இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மொரிஷியஸில் புதிய விமான தளம்: பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார் https://ift.tt/JO9yUks

படம்
போர்ட் லூயிஸ்: மொரிஷியஸின் அகலேகா தீவில் புதிய விமான தளம், படகுத் துறையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். ஆப்பிரிக்க கண்டத்தின் தென்கிழக்கு கடலோர பகுதியில் மொரிஷியஸ் நாடு அமைந்துள்ளது. தீவு நாடான அங்கு 13 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதில் 70 சதவீதம்பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். அந்த நாட்டு மக்கள் தொகையில் தமிழ் வம்சாவளியினர் 6 சதவீதம் பேர் உள்ளனர். மொரிஷியஸின் தற்போதைய பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரவிந்த் ஜுக்நாத் பதவி வகிக்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ரூ.75,021 கோடி சோலார் திட்டத்துக்கு ஒப்புதல் https://ift.tt/BydROxG

படம்
புதுடெல்லி: நாடு முழுவதும் ரூ.75,021 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் ‘பிரதமரின் சூரிய வீடு: இலவச மின்சாரம்’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. காரிப் பருவ விவசாயத்துக்கு ரூ.24,420 கோடி மதிப்பிலான உரமானியத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில்பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ‘பிரதமரின் சூரிய வீடு: இலவசமின்சாரம்’ திட்டத்தை, பிரதமர் மோடி பிப்ரவரி 13-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ், வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனல் பொருத்த முன்வரும் 1 கோடி வீடுகளுக்கு ரூ.30,000 முதல் ரூ.78,000 வரை மானியம் அளிக்கப்படும். 1 கிலோவாட் திறன்உள்ள சோலார் பேனல் பொருத்துவோருக்கு ரூ.30 ஆயிரம், 2 கிலோவாட்டுக்கு ரூ.60 ஆயிரம், 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல் ரூ.78 ஆயிரம் மானியம் கிடைக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் அனைத்து பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு நிலையான கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் https://ift.tt/zp2w8hm

படம்
புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள பெருநகரங்கள், நகரங்கள், சிறு நகரங்களில் சிகிச்சைக்கான நிலையான கட்டணத்தை அமல்படுத்த வேண்டும், இல்லையென்றால் நாங்கள் அமல்படுத்துவோம் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மருத்துவமனைகளுக்கான மத்திய அரசு விதிமுறைகள் 2012- 9-வது பிரிவின் கீழ் சிகிச்சைகளுக்கு நோயாளிகளிடமிருந்து வசூலிக்கும் கட்டணத்தை நிர்ணயம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பொதுவாழ்வில் வெளிப்படைத்தன்மைக்கான வீரர்கள் அமைப்பு என்ற தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இமாச்சலில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: ஆளுநரை சந்தித்து பாஜக தலைவர்கள் வலியுறுத்தல் https://ift.tt/2dY5O4D

படம்
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு காங்கிரஸைச் சேர்ந்த 6 எம்எல்ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்தனர். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜிந்தர் ராணா, ரவி தாக்கூர் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், பாஜக ஆளும் ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் உள்ள தேவிலால் மைதானத்தில் இருந்து அந்த 6 எம்எல்ஏ.க்களும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை காலை சிம்லாவுக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டதாக ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய அரசு ஊழியர் பயிற்சி நிறுவனங்களை தர மதிப்பீடு செய்ய கியூசிஐ, ஐகேர் தேர்வு https://ift.tt/GQ0R8sn

படம்
சென்னை: கர்ம யோகி திட்டத்தின் கீழ், மத்திய அரசின் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கு கியூசிஐ (QUALITY COUNCIL OF INDIA) மற்றும் ஐகேர் (ICARE) ஆகிய இரண்டு தரமதிப்பீட்டு நிறுவனங்களை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள அரசுபயிற்சி நிறுவனங்களை, தரமதிப்பீடு செய்யும் பணி கியூசிஐ நிறுவனத்துக்கும், தெற்கு, மேற்கு,கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் உள்ள அரசு பயிற்சி நிறுவனங்களை தர மதிப்பீடு செய்யும் பணி ஐகேர் நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜார்க்கண்டில் பயணிகள் மீது ரயில் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு https://ift.tt/Eg4X6Kt

படம்
ஜம்தாரா: ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் உள்ள கலா ஜாரியா ரயில் நிலையம் அருகே பயணிகள் மீது ரயில் மோதிய விபத்தில் இதுவரை இருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனை அந்த மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது. வித்யாசாகர் மற்றும் காசிதர் இடையே செல்லும் ரயில் (வண்டி எண் 12254, அங்கா எக்ஸ்பிரஸ்) புதன்கிழமை இரவு 7 மணி அளவில் கலா ஜாரியா ரயில் நிலையம் அருகே நின்றுள்ளது. அந்த ரயிலின் சங்கிலி இழுத்தப்பட்டுள்ள காரணத்தால் நின்றுள்ளது. இந்த சூழலில் அந்த வண்டியில் இருந்து பயணிகள் சில கீழ் இறங்கியுள்ளனர். அவர்கள் மீது மற்றொரு ரயில் மோதியது. இதில் இதுவரை இரண்டு பேரில் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதர பயணிகளின் நிலை குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. இதனை ரயில்வே நிர்வாகம் உறுதி செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவைப் போல சீன இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்: அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

படம்
வாஷிங்டன்: சீன இறக்குமதிக்கு இந்தியா தடைவிதித்துள்ளதைப் போல அமெரிக்காவும் பரிசீலிக்க வேண்டும் என அமெரிக்க எம்.பி.க்கள் இருவர் அதிபர் ஜோ பைடனிடம் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து ஷரோட் பிரவுண் மற்றும் ரிக் ஸ்காட் ஆகிய இரண்டு எம்.பி.க்கள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: சீனாவிலிருந்து நாள்தோறும் வரி விலக்கு பிரிவில் ஏராளமான பொருட்கள் அமெரிக்காவுக்குள் இறக்குமதியாகின்றன. உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க சீன அரசு முக்கிய துறைகளுக்கு மானியங்களை வழங்கி வருவதுடன், தொழிலாளர்களுக்கான செலவினமும் அங்கு குறைவாக உள்ளது. இதனால், மலிவு விலையில் சீன பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. இதனால், அவர்களுடன் போட்டியிட முடியாத சூழலில் அமெரிக்க உற்பத்தியாளர்கள் உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி https://ift.tt/9dG7oYz

படம்
திருவனந்தபுரம்/பெங்களூரு: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம்விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று வருகை தந்தார். அவரை கேரள ஆளுநர் ஆரிஃப் கான், முதல்வர் பினராயி விஜயன், இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கு ரூ.1,800 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ட்ரைசோனிக் காற்று சுரங்கம், மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில் கட்டப்பட்டுள்ள செமி கிரையோஜெனிக் ஒருங்கிணைந்த இன்ஜின் மற்றும் நிலை பரிசோதனை மையம், ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் பிஎஸ்எல்வி ஒருங்கிணைப்பு வசதி ஆகிய 3 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘சட்டப்பேரவை தேர்தலில் 175 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்’ - ஜெகன்மோகன் பேச்சு https://ift.tt/zNVypqA

படம்
விஜயவாடா: எதிர்வரும் மக்களவை தேர்தலுடன் ஆந்திர மாநில த்தில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள 175 தொகுதிகளையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெல்ல வேண்டும் என அக்கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி பேசியுள்ளார். தனது கட்சியின் தொண்டர்கள் மத்தியில் இதனை அவர் பேசியுள்ளார். “வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் தொண்டர்கள் ஈடுபட வேண்டும். கடந்த தேர்தலில் நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். அதை சுட்டிக்காட்ட வேண்டும். மக்கள் நல திட்டங்கள் தொடர மீண்டும் நாம் ஆட்சி அமைப்பது அவசியம் என்பதை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஷேக் ஷாஜகானை கைது செய்யுங்கள்: கொல்கத்தா உயர் நீதிமன்றம் https://ift.tt/nJquCvh

படம்
கொல்கத்தா: மேற்குவங்க பொது விநியோக திட்டத்தில் ரூ.10,000 கோடி அளவுக்கு ஊழல், சந்தேஷ்காலி பகுதியில் பழங்குடியின பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உட்பட பல்வேறு வழக்குகள் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷேக் ஷாஜகான் மீது உள்ளன. சந்தேஷ்காலியில் போராட்டம் பெரிதானதால் அவர் தலைமறைவானார். இந்த சூழலில் சந்தேஷ்காலி விவகாரம் தொடர்பாக சுதந்திரமான அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பாஜக சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சிவஞானம், நீதிபதி ஹிரண்மோய் பட்டாச்சார்யா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பாஜக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரியங்கா கூறும்போது, “ஷாஜகானால் பாதிக்கப்பட்ட பெண்களை போலீஸார், ஆளும் திரிணமூல் காங்கிரஸார் மிரட்டுகின்றனர். ஷேக் ஷாஜகான் இதுவரை கைது செய்யப்படவில்லை. அதற்கு உயர் நீதிமன்றம்தான் காரணம் என்று காவல்துறை கூறுகிறது. இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்’’ என்று கோரினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tami...

ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் விடுவிப்பு

படம்
புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் பலர் பாதுகாவல் உதவியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் உக்ரைனுடனான எல்லையில் ரஷ்ய வீரர்களுடன் இணைந்து சண்டையில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய சில இந்தியர்கள் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் 553 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டம்: ரூ.41,000 கோடி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி https://ift.tt/DIzqTVN

படம்
புதுடெல்லி: நாடு முழுவதும் ரூ.41,000 கோடியில் 2,000 ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இதில் அம்ருத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 553 ரயில் நிலையங்கள் உலகத் தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளன. நாடு முழுவதும் நாள்தோறும் 2 கோடி பேரும், ஓராண்டில் 800 கோடி பேரும் ரயில்களில் பயணம் மேற்கொள்கின்றனர். இதை கருத்தில் கொண்டுரயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதியை மேம்படுத்த கடந்த 2023-ம் ஆண்டு ஆஸ்ட் 6-ம் தேதி அம்ருத் பாரத் ரயில் நிலையம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,318 ரயில் நிலையங்களை உலகத் தரத்துக்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெறுப்புப் பேச்சு சம்பவங்களில் பாஜக ஆளும் மாநிலங்களில் 75% பதிவு: ஆய்வுத் தகவல் https://ift.tt/xf83VZ6

படம்
புதுடெல்லி: பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு சம்பவங்களில் 75 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுத் தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை சார்ந்து நேரடியாக 36 சதவீதமும், முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களை குறிவைக்கும் பேச்சு 25 சதவீதமும் இதில் அடங்கும். கடந்த 2023-ல் மட்டும் இந்தியாவில் முஸ்லிம்களை குறிவைத்து 668 வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனை அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ‘இந்தியா ஹேட் லேப்’ எனும் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டதன் மூலம் தெரிவித்துள்ளது. ‘இந்தியாவில் வெறுப்பு பேச்சு நிகழ்வுகள்’ என்ற தலைப்பில் இது வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டின் முதல் பாதியில் 223 மற்றும் பிற்பாதியில் 413 என வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் பதிவாகி உள்ளதாகவும் தகவல். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ரூ.52,250 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் https://ift.tt/akeT2Us

படம்
துவாரகா / ராஜ்கோட்: குஜராத்தின் துவாரகாவில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி ரூ.4,150 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். ஓகா மற்றும் பேட் துவாரகா பகுதியை இணைக்கும் சுதர்சன் சேது திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இது நாட்டின் மிக நீளமான கேபிள் பாலம் ஆகும். ராஜ்கோட் - ஓகா, ராஜ்கோட் - ஜெதல்சார் - சோம்நாத் மற்றும் ஜெதல்சார் - வன்ஜாலியா ரயில் மின்மயமாக்கல் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேசிய கொடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த துனிசிய இமாம் பிரான்ஸிலிருந்து நாடு கடத்தல்

படம்
பாரிஸ்: பிரான்ஸ் தேசிய கொடி குறித்துஅவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி துனிசிய இமாம் பிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். துனிசியாவைச் சேர்ந்த இமாம் (மத போதகர்) மஹ்ஜூப் மஹ்ஜூபி (52), தெற்கு பிரான்ஸின் பக்னோல்ஸ்-சுர்-செஸ் நகரில் உள்ள ஒரு மசூதியில் மத போதனை செய்துள்ளார். அப்போது, பிரான்ஸின் மூவர்ணக் கொடி என்பது சாத்தானியம் என விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை நாடுகடத்துமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தானுக்கான நீர் ஓட்டம் நிறுத்தம்: ராவி நதி நீரை இந்தியாவே முழுமையாக பயன்படுத்தும் https://ift.tt/DnMRmvG

படம்
புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ராவி நதி ஓடுகிறது. இந்த நதி இந்தியாவுக்கு சொந்தமானது. எனினும், இந்நதியில் இருந்து குறிப்பிட்ட அளவு நீர் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த நதியின் குறுக்கேஷாபூர் கண்டி தடுப்பணையை கட்டும் பணியை இந்தியா மேற்கொண்டு வந்தது. பல்வேறு சிக்கல்களால் அதன் கட்டுமானம் தாமதமானது. பின்னர் கடந்த 2018-ம்ஆண்டு மீண்டும் தடுப்பணை கட்டுமானம் தொடங்கப்பட்டது. தற்போது அதன் கட்டுமானம் முழுமை அடைந்துவிட்டதாகவும், இனி ராவி நதிநீர் பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும்தகவல் வெளியாகியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களவைத் தேர்தலில் அதிக அளவில் வாக்களிக்க முதல் முறை வாக்காளர்கள் திரண்டு வரவேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் https://ift.tt/n8Vs5tB

படம்
புதுடெல்லி: வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் முதல் முறை வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அகில இந்திய வானொலியில் மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 110-வது நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. அதில் பிரதமர் மோடி பேசியதாவது: வரும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாட உள்ளோம். நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பெண்களின் பங்களிப்புக்கு மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பாக இந்த நாள் அமையும். பெண்களுக்கு சம வாய்ப்புகிடைத்தால்தான் உலகம் செழிப்படையும் என்று மகாகவி பாரதியார் கூறியுள்ளார். இந்தியாவில் அனைத்து துறைகளிலும் பெண்கள் சக்தி இப்போது புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வளர்ச்சியில் காங்கிரஸுக்கு அக்கறை இல்லை: பிரதமர் மோடி விமர்சனம் @ சத்தீஸ்கர் https://ift.tt/JVrpPmB

படம்
ராய்ப்பூர்: வளர்ந்த இந்தியா, வளர்ந்த சத்தீஸ்கர் என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி, சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன் முடிந்த சிலதிட்டங்களை தொடங்கி வைத்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.34,400 கோடி ஆகும். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நம் நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கு எண்ணங்கள் பெரியதாக இல்லை. அப்போதைய ஆட்சியாளர்கள் தங்கள் அரசியல் நலன்களை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுத்தார்கள். காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தபோதிலும், நாட்டின் எதிர்காலத்தை கட்டமைக்க அவர்கள் மறந்துவிட்டனர். ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கமாக இருந்தது. நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்றஎண்ணம் அவர்களுக்கு ஒருபோதும் தோன்றவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி. முதல்வரின் கான்வாய் வாகனம் கவிழ்ந்து விபத்து: 9 பேர் காயம் https://ift.tt/OpcR3uU

படம்
லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கான்வாய் வாகனம் சாலையில் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 9 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் காயங்கள் எதுவுமின்றி தப்பினார். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (பிப்.24) மாலை லக்னோ விமான நிலையத்திலிருந்து தனது கான்வாயில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அருண்கன்ச் என்ற பகுதியில் சாலையில் நாய் ஒன்று திடீரென குறுக்கே வந்ததால், ஓட்டுநர் நாயின் மீது மோதிவிடாமல் இருக்க காரை திருப்பியதால், கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்றுகொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதியது. இதனையடுத்து அந்த கார் சாலையில் கவிழ்ந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சளி, உயர் ரத்த அழுத்தத்துக்கான 46 மருந்துகள் தரமற்றவை மத்திய அரசு தகவல் https://ift.tt/kH7Bh5R

படம்
சென்னை: சளி, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 46 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரை, மருந்துகளை மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன. ஆய்வின்போது போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் ரூ.13 ஆயிரம் கோடியில் திட்டங்கள் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் https://ift.tt/bSAytne

படம்
வாராணசி: உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பனாஸ் காசி சங்குல் பால் பதப்படுத்தும் நிலையம், எச்பிசிஎல் நிறுவனத்தின் காஸ் சிலிண்டர் ஆலை, பட்டு ஆடைகளில் அச்சிடும் மையம், சிக்ரா விளையாட்டு அரங்கம், துப்பாக்கி சுடும் மையம் மற்றும் பல்வேறு சாலை திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தேசிய பேஷன் டெக்னாலஜி மையம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் முதியோர்களுக்கான தேசிய மையம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, ஆன்மிக சுற்றுலா திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹைதராபாத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் தெலங்கானா பிஆர்எஸ் பெண் எம்எல்ஏ உயிரிழப்பு https://ift.tt/VjyQNKR

படம்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) எம்எல்ஏ லாஸ்யா நந்திதா பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 36. தெலங்கானாவில் செகந்திராபாத் கன்டோன்மென்ட் தொகுதியில் இருந்து பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் லாஸ்யா நந்திதா. இந்த தொகுதி எம்எல்ஏவாக இருந்தசாயண்ணா, கடந்த ஆண்டுமறைந்ததால், அவரது மகளான நந்திதாவுக்கு பிஆர்எஸ் கட்சி வாய்ப்பு வழங்கியது. இந்நிலையில், எம்எல்ஏ லாஸ்யா நந்திதா, தனது உதவியாளர் அசோக்குடன் ஒரு தர்காவுக்கு சென்றுவிட்டு, மெட்சல் பகுதியில் இருந்து சதாசிவ பேட்டா நோக்கி நேற்று அதிகாலை காரில் வந்துகொண்டிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலகளாவிய பிரபல தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்

படம்
புதுடெல்லி: மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் உலகளாவிய பிரபல தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பை கடந்த ஜனவரி 30-ம் தேதி முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை ஒரு வார காலம் நடத்தியது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக 78 சதவீதம் பேர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவேல் லோபஸ் 65 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். அர்ஜென்டினா அதிபர் ஜாவிர் மிலே 63 சதவீத வாக்குகள் பெற்று 3-ம் இடத்தில் உள்ளார். போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் 52 சதவீத வாக்குகள் பெற்ற 4-ம் இடத்தில் உள்ளார். சுவிட்சர்லாந்தின் வையோலா அம்ஜெர்ட் 51 சதவீத வாக்குகள் பெற்று 5-ம் இடத்தில் உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலகளவில் அமுல் பிராண்ட் முதலிடம் பெற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் https://ift.tt/NpgLfVh

படம்
அகமதாபாத்: அமுல் பிராண்டை உலகளவில் முதலிடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் (ஜிசிஎம்எம்எஃப்) உறுப்பினர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்தார். குஜராத் மாநிலம் மோடேரா பகுதியில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஜிசிஎம்எம்எஃப்-ன் பொன்விழா கொண்டாட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர். பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சரத் பவார் தரப்புக்கு புதிய சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு https://ift.tt/ylNs6zY

படம்
மும்பை: சரத் பவார் தரப்பிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம். அதன்படி சரத் பவார் தரப்புக்கு ‘Man Blowing Turha’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் அஜித் பவார் தரப்பே அசல் தேசியவாத காங்கிரஸ் கட்சி என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன் மூலம் அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அஜித் பவாருக்கே சொந்தம் என தெரிவிக்கப்பட்டது. மேலும், சரத் பவார் தரப்பிலான அணி ‘தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார்’ என்று அறியப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த சூழலில் சரத் பவார் தரப்புக்கு புதிய சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பொதுமக்கள் முன்னிலையில் இரண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய தலிபான்

படம்
காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் பொதுமக்கள் முன்னிலையில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு மரண தண்டனையை தலிபான் நிறைவேற்றியுள்ளது. அந்த நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான பேர் மைதானத்தில் குழுமியிருந்த நிலையில் குற்றவாளிகள் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதே நேரத்தில் கடந்த முறையைப் போல் தங்கள் ஆட்சி இருக்காது என்று அப்போது தெரிவித்தனர். இருந்தும் தங்களது அறிவிப்புக்கு மாறாக அவர்களது செயல்பாடு இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம்; கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி - இஸ்ரோ https://ift.tt/9FWkIL2

படம்
சென்னை: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான சிஇ20 கிரையோஜெனிக் இன்ஜின் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ககன்யான் திட்டத்தின் மூலம்தரையில் இருந்து 400 கிமீ தொலைவுள்ள புவி தாழ் வட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாக திருப்பி அழைத்துவர இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை 2025-ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்குமுன்னதாக பல்வேறு கட்ட பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி, கிரையோஜெனிக் இன்ஜின் பரிசோதனையானது 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி: ஹரியாணா போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர் https://ift.tt/ITPd9tl

படம்
புதுடெல்லி: கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி செல்லும் பேரணியை விவசாயிகள் மீண்டும் தொடங்கினர். அவர்களை கலைக்க ஹரியாணா போலீஸார், துணை ராணுவ படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஓர் இளைஞர் உயிரிழந்தார். மோதலில் 10 போலீஸார், 160 விவசாயிகள் காயம்அடைந்தனர். வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) வழங்குவதாக உத்தரவாதம் அளித்து சட்டம் இயற்றுவது, கடன் தள்ளுபடி உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 13-ம் தேதி தொடங்கினர். சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா (கேஎம்எம்) ஆகிய 2 அமைப்புகள் இப்போராட்டத்தை வழிநடத்துகின்றன. இந்த நிலையில், பஞ்சாப்பில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் ஹரியாணா எல்லை பகுதியான ஷம்பு மற்றும் கன்னவுரி பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், சுமார் 20 ஆயிரம் விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக எல்லை பகுதியிலேயே ம...

கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.340 உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல் https://ift.tt/2FpZobw

படம்
புதுடெல்லி: கரும்பு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.315-ல் இருந்து ரூ.340 என உயர்த்தி உள்ளது மத்திய அரசு. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் உறுதி செய்துள்ளார். அக்டோபர், 2024 முதல் செப்டம்பர், 2025 வரையிலான சர்க்கரைப் பருவத்திற்கான நியாயமான விலை நிர்ணயத்துக்கு இந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் 10.25 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ.340 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 0.1 சதவீத பிழிதிறன் அதிகரிப்புக்கு குவிண்டாலுக்கு ரூ.3.32 உயர்த்தி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் 5 கோடி கரும்பு விவசாயிகள் பலன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சண்டிகர் மேயர் தேர்தல் பாஜக வெற்றி ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/1SruKyG

படம்
புதுடெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளரின் வெற்றியை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சண்டிகர் மாநகராட்சி மன்ற தேர்தல் ஜன.30-ல் நடந்தது. ஆம் ஆத்மி சார்பில் குல்தீப் குமாரும், பாஜக சார்பில் மனோஜ் சோன்கரும் மேயர் பதவிக்கு போட்டியிட்டனர். வாக்குச்சீட்டு அடிப்படையில் நடைபெற்ற இந்த தேர்தலில் 35 பேர் வாக்களித்தனர். மனோஜுக்கு ஆதரவாக ஒரு எம்.பி., 15 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். குல்தீப் குமாருக்கு ஆதரவாக அந்த கட்சியின் 13, காங்கிரஸின் 7 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் அதிகாரி அனில், ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவான 8 வாக்குகள் செல்லாது என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து 16 வாக்குகளை பெற்ற மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரஷ்யா - உக்ரைன் யுத்த களத்தில் போரிட கட்டாயப்படுத்தப்படும் இந்தியர்கள்

படம்
மாஸ்கோ: ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போரில் போரிட இந்தியர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய ராணுவம் சார்பில் ‘ராணுவ உதவியாளர்கள்’ என பணியமர்த்தப்பட்ட இந்தியர்கள் எல்லைப் பகுதியில் துப்பாக்கி ஏந்தி போரிட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளனர். ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கியது. இதில் உக்ரைன் ராணுவத்துக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளை சேர்ந்த தன்னார்வலர்கள், உக்ரைனின் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படையில் அங்கம் வகித்து வருகின்றனர். இந்நிலையில், ரஷ்ய தரப்பில் இந்தியர்கள் சிலர் எல்லையில் போரிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் உத்தர பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதுபான கடைகள் உரிமம் ஊழல் வழக்கில் 6-வது சம்மனுக்கும் கேஜ்ரிவால் ஆஜராகவில்லை https://ift.tt/IAWKH79

படம்
புதுடெல்லி: மதுபான கடைகள் உரிமம் ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு அண்மையில் 6-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த முறையும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை கேஜ்ரிவால் அரசு அமல்படுத்தியது. இதன்படி 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அப்போதைய தலைமைச் செயலாளர், துணை நிலை ஆளுநரிடம் அறிக்கை அளித்தார். அதன்படி சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேயர் தேர்தல் வாக்குச்சீட்டில் ‘எக்ஸ்' குறியிட்டது ஏன்? - சண்டிகர் தேர்தல் அதிகாரியிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி https://ift.tt/VDeomHE

படம்
புதுடெல்லி: சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குச் சீட்டுகளில் 'எக்ஸ்' குறியிட்டது ஏன் என்று தேர்தல் நடத்திய அதிகாரியிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சண்டிகரில் நடந்த மேயர் தேர்தலில் பாஜக 4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் முறைகேடு செய்து பாஜக வெற்றி பெற்றதாக கூறி ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகம் கேலிக்கூத்து ஆக்கப்பட்டுள்ளது என்று கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், மாநகராட்சியின் முதல் கூட்டத்தொடரை காலவரையின்றி தள்ளிவைத்தது. தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மசிஹ் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

MSP விவகாரம்: ‘மத்திய அரசின் முன்மொழிவை நிராகரிக்கிறோம்’ - விவசாய அமைப்புகள் https://ift.tt/ku9mFKZ

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘கேப்டன் இன் கார்ப்பரேட் வொண்டர்லேண்ட்’: கேப்டன் மோகன் ராமின் புதிய புத்தகம் வெளியீடு https://ift.tt/b5mRj4O

படம்
சென்னை: கேப்டன் மோகன் ராம் எழுதிய ‘கேப்டன் இன் கார்ப்பரேட் வொண்டர்லேண்ட்’ (A Captain in Corporate Wonderland) புத்தகம் நேற்றுமுன்தினம் சென்னையில் வெளியிடப்பட்டது. கேப்டன் மோகன் ராம் இந்தியகடற்படையில், போர்க் கப்பல்வடிவமைப்பாளராக பணியாற்றியவர். இந்தியாவின் முதல் சொந்த போர்க் கப்பலான ஐஎன்ஸ் கோதாவரி, இவர் தலைமையில் வடிவமைக்கப்பட்டதாகும். கடற்படையைத் தொடர்ந்து, முகுந்த் ஸ்டீல் நிறுவனத்தில் அவர் இணைந்தார். அங்கு 5 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு 1989-ம் ஆண்டு டிவிஎஸ் சுசூகி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார். கடற்படையில் பணியாற்றிவிட்டு, எந்த முன் அனுபவமும் இல்லாத தனியார் துறைக்குமாறி அந்நிறுவனங்களை வளர்த்தெடுத்த அனுபவங்களை ‘கேப்டன் இன் கார்ப்பரேட் வொண்டர்லேண்ட்’ புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

370 தொகுதிகளில் வெற்றி பெற அடுத்த 100 நாட்களும் உத்வேகத்துடன் பணியாற்றுங்கள்: பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுரை https://ift.tt/YPLBQbj

படம்
புதுடெல்லி: மக்களவை தேர்தலில் 370 தொகுதிகளில் நாம் வெற்றி பெற, அடுத்த 100 நாட்களும் உத்வேகம், நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் கட்சித் தலைவர் நட்டா தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், தேசிய நிர்வாகிகள், மாநில, மாவட்டத் தலைவர்கள், அணி தலைவர்கள், தேசிய செயற்குழு நிர்வாகிகள் என 11,500 பேர் பங்கேற்றனர். இக்கூட்டம் நேற்று நிறைவடைந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதில் புதிய முன்மொழிவு’ - 4ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு மத்திய அமைச்சர் தகவல் https://ift.tt/4dy0SEb

படம்
சண்டிகர்: சண்டிகரில் மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான 4-ம் கட்ட பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) நடைபெற்றது. இதில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஒப்பந்தம் மேற்கொண்டு குறைந்தபட்ச ஆதரவு விலையில் பொருட்களை கொள்முதல் செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் இதனை தெரிவித்தார். பல்வேறு விவசாய அமைப்புகள் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கொள்முதலுக்கான உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், விவசாய சங்கத்தினர் மத்திய அரசுடன் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சண்டிகர் மாநகராட்சி மேயர் பொறுப்பில் இருந்து பாஜக-வின் மனோஜ் சோன்கர் ராஜினாமா https://ift.tt/jBoMSbP

படம்
சண்டிகர்: சண்டிகர் மாநகராட்சி மேயர் பொறுப்பில் இருந்து பாஜக-வின் மனோஜ் சோன்கர் ராஜினாமா செய்துள்ளார். மேயர் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணை இன்று (பிப்.19) நடைபெற உள்ள நிலையில் பதவியை ராஜினாமா செய்துள்ளார் மனோஜ் சோன்கர். சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதை இண்டியா கூட்டணி இணைந்து எதிர்கொண்டது. பாஜகவும் வேட்பாளரை நிறுத்தியது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் மனோஜ் சோன்கர் போட்டியிட்ட நிலையில், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இண்டியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் போட்டியிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் கூடியது: தேர்தல் வெற்றிக்கு உழைக்குமாறு பிரதமர் மோடி கட்டளை https://ift.tt/qZ8jSbB

படம்
புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் 370 இடங்களில் பாஜகவை வெற்றி பெற வைக்க கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் உழைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். 2024 மக்களவைத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை இம்மாத கடைசியிலோ அல்லது மார்ச் மாத தொடக்கத்திலோ தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு திட்ட பயனாளிகளுக்கு பிரதமர் மோடி கடிதம் https://ift.tt/SkG2IAf

படம்
சென்னை: நாடு முழுவதும் மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்துள்ள மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதி வருகிறார். அனைவருக்கும் வீடு (ஆவாஸ் யோஜனா), நிலம் இல்லாத ஏழைகளுக்கு இலவச நிலம், அனைவருக்கும் குடிநீர் (ஜல் ஜீவன்), பாரத்நெட், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நாடு முழுவதும் மத்திய பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, இத்திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி பாஜக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது https://ift.tt/7jwCHpE

படம்
சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் செலுத்தப்படுகிறது. இன்சாட்-3டிஎஸ் எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 27.30 மணி நேர கவுன்ட்-டவுன் நேற்று மதியம் 2.05 மணிக்கு தொடங்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வருமான வரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததால் முடக்கப்பட்ட காங்கிரஸ் வங்கி கணக்கை பயன்படுத்த அனுமதி https://ift.tt/EcOkAU5

படம்
புதுடெல்லி: வருமான வரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததற்காக, காங்கிரஸ் கட்சியின் 4 பிரதான வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை முடக்கியது. காங்கிரஸ் முறையீடு செய்ததன் பேரில், இந்த நடவடிக்கையை தற்காலிகமாக ரத்து செய்துள்ள வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், வங்கிக் கணக்குகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை முடக்கியுள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் நேற்று குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் 4 பிரதான வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை திடீரென முடக்கியுள்ளது. பொது மக்கள் நன்கொடை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட எங்கள் கிரவுட் ஃபண்டிங் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. காசோலைகளை வாங்க மறுப்பு: இதனால், நாங்கள் அளிக்கும் காசோலையை வங்கிகள் வாங்குவது இல்லை. இது எங்கள் செயல்பாட்டை பெரிதும் பாதித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தும் வகையில் விவசாயிகள் இன்று பாரத் பந்த் https://ift.tt/j27ACGz

படம்
புதுடெல்லி: விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இன்று பாரத் பந்த்தில் பங்கேற்க சம்யுக்தா கிசான் மோர்ச்சா உட்பட பல விவசாயிகள் சங்கங்களும், மத்திய தொழிற் சங்கங்களும் அழைப்பு விடுத்துள்ளன. வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கொள்முதலுக்கான உத்திரவாதம், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘தி சம்யுக்தா கிசான்மோர்சா, தி கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 37 விவசாயிகள் சங்கங்தினர் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் இருந்து டெல்லி நோக்கி செல்லும் பேரணியை செவ்வாய்க்கிழமை தொடங்கினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம் https://ift.tt/yncgGjE

படம்
புதுடெல்லி: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கும் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதுவரை விற்பனை செய்யப்பட்ட பத்திரங்கள் குறித்த முழு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஸ்டேட் வங்கி மார்ச் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திரம் திட்டம் 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி, பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ரூ.1,000-ல் தொடங்கி, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி என தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட 29 கிளைகளில் மட்டும் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன. பொதுவாக, ஒரு மாதத்தில் 10 நாட்கள் மட்டுமே பத்திரங்கள் விற்கப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

யுஏஇ, கத்தாருக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி நாடு திரும்பினார் https://ift.tt/jBLlGEY

படம்
புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார். அபுதாபியில் சுவாமி நாராயண் இந்து கோயிலை அவர் இந்த பயணத்தின் போது திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு அமீரகம் சென்று பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் முகமது அல் நஹ்யானை சந்தித்தார். அப்போது இரு நாடுகள் இடையே துறைமுகம், முதலீடு, எரிசக்தி, வர்த்தகம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தொடர்பான 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. யுஏஇ-யில் யுபிஐ மற்றும் ரூபே அட்டை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் பிறகு இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றினார். தொடர்ந்து புதன்கிழமை அன்று அபுதாபியில் சுவாமி நாராயண் கோயிலை திறந்து வைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்: 15 அமைப்புகள் ஆதரவு https://ift.tt/anUJB72

படம்
சென்னை: விவசாயிகள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும், விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய பிப்.16 வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகத்தை சேர்ந்த 15 அமைப்புகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. மக்களே முதன்மை அமைப்பின் தலைவர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எம்.ஜி.தேவசகாயம், ஒருங்கிணைப்பாளர் தாமஸ் பிராங்கோ, தமிழ்நாடு பொதுமேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 15 அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘இங்கும் அயோத்தியின் மகிழ்ச்சி’ - அபுதாபியில் முதல் இந்து கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி

படம்
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் அபுதாபியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை திறந்து வைத்தார். அப்போது இங்கும் அயோத்தியின் மகிழ்ச்சி பரவியுள்ளதாக தெரிவித்தார். கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) சென்றார். அப்போது அபுதாபியில் சுவாமி நாராயண் கோயில் கட்ட 27 ஏக்கர் நிலத்தை அந்த நாட்டு அரசு வழங்கியது. இதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் கோயில் கட்டுமான பணி தொடங்கியது. ரூ.700 கோடியில் இந்த கோயில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சுவாமி நாராயண் கோயில் இன்று திறக்கப்பட்டது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, கோயிலை திறந்து வைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒடிசா மாநிலத்தில் இறந்ததாக கருதி இறுதிச்சடங்கு செய்தபோது உயிருடன் எழுந்த பெண் https://ift.tt/nOWugLV

படம்
பெர்ஹாம்பூர்: ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூரைச் சேர்ந்தவர் சிபாராம் பாலோ (54).இவரது மனைவி புஜ்ஜி அம்மா (52). இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. இந்நிலையில், கடந்த1-ம் தேதி வீட்டில் நடந்த சிறிய தீ விபத்தில் சிக்கிய புஜ்ஜி அம்மாவுக்கு 50 சதவீத அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். போதிய பணம் இல்லாததால் சிகிச்சையின் இடையிலேயே அவர் வீட்டுக்குத் திரும்பினார். இருந்தாலும் வீட்டில் இருந்தபடியே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வீட்டில் இருந்தபடியே மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை இவர் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அதிபர் முகமது அல் நஹ்யான் உடன் பிரதமர் மோடி சந்திப்பு: இந்தியா, யுஏஇ இடையே 8 ஒப்பந்தம் கையெழுத்து

படம்
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் முகமது அல் நஹ்யானை நேற்று சந்தித்தார். அப்போது இரு நாடுகள் இடையே 8 ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) சென்றார். அப்போது அபுதாபியில் சுவாமி நாராயண் கோயில் கட்ட 27 ஏக்கர் நிலத்தை அந்த நாட்டுஅரசு வழங்கியது. இதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில்கோயில் கட்டுமான பணி தொடங்கியது. ரூ.700 கோடியில் கோயில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டிராக்டர்களுடன் நுழைந்து டெல்லியை முற்றுகையிட முயற்சி: விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு https://ift.tt/3G690Jb

படம்
புதுடெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டினர். வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பிப்ரவரி 13-ம்தேதி (நேற்று) முதல் போராட்டம் நடத்த உள்ளதாக பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், 2 மத்திய அமைச்சர்கள் தலைமையில் விவசாயிகளுடன் கடந்த 12-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், உடன்பாடு ஏற்படாத நிலையில், உத்தர பிரதேசம், ஹரியாணா,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டருடன் டெல்லியை நோக்கி புறப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்