இடுகைகள்

ஜனவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மத்திய அரசின் திட்டங்களால் வறுமையில் இருந்து 25 கோடி பேர் மீட்பு: குடியரசுத் தலைவர் பெருமிதம் https://ift.tt/6El2tOq

படம்
புதுடெல்லி: மத்திய அரசின் திட்டங்களால் நாடு முழுவதிலும் 25 கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டு முன்னேறியுள்ளனர் என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதத்துடன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட்கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அவரை குதிரைப்படை வீரர்கள், நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற விவகார துறைஅமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் வரவேற்று மக்களவைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடைபெற்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அவர் பேசியதாவது: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. 2 மாதங்களுக்கு முன்பு அரசியல் சாசனத்தின் 75-வது ஆண்டை கொண்டாடினோம...

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து 7 எம்எல்ஏ-க்கள் விலகல்: டெல்லி அரசியலில் சலசலப்பு https://ift.tt/2sv9dgm

படம்
புதுடெல்லி: பிப்ரவரி 5-ம் தேதி டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்எல்ஏ-க்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளனர். இது டெல்லி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்சியில் இருந்து விலகி உள்ள எம்எல்ஏ-க்கள் மாற்று கட்சியோடு தொடர்பில் இருந்து வருவதாகவும், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்ட காரணத்தாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல். அவர்கள் அனைவரும் ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான கேஜ்ரிவாலிடம் தங்களது முடிவை கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். அந்த கடிதத்தை சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகா கும்பமேளாவில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் https://ift.tt/X4LKH8M

படம்
மகா கும்பமேளாவில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 1954-ம் ஆண்டு பிரயாக்ராஜ் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 800 பக்தர்கள் உயிரிழந்தனர். கடந்த 1986-ம் ஆண்டு ஹரித்வார் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 200 பேர் உயிரிழந்தனர். கடந்த 2003-ம் ஆண்டு நாசிக் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். தற்போது பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்து உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் உத்தர பிரதேச காங்கிரஸ் எம்.பி. கைது https://ift.tt/TAOLXjt

படம்
உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ரத்தோர், பாலியல் வன்கொடுமை வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். இவர் உத்தர பிரதேச காங்கிரஸின் பொதுச் செயலராகவும் உள்ளார். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியும், அரசியல் ஆசை காட்டியும் கடந்த நான்கு ஆண்டுகளாக தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்ததாக சீதாபூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ரத்தோருக்கு எதிராக ஜனவரி 17-ம் தேதி பெண் ஒருவர் புகார் அளித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணமகளே இல்லாமல் நடந்த திருமண ஊர்வலம்: இமாச்சல பிரதேச மாநிலத்தில் வினோதம் https://ift.tt/6VfMyFI

படம்
மணமகளே இல்லாமல் இமாச்சல பிரதேச மாநிலத்தில் திருமண ஊர்வலம் நடந்துள்ள வினோதம் தற்போது தெரியவந்துள்ளது. இமாச்சல் பிரதேசம் உனா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, அருகிலுள்ள சிங்கா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்த திருமணத்துக்கு நாரி கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ், அவரது மனைவி மானு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இவர்கள் இருவரும் திருமணத் தரகர்கள். இரு வீட்டாரும், ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே திருமணத்துக்கு நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. மணமகனும், மணமகளும் போனில் மட்டுமே பேசி சம்மதம் தெரிவித்திருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருமணம் நின்றது, வேலையும் பறிபோனது: சயீப் அலிகான் வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதானவர் கண்ணீர் https://ift.tt/0H9Tb32

படம்
மும்பை: கடந்த 15-ம் தேதி மும்​பை​யில் உள்ள நடிகர் சயீப் அலிகான் வீட்​டில் புகுந்த மர்ம நபர், அவரை கத்தி​யால் குத்​தி​விட்டு தப்பியோடி​விட்​டார். இது தொடர்பாக, சத்தீஸ்​கரை சேர்ந்த ஆகாஷ் கைலாஷ் கனோஜியா கடந்த 18-ம் தேதி சந்தேகத்​தின்​ பேரில் கைது செய்​யப்​பட்​டார். பிறகு அவர் விடுவிக்​கப்​பட்​டார். இதுகுறித்து ஆகாஷ் கைலாஷ் கனோஜியா கூறிய​தாவது: நான் மும்​பை​யின் கொலாபா பகுதியை சேர்ந்​தவன். எனக்கு திரு​மணம் நிச்​சயம் செய்​யப்பட்டு இருந்​தது. எனது வருங்கால மனைவியை நேரில் பார்க்க மும்​பை​யில் இருந்து சத்தீஸ்​கரின் பிலாஸ்​பூர் நகருக்கு ரயிலில் சென்று கொண்​டிருந்​தேன். துர்க் நிலை​யத்​தில் ரயில் நின்​ற​போது ரயில்வே பாது​காப்பு படை போலீ​ஸார் என்னை வலுக்​கட்​டாயமாக ராய்ப்​பூருக்கு அழைத்​துச் சென்​றனர். அங்கு மும்பை போலீ​ஸார் என்னிடம் விசாரணை நடத்​தினர். அப்போது அடித்து உதைத்து துன்​புறுத்​தினர். நடிகர் சயீப் அலிகானை கத்தி​யால் குத்​தி​யதாக குற்றம் சாட்​டினர். எனது விளக்​கத்தை போலீ​ஸார் ஏற்க​வில்லை. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 19-ம் தேதி வங்கதேசத்தை சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் என்பவர் கைது ...

பிரதமர் மோடி பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகவல்

படம்
பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரியில் என்னை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வருவார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறினார். குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் கடந்த 20-ம் தேதி இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றார். அப்போது முதல் பல்வேறு அதிரடி உத்தரவுகளை அவர் பிறப்பித்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரஷ்யாவில் இருந்து திரும்பிய இளைஞர்களின் கண்ணீர் கதை https://ift.tt/gCGr5Kx

படம்
லக்னோ: மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் தருவோம் என ஆசை காட்டி அழைத்துச் சென்று ரஷ்யாவில் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டனர் என்று அங்கிருந்து திரும்பிய இளைஞர்கள் கண்ணீருடன் பேட்டியளித்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஆசம்கர் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் (29). இவரது நண்பர் பிரஜேஷ் யாதவ், மாவ் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் ஆசம்கர், மாவ் பகுதியில் வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் ரஷ்யாவில் வேலை, கை நிறையச் சம்பளம் என அவர்களுக்கு வாய்ப்பு வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகா கும்பமேளா புகைப்படம்: நாசா வெளியீடு https://ift.tt/XZVgm1s

படம்
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடந்த 13-ம் தேதிமுதல் மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து புனித நீராடி வருகின்றனர். வரும் பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த புனித நீராடும் நிகழ்ச்சியில் சுமார் 45 கோடி பக்தர்கள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

என் உடலில் இந்திய டிஎன்ஏ உள்ளது: இந்தோனேசிய அதிபர் சுபியாண்டோ கருத்து https://ift.tt/M0k7deW

படம்
புதுடெல்லி: என் உடலில் இந்திய டிஎன்ஏ உள்ளது என்ற இந்தோனேசிய அதிபர் சுபியாண்டோவின் கருத்தைக்கேட்ட குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாய்விட்டு சிரித்தனர். டெல்லியில் நாட்டின் 76-வது குடியரசு தின விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதில் இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முன்னதாக, 25-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கும்பமேளாவில் பாவத்தை போக்க புனித நீராட வந்த நீண்டகால தலைமறைவு குற்றவாளி கைது https://ift.tt/KMtj5Gl

படம்
புதுடெல்லி: மகா கும்பமேளாவில் தன் பாவத்தை போக்கிட புனித நீராட வந்த நீண்டகால தலைமறைவு குற்றவாளியை போலீஸார் அதிரடியாக சுற்றிவளைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிலையில், தான் செய்த பாவத்தை போக்கிட ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவு குற்றவாளியாக இருந்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த பிரவேஷ் யாதவ் என்பவரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அயோத்தி கோயில் கட்டிட கலைஞர் சந்திரகாந்த் சோம்புராவுக்கு பத்ம ஸ்ரீ விருது https://ift.tt/aWGTik8

படம்
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் அயோத்தி கோயிலை வடிவமைத்து கட்டியெழுப்பிய பிரபல கட்டிடக் கலைஞர் சந்திரகாந்த் சோம்புராவுக்கு (80) இந்தாண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது. சந்திரகாந்த் சோம்புராவின் தாத்தா பிரபாசங்கர்பாய் ஓகத்பாயும் பிரபல கட்டிடக் கலைஞர் ஆவார். இவரும், பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றவர். சோம்புராவின் குடும்பம் 200-க்கும் மேற்பட்ட கோயில்களை வடிவமைத்து உருவாக்கியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடியுடன் இந்தோனேசிய அதிபர் சந்திப்பு: கடல்சார் பாதுகாப்பு உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின https://ift.tt/J9cXeKH

படம்
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளிடையே பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. டெல்லியில் இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதற்காக அவர் கடந்த 23-ம் தேதி இரவு டெல்லி வந்தார். மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை, அவர் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகா கும்பமேளாவில் கண்ணீர் மல்க துறவறம் ஏற்ற நடிகை மம்தா குல்கர்னி https://ift.tt/jICDYNq

படம்
பாலிவுட்டின் பிரபல நடிகையாக இருந்தவர் மம்தா குல்கர்னி. இவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்தியத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நிழல் உலக தாதாக்களுடன் இவருக்குத் தொடர்பு உள்ளிட்ட பல சர்ச்சைகள் இவருக்கு எதிராக கிளம்பின. இதனால், கடந்த 34 வருடங்களுக்கு முன் அவர் வெளிநாடுகளில் தங்கத் துவங்கினார். இதைத் தொடர்ந்து மெல்ல மெல்ல திரைப்படங்களில் நடிப்பதிலிருந்தும் விலகியவர், 2012-ல் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளாவுக்கு வந்திருந்தார். இதையடுத்து ஆன்மிக பாதையில் அவருக்கு ஈடுபாடு எழுந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீவிரவாதி தஹாவூர் ராணாவை ஒப்படைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

படம்
புதுடெல்லி: மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு மும்பையின் சத்ரபதி ரயில் நிலையம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் பயங்கர தாக்குதல் நடத்தினர். சுமார் 60 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் வெளிநாட்டினர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளில் ஒருவரும் பாகிஸ்தானி-அமெரிக்கருமான டேவிட் ஹெட்லி. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காசாவில் பிணைக் கைதிகளாக இருந்த இஸ்ரேல் ராணுவத்தின் 4 பெண் வீரர்கள் விடுதலை

படம்
ஜெருசலேம்: காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட கத்தார் மற்றும் அமெரிக்கா சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து இருதரப்பு இடையே கடந்த 19-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. அன்றைய தினம் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்ற 3 இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் மூலம் விடுவித்தனர். பதில் நடவடிக்கையாக பாலஸ்தீன கைதிகள் 95 பேரை இஸ்ரேல் விடுவித்தது. இந்நிலையில் மேலும் 4 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் மூலம் நேற்று விடுவித்தனர். கரீனா ஆரீவ் (20), டேனிலா கிலோபா(20), நாமா லெவி (20), லிரி அல்பாக் (19) ஆகிய நான்கு பெண்களும் இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜ்ஜியம் இல்லை, கிரீடம் இல்லை: கேரளாவின் பழங்குடியின மன்னருக்கு குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு https://ift.tt/MtIGR64

படம்
திருவனந்தபுரம்: டெல்​லி​யில் நடைபெறும் குடியரசு தின விழா​வில் பங்கேற்க கேரளா​வில் பழங்​குடி​யினத்​தைச் சேர்ந்த மன்னருக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் காஞ்​சி​யார் பஞ்சா​யத்​துக்கு உட்பட்டது கோழிமலை. இங்கு மன்னன் பழங்​குடியின மக்கள் வாழ்​கின்​றனர். இவர்கள் பழங்​காலத்​தில் சோழர்​களுக்​கும் பாண்​டியர்​களுக்​கும் ஏற்பட்ட போரின்போது தமிழ்​நாட்​டில் இருந்து கேரள பகுதிக்கு குடியேறிய​வர்​கள். இந்த பழங்​குடியின மக்களுக்கு ராஜா உண்டு. ஆனால் ராஜ்ஜியம் இல்லை. தலைநகர் உண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கும்பமேளாவில் முழு துறவறத்துக்கு மாறிய நடிகை மம்தா குல்கர்னி: விரைவில் மகா மண்டலேஷ்வர் பதவி https://ift.tt/LF3DAhV

படம்
புதுடெல்லி: மகா கும்பமேளாவில் பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னிக்கு மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கப்பட உள்ளது. இதை அவருக்கு அளிக்கும் கின்னர் அகாடாவில் (திருங்கைகள் அகாடா) இணைந்தார் மம்தா. சுமார் 34 வருடங்களுக்கு முன் பாலிவுட்டின் பிரபல நடிகையாக இருந்தவர் மம்தா குல்கர்னி (50). பல இந்தி திரைப்படங்களில் நடித்த இவருக்கு நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதன் பிறகு மெல்ல திரைப்படங்களிலிருந்து விலகியவர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டார். இடையில் 2012-ல் ஒருமுறை உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜின் கும்பமேளாவிற்கு வந்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உக்ரைன் போரை நிறுத்தாவிடில் ரஷ்யா மீது பொருளாதார தடை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

படம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என்றால் அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு ஆயுத, நிதியுதவியை தாராளமாக வழங்கி வந்தார். புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் உக்ரைனுக்கான நிதியுதவி நிறுத்தப்படும் என்று கூறி வருகிறார். இந்த சூழலில் ரஷ்யா, உக்ரைன் போர் தொடர்பாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வெளிநாட்டினரை சிறையில் அடைக்க உத்தரவு: அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

படம்
அமெரிக்காவில் குற்ற வழக்குகளில் சிக்கி ஜாமீனில் விடுதலையான சட்டவிரோத குடியேறிகளை உடனடியாக சிறையில் அடைக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்ற முதல் நாளில் 78 முக்கிய கொள்கை முடிவுகளை அறிவித்தார். இதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர குற்றங்களில் ஈடுபட்ட வெளிநாட்டினரை சிறையில் அடைக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அந்த நாடு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. முதல் நாளில், பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 308 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எல்லை மீறிய செல்ஃபி கூட்டம்: சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்ட ‘கும்பமேளா வைரல் பெண்’ மோனாலிசா https://ift.tt/eXtOVAC

படம்
பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்கும் பெண் ஒருவர் தான் கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரல் டாபிக். எங்கு திரும்பினாலும் இவருடைய புகைப்படங்களே வலம் வருகின்றன. மத்தியப்பிரதேச மாநில இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்துவந்தார். பிரபல மாடல்களே தோற்றுப் போகும் வகையில் இவரது எழில்கொஞ்சும் அழகிய தோற்றம் காண்போரை வசீகரித்தது. யூடியூபர் ஒருவர் இவரை வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்யவே சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக மாறினார் அந்த பெண். அவரது தோற்றத்தை வைத்து அவருக்கு ‘மோனாலிசா போஸ்லே’ என்று நெட்டிசன்கள் பெயர் சூட்டியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆளில்லா விண்கலனை அனுப்பும் சோதனை: திரவ உந்துவிசை அமைப்புடன் கூடிய விண்கலம் தயார் https://ift.tt/sS2VE7H

படம்
ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா விண்கலனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்துக்காக திரவ உந்துவிசை அமைப்புடன் கூடிய க்ரூ மாட்யூல் (வீரர்கள் தங்கும் அறை) தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ககன்யான் திட்டத்தை மூன்று கட்டங்களாக பிரித்து செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி, 2 கட்டமான முதல் ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை நடத்துவதற்கான ஆராய்ச்சிகளை இஸ்ரோ தீவிரமாக மேற்கொண்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2025-ன் முதல் 3 வாரங்களில் தினமும் குறைந்தது 2 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர்: உள்துறை அமைச்சகம் https://ift.tt/o8mIbrg

படம்
2025-ம் ஆண்டின் முதல் 3 வாரங்களில் தினந்தோறும் குறைந்தது 2 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருவதாவது: புத்தாண்டு பிறந்து முதல் 3 வாரங்களுக்குள் 48 மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப்படையினர், துணை ராணுவத்தினர், போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையின் மூலம் மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பதவியேற்றவுடன் இந்தியாவுக்கு முன்னுரிமை: ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

படம்
புதிய ட்ரம்ப் நிர்வாகம் பதியேற்றவுடன் அமெரிக்கா, இந்தியாவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் தங்களின் முதல் இருதரப்பு சந்திப்பை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் நடத்தினர். அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்கும் விழாவில், அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் பங்கேற்கச் சென்ற எஸ்.ஜெய்சங்கர் வாஷிங்டனில் உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகா கும்பமேளா 8 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் https://ift.tt/l6HDWgN

படம்
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா 8 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான என்எல்பி சர்வீசஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியா உள்ளிட்ட ‘பிரிக்ஸ்’ நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் மிரட்டல்: முதல் நாளில் பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்து

படம்
டாலருக்கு பதில் புதிய கரன்சியை கொண்டுவர முயற்சித்தால் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் பொருட்கள் மீது 100% வரி விதிக்கப்படும் என டொனால்டு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது: சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் முக்கியத்துவத்தைக் குறைப்பது குறித்து எந்த நாடாவது பரிசீலிக்குமானால், அந்த நாட்டு நிறுவனங்கள் இங்கு மேற்கொள்ளப்படும் வர்த்தகத்துக்கு கூடுதல் வரி விதிக்கப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது

படம்
காசா: விடுதலை செய்யப்படும் இஸ்ரேல் பிணைக் கைதிகள் 3 பேரின் பெயரை ஹமாஸ் வெளியிட்டதை அடுத்து, காசாவில் நேற்று போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இஸ்ரேல் - ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த போரில் பாலஸ் தீனர்கள் 47,000 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பு இடையே போர் நிறுத்தம் ஏற்படுத்த கத்தார், அமெரிக்கா சார்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிணைக் கைதிகளை விடுவித்தால் போரை நிறுத்துவதாக இஸ்ரேல் நிபந்தனை விதித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது” - அதிபராக பதவியேற்ற பின் ட்ரம்ப் முதல் உரை!

படம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக வாஷிங்டனில் திங்கள்கிழமை பதவியேற்றார். தனது முதல் உரையில் டொனால்ட் ட்ரம்ப் பேசியதாவது: “அமெரிக்காவின் பொற்காலம் இன்று முதல் தொடங்குகிறது. அமெரிக்கா விரைவில் முன்பை விட சிறந்த, வலிமையான நாடாகவும், விதிவிலக்கானதாகவும் மாறும். தேசிய வெற்றியின் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையுடன் நான் அதிபர் பதவிக்குத் திரும்புகிறேன். நாடு முழுவதும் மாற்றத்தின் அலை வீசுகிறது. இந்த வாய்ப்பை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் முதலில், நாம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நாம் நேர்மையாக சிந்திக்க வேண்டும். அவை ஏராளமாக இருந்தாலும், அமெரிக்காவில் இப்போது உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் உந்துதலால் அவை அழிக்கப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஷின்-சானின் வீட்டை உருவாக்க ரூ.3.5 கோடி செலவு செய்த சீன ரசிகர்

படம்
அனிமேஷன் கதாபாத்திரங்களின் உண்மையான பிரியர் என்றால் ஷின்-சான் பெயரை நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது. சிறுவர்களின் மிக பிரியமான இந்த கதாபாத்திரத்துக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஷின்-சானின் பிரியர்கள் எவரும் சிவப்பு மற்றும் வெள்ளை செங்கற்களால் தனித்துவமாக கட்டப்பட்ட ஷின்னோசுகே நோஹாராவின் (ஷின்-சான்) சின்னமான வீட்டை எப்போதும் நினைவில் வைத்திருப்பர். ஷின்-சானின் தீவிர ரசிகரான 21 வயது ஷென் என்பவர் தற்போது அந்த வீட்டை ரூ.3.5 கோடி செலவில் புதுப்பித்துள்ளது சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. கடந்த 2024 ஜூலை மாதம் கட்டுமானப் பணியை தொடங்கிய அவர் ஓராண்டுக்கும் மேலாக ஷின்-சான் வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த வீட்டை புதுப்பிப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக ஷாங்காய்க்கு ஐந்துக்கும் மேற்பட்ட முறை ஷென் பயணம் செய்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகா கும்பமேளாவில் வைரலாகும் உத்தராகண்ட் மாநில இளம் துறவி ஹர்சா https://ift.tt/gqX7FPs

படம்
பிரயாக்ராஜ் : மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்கும் இரு இளம்பெண்களின் புகைப்படம், வீடியோக்கள் வைரலாக பரவி வருகின்றன. லியானார்டோ டாவின்சி வரைந்த மோனா லிசா ஓவியம், உலகின் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றாகும். இந்த ஓவியத்தை மையமாக வைத்து அழகான இளம்பெண்களை, மோனா லிசா என்று அழைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சட்டவிரோதமாக செயல்பட்ட 13 சுரங்கங்களுக்கு சீல்: அசாம் அரசு நடவடிக்கை https://ift.tt/y5ZRaUS

படம்
அசாமில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 13 சுரங்கங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அசாமின் திமா ஹசாவ் மாவட்டம், உம்ரங்சூ பகுதியில் செயல்பட்ட நிலக்கரி சுரங்கம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அந்த சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி எடுத்து வந்தனர். கடந்த 6-ம் தேதி எலிவளை சுரங்கம் அமைத்து அவர்கள் நிலக்கரி வெட்டியபோது தண்ணீர் பெருக்கெடுத்து சுரங்கம் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கிருந்து இதுவரை 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. 7 பேரை காணவில்லை. அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுசிர் பாலாஜி மரண வழக்கில் போலீஸாருக்கு உதவ தயார்: மவுனம் கலைந்த ஓபன் ஏஐ நிறுவனம்

படம்
சான் பிரான்சிஸ்கோ: சுசிர் பாலாஜி மரண வழக்கில் காவல் துறைக்கு உதவ தயார் என 2 மாதத்துக்கு பிறகு ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றியவர் இந்தியரான சுசிர் பாலாஜி (26). 4 ஆண்டுக்குப் பின் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறிய அவர், சாட் ஜிபிடியை உருவாக்கியதில் ஓபன் ஏஐ நிறுவனம் காப்புரிமையை மீறிவிட்டதாக குற்றம்சாட்டி வந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்துக்களுக்கு எதிரான வெளிப்படையான போர்: காங்கிரஸ் கட்சி மீது பாஜக குற்றச்சாட்டு https://ift.tt/CqFKn4t

படம்
புதுடெல்லி: பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: வரலாற்று அநீதிகளுக்கு சட்ட தீர்வு கோருவது இந்துக்களின் அடிப்படையான அரசியல்சாசன உரிமை. அதை மறுப்பதற்கு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது காங்கிரஸ். மதச்சார்பின்மை பாதுகாப்பு என்ற பெயரில் வழிபாட்டு தலங்கள் சட்டத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது இந்துக்களுக்கு எதிரான வெளிப்படையான போர் அறிவிப்பு. காங்கிரஸ் கட்சி தற்போது புதிய முஸ்லிம் லீக்-ஆக மாறியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அதானிக்கு முன்பு பாலிவுட்டை குறிவைத்த ஹிண்டன்பர்க் https://ift.tt/srLVMIB

படம்
அதானி குழுமத்துக்கு முன்பாக ஹிண்டன்பர்க் நிறுவனம் பாலிவுட்டை குறிவைத்து சூழ்ச்சி வலை பின்னியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் கனெடிகட் பகுதியை சேர்ந்தவர் நாதன் ஆண்டர்சன் (40). அங்குள்ள யூத பள்ளியில் பயின்ற அவர், கனெடிகட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிகம் பாடத்தில் பட்டம் பெற்றார். பின்னர் இஸ்ரேல் நாட்டுக்கு குடிபெயர்ந்த அவர் கடந்த 2004, 2005-ம் ஆண்டுகளில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பயணிகள் வாகன உற்பத்தி சந்தையில் மூன்றாவது இடத்தில் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம் https://ift.tt/dFZms8J

படம்
சர்வதேச பயணிகள் வாகன உற்பத்தி சந்தையில் பாரதம் 3-வது இடத்தில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் பாரத போக்குவரத்து கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். வரும் 22-ம் தேதி வரை பாரத் மண்டபம், யஷோபூமி, கிரேட்டர் நொய்டா, மார்ட் என டெல்லியின் பல்வேறு இடங்களில் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 100 புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராணுவ அதிகாரியை திருமணம் செய்ய காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு இன்று தண்டனை அறிவிப்பு https://ift.tt/Z2UdXyO

படம்
பெற்றோர் நிச்சயித்த ராணுவ அதிகாரியை திருமணம் செய்வதற்காக 2 ஆண்டுகளாக காதலித்த காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண் குற்றவாளி என நெய்யான்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படுகிறது. கன்னியாகுமரியில் வசித்த இளம் பெண் கரீஸ்மா. இவர் கடந்த 2021-ம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்தபோது, இளநிலை 3-ம் ஆண்டு படித்த ஷரோன் ராஜ் என்ற மாணருடன் நட்பு ஏற்பட்டது. இவர் திருவனந்தபுரம் பாரசாலா பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் காதலர்களாக இருந்தனர். இந்நிலையில் கரீஸ்மாவுக்கு, ராணுவ அதிகாரி மாப்பிள்ளையை கரீஸ்மாவின் பெற்றோர் நிச்சயம் செய்தனர். இதற்கு கரீஸ்மாவும் சம்மதித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“உலக அமைதிக்காக அனைத்தையும் செய்வோம்” - சீன அதிபருடனான உரையாடல் குறித்து ட்ரம்ப்

படம்
பல்வேறு முக்கியமான விவகாரங்கள் குறித்து சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்குடன் ஒரு பயனுள்ள உரையாடலை நடத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை (ஜன.17) தெரிவித்தார். தனது சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ள ட்ரம்ப், “சீன அதிபர் உடனான தொலைபேசி அழைப்பு சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் மிகவும் நன்மையானதாக இருந்தது. நாங்கள் பல்வேறு பிரச்சினைகளை ஒன்றாகத் தீர்ப்போம் என்பதும், அதனை உடனடியாகத் தொடங்குவோம் என்பதும் எனது எதிர்பார்ப்பு. வர்த்தகம், வலி மருந்துகள், டிக்டாக் உள்ளிட்ட பல விஷயங்களை சமநிலைப்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹரியானாவில் எம்பிபிஎஸ் செமஸ்டர் தேர்வில் முறைகேடு: ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற ரூ.5 லட்சம் லஞ்சம் https://ift.tt/Eiw0v5R

படம்
ஹரியானாவில் எம்பிபிஎஸ் செமஸ்டர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஹரியானாவின் ரோத்தக் நகரில் பண்டிட் பகவத் தயாள் சர்மா மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இது ஹரியானா அரசின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரி ஆகும். இந்த மருத்துவக் கல்லூரியின் எம்பிபிஎஸ் செமஸ்டர் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வீடியோ ஆதாரத்தை ஒரு மாணவர் அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவியதை தொடர்ந்து ரோத்தக் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

14 மணி நேர வேலையால் மகளின் குழந்தை பருவத்தை இழந்தேன்: கணக்கு தணிக்கையாளரின் வீடியோ வைரல் https://ift.tt/i0f4OLA

படம்
அலுவலக பணிச் சுமையால் என் மகளின் குழந்தைப் பருவத்தை அனுபவிக்க தவறிவிட்டேன் என பெண் கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.) வேதனை தெரிவித்துள்ளார். நீது மொஹாங்கா ஒரு கணக்கு தணிக்கையாளர். தொடக்க காலத்தில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். ஒரு நாளைக்கு 14 மணி நேரம் அலுவலக வேலையில் மூழ்கி இருந்ததால் அவரது குடும்பத்தினரை கவனிக்க முடியாமல் போய் உள்ளது. ஒரு கட்டத்தில் இதை உணர்ந்த அவர் வேலையை விட்டுவிட்டு, மனவள பயிற்சியாளராக உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இணையதளத்தை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 90 கோடியை தாண்​டும்: ஐஏஎம்ஏஐ https://ift.tt/mv8qhTD

படம்
இந்தியாவில் நடப்பு ஆண்டில் இணையதள பயனாளர் எண்ணிக்கை 90 கோடியை தாண்டும் என ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. இந்திய இணையதளம் மற்றும் செல்போன் சங்கம் (ஐஏஎம்ஏஐ) மற்றும் சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கன்டர் சார்பில் ‘இந்தியாவில் இணையதளம் 2024’ என்ற பெயரில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகளை கூறிய அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்

படம்
அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகளை கூறிய அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் பங்குச் சந்தை குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் கணக்கு வழக்கில் முறைகேடு செய்திருப்பதாகவும் பங்கு விலையை செயற்கையாக அதிகரித்திருப்பதாகவும் குற்றம்சாட்டியது. இதனால் அப்போது அதானி குழும பங்குகள் 50% வரை சரிந்தன. ஆனால் இந்த குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி தேர்தலில் அர்விந்த் கேஜ்ரிவால், மணிஷ் சிசோடியா வேட்புமனு தாக்கல் https://ift.tt/8tPSMqF

படம்
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் இருந்து போட்டியிடுவதற்கு முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஏஐ மூலம் பிரதமர் மோடி, அமித் ஷா வீடியோ: ஆம் ஆத்மி கட்சி மீது வழக்குப் பதிவு https://ift.tt/y4QT67R

படம்
செயற்கை நுண்ணறிவு மூலம் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ஜெய் ஷா வீடியோக்களை உருவாக்கி பதிவிட்டதற்காக ஆம் ஆத்மி கட்சி மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் வீடியோக்கள், புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கி அதை பதிவு செய்திருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இஸ்ரேல் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 

படம்
ஏமனின் ஹவுதி படைகள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால் டெல் அவிவ் நகரம் மற்றும் மேற்குக் கரையில் உள்ள சில இஸ்ரேலிய குடியிருப்பு பகுதிகளில் சைரன்கள் எழுப்பப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. எனினும் இந்த தாக்குதலில் ஜெருசலேமின் புறநகரில் உள்ள மேவோ பெய்டார் மற்றும் த்சூர் ஹடாசாவில் வீடுகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2024 தேர்தல் குறித்து தவறான தகவல்: மெட்டா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்ப மத்திய அரசு திட்டம்! https://ift.tt/3jeGKWZ

படம்
புதுடெல்லி: இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்-க்கு சம்மன் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து பாஜக எம்.பியும், நாடாளுமன்றத்தில் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப குழுவின் தலைவருமான நிஷிகாந்த் துபே தனது எக்ஸ் பக்கத்தில் “தவறான தகவலை தெரிவித்தமைக்காக எனது குழு மெட்டா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்ப உள்ளது. எந்தவொரு ஜனநாயக நாட்டைப் பற்றிய தவறான தகவலும் அதன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும். இந்தத் தவறுக்காக மெட்டா நிறுவனம் இந்திய நாடாளுமன்றத்திடமும் இங்குள்ள மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேர்தலுக்காக நன்கொடை திரட்டும் ஆதிஷி: 24 மணி நேரத்தில் ரூ.19 லட்சம் குவிந்தது https://ift.tt/VYINuA0

படம்
டெல்லி முதல்வர் ஆதிஷி சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இணையவழியில் நன்கொடை திரட்டுகிறார். அவருக்கு 24 மணி நேரத்தில் ரூ.19 லட்சம் குவிந்தது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் ஆதிஷி போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்துக்காக ரூ.40 லட்சம் நன்கொடை வசூலிக்க திட்டமிட்டுள்ளார். இதன்படி, இணையவழியில் நன்கொடை திரட்டும் பிரச்சாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். அடுத்த 24 மணி நேரத்தில் 455 பேர் ரூ.19,32,728 நன்கொடை வழங்கி உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஜனவரி 14, 15-ல் பொங்கல் விழா கொண்டாட்டம் https://ift.tt/tR4LrDx

படம்
புதுடெல்லி: டெல்லியில் தமிழக அரசின் சார்பில் 14 (நாளை) மற்றும் 15 ஜனவரி, 2025-ல் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. டெல்லியின் தமிழ்நாடு இல்லத்தில் நடைபெறும் விழாவிற்கு அக்கட்டிடம் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தயாராகி வருகிறது. தமிழக அரசின் சார்பில் இந்த பொங்கல் விழா இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக ஜனவரி 14-ல் 21 பானைகளில் பொங்கலிடும் பெரும் பொங்கல் நிகழ்வு நடைபெறும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விவேகானந்தரின் கனவை நனவாக்குவோம்: தேசிய இளைஞர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி https://ift.tt/apw8L9A

படம்
விவேகானந்தரின் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவோம் என தேசிய இளைஞர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். ஆன்மிக தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12-ம் தேதி தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ‘வளர்ந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடல்’ நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக கண்காட்சியும் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துடிப்பான இளைஞர்கள் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பள்ளி மாணவரின் மர்ம மரணத்தை கண்டித்து சீன அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம்

படம்
சீனாவின் சான்சி மாகாணத்தில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா பெருந்தொற்று காலம் முதல் சீன அதிபர் ஜி ஜின்பிங் மீதான நம்பிக்கையை அந்த நாட்டு மக்கள் இழந்துள்ளனர். பொருளாதார தேக்கநிலை, வேலையின்மை, சர்வாதிகாரம், மத சுதந்திரம் மறுப்பு உள்ளிட்ட காரணங்களால் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு எதிராக அவ்வப்போது பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போது பள்ளி மாணவரின் மர்ம மரணம் தொடர்பாக சீனாவின் சான்சி மாகாணத்தில் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அசாம் சுரங்க விபத்தில் மேலும் 3 உடல்கள் மீட்பு https://ift.tt/TWYSmw0

படம்
குவாஹாட்டி: அசாம் சுரங்க விபத்தில் நேற்று மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன. அசாமின் திமா ஹசாவ் மாவட்டம், உம்ரங்சூ பகுதியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சுரங்கம் மூடப்பட்டது. தற்போது அசாம் அரசின் கனிமவளத் துறை கட்டுப்பாட்டின் கீழ் சுரங்கம் உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் சட்டவிரோதமாக உம்ரங்சூ சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுத்து வந்தனர். கடந்த 6-ம் தேதி அந்த சுரங்கத்தில் சுமார் 42 தொழிலாளர்கள் 300 அடி ஆழத்தில் நிலக்கரியை வெட்டி எடுத்து கொண்டிருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்