மத்திய பட்ஜெட் 2021: தமிழகத்தில் 3,500 கி.மீ தூரத்துக்கு புதிய தொழில் வழித்தடம்; சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு https://ift.tt/3rfSBxL
சென்னையின் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு 63,246 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், தமிழகத்தில் 3,500 கி.மீ தூரத்துக்கு புதிய தொழில் வழித்தடம் அமைக்கவும் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. வரும் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை குழுவினர் இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அவரிடம் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக எடுத்துரைத்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்