இடுகைகள்

அக்டோபர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ம.பி.யில் ஓய்வூதியத்துக்காக 50 ஆண்டாக போராடும் மூதாட்டி https://ift.tt/V8i4QSF

படம்
போபால்: மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த சங்கர்லால் ஸ்ரீவாஸ்தவா 23 ஆண்டுகளாக காவல் துறையில் பணியாற்றி 1971-ல் பணியிலிருந்து விலகி 1985-ல் காலமானார். அவருடைய மனைவி மிதிலேஷ் ஸ்ரீவாஸ்தவா (79), தனது கணவரின் ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட சலுகைகளை கேட்டு அளித்த மனுக்கள், ஆவணங்கள் துறை சார்ந்த அதிகாரிகளின் அலட்சியத்தால் காணாமல் போயின. இதையடுத்து அவர் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதற்கு நடுவே, அவருக்கு தற்காலிக ஓய்வூதியமாக மாதத்துக்கு வெறும் ரூ.33 வழங்கப்படுகிறது. பல ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு. 2005-ல் மிதலேஷுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும் காணாமல் போன ஆவணங்களை காரணம் காட்டி ஓய்வூதியம் தருவதை அரசு தாமதப்படுத்தியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆர்எஸ்எஸ் செயற்குழு கூட்டம் ஜபல்பூரில் தொடக்கம் https://ift.tt/LUlaY09

படம்
ஜபல்பூர்: ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் செயற்குழு கூட்டம் மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் நேற்று தொடங்கியது. ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்து 101-ம் ஆண்டுக்குள் நுழைந்துள்ளது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் செயற்குழு கூட்டம் மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் நேற்று தொடங்கியது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே ஆகியோர் இந்த கூட்டத்தை தொடங்கி வைத்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இராக்கில் சிக்கியிருந்த பஞ்சாப் பெண் மீட்பு https://ift.tt/GtVi35W

படம்
சண்டிகர்: பஞ்​சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஏழை பெண்​களிடம், நல்ல வேலை, நல்ல சம்​பளம் என்று கூறி இராக்​குக்கு ஏஜெண்ட் ஒரு​வர் அழைத்​துச் சென்​றார். இந்​நிலை​யில் பஞ்சாப் பெண் ஒரு​வரை அங்​குள்​ளவர்​கள் சித்​ர​வதை செய்​த​தாகத் தெரி​கிறது. அங்கு சென்ற பின்​னர் வீட்டு வேலை செய்​யு​மாறு அங்​குள்​ளவர்​கள் நிர்​பந்​தம் செய்​த​தாக​வும், வேலை செய்ய மறுத்​தால் வீட்​டின் உரிமை​யாளர் அடித்​து, உதைத்​தும் கொடுமை செய்​த​தாக​வும் அந்​தப் பெண் தெரி​வித்​தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வலிமையான தலைவர் பிரதமர் நரேந்திர மோடி: தென்கொரியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு

படம்
சியோல்: பிரதமர் மோடி வலிமை​யான தலை​வர், அவரை எனக்கு பிடிக்​கும். தாமத​மாகி கொண்​டிருக்​கும் வர்த்தக ஒப்​பந்​தத்​தில் இந்​தி​யா​வும், அமெரிக்கா​வும் கையெழுத்​திடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி​யுள்​ளார். இந்​தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​படு​வ​தில் நீண்ட தாமதம் ஏற்​பட்டு வரு​கிறது. ரஷ்​யா​விடம் இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கிய​தால், அமெரிக்கா 50 சதவீத வரி விதித்​தது. அமெரிக்​கா​விடம் இருந்து சோளம் மற்​றும் சோயாபீன்ஸ் ஆகிய​வற்றை இறக்​குமதி செய்ய வேண்​டும் என அமெரிக்கா வலி​யுறுத்தி வரு​கிறது. ஆனால், இந்​திய விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கும் வகை​யில் எந்த ஒப்​பந்​தத்​தை​யும் ஏற்​க​மாட்​டோம் என இந்​திய அரசு கூறிவரு​கிறது. இதன் காரண​மாக இந்​தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​படு​வ​தில் தாமத​மாகி வரு​கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நடுவானில் விமானத்தில் 3 பேரை கத்தியால் குத்திய இந்தியர் கைது https://ift.tt/8H316gR

படம்
புதுடெல்லி: கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்திலிருந்து பிராங்க்பர்ட்டுக்கு லுப்தான்ஸா விமானம் புறப்பட்டது. அப்போது விமானத்தில் பயணம் செய்த 28 வயதான இந்தியாவைச் சேர்ந்த பயணி பிரணீத் குமார் உசிரிபள்ளி, சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டார். நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது 17 வயதான 2 இளைஞர்களை முள்கரண்டியால் (ஃபோர்க்) பிரணீத் குமார் குத்தியுள்ளார்.இதனால் விமானத்தில் உள்ளவர்கள் பீதியடைந்தனர். அப்போது இதைத் தடுக்க முயன்ற விமான ஊழியர்களையும் தாக்க முயன்றார். இதையடுத்து விமானிகள், அந்த விமானத்தை பாஸ்டன் விமான நிலையத்துக்குத் திருப்பினர். அங்கு பிரணீத் கைது செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவில் மாணவர் விசா மூலம் பட்டமேற்படிப்பு படித்தவர். பிரணீத் குமார் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 2.5 லட்சம் டாலர் அபராதமும் விதிக்கப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காக்கிநாடா - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடந்தது மோந்தா புயல்: 2 பெண்கள் உயிரிழப்பு https://ift.tt/JzF4lvj

படம்
காக்கிநாடா: ‘மோந்தா’ புயல் ஆந்திராவில் நேற்று இரவு காக்கிநாடா - மசூலிப்பட்டினம் இடையே அந்தர்வேதிபாளையம் என்னும் இடத்தில் கரையைக் கடந்தது. கரையை புயல் கடந்தபோது மணிக்கு 110 கிலோமீ்ட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் காக்கிநாடா, மசூலிப்பட்டினம், கோன சீமா மாவட்டங்களில் பெரும் பாதிப்பை மோந்தா புயல் ஏற்படுத்தி உள்ளது. புயலுக்கு ஏராளமான மரங்கள் சாய்ந்தன. 2 பெண்கள் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்தன. 107 ரயில்கள், 18 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பல நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.1,204-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, வங்க கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நேற்று காலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மோந்தா’ என பெயரிடப்பட்டது. இப்புயல் நேற்று மதியம் காக்கிநாடாவுக்கு 190 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. 15 கி....

காசா மீது ‘உடனடி சக்திவாய்ந்த’ தாக்குதல் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு

படம்
ஹமாஸ் படையினரின் போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறலுக்கு பதிலடியாக காசா மீது சக்திவாய்ந்த தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். தெற்கு காசாவில் தங்கள் படைகள் மீது ஹமாஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தின் எதிரொலியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாதுகாப்பு ஆலோசனைகளைத் தொடர்ந்து, காசா பகுதியில் உடனடியாக பலத்த தாக்குதல்களை நடத்துமாறு பிரதமர் நெதன்யாகு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போர் சூழலுக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு https://ift.tt/AY2057F

படம்
புதுடெல்லி: இந்​திய ராணுவம் எப்​போதும் போர் சூழலுக்கு தயா​ரான நிலை​யில் இருக்க வேண்​டும் என்று பாது​காப்பு துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் கூறிய​தாவது: கடந்த மே மாதத்​தில் பாகிஸ்​தான் உடன் நடை​பெற்ற நான்கு நாள் ராணுவ மோதல் எல்​லைகளில் எந்த நேரத்​தி​லும் எது​வும் நடக்​கலாம் என்​பதை நமக்கு கோடிட்டு காட்​டி​யுள்​ளது. இந்த சம்​பவம் நாம் சுயபரிசோதனை செய்து கொண்டு போர் போன்ற சூழ்​நிலைக்கு எப்​போதும் தயார் நிலை​யில் இருக்க வேண்​டும் என்​பதை உறு​திப்​படுத்​துகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகாவில் நவம்பரில் அமைச்சரவை மாற்றம்: முதல்வர் சித்தராமையா தகவல் https://ift.tt/Drloq1A

படம்
பெங்களூரு: கர்​நாட​கா​வில் வரும் நவம்​பரில் அமைச்​சர​வை​யில் மாற்​றம் செய்​யப்​படும் என அம்​மாநில முதல்​வர் சித்​த​ராமையா தெரி​வித்​தார். கர்​நாட​கா​வில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த தேர்​தலில் காங்​கிரஸ் வென்​றதை தொடர்ந்து சித்​த​ராமையா முதல்​வ​ராக பதவி​யேற்​றார். அப்​போது முதல்​வர் பதவி கேட்ட டி.கே.சிவகுமாருக்கு காங்​கிரஸ் மேலிடம் துணை முதல்​வர் பதவி வழங்​கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி - முழு விவரம் https://ift.tt/TaMfjpC

படம்
புதுடெல்லி: தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட நாடு முழுவதும் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று தொடங்குகிறது. இதுதொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது: இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக 2002-04 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு, பிஹார் மாநிலத்தில் சமீபத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிராக் பஸ்வானுக்கு அதிகார பசி: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு https://ift.tt/Je8TfHO

படம்
பாட்னா: லோக் ஜனசக்தி கட்​சி​யின் (எல்​ஜேபி) தலை​வர் சிராக் பஸ்​வானுக்கு அதி​கார பசி அதி​க​மாக உள்​ளது என்று ராஷ்டிர ஜனதா தளத்​தின் (ஆர்​ஜேடி) தலை​வர் தேஜஸ்வி யாதவ் தெரி​வித்​துள்​ளார். பிஹார் தேர்​தலில் எதிர்க்​கட்​சிகள் அமைத்துள்ள மெகா கூட்​ட​ணி​யில் முதல்​வர் வேட்​பாள​ராக உள்​ளவர் தேஜஸ்வி யாதவ். கடந்த 2005-ம் ஆண்டு பிஹாரில் ஒரு முஸ்​லிமை முதலமைச்​ச​ராக்க தனது தந்தை விரும்​பிய​தாக​வும், ஆனால், ஆர்​ஜேடி அதற்கு உடன்​பட​வில்லை எனவும் சிராக் பஸ்​வான் குற்​றம்​சாட்​டி​யிருந்​தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சவுதி பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் உ.பி. இளைஞர் நாடு திரும்ப முடியாமல் தவிப்பு: பிரதமர் உதவ வேண்டும் என வேண்டுகோள்  https://ift.tt/lD9Wk01

படம்
புதுடெல்லி: உத்தர பிரதேசம் பிர​யாக்​ராஜ் மாவட்​டம் ஹாண்​டியா பகு​தி​யைச் சேர்ந்த இளைஞர், சவுதி அரேபி​யா​வில் வேலை பார்க்க சென்​றுள்​ளார். அவருக்கு பாலை​வனத்​தில் ஒட்​டகம் மேய்க்​கும் வேலை வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த வேலை மிக​வும் சிரம​மாக உள்​ள​தால் அவர் தாய்​நாடு திரும்ப விரும்​பு​கிறார். ஆனால், அவரது முதலாளி கபில் என்​பவர், தொழிலா​ளி​யின் பாஸ்​போர்ட்டை வாங்கி வைத்​துக்​கொண்​டு, கொன்​று​விடு​வ​தாக மிரட்​டி​யுள்​ளார். அந்த இளைஞர் சமூக ஊடகத்​தில் வீடியோ ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார். அதில் அவர், ‘‘எனது கிராமம் அலகா​பாத். நான் வேலை பார்க்க சவுதி அரேபியா வந்​தேன். எனது பாஸ்​போர்ட் கபில் என்​பவரிடம் உள்​ளது. நான் வீட்​டுக்கு போக வேண்​டும் என அவரிடம் கூறினேன். ஆனால், அவர் என்னை கொன்​று​விடு​வ​தாக மிரட்​டு​கிறார். நான் என் அம்​மா​விடம் செல்ல விரும்​பு​கிறேன். எனக்கு பிரதமர் நரேந்திர மோடி​யும், வெளி​யுறவுத்​துறை அமைச்​சரும் உதவ வேண்​டும். இல்​லை​யென்​றால் நான் இறந்​து​விடு​வேன்’’ என உருக்​க​மாக வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். from இந்து தமிழ் திசை : Ne...

தீவிரவாதத்தை எதிர்ப்பதாக நடித்தார் முஷாரப்: அமெரிக்க உளவு துறை முன்னாள் அதிகாரி தகவல்

படம்
புதுடெல்லி: ​ பாகிஸ்​தான் முன்​னாள் அதிபர் பர்​வேஸ் முஷாரபை பெரும் தொகை கொடுத்து வாங்​கினோம் என்று அமெரிக்க உளவுத் துறை முன்​னாள் அதி​காரி ஜான் கிரி​யாகோ தெரி​வித்​துள்​ளார். அமெரிக்க உளவு அமைப்​பான சிஐஏ-​வின் முன்​னாள் அதி​காரி​யான அவர், இந்​திய செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: பாகிஸ்​தான் அரசுடனான அமெரிக்​கா​வின் உறவு மிக​வும் சிறப்​பாக உள்ளது. குறிப்​பாக அந்த நாட்​டின் முன்​னாள் அதிபர் பர்​வேஸ் முஷாரப் ஆட்​சிக் காலத்​தில் இரு நாடு​கள் இடையி​லான உறவு மிக​வும் வலு​வாக இருந்​தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கில் கர்நாடக நகைக் கடையில் விற்கப்பட்ட 400 கிராம் தங்கம் பறிமுதல் https://ift.tt/mtIbh0c

படம்
திருவனந்தபுரம்: சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள ஒரு நகைக் கடையில் விற்கப்பட்ட 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 2 துவார பாலகர் சிலைகள் மற்றும் அதன் பீடத்தின் மீதான தங்கத் தகடுகளுக்கு தங்க முலாம் பூசும் பணி கடந்த 2019-ம் ஆண்டு உன்னி கிருஷ்ணன் போற்றியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணி முடிந்த நிலையில் 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தூரில் ஆஸி கிரிக்கெட் வீராங்கனைகள் இருவரிடம் பாலியல் சீண்டல்: ஒருவர் கைது https://ift.tt/RqWeE7l

படம்
இந்தூர்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில், இந்தூரில் நேற்று முன்தினம் அந்த அணியை சேர்ந்த இரண்டு வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாக ஒருவர் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா, இலங்கையில் நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதி ஆட்டத்தில் வரும் 30-ம் தேதி விளையாடுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தே.ஜ.கூட்டணி அமோக வெற்றி பெறும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை https://ift.tt/IYdRhDG

படம்
சமஸ்திபூர்: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) வரலாறு காணாத வெற்றி பெறும். அனைத்து தேர்​தல் சாதனை​களை​யும் என்​டிஏ முறியடிக்​கும் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். வரும் நவம்​பர் 6, 11 ஆகிய தேதி​களில் பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையொட்டி அந்த மாநிலத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று பிரச்​சா​ரத்தை தொடங்​கி​னார். பிஹாரின் சமஸ்​திபூர், பேகுச​ரா​யில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாக அவர் வாக்கு சேகரித்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

50,000 பவுண்ட் மதிப்பில் சிறுவர் கதை புத்தகத்துக்கு புக்கர் பரிசு தொடக்கம்

படம்
லண்டன்: சிறு​வர்​களுக்​கான கதை புத்​தகத்​துக்கு புக்​கர் பரிசு, அடுத்​தாண்டு முதல் தொடங்​கப்​படு​வ​தாக புக்​கர் பரிசு அறக்​கட்​டளை அறி​வித்​துள்​ளது. இங்​கிலாந்து மற்​றும் அயர்​லாந்​தில் ஆங்​கில மொழி​யில் வெளி​யிடப்​படும் சிறந்த புனைக் கதை புத்​தகத்​துக்கு ஒவ்​வொரு ஆண்​டும் புக்​கர் பரிசு என்ற இலக்​கிய விருது வழங்​கப்​படு ​கிறது. இதற்கு 50,000 பவுண்ட் பரிசு அளிக்​கப்​படு​கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே அதிகாலையில் பரிதாபம்: பேருந்து தீப்பிடித்து 20 பேர் உயிரிழப்பு - நடந்தது என்ன? https://ift.tt/H1DNPXy

படம்
கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே நேற்று அதிகாலை பைக் மீது பேருந்து மோதி தீப்பிடித்தது. இதில் 2 சிறுவர்கள் உட்பட 20 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 23-ம் தேதி இரவு 10.30 மணிக்கு ‘வி-காவேரி’ எனும் தனியார் சொகுசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம் கர்னூல் வழியாக பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் கர்னூல் மாவட்டம் 44-வது தேசிய நெடுஞ்சாலையில் சின்னடேக்கூரு என்ற இடத்தில் முன்னால் சென்ற பைக் மீது பேருந்து வேகமாக மோதியுள்ளது. இதில், பைக்கை ஓட்டிச் சென்ற கர்னூல் பிரஜா நகரைச் சேர்ந்த சிவசங்கர் (24) என்பவர் தூக்கி எறியப்பட்டு உயிரிழந்தார். ஆனால், பேருந்தின் அடியில் பைக் சிக்கிக்கொண்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முப்படைகளுக்கு ரூ.79,000 கோடியில் ராணுவ தளவாடம் கொள்முதல்: பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் https://ift.tt/8AObG0x

படம்
புதுடெல்லி: ரூ.79,000 கோடி மதிப்​பில், முப்​படைகளுக்கு தேவை​யான ராணுவ தளவாடங்​கள் வாங்க பாது​காப்பு அமைச்​சகம் ஒப்​புதல் அளித்​துள்​ளது. ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கைக்​குப் ​பின் ராணுவ தளவாட பொருட்​கள் கொள்​முதலுக்கு உடனுக்​குடன் ஒப்​புதல் அளிக்​கப்​படு​கிறது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரூ.67,000 கோடி​யில் தள வாட​ங்கள் கொள்​முதல் செய்ய ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்காவில் கார் மீது லாரி மோதி 3 பேர் உயிரிழப்பு: இந்திய டிரைவர் கைது

படம்
கலிபோர்னியா: அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக குடியேறிய இந்​திய டிரைவர் ஒருவர் போதை​யில் லாரியை ஓட்​டி, கார் மீது மோதி​னார். இதில் 3 பேர் உயி​ரிழந்​தனர். பலர் காயம் அடைந்​தனர். இந்​தி​யா​வைச் சேர்ந்​தவர் ஜஷன் ப்ரீத் சிங் (21). இவர் கடந்த 2022-ம் ஆண்டு அமெரிக்​கா​வின் தெற்கு எல்லை வழி​யாக சட்​ட​விரோத​மாக ஊடுரு​வி​னார். இவரை கலி​போர்​னியா எல்​லை​யில் ரோந்து போலீ​ஸார் கைது செய்​தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி https://ift.tt/Xz2JWqV

படம்
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த கூட்டணியை சேர்ந்த விஐபி கட்சியின் தலைவர் முகேஷ் சஹானி துணை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் (என்டிஏ), ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பளிப்பதாக ராகுல் வாக்குறுதி அளித்தும் ‘சீட்’ இல்லை: பிஹார் மலை மனிதரின் மகன் ஏமாற்றம் https://ift.tt/sQ9eNyJ

படம்
பாட்னா: ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தும், பிஹார் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டது என்று ‘மலை மனிதன்’ என்று புகழப்படுபவரின் மகன் வேதனை தெரிவித்துள்ளார். பிஹார் மாநிலம் கயா மாவட்டம் கெலார் கிராமத்தை சேர்ந்தவர் தசரத் மாஞ்சி. அட்ரி பகுதியில் இருந்து வசிர்கஞ்ச் செல்ல பெரிய மலை தடையாக இருந்தது. 55 கி.மீ. தூரம் சுற்றி செல்லும் நிலை இருந்தது. இந்நிலையில், தசரத் மாஞ்சி சுத்தி, உளியை மட்டுமே வைத்து மலையை உடைக்க ஆரம்பித்தார். சுமார் 22 ஆண்டுகள் தொடர்ந்து மலையை உடைத்து சாலையை ஏற்படுத்தினார். இதன் மூலம் நாடு முழுவதும் தசரத் அறியப்பட்டார். கடந்த 2007-ம் ஆண்டு மாஞ்சி காலமானார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆன்லைனில் பெண்களுக்கான ‘ஜிகாதி படிப்பு’: ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு அறிமுகம்

படம்
புதுடெல்லி: ஆன்​லைனில் பெண்​களுக்​கான ஜிகாதி படிப்பை ஜெய்​ஷ்-இ-​முகம்​மது தொடங்​கி​யுள்​ளது. காஷ்மீரை இந்​தி​யா​வில் இருந்து பிரித்து பாகிஸ்​தானுடன் இணைக்​கும் நோக்​கத்​துடன் கடந்த 2000-ம் ஆண்டு ஜெய்​ஷ்-இ-​முகம்​மது அமைப்பு தொடங்​கப்​பட்​டது. கடந்த 1999-ம் ஆண்டு இந்​தி​யன் ஏர்​லைன்ஸ் விமானம் கடத்​தப்​பட்​ட​போது இந்​தி​யா​வால் விடுவிக்​கப்​பட்ட 3 தீவிர​வா​தி​களில் ஒரு​வ​ரான மவுலானா மசூத் அசார் இந்த அமைப்பை தொடங்​கி​னார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீவிரவாதத்தை ஒற்றுமையுடன் எதிர்ப்போம்: அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு https://ift.tt/fxkwlXi

படம்
புதுடெல்லி: தீ​பாவளி பண்​டிகை வாழ்த்​துகளை தெரி​வித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​புக்கு பிரதமர் நரேந்​திர மோடி நன்றி தெரி​வித்​தார். தீபாவளி பண்​டிகை​யையொட்டி பிரதமர் மோடிக்கு தொலைபேசி​யில் தீபாவளி வாழ்த்​துகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​தார். இதுதொடர்​பாக பிரதமர் மோடி நேற்று வெளி​யிட்ட எக்ஸ் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீபாவளி போனஸ் தராததால் அதிருப்தி: ஆக்ரா-லக்னோ சுங்கச்சாவடியை திறந்துவிட்ட ஊழியர்கள் https://ift.tt/yRtBZpc

படம்
ஆக்ரா: தீ​பாவளி போனஸ் தராத​தால் அதிருப்தி அடைந்த சுங்​கச்​சாவடி ஊழியர்​கள் வேலை நிறுத்​தம் செய்​தனர். இதனால் மத்​திய அரசுக்கு பல லட்​சம் ரூபாய் இழப்பு ஏற்​பட்​டுள்​ளது. ஆக்ரா - லக்னோ எக்​ஸ்​பிரஸ் சாலை​யில் பதேஹா​பாத் பகு​தி​யில் சுங்​கச் சாவடி உள்​ளது. இங்​கு பணிபுரி​யும் ஊழியர்​களுக்கு தீபாவளி போனஸ் வழங்​க​வில்லை என்று கூறப்​படு​கிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்​கள் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை ஆக்ரா - லக்னோ எக்​ஸ்​பிரஸ் சாலை​யில் சுங்​கச்​சாவடியை வாக​னங்​கள் கடப்​ப​தற்கு வசதியாக அனைத்து கதவு​களை​யும் திறந்து விட்​டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவாவில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி: கடற்படை வீரர்களுடன் இரவு விருந்தில் பங்கேற்றார் https://ift.tt/G435UOs

படம்
புதுடெல்லி: ஐஎன்​எஸ் விக்​ராந்த் போர்க்​கப்​பலில் கடற்​படை வீரர்​கள், அதி​காரி​களு​டன் பிரதமர் மோடி தீபாவளி கொண்​டாடி​னார். அன்று நடை​பெற்ற இரவு விருந்​தில் அவர் பங்​கேற்றார். தீபாவளி பண்​டிகை​யைக் கொண்​டாடு​வதற்​காக கோவா மற்​றும் கர்​நாட​கா​வின் கார்​வார் கடற்​கரை​யில் இந்​திய கடற்​படை​யின் முக்​கிய விமானம் தாங்கி போர்க்​கப்​பலான ஐஎன்​எஸ் விக்​ராந்த் நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்​தது. இந்த கப்​பலுக்கு பிரதமர் நரேந்​திர மோடி ஞாயிற்​றுக்​கிழமை மாலை வந்​தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் நவ.1-லிருந்து 155% வரி: சீனாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

படம்
பீஜிங்: “சீனா ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு முன்வராவிட்டால் அந்நாட்டுப் பொருட்கள் மீது 155% வரி விதிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, வெள்ளை மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை ட்ரம்ப் நடத்தினார். அதன்பின்னர் பேசிய ட்ரம்ப், “சீனாவை அமெரிக்கா மிகுந்த மரியாதையுடன் நடத்தியது. ஆனால், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை சீனா தொடர்ந்தால் அதனை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது. சீனாவும் எங்களை மதிக்கிறது என்று நான் நம்புகிறேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள்” - ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைத்த பேக்கரி ஓனர்! https://ift.tt/YhtHgud

படம்
டெல்லியில் பிரபலமானதும் மிக பழமையானதுமான கன்டேவாலா பேக்கரிக்கு அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் ராகுல் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த கடைக்கு பல ஆண்டுகளாக காந்தி குடும்பத்தினர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த ஆண்டு தீபாவளிக்காக இனிப்புகள் வாங்க அங்கு சென்ற ராகுல் காந்தி தன் கையாலேயே சில இனிப்பு வகைகள் செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“சரியாக நடக்கவில்லை என்றால் அழிக்கப்படுவார்கள்” - ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

படம்
“ஹமாஸ் இயக்கத்தினர் சரியாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அழிக்கப்படுவார்கள்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. கடந்த 13-ம் தேதி எகிப்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்​றும் எகிப்து அதிபர் அல் சிசி தலை​மை​யில் நடை​பெற்ற காசா அமைதி உச்சி மாநாட்​டில் இந்த அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘எட்டு மாதங்களில் எட்டு போர்களை நான் நிறுத்தி உள்ளேன்’ - ட்ரம்ப் பேச்சு

படம்
வாஷிங்டன்: கடந்த எட்டு மாதங்களில் உலக நாடுகளுக்கு இடையிலான எட்டு போர்களை நிறுத்தி உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க நாட்டின் அதிபராக டொனல்டு ட்ரம்ப் பதவியேற்றார். அப்போது முதல் அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதில் அமெரிக்காவின் வளர்ச்சி அமைந்துள்ளதாக அவர் கூறி வருகிறார். அந்த வகையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது, வெளிநாடுகள் அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நெப்போலியன் காலத்து நகைகள் கொள்ளை: பிரான்ஸ் நாட்டின் அருங்காட்சியகம் மூடல்

படம்
பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள இலூவா அருங்​காட்​சி​யகம். இங்கு மோனோலிசா ஓவி​யம் உட்பட வரலாற்று சிறப்புமிக்க 33,000 கலைப் பொருட்​கள், சிற்​பங்​கள், நகைகள், ஓவி​யங்​கள் காட்​சிக்கு வைக்​கப்​பட்​டுள்​ளன. இங்​குள்ள கலைப் பொருட்​கள் மற்​றும் விலைம​திப்​பற்ற பொருட்​கள் பல முறை திருடு​போ​யுள்​ளன. கொள்ளை முயற்சி சம்​பவங்​களும் நடை​பெற்​றுள்​ளன. இந்​நிலை​யில் இந்த அருங்​காட்​சி​யகத்​தில் நேற்று முன்​தினம் ஒரு கொள்ளை சம்​பவம் நடை​பெற்​றுள்​ளது. ஸ்கூட்​டரில் வந்த கொள்​ளை​யர்​கள் அருங்​காட்​சி​யகத்​தில் கட்​டிட பராமரிப்பு நடை​பெற்ற இடத்​தின் வழி​யாக ஊடுரு​வி​யுள்​ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீபாவளி பண்டிகையால் ஜொலித்தது அயோத்தி: 29 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை https://ift.tt/uzPwEGh

படம்
அயோத்தி: அயோத்தி சரயு நதிக்கரையில் நேற்று 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 2,128 அர்ச்சகர்கள் நடத்திய பிரம்மாண்ட ஆரத்தி வழிபாடும் உலக சாதனை படைத்துள்ளது. தீபாவளியையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ராமர் கோயில் வளாகத்தில் நேற்று 22 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. ராமாயணக் காட்சிகள், கும்ப மேளா, மகளிர் முன்னேற்றம், பிரம்மோஸ் ஏவுகணை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்ட ஊர்திகள் பார்வையாளர்களை கவர்ந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘உண்மையை வீழ்த்த முடியாது என்பதை இங்குள்ள தீபங்கள் சுட்டுகின்றன’ - யோகி ஆதித்யநாத் @ அயோத்தி https://ift.tt/wRMUqji

படம்
அயோத்தி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தி நகரில் உத்தர பிரதேச அரசு சார்பில் தீபோற்சவ விழாவை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய போது எதிர்க்கட்சியை கடுமையாக சாடினார். “இதே அயோத்தி நகரில் ராம ஜென்மபூமி இயக்கத்தில் அங்கம் வகித்த ராம பக்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது அன்று மாநிலத்தில் ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சி. ராமரை புராணக்கதை உடன் ஒப்பிட்டது காங்கிரஸ் கட்சி. முன்னாளில் இங்கு துப்பாக்கி சூடு நடந்தது. இன்று அதே இடத்தில் நாம் தீபங்களை ஒளிர்க்க செய்கிறோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் எம்.பி.க்கள் குடியிருப்பில் தீ விபத்து https://ift.tt/vs45icJ

படம்
புதுடெல்லி: டெல்லியின் பிஷாம்பர் தாஸ் மார்க் பகுதியில் பிரம்மபுத்ரா அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்தக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020-ம் ஆண்டு திறந்து வைத்தார். இதில், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் (எம்.பி.) தங்கி உள்ளனர். இந்தக் குடியிருப்பு வளாகத்தில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் அங்கு சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோயில் ஊழியர்களுக்கு சிக்கன் மசாலா பரிசு https://ift.tt/D4Snb86

படம்
பந்தர்பூர்: நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு விதவிதமான பரிசுகளை வழங்கி வருகின்றன. இனிப்புகள், படுக்கை விரிப்புகள் என தொடங்கி சில நிறுவனங்கள் சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்கள், நகைகள், அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் பந்தர்பூரில் உள்ள விட்டல் கோயிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சிக்கன் மசாலா உட்பட பல உணவுப் பொருட்கள் தீபாவளி பரிசாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பிவிஜி நிறுவனம் வழங்கி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடியின் தீபாவளிப் பரிசு மக்களை முழுமையாகச் சென்றடைந்துள்ளது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் https://ift.tt/9R0uKWH

படம்
புதுடெல்லி: ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் குறித்து டெல்​லி​யில் நேற்று மத்​திய நிதித்​துறை அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல், மத்​திய ரயில்வே துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் ஆகியோர் கூட்​டாக செய்​தி​யாளர்​களுக்கு பேட்​டியளித்​தனர். மத்​திய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் பேசும்​போது “ஜிஎஸ்டி குறைப்​பால் உணவு பணவீக்​கம் கணிச​மாக குறைந்​துள்​ளது. ஜி.எஸ்​.டி. சீர்​திருத்​தம் மூலம் எலக்ட்​ரானிக் பொருள் விற்​பனை சாதனை படைத்​துள்​ளது” என்​றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

லஞ்சப் புகாரின்பேரில் ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை: ரூ.7.5 கோடி, நகைகள், சொகுசு கார்கள் சிக்கின https://ift.tt/QTnrOGp

படம்
புதுடெல்லி: பஞ்​சாப் டிஐஜி ஹர்​சரண்​சிங் புல்​லர் வீட்​டில் சிபிஐ நடத்​திய சோதனை​யில், ரூ.7.5 கோடி ரொக்​கம், மெர்​சிடஸ் பென்​ஸ், ஆடி கார்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. பஞ்​சாப் ஃபதேகர் சாகிப் பகுதியைச் சேர்ந்​த தொழிலதிபர் ஆகாஷ் பட்​டா மீது குற்ற வழக்கு ஒன்று பதி​வாகி​யுள்​ளது. இந்த வழக்கை நீக்​கு​வதற்​காக பஞ்​சாப் ரோபர் சரக டிஐஜி ஹர்​சரண் சிங் புல்​லர் பேரம் பேசியுள்​ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சொந்த நாட்டை விமர்சிக்கும் ராகுலுக்கு பிரதமராகும் புத்திசாலித்தனம் இல்லை: அமெரிக்க பாடகி மேரி மில்பென் கடும் விமர்சனம்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மெகுல் சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

படம்
புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,500 கோடி நிதி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆண்ட்வெர்ப் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவின் நாடுகடத்தல் தொடர்பான கோரிக்கையை ஏற்று கடந்த ஏப்ரல் மாதம் மெகுல் சோக்ஸியை கைது செய்தது பெல்ஜியம். நிதி மோசடி தொடர்பான வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் சார்பில் மும்பை நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை சுட்டிக்காட்டி இந்தியா தரப்பில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

21-ம் நூற்றாண்டு 140 கோடி இந்தியர்களின் நூற்றாண்டாகும்: ஆந்திர மாநிலம் கர்னூலில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் https://ift.tt/XxVOrEh

படம்
கர்​னூல்: 21-ம் நூற்​றாண்டு என்​பது 140 கோடி இந்​தி​யர்​களின் நூற்​றாண்டு ஆகும் என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார். பிரதமர் நரேந்​திர மோடி ஒரு நாள் சுற்​றுப்​பயண​மாக நேற்று காலை டெல்​லி​யில் இருந்து விமானம் மூலம் கர்​னூல் வந்​தார். பின்னர், கர்​னூல் நன்​னூருக்கு ஒரே ஹெலி​காப்​டரில் பிரதமர் மோடி, முதல்வர் சந்​திர​பாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்​யாண் ஆகியோர் சென்​றனர். அங்கு ‘சூப்​பர் ஜிஎஸ்டி - சூப்​பர் சேவிங்​ஸ்’ என்ற பெயரில் பிரம்​மாண்ட பொதுக்​கூட்​டத்​துக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தான் பீரங்கிகளை சிறைபிடித்து ஊர்வலமாக சென்ற ஆப்கன் வீரர்கள்: தலிபான் செய்தித்தொடர்பாளர் தகவல்

படம்
காபூல்: பாகிஸ்​தானுக்கு சொந்​த​மான ராணுவ டாங்​கி​களை ஆப்​கானிஸ்​தான் ராணுவம் சிறைபிடித்​த​தாக தலி​பான் செய்​தித்​தொடர்​பாளர் ஜபிஹுல்லா முஜாகித் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “எல்​லைப் பகு​தி​களில் பாகிஸ்​தான் நடத்​திய துப்​பாக்​கிச் சூட்​டுக்கு ஆப்​கானிய படைகள் தகுந்த பதிலடி கொடுத்​தன. இதில், ஏராள​மான பாகிஸ்​தான் வீரர்​கள் கொல்​லப்​பட்​டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹாரில் என்டிஏ கூட்டணி வென்றால் நிதிஷ் குமார் முதல்வரா? - அமித் ஷா விவரிப்பு https://ift.tt/y1Vc7OB

படம்
புதுடெல்லி: அடுத்த மாதம் பிஹார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால் ஐக்கிய ஜனதா தளத்தின் நிறுவனரும், தற்போதைய பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார், மீண்டும் முதல்வராக தெரிவு செய்யப்படுவாரா என்பது குறித்து மத்திய அமைச்சர் ஜெய் ஷா விளக்கம் தந்துள்ளார். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நவம்​பர் 6, 11-ம் தேதி​களில் இரு கட்​டங்​களாக நடை​பெற உள்​ளது. நவம்​பர் 14-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும் (என்​டிஏ), ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் அடங்​கிய மெகா கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

​ராஜஸ்தான் பேருந்து தீ விபத்தில் உயிரிழப்பு 21-ஆக உயர்வு: விதிகளை மீறி மாற்றங்​கள் செய்யப்பட்டது அம்பலம்  https://ift.tt/goa7stV

படம்
ஜெய்​சால்​மர்: ராஜஸ்​தானில் நேற்று முன்​தினம் நடந்த பேருந்து தீ விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 21-ஆக அதி​கரித்​துள்​ளது. புத்​தம் புதிய அந்த தனி​யார் பேருந்​தில் விதி​களை மீறி மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டதே இந்த விபத்​துக்கு முக்​கிய காரணம் என்​பது தெரிய​வந்​துள்​ளது. ஜெய்​சால்​மரிலிருந்து நேற்று முன்​தினம் பிற்​பகலில் 57 பயணி​களை ஏற்​றிக்​கொண்டு ஜோத்​பூருக்கு புறப்​பட்டு சென்ற தனி​யார் பேருந்து தையாத் கிராமத்​துக்கு அருகே திடீரென தீப்​பிடித்து எரிந்​தது. இதில், 21 பேர் உடல் கருகி பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். தீக்​காயமடைந்த 16 பேர் மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதில், பலரது நிலை கவலைக்​கிட​மாக உள்​ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்க ராணுவ ரகசியங்களை திருடிய இந்திய வம்சாவளி ஆஷ்லே டெல்லிஸ் கைது: சீன அதிகாரிகளை சந்தித்தது அம்பலம் 

படம்
வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் ராணுவ ரகசி​யங்​களை வைத்​திருந்​தது, சீன அதி​காரி​களை சந்​தித்​தது ஆகிய குற்​றச்​சாட்​டின் கீழ் இந்​திய வம்​சாவளியை சேர்ந்த ஆஷ்லே டெல்​லிஸ் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். 64 வயதான ஆஷ்லே டெல்​லிஸ். மும்​பை​யில் பிறந்​தவர். இந்​திய வம்​சாவளி​யான அவர் அமெரிக்க ஆய்​வாளர் மற்​றும் வெளி​யுறவுக் கொள்​கை​யின் ஆலோ​சக​ராக உள்​ளார். அமெரிக்​கா​வில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் பல்​வேறு முக்​கிய பொறுப்​பு​களை வகித்​தவர் ஆஷ்லே டெல்​லிஸ் (64). முன்​னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பதவிக் காலத்​தில் தேசிய பாது​காப்பு கவுன்​சிலில் பணி​யாற்றி உள்​ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

​கா​சா​வில் இருந்து பிணைக் கைதிகள் விடுவிப்பு: 738 நாட்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்த இஸ்ரேல் தம்பதி

படம்
ஜெருசலேம்: ​கா​சா​வில் நீண்ட நாட்​களாக பிணைக் கை​தி​களாக வைக்​கப்​பட்​டிருந்​தவர்​கள் அண்​மை​யில் விடுவிக்​கப்​பட்​டனர். இதை தொடர்ந்து 738 நாட்​களுக்​குப் பிறகு இஸ்​ரேல் தம்​ப​தி​யினர் மீண்​டும் ஒன்று சேர்ந்​துள்​ளனர். இஸ்​ரேல் ராணுவம் - பாலஸ்​தீனத்​தின் காசா பகு​தியை ஆட்சி செய்த ஹமாஸ் குழு​வினர் இடையே கடந்த 2 ஆண்​டு​களாக போர் நடை​பெற்​றது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் முயற்​சி​யால் இரு தரப்​பினர் இடையே கடந்த 9-ம் தேதி அமைதி உடன்​பாடு ஏற்​பட்​டது. இதையடுத்து காசா​வில் 10-ம் தேதி போர் நிறுத்​தம் அமலுக்கு வந்​தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திராவில் கூகுள் ஏஐ மையம்: பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை முக்கிய ஆலோசனை https://ift.tt/exI2SfR

படம்
புதுடெல்லி: அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் சார்பில் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ரூ.1.33 லட்சம் கோடி முதலீட்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையம் அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அமெரிக்காவின் ஆல்பாபெட் நிறுவனம், உலகின் 3-வது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது. கூகுள், வேமோ, ஜி.வி., விங், வெரிலி, காலிகோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை ஆல்பாபெட் நடத்தி வருகிறது. இந்த சூழலில் கூகுள் சார்பில் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ரூ.1.33 லட்சம் கோடி முதலீட்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையம் அமைக்க டெல்லியில் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜஸ்தானில் தீப்பிடித்து எரிந்த பேருந்து; 20 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல் https://ift.tt/U4tRoHD

படம்
ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஜெய்சால்மரிலிருந்து ஜோத்பூர் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜெய்சால்மரிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு ஜோத்பூர் நோக்கி புறப்பட்ட பேருந்து ஜெய்சால்மர் - ஜோத்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் பின்பகுதியில் இருந்து புகை வெளியாகியுள்ளது. இதனை அறிந்த பேருந்து ஓட்டுனர் உடனடியாக பேருந்தை ஓரம்கட்டி நிறுத்த முயற்சித்துள்ளார். எனினும் கண்ணிமைக்கும் நேரத்தில் தீ பேருந்து முழுவதும் பரவியது. இதனைக் கண்ட பொதுமக்கள் பலரும் உடனடியாக ஓடிவந்து தீயை அணைக்க முயன்றுள்ளனர். சிறிது நேரத்தில் அங்கு தீயணைப்பு வீரர்களும், காவல்துறை அதிகாரிகளும் வந்து சேர்ந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரச மரம் வெட்டப்பட்டதால் அழுத மூதாட்டிக்கு புதிய மரக்கன்று https://ift.tt/rIaLGw0

படம்
கைராகர்: சத்​தீஸ்​கர் மாநிலம் கைராகர் மாவட்​டம் சாராகோண்டி கிராமத்​தைச் சேர்ந்த மூதாட்டி தேவ்லா பாய் படேல். அவர் சாலை​யோரம் 20 ஆண்​டு​களுக்கு முன் நட்டு வளர்த்த அரச மரத்​தில் சுவாமி சிலை வைத்து அப்​பகுதி மக்​கள் வழிபட்டு வந்​தனர். இந்த மரம் இருக்​கும் இடம் அருகே இம்​ரான் மேமன் என்​பவர் நிலம் வாங்​கி​னார். இதையடுத்து அந்த அரச மரத்தை அவர் வெட்​டி​விட்​டார். இதைப் பார்த்த தேவ்லா பாய் படேல் மரத்​தடி​யில் அமர்ந்து கதறி அழு​தார். இந்த வீடியோ வைரலாக பரவியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முல்லை பெரியாறில் புதிய அணை கோரி மனு: தமிழக, கேரள அரசுகளுக்கு நோட்டீஸ்  https://ift.tt/0otXOcP

படம்
புதுடெல்லி: முல்லை பெரி​யாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்​டக்கோரி ‘சேவ் கேரளா பிரி​கேட்’ என்ற தொண்டு நிறு​வனம் சார்​பில் தொடரப்​பட்ட பொதுநல வழக்கு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய், கே.​வினோத் சந்​திரன் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது தலைமை நீதிப​தி அமர்விடம் மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் வி.கிரி வாதிடும் போது இது 130 ஆண்​டு​கள் பழமை​யானது என்​ப​தால், அணை​யின் கீழ்ப்​பகு​தி​யில் வசிக்​கும் சுமார் ஒரு கோடி மக்​கள் அச்​சத்​தில் உள்​ளனர் என்றார். அப்போது நீதிப​தி​கள் கூறியதாவது: தற்​போதுள்ள அணையை பலப்​படுத்​துங்​கள் என்று உத்​தர​விடலாம். இருமாநிலங்​கள் தொடர்​புடையமுல்லை பெரி​யாறு அணை​யால் யாருக்கு என்ன பிரச்​சினை என்​பதை மனு​தா​ரர்தெளி​வாக தெரிவிக்​க​வில்​லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது: இஸ்ரேல், ஹமாஸ், ஈரான் பங்கேற்கவில்லை

படம்
ஜெருசலேம் : எகிப்தில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது. முன்னதாக, ஹமாஸ் குழுவின் பிடியில் இருந்த 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதேபோல இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 154 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேல் ராணுவம் - பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்த ஹமாஸ் குழுவினர் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முயற்சியால் இரு தரப்பினர் இடையே கடந்த 9-ம் தேதி அமைதி உடன்பாடு ஏற்பட்டது. காசாவில் 10-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்