இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

2047-க்குள் வளர்ந்த தேசமாக மாற தொழில்நுட்பம் பேருதவி புரியும் - பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை https://ift.tt/L0GgCyw

படம்
புதுடெல்லி : வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த தேசமாக உருவெடுக்க தொழில்நுட்பம் பேருதவியாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். திறன் வெளிப்படுத்தல்; தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாழ்வை எளிமையாக்கல் என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய வெப்பினாரில் கலந்து கொண்ட பிரதமர் இதுகுறித்து மேலும் கூறியது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தந்தைக்கு ரகசியமாக சிறுநீரக தானம் செய்த மகள்

படம்
வாஷிங்டன் : அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண், தனது தந்தைக்கு ரகசியமாக சிறுநீரக தானம் செய்தார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு உண்மையை அறிந்த தந்தை உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் சிந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் மிசோரி மாகாணம், கிர்க்வுட் நகரை சேர்ந்தவர் ஜான் (60). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது 2 சிறுநீரகங்களும் செயலிழந்தன. அதன்பிறகு அவர் தொடர்ச்சியாக டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர். குடும்பத்தினர் சிறுநீரக தானம் வழங்குவதை ஜான் விரும்பவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது - அமெரிக்கா புகழாரம்

படம்
வாஷிங்டன் : தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்று அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன், ஐ.எஸ்., அல்-காய்தா, ஜமாத் -அல் -முஜாகிதீன், ஜமாத் -அல் -முஜாகிதீன் பங்களாதேஷ் ஆகிய தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் செயல்படுகின்றன. அந்த நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டில் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மத்திய பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகாராஷ்டிராவில் வெங்காய விலை வீழ்ச்சி - எதிர்க்கட்சி எம்எல்ஏ.க்கள் சட்டப்பேரவையில் அமளி https://ift.tt/u6Axjz4

படம்
மும்பை : மகாராஷ்டிராவில் வெங்காயத்தின் மொத்த விலை கிலோ ரூ.4-லிருந்து நேற்று முன்தினம் ரூ.2 ஆக குறைந்தது. இதனால் கோபமடைந்த அடைந்த விவசாயிகள் நாசிக் மண்டியில் வெங்காய ஏலத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். வெங்காயத்துக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,500 மானியமாக அரசு அறிவிக்க வேண்டும் எனவும், வெங்காயத்தை கிலோ ரூ.15 முதல் ரூ.20-க்கு அரசே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் வெங்காய விவசாயிகள் சங்க தலைவர் பாரத் டிகோல் வேண்டுகோள் விடுத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மோசடியைத் தடுக்க விரல் ரேகை மூலம் ஆதார் விவரம் சரிபார்க்க புதிய பாதுகாப்பு வசதி https://ift.tt/hGbNkLZ

படம்
புதுடெல்லி : கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசு, குடிமக்களுக்கு தனித்த அடையாள எண் வழங்கும் நோக்கில் ஆதார் அட்டை திட்டத்தை முன்னெடுத்தது. தற்போது அனைத்து விதமான சேவைகளுக்கும், வாடிக்கையாளர்களின் தகவலை உறுதி செய்ய ஆதார் அட்டை முதன்மையான ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ஆதாருக்கு என்று அமைக்கப்பட்ட ஆணையமான யுஐடிஏஐ, ஆதார் அட்டை வழியான தகவல் சரிபார்ப்பு சார்ந்து புதிய பாதுகாப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ராஜினாமா - சிறையில் உள்ள அமைச்சர் சத்யேந்தரும் விலகல் https://ift.tt/LBhfjvg

படம்
புதுடெல்லி : ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, 9 மாதங்களாக சிறையில் இருக்கும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகிய இருவரும் பதவியை ராஜினாமா செய்தனர். டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சிநடைபெறுகிறது. கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை கேஜ்ரிவால் அரசு அமல்படுத்தியது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அரசுக்கு ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கும்பகோணம் | சமூக வலைதளங்களில் முதல்வர் குறித்து அவதூறு: சென்னையை சேர்ந்தவர் கைது https://ift.tt/GMzAh2t

படம்
கும்பகோணம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக சென்னையைச் சேர்ந்த ஜான் ரவி (40) என்பவரை போலீஸார் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த ஜான் ரவி என்பவர், குஜராத்தில் தொழில் செய்து வருகிறார். இவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரை அவதூறாக விமர்சனம் செய்து, பிப்.21-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பால் வியாபாரி கொலை வழக்கில் ரவுடிக்கு ஆயுள் தண்டனை: பூந்தமல்லி நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு https://ift.tt/xfvNHwL

படம்
பூந்தமல்லி: சென்னை வளசரவாக்கத்தில் பால் வியாபாரியை கொன்ற ரவுடிக்கு ஆயுள் தண்டனை விதித்து, பூந்தமல்லி 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை, ஆழ்வார் திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி (35). பால் வியாபாரியான, இவருக்கும், வளசரவாக்கம், நியூ பெத்தானியா நகரைச் சேர்ந்த கோபி என்கிற கர்ணா (48) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெண்ணை கொன்று நகை கொள்ளை - வீட்டு வேலை பணியாளருக்கு 30 ஆண்டுகள் சிறை https://ift.tt/2q04F3k

படம்
திண்டுக்கல் : திண்டுக்கல் பாலசுப்பிரமணி ஆயில் மில் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி(40). இவரது கணவர் துபாயில் பணிபுரிகிறார். தனது குழந்தைகளுடன் கலைச்செல்வி தனியாக வசித்து வந்தார். திண்டுக்கல் நல்லாம்பட்டி காளியம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர்(32), வாடகை ஆட்டோ ஓட்டுவதுடன் கலைச்செல்வியின் வீட்டிலும் பணிபுரிந்து வந்தார். 2019-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த கலைச்செல்வியை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகள், பணத்தை சந்திரசேகர் கொள்ளையடித்துச் சென்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து https://ift.tt/j6g5XsF

படம்
புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது: நீட் நுழைவுத் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே மாணவர்களின் கருத்துகளை அரசு கேட்டறிய வேண்டும். இது அரசின் கடமை ஆகும். ஒருவருக்கு அநீதி இழைக்கப்பட்டால் அவருக்கு நீதி பெற்றுத் தர வேண்டியது நீதிமன்றத்தின் கடமை ஆகும். நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும். மருத்துவப் படிப்புக்கான சேர்க்கையில் இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பன தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எம்எல்ஏ கொலையில் சாட்சியை சுட்டுக்கொன்ற முக்கிய குற்றவாளி என்கவுன்ட்டரில் உயிரிழப்பு https://ift.tt/0ybRi2N

படம்
பிரயாக்ராஜ் : உ.பி. முன்னாள் எம்.எல்.ஏ. கொலை வழக்கின் முக்கிய சாட்சியை சுட்டுக் கொன்ற குற்றவாளி என்கவுன்ட்டரில் உயிரிழந்தார். உத்தரபிரதேசத்தின் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜு பால் கடந்த 2005-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட உமேஷ் பால், கடந்த 24-ம் தேதி பிரயாக்ராஜ் நகரில் தனது காரிலிருந்து வெளியே வந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இமாச்சலில் சுற்றுலாவை மேம்படுத்த 8 ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க முடிவு https://ift.tt/6g7LboD

படம்
ஹமிர்புர் : சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடப்பாண்டில் 5 ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் (ஹெலிபோர்ட்ஸ்) அமைக்கப்படும் என இமாச்சல பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: இமாச்சல பிரதேசத்தில் தற்போதுள்ள 5 ஹெலிபோர்ட்களில் மூன்று வணிக ரீதியில் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு போதுமான ஹெலிபோர்ட்ஸ் வசதி மாநிலத்தில் இல்லை. இதனை உணர்ந்து சுற்றுலாவை மேம்படுத்தவும், பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் மேலும் 8 ஹெலிபோர்ட்களை அமைக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் அமையவுள்ள இந்த ஹெலிபோர்ட்களுக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தாய், பாட்டியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து தற்கொலை செய்து கொண்ட ராணிப்பேட்டை இளைஞர் https://ift.tt/cmIAGCK

படம்
அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த மேலேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (52). இவர், அதே பகுதியில் உள்ள பண்ணை வீட்டின் இரவு நேர காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி யசோதா(45). தம்பதியரின் மகன் அசோக்குமார் (24). இவரது பாட்டி வள்ளியம்மாளும் (80) ஒரே வீட்டில் வசித்து வந்தனர். யசோதாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அசோக்குமார் ஐடிஐ முடித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஆனால், அவருக்கும் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதித்ததாகவும் இதனால், பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், பழனி நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றார். தாய், மகன், பாட்டி ஆகிய 3 பேரும் இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விக்கிரவாண்டி அருகே மாணவியை தாக்கி பாலியல் வன்கொடுமை? - 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை https://ift.tt/UqR0fbj

படம்
கள்ளக்குறிச்சி: விக்கிரவாண்டி அருகே பள்ளி மாணவியை தாக்கி பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது குறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. நேற்று விளக்கம் அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவரும், சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த மாணவியும் சிந்தாமணியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை கைது செய்தது சிபிஐ https://ift.tt/jVUx1an

படம்
புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ளது.கடந்த 2021-22-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கை தனியார் நிறுவனங்கள்பயனடையும் வகையில் இருந்ததாகவும், இதற்கு பிரதிபலனாக பலகோடி ரூபாய் லஞ்சப் பணம்கைமாறியதாகவும் குற்றச்சாட்டுஎழுந்தது. அதன்பிறகு, புதியமதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு ரத்து செய்தது. புதிய மதுபான கொள்கைஊழல் வழக்கில் தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று சிபிஐ முன்பு ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இறக்குமதி செய்ய பணமில்லாததால் பாக்.கில் மருந்து தட்டுப்பாடு: அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை

படம்
கராச்சி: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. பாகிஸ்தானுக்கு தீவிர கடன் சுமை உள்ளது. இதனால், அதன் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடி யாத நிலையில் நாட்டின் பொரு ளாதாரம் உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை கைது செய்தது சிபிஐ https://ift.tt/EbK1xA2

படம்
புது டெல்லி: டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை கைது செய்துள்ளது சிபிஐ. இன்று காலையில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஆஜரான நிலையில் சிபிஐ அவரை கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. இதன்படி, டெல்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலையில் புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேர்தலில் போட்டியிடும் குற்றப் பின்னணி வேட்பாளர்கள் குறித்த நிலை என்ன? - மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவு https://ift.tt/mwhkojp

படம்
புதுடெல்லி : தேர்தலில் போட்டியிடும் குற்றப் பின்னணி வேட்பாளர்கள் குறித்து நிலை என்ன என்பது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநலன் மனுவில் (பிஐஎல்) கூறியுள்ளதாவது: ஓர் அரசு ஊழியர் மீதுநீதிமன்றத்தில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தால், அவர் இடைநீக்கம் செய்யப்படு வார் அல்லது பணியில் இருந்து நீக்கப்படுவார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல் - ஏர் இந்தியா நிறுவன ஊழியர் கைது https://ift.tt/HiIB45T

படம்
சென்னை : கொழும்புவில் இருந்து சென்னைக்கு நேற்று விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இரு ஆண் பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களை சோதனை செய்தனர். இதில், அவர்கள் ரூ.41.15லட்சம் மதிப்பிலான, 820 கிராம்தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உக்ரைன் போருக்கு தீர்வு காண அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார் - பிரதமர் நரேந்திர மோடி பேட்டி https://ift.tt/FkRqUji

படம்
புதுடெல்லி: ‘‘உக்ரைன் போருக்கு தீர்வு காணும் அமைதி பேச்சுவார்த்தைக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது’’ என ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்ஸை சந்தித்து பேசிய பின் பிரதமர் மோடி கூறினார். ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸகால்ஸ் நேற்று இந்தியா வந்தார். அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இருவரும் 4-வது முறையாக சந்தித்து கொண்டனர். இந்திய வருகை குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஓலப் ஸகால்ஸ், ‘‘இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே நல்ல உறவு உள்ளது. இதை மேலும் வலுப்படுத்த விரும்புகிறேன். எங்கள் பேச்சுவார்த்தையில் இது முக்கிய அம்சமாக இருக்கும். உலகத்தில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து நாங்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த வுள்ளோம்’’ என குறிப்பிட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் உளவு பார்த்த சீன இளைஞர் கைது https://ift.tt/G3cvPJq

படம்
பரேலி : சீனாவைச் சேர்ந்த இளைஞர் வாங் கவுஜுன். இவர் தகுந்த விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்து டெல்லியின் பல்வேறு இடங்களில் உளவு பார்த்துள்ளார். தகுந்த விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்த குற்றத்துக்காக உ.பி. போலீஸார் இவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அப்போதுதான் இவர் டெல்லியின் முக்கிய இடங்களை உளவு பார்த்தது தெரிய வந்துள்ளது. இவரை 9 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலக வங்கி தலைவராக இந்தியர் நியமனம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

படம்
வாஷிங்டன் : உலக வங்கியின் தலைவராக உள்ள டேவிட் மால்பஸ் பதவிக் காலம் 2024 ஏப்ரல் வரை உள்ளது. இந்நிலையில், வரும் ஜூன் மாதம் பதவி விலகப் போவதாக மால்பஸ் கடந்த வாரம் அறிவித்தார். இதையடுத்து வரும் மே மாதம் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியானது. இந்நிலையில், உலக வங்கியின் புதிய தலைவராக இந்தியரான அஜய் பங்கா நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த நியமனத்துக்கு உலக வங்கியின் இயக்குநர்கள் வாரியம் ஒப்புதல் அளித்துவிட்டால், உலக வங்கியின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமை அஜய் பங்காவுக்கு கிடைக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தென்சீன கடல் பகுதியில் சர்ச்சை நிலவும் சூழலில் இந்தோனேஷியா சென்றது ஐஎன்எஸ் சிந்துகேசரி https://ift.tt/Q40fEaq

படம்
புதுடெல்லி : தெற்கு சீன கடல் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் அண்டை நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே கடல் எல்லை பிரச்சினைகள் உள்ளன. இச்சூழ்நிலையில் தெற்கு சீன கடல் பகுதியில் சுந்தா ஜலசந்தியை கடந்து இந்திய நீர்மூழ்கி கப்பல் சிந்துகேசரி முதல் முறையாக இந்தோனேஷியா சென்றடைந்துள்ளது. ஆசிய நாடுகளுடன் தொடர்ந்து ராணுவ உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய போர்க் கப்பல்கள் பல இந்தோனேஷியா மற்றும் இதர ஆசிய நாடுகளுக்கு சென்றுள்ளன. ஆனால் நீர்மூழ்கி கப்பல் நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இன்னிங்ஸ் நிறைவு பெற்றதாக அறிவிப்பு - அரசியலில் இருந்து சோனியா காந்தி ஓய்வு? https://ift.tt/AwDygne

படம்
ராய்ப்பூர் : ‘‘பாரத ஒற்றுமை யாத்திரையுடன் எனது அரசியல் பயணம் நிறைவு பெற்றுள்ளது’’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் 2 நாள் மாநாடு சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடந்த 2-வது நாள் மாநாட்டில் சோனியா காந்தி பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடக சட்டப்பேரவையில் இறுதி உரை ஆற்றிய எடியூரப்பாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு https://ift.tt/XV2wxt7

படம்
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் இறுதியாக உரை ஆற்றிய முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை பிரதமர் மோடி பாராட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா, முதுமையின் காரணமாக கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசியல் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கியுள்ள அவர், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். கர்நாடகாவில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதியாக நேற்றுஅவர் அவையில் உரையாற்றினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விழுப்புரம் | அன்பு ஜோதி இல்ல ஆசிரம நிர்வாகிகளை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனு தாக்கல் https://ift.tt/fegBQbJ

படம்
விழுப்புரம்: விழுப்புரம் அன்பு ஜோதி இல்ல ஆசிரமநிர்வாகிகளை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிசிஐடி போலீஸார், விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். விழுப்புரம் அருகேயுள்ள குண்டலபுலியூரில் செயல்பட்டு வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில், மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகளைத் துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிரமத்தில் இருந்த 20-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை | கூட்டாளிகளுக்கு சம்பளம் கொடுத்து வழிப்பறி: தலைமறைவாக இருந்த பிரபல கொள்ளையன் கைது https://ift.tt/NloXAkc

படம்
சென்னை: கூட்டாளிகளுக்கு சம்பளம் கொடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அசோக் நகரை அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 13-ம் தேதி பணிக்குச் செல்வதற்காக கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பிரசாந்தின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முகமூடி அணிந்து சுவரில் ஏறிச் செல்லும் கொள்ளையன்: பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு https://ift.tt/vIO9Pe6

படம்
சென்னை: சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் புதிய சிசிடிவிகாட்சிகள் வெளியாகி உள்ளன. சென்னை பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலையில் ஜே.எல்.கோல்ட்பேலஸ் என்ற பெயரில் நகைக்கடை உள்ளது. இந்த நகைக் கடையின் ஷட்டரை கடந்த 9-ம் தேதி நள்ளிரவு காஸ் வெல்டிங் மூலம் துளையிட்டு, உள்ளே புகுந்த கொள்ளையர்கள் நகைக்கடையிலிருந்த 9 கிலோ தங்க நகைகள், ரூ.20 லட்சம் மதிப்புடைய வைர நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு காரில் தப்பினர். இதுகுறித்து திருவிக நகர்போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான கொள்ளையர்களைப் பிடிக்க ஓர் இணை ஆணையர், 2 துணை ஆணையர்கள் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸார் கொள்ளையர்களை தமிழகம் மட்டும் அல்லாமல் ஆந்திரா, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு தொடர்ந்து தேடி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வடகிழக்கு மாநிலங்களை ஏடிஎம் போல் பயன்படுத்தியது - காங்கிரஸ் மீது பிரதமர் குற்றச்சாட்டு https://ift.tt/qgl8JdA

படம்
திமாபூர் : வடகிழக்கு மாநிலமான நாகா லாந்தில் திங்கட்கிழமை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில் பாஜக 20 இடங்களிலும் அதன் அணியில் உள்ள தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) 40 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இந்நிலையில் திமாபூரில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நாகாலாந்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) பாடுபடுகிறது, இதனால் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் இம்மாநிலத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய பொருளாதாரத்தின் எழுச்சி உலகின் வளர்ச்சிக்கு உத்வேகம் தரும் - ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடி நம்பிக்கை https://ift.tt/y5ae2uV

படம்
பெங்களூரு : உலகின் வளர்ச்சிக்கு இந்தியாவின் பொருளாதார எழுச்சி உத்வேகம் அளிக்கும் என்று ஜி20 கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. இந்த நிலையில், அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டம் கர்நாடக மாநிலம்பெங்களூருவில் நேற்று நடந்தது. இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒவ்வொருவரின் கூட்டுப் பொறுப்பு - நிலையான வளர்ச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல் https://ift.tt/vhyVWIT

படம்
புதுடெல்லி : சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நாம் ஒவ்வொருவரின் கூட்டுப்பொறுப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற உலக நிலையான வளர்ச்சி 22 வது உச்சிமாநாட்டின் தொடக்கவிழாவில் பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தி: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் என்ஐஏ சோதனை - 6 காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கைது https://ift.tt/M3zPkSm

படம்
புதுடெல்லி : என்ஐஏ நடத்திய சோதனையில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 21-ம் தேதி டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் யூனியன் பிரதேசம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள 76 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சர்வதேச சட்டத்தை மீறி உக்ரைன் மீது ரஷ்யா போர் - ஐ.நா. பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு

படம்
நியூயார்க் : சர்வதேச சட்ட விதிகளை மீறி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கிறது என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் குற்றம் சாட்டியு்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகள் இடையிலான போர் ஓராண்டை எட்டியுள்ளது. இரு தரப்பிலும் இதுவரை தலா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்து உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹைதராபாத் விமான நிலையத்தில் ரூ. 8 கோடி தங்க நகைகள் பறிமுதல் https://ift.tt/b3BUGwL

படம்
ஹைதராபாத் : ஹைதராபாத் விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமார் ரூ. 8 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஹைதராபாத் விமான நிலையத்தில் நேற்று காலை வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சூடான் நாட்டிலிருந்து வந்த 23 பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தியதில், 15 கிலோ தங்க நகைகள் சட்ட விரோதமாக ஹைதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு சுமார் ரூ. 8 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.25 கோடி போதைப்பொருளுடன் மணிப்பூரில் ஒருவர் கைது https://ift.tt/HNY2pXs

படம்
இம்பால் : மணிப்பூரில் இந்திய-மியான்மர் எல்லைப் பகுதியில் ரூ.25 கோடி மதிப்புள்ள போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மணிப்பூர் மாநிலத்தின் தெங்னூபால் மாவட்டத்தில் இந்திய – மியான்மர் எல்லையை ஒட்டி மோரே நகரம் அமைந்துள்ளது. இந்நகரை ஒட்டிய சர்வதேச எல்லைப் பகுதியில் மாநில காவல் துறை மற்றும் அசாம் ரைபில்ஸ் படையினர் நேற்று முன்தினம் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் நடமாடிய ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அங்கிருந்து தப்ப முயன்றதால் அவரை வளைத்துப் பிடித்து, அப்பகுதியில் உள்ள அவரது வீட்டில் சோதனையிட்டனர். இதில்56 கிலோவுக்கு மேல் எடை கொண்ட போதை மாத்திரைகள் சிக்கின. மேலும் மியான்மர் சிம்கார்டும் 2 போன்களும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடியை கிண்டல் செய்த காங். மூத்த தலைவர் பவன் கேரா கைது - இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் https://ift.tt/xOIWEtN

படம்
புதுடெல்லி : பிரதமர் மோடியை, காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கிண்டல் செய்தது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதால், அவரை அசாம் போலீஸார் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்தனர். அவருக்கு உச்சநீதிமன்றம் வரும் 28-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அதானி குழுமத்துக்கு எதிராக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் அளித்த அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்றார். அப்போது அவர் ‘‘நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மோடி பயப்படுவது ஏன்? முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய் போன்றவர்கள் எல்லாம் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை அமைத்தனர். இதில் நரேந்திர கவுதம்தாஸுக்கு என்ன பிரச்சினை? மன்னிக்கவும் தாமோதர்தாஸுக்கு என்ன பிரச்சினை? எனக்கு உண்மையிலேயே இதில் குழப்பம்ஏற்படுகிறது. பெயர் தாமோதர்தாஸ், ஆனால் வேலை எல்லாம் கவுதம்தாஸ் போல் உள்ளது’’ என கூறினார். தாமோதர்தாஸ் என்பது மோடியின் தந்தை பெயர். கவுதம் என்பது அதானியின் முழுப் பெயர். இதை பவன் கேரா மாற்றிக்...

டெல்லி மதுபான கொள்கை ஊழல் - கேஜ்ரிவால் உதவியாளரிடம் அமலாக்கத் துறை விசாரணை https://ift.tt/dtpvb03

படம்
புதுடெல்லி : மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தனி உதவியாளரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். டெல்லி அரசு, மதுபான விற்பனையை தனியாரிடம் வழங்க ஏதுவாக 2021-22 நிதியாண்டுக்கான புதிய மதுக்கொள்கையை கொண்டு வந்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்ரத்து செய்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடியுடன் ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் சந்திப்பு - இந்தியாவுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்க ஆர்வம் https://ift.tt/q23oyJk

படம்
புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா நேற்று சந்தித்து பேசினார். இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆதரவு குறித்து இருவரும் விவாதித்தனர். படம்: பிடிஐசர்வதேச நிதி நிறுவனமான ஆசிய வளர்ச்சி வங்கியின் (ஏடிபி) தலைவர் மசட்சுகு அசகாவா நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து ஏடிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடியை ஏடிபி தலைவர் மசட்சுகு அசகாவா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இந்தியாவின் உள்கட்டமைப்பு, சமூக மேம்பாடு மற்றும் பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு ஏடிபியின் உதவி உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முகமது ஆரிப், ஆசாத் https://ift.tt/h2qoK7e

படம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகள் இருவரை 7 நாள் காவலில் விசாரிக்க திருவண்ணாமலை முதலாவது நீதித்துறை நடுவர்மன்ற மாஜிஸ்திரேட் கவியரசன் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் கடந்த 12-ம் தேதி அதிகாலை ரூ.73 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 5 மாவட்ட எஸ்.பி.க்கள் கொண்ட தனிப்படையினர் கொள்ளையர்களை பிடிக்க களமிறங்கினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஊழல் தடுப்பு என்ற பெயரில் அரசியல் உளவு பார்த்ததாக புகார் - சிசோடியா மீது புதிய வழக்கு பதிவு செய்கிறது சிபிஐ https://ift.tt/38cLr9Q

படம்
புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. இதன் துணை முதல்வரான மணிஷ் சிசோடியாவின் நிர்வாகத்தில் டெல்லியின் விஜிலன்ஸ் துறை செயல்படுகிறது. இதன் சார்பில் கடந்த 2015-ல் ‘ஃபீட்பேக் யூனிட் (எஃப்.பி.யு)’ எனும் புதிய பிரிவை அவர் தொடங்கினார். இதன் சார்பில் டெல்லியில் நடைபெறும் ஊழல்கள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது அவர் அறிவித்தார். ஆனால் இந்த எஃப்.பி.யு ஆம் ஆத்மியின் அரசியல் ஆதாயத் திற்காக பல்வேறு முக்கியப் பிரமுகர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை உளவு பார்த்ததாக புகார் கிளம்பியது. இந்நிலையில் இப்புகாரை விசாரிக்க மத்திய உள்துறை அனுமதி அளித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

100 மோடி, அமித்ஷா வந்தாலும் மத்தியில் அடுத்தாண்டு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் - மல்லிகார்ஜுன கார்கே உறுதி https://ift.tt/QxHuyZU

படம்
கொஹிமா: நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் வரும் திங்கட்கிழமை தேர்தல் நடைபெறவுள்ளது. நாகாலாந்தில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: ‘என்னால் மட்டுமே நாட்டை எதிர்கொள்ள முடியும். என்னை யாரும் தொட முடியாது’ என பிரதமர் மோடி கூறி வருகிறார். எந்த ஜனநாயகவாதியும் இதுபோல் கூறுவதில்லை. மத்தியில் அடுத்தாண்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமையும். இதற்காக இதர கட்சிகளுடன் நாங்கள் பேசி வருகிறோம். இல்லையென்றால் ஜனநாயகமும், அரசியல் சாசனமும் மறைந்து போகும். அதனால்தான் ஒவ்வொரு கட்சி யையும் நாங்கள் அடிக்கடி அழைத்து பேசுகிறாம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னையில் போலீஸாரை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற கொள்ளையன் மீது பெண் எஸ்.ஐ. துப்பாக்கிச்சூடு https://ift.tt/HCz8BKr

படம்
சென்னை: சென்னையில் போலீஸாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிய கொள்ளையனை பெண் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளார். சென்னை அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர். இவர் கடந்த 20-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 4 போலீஸாருடன் அயனாவரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். ஒரு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த 3 பேரை நிறுத்தி விசாரிக்க முயன்றார். அப்போது, அந்த வாகனத்தில் கடைசியாக அமர்ந்திருந்த இளைஞர், மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் எஸ்.ஐ. சங்கரின் தலையில் பலமாக தாக்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட் - கரூர் நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/QMxUhOk

படம்
கரூர் : போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு கரூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், தாந்தோணிமலை காவல் நிலையத்தில் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கு நடந்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை | அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியவர் கைது https://ift.tt/y5QA8BG

படம்
சென்னை: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார்(37) சென்னைமாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 19-ம் தேதி தடம் எண்.119ஜி பேருந்தில் ஓட்டுநர் பணியிலிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பேருந்தை முந்திச் செல்ல முயன்றார். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்டதகராறில் அந்த நபர் வினோத்குமாரை பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து தரமணி போலீஸார் விசாரணை நடத்தி டிரைவரைத் தாக்கியதாக பாலாஜி (26) என்பவரை கைது செய்தனர். இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் பாஜகவை தோற்கடிக்க முடியும் - ராகுல் காந்தி கருத்து https://ift.tt/xkrbOge

படம்
புதுடெல்லி : இத்தாலியை சேர்ந்த முன்னணி நாளிதழான கூரியர் டெல்லா சீராவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பாசிசம் இருக்கிறது. ஜனநாயக அமைப்பு கள் சீர்குலைக்கப்படுகின்றன. அனைத்து அரசு துறைகளிலும்ஆர்எஸ்எஸ் ஊடுருவுகிறது. நாடாளுமன்றம் செயல்படவில்லை. அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசமுடியவில்லை. கருத்து சுதந்திரம்,பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய உணவு கழக ஊழல் விவகாரம் - பஞ்சாபில் 30 இடங்களில் சிபிஐ சோதனை https://ift.tt/D9KpWZi

படம்
புதுடெல்லி : பஞ்சாபில் தனியார் வணிகர்களுக்கு ஆதாயம் அளிக்கும் வகையில் தரம் குறைந்த தானியங்களை கொள்முதல் செய்த குற்றச்சாட்டில் இந்திய உணவுக் கழக அதிகாரிகளுக்கு சொந்தமான 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். பஞ்சாபில் உள்ள தனியார் வணிகர்கள் மற்றும் அரிசி ஆலையினர் பயன்பெறும் வகையில் தரம் குறைந்த உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகம் (எப்சிஐ) கொள்முதல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விருதுநகர் | கோயிலில் பலியிட வன விலங்குகளை வேட்டையாடிய கிராமத்தினர் - 30 முயல்கள், கீரிகள் பறிமுதல் https://ift.tt/03v4Yqt

படம்
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோயிலில் பலியிடுவதற்காக காட்டுப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடிய கிராம மக்களை வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து வனப்பகுதியில் வேட்டையாடப்பட்ட 30 முயல்கள், 3 கீரிகள், ஒரு அணில் மற்றும் ஒரு கௌதாரி ஆகியவைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள புதூர், கருத்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமுதாயத்தினர் சிவராத்திரியை முன்னிட்டு காளியம்மன் கோயிலில் வன விலங்குகளை வேட்டையாடி படையலிட்டு வழிபடுவது வழக்கம். அதேபோன்று, இந்த ஆண்டும் இன்று (22ம் தேதி) காளியம்மன் கோயிலில் வன விலங்குகளை பலியிடுவதற்காக சாத்தூர், ஆர்.ஆர். நகர் பகுதிக்கு 100க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு வந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தானுடன் தொடர்புடைய சமூகவிரோத கும்பலை பிடிக்க 70 இடங்களில் என்ஐஏ சோதனை - முழு விவரம் https://ift.tt/T6BQqk1

படம்
புதுடெல்லி : பாகிஸ்தானுடன் தொடர்புடைய சமூகவிரோத கும்பல்களை பிடிக்கும் வகையில் 8 மாநிலங்களில் 70 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாத குழுக்கள் செயல்படுகின்றன. இந்த குழுக்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆயுதம் மற்றும் நிதியுதவியை வழங்கி வருகிறது. இவை தவிர, லாரன்ஸ் பிஷ்னோய், நீரஜ் பவானா, பாம்பிகா உள்ளிட்ட சமூக விரோத கும்பல்கள் பாகிஸ்தான் பின்புலத்துடன் செயல்பட்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதுச்சேரி அதிமுக முன்னாள் மாநிலச் செயலாளர் நடராஜன் தூக்கிட்டு தற்கொலை https://ift.tt/USAbiXI

படம்
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தின் அதிமுக முன்னாள் மாநிலச் செயலாளராகவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பூக்கடை நடராஜன் வில்லியனூரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். புதுச்சேரி மாநிலத்தின் அதிமுக முன்னாள் மாநில செயலாளராகவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் நடராஜன். இவர் இன்று மாலை திடீரென தனது வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். இதனை அறிந்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வில்லியனூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் எம்எல்ஏ நடராஜன் உயிரிழந்த தகவல் அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆப்கன் பெண்கள் கருத்தடை சாதனம் பயன்படுத்த தடை: தலிபான்கள் உத்தரவு

படம்
காபூல்: ஆப்கானிஸ்தானில் 2021 ஆகஸ்ட்மாதம் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அது முதலே பெண்களுக்கு எதிராக கடும் சட்டதிட்டங்களை அவர்கள் கொண்டு வந்தபடி உள்ளனர். இந்நிலையில், தற்போது பெண்கள் கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவதை தடை செய்துள்ளனர். “முஸ்லீம்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மேற்கத்திய நாடுகள் உருவாக்கியதுதான் கருத்தடை சாதனங்கள். இவற்றை இனி பெண்கள் பயன் படுத்தக் கூடாது. மருந்தகங்களில் கருத்தடை சாதனங்கள் மற்றும் கருத்தடை மருந்துகள் விற்க கூடாது” என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளதாக பிரிட்டன் நாளிதழான ‘தி கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்