​யின் நடவடிக்கை, மாநிலத்​தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவர்கள் மேற்​கொண்ட அயராத முயற்சிகளை அங்கீகரித்து இந்த விருதுகள் வழங்​கப்​பட்டன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜக்தால்​புருக்​குச் சென்று, சரணடைந்த 30 நக்சல்கள் மற்றும் அங்கு வசிக்​கும் மக்களைச் சந்தித்​துப் பேசினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விழா​வில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘‘வரும் 2026 மார்ச் மாதத்​துக்​குள் நக்சலைட்டுகளை மாநிலத்​தில் இருந்து ஒழிக்க உறுதி பூண்​டுள்​ளோம். என் வாழ்​வில் இன்று மிகவும் மகிழ்ச்​சியான நாளாகும். சரணடைந்த உங்களை விட, உங்கள் குடும்பத்​தாரை விட நான் இன்று மிகவும் மகிழ்ச்​சியாக இருக்​கிறேன்’’ என்றார்​. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & Wo...

கனடாவில் வெறுப்பு காரணமாக 3 இந்திய மாணவர்கள் கொலை

படம்
கனடாவில் இந்திய மாணவர்கள் 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வெறுப்பு குற்றம் காரணமாக இந்த சம்பவங்கள் நடைபெறுவதால், இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு கனடா ஆதரவு தெரிவித்து, இந்தியா மீது குற்றம் சுமத்தியதால் இந்தியா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனடா நாட்டு மக்கள் அல்லது காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு விசாக்கள் வழங்குவதை இந்தியா மறுக்கிறது என கனடா ஊடகத்தில் செய்தி வெளியாகின. இதன் காரணமாக ஏற்பட்ட வெறுப்பில் கனடாவில் 3 இந்திய மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜஸ்தானில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் ஹெலிகாப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு 6 பேருக்கு பொருத்தம் https://ift.tt/G4FmzO6

படம்
ராஜஸ்தானில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் ஹெலிகாப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு 6 பேருக்கு பொருத்தப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜலவார் மாவட்டம் மன்புரா பிபாஜி நகரைச் சேர்ந்தவர் விஷ்ணு பிரசாத். 33 வயதான இவர் கடந்த 10-ம் தேதி உள்ளூரில் ஏற்பட்ட சண்டையில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது மூளை செயலிழந்துவிட்டதாக 12-ம் தேதி மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து, ஜலவார் மாவட்ட ஆட்சியர் அஜய் சிங் ரத்தோர் மற்றும் மூத்த மருத்துவர்கள் முன்னிலையில், விஷ்ணு பிரசாத் தந்தை மற்றும் மனைவியுடன் உடல் உறுப்பு தானம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட குடும்பத்தினர், பிரசாத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேசிய மருத்துவப் பதிவேடு வலைதளத்தில் 6,500 மருத்துவர்கள் மட்டுமே பதிவு https://ift.tt/t2USAuT

படம்
தேசிய மருத்துவப் பதிவேடு வலைதளம் தொடங்கப்பட்டு மூன்றரை மாதங்கள் ஆன நிலையில் தற்போது 6,500-க்கும் குறைவான மருத்துவர்களே அதில் பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் மருத்துவப் பணியாற்ற தகுதியான அனைத்து எம்பிபிஎஸ் மருத்துவர்களையும் பதிவு செய்வதற்காக தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) தேசிய மருத்துவப் பதிவேடு (என்எம்ஆர்) போர்ட்டலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார். என்எம்ஆரின் தனித்தன்மை என்னவெனில் அது மருத்துவர்களின் ஆதார் ஐடியுடன் இணைக்கப்படும். இது மருத்துவரின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் என்று சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரளாவில் அரையாண்டு தேர்வு வினாத்தாள் கசிவு https://ift.tt/8kCqAQY

படம்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த வியாழக்கிழமை பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வும் பிளஸ் 1 கணிதத் தேர்வும் நடைபெற்றன. இந்த இரு தேர்வுகளின் வினாத்தாள்களும் கடந்த புதன்கிழமை வாட்ஸ்அப், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சில தனியார் டியூசன் மையங்கள் தங்களிடம் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வினாத்தாளை முன்கூட்டியே வினாத்தாள்களை வழங்கியிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து கேரள கல்வித் துறை அமைச்சர் சிவன் குட்டி கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

யார் இந்த ஜக்தீப் தன்கர்? - எதிர்க்கட்சிகளை கொந்தளிக்க வைக்கும் மாநிலங்களவைத் தலைவரின் பின்புலம் https://ift.tt/7EWwhzD

படம்
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத நிழ்வாக, குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப் தன்கரை பதவியில் இருந்து நீக்கக் கோரி, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதையொட்டி, அவையின் செயலாளரிடம் எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் வழங்கிய நோட்டீஸில், ‘அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது அடிக்கடி குறுக்கிடுகிறார். முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த அனுமதி கொடுக்க மறுக்கிறார். நாடாளுமன்ற விதிகளை மீறுகிறார். மாநிலங்களவையில் நியாயமற்றவராகவும், பாரபட்சமாகவும் நடந்து கொள்கிறார். தனது அரசியலமைப்பு பதவிக்கு ஏற்றவாறு அவர் நடந்து கொள்ளவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

யுஏஇ துணை பிரதமர் ஷேக் அப்துல்லாவுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை https://ift.tt/0JPcRZk

படம்
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் குறித்து ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) துணை பிரதமர் ஷேக் அப்துல்லா உடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது இந்தியா- மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (ஐஎம்இசி) திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒரே நாடு ஒரே தேர்தலால் நாட்டின் ஜிடிபி அதிகரிக்கும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை https://ift.tt/5l1GaxL

படம்
புதுடெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் அமல்படுத்தப்பட்டால் நாட்டின் ஜிடிபி 1 முதல் 1.15 சதவீதம் அதிகரிக்கக் கூடும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராம்நாத் கோவிந்த் பேசியதாவது, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் அமல்படுத்தப்பட்டால் அது நாட்டின் பொருளாதாரத்தின் மிகப்பெரிய அளவில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1 முதல் 1.15 சதவீதம் அதிகரிக்கக் கூடும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவின் ஒரே இலவச ரயில் https://ift.tt/rJ0olwc

படம்
இமாச்சல பிரதேசம், பிலாஸ்பூர் மாவட்டம், பக்ரா பகுதியில் சட்லஜ் நதியின் குறுக்கே கடந்த 1948-ம் ஆண்டு அணை கட்டும் பணி தொடங்கியது. இதற்காக பஞ்சாபின் நங்கல் பகுதியில் இருந்து சிமென்ட், கற்கள் அணை கட்டும் பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டன. கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்ல 1948-ம் ஆண்டில் பஞ்சாபின் நங்கல், இமாச்சல பிரதேசத்தின் பக்ரா இடையே 13 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. கடந்த 1963-ம் ஆண்டு வரை பக்ரா அணை கட்டும் பணி நடைபெற்றது. இந்த காலத்தில் நங்கல் பகுதியில் இருந்து பக்ராவுக்கு நாள்தோறும் ரயில் சேவை இயக்கப்பட்டது. இதில் தொழிலாளர்கள் இலவசமாக பயணம் செய்தனர். கனரக கட்டுமான பொருட்கள் ரயிலில் எளிதாக எடுத்துச் செல்லப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்க ஆதரவு: அரசியல் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி நன்றி https://ift.tt/MFNrJ1C

படம்
இண்டியா கூட்டணியின் தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பேச்சு எதிர்க்கட்சிகளிடையே அண்மையில் வலுத்துள்ளது. இந்த நிலையில், இண்டியா கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஏற்க வேண்டும் என்று பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், ஆதரவளிக்கும் அனைத்து தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக மம்தா பானர்ஜி முதன்முறையாக மனம் திறந்துள்ளார். இதுகுறித்து மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கூறுகையில், “இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்று வழிநடத்த எனக்கு ஆதரவளித்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள், அவர்களது கட்சிகள் நலமுடன் இருக்கட்டும். அதேபோன்று இந்தியாவும் நன்றாக இருக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நகைச்சுவை நடிகர் சுனில் பாலை கடத்தி ரூ.7.5 லட்சம் பறித்த கும்பல்: மும்பை செல்ல ரூ.20,000 கொடுத்து அனுப்பி வைத்தனர் https://ift.tt/ytxg0fm

படம்
பாலிவுட் நகைச்சுவை நடிகர் சுனில் பாலை கடத்திய மர்ம கும்பல் அவரிடமிருந்து ரூ.7.5 லட்சம் பணத்தை பிணைத்தொகையாக பெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் சுனில் பால். திரைப்படங்களில் நடித்து வரும் இவர், பல்வேறு நகரங்களில் தனியாக நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவரை அண்மையில் 5 பேர் கொண்ட கும்பல் அணுகி, உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்று கூறியுள்ளது. இதற்கு ஒப்புக்கொண்ட சுனில் பால் மும்பையிலிருந்து டெல்லிக்கு அவர்களுடன் சென்றுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெரம்பூர் - வில்லிவாக்கம் இடையே 4-வது ரயில் முனையத்துக்கு ரயில்வே அமைச்சரிடம் திமுக எம்.பி கோரிக்கை https://ift.tt/log5hQV

படம்
புதுடெல்லி: பெரம்பூர் – வில்லிவாக்கம் இடையே சென்னையின் 4 ஆவது முனையம் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான கோரிக்கை மனுவை இன்று மத்திய ரயில்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் திமுக எம்பி இரா.கிரிராஜன் டெல்லியில் அளித்தார். இது குறித்து மாநிலங்களவை எம்பியான கிரிராஜன் மத்திய அமைச்சர் அஸ்வினிக்கு அளித்த மனுவின் விவரம் பின்வருமாறு: “சென்னை மாநகரத்தில் பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக ரயில் போக்குவரத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் அவசியமாக உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிக்கணக்கான மக்கள் மருத்துவ தேவை, வியாபாரம், கல்வி, வணிகம், கோவில் தரிசனம், சுற்றுலா ஆகிய தேவைகளுக்காக வருகிறார்கள். இதனால் அதிக வழி தடங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிருந்து ரயில்கள் இயக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்