இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்ட அரசியல் வழிகாட்டி யார்? https://ift.tt/QMD8ojr

படம்
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் நேற்று பேசும்போது தனது அரசியல் வழிகாட்டி லஷ்மண் ராவ் இனாம்தார் என்று கூறினார். இதைத் தொடர்ந்து பிரதமர் குறிப்பிட்ட லஷ்மண் ராவ் இனாம்தார் யார் என்பது குறித்து இணையதளத்தில் பலரும் தேட தொடங்கி உள்ளனர். கடந்த 1917-ம் ஆண்டு மகாராஷ்டிராவின் புணே அருகேயுள்ள காவ்தவ் கிராமத்தில் லஷ்மண் ராவ் இனாம்தார் பிறந்தார். பூர்ணா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற அவர் கடந்த 1943-ம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். ஹைதராபாத் நிஜாம் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னின்று நடத்தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தொழிலாளர்களின் குரலுக்கு புத்துயிர் தாருங்கள்! https://ift.tt/6ZCgiRz

படம்
இன்றைய உலகைக் கட்டியெழுப்புவதில் தொழிலாளர்களின் பங்களிப்பு மற்றும் தியாகத்தை சர்வதேச தொழிலாளர் தினம் குறிக்கிறது. நியாயமான மற்றும் சமமான ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல், பணியிடம், நீீதிமன்றங்கள் மற்றும் அரசாங்கத்தில் அவர்களுக்கு குரல் கொடுக்கும் உரிமை ஆகியவற்றுக்காக தொழிலாளர்கள் நடத்திய நீண்ட போராட்டத்தை இன்று நாம் நினைவில் கொள்கிறோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செல்போன் டவர் பாரம் தாங்காமல் 2 மாடி கட்டிடம் இடிந்தது? - 18 மணி நேரத்துக்கு பிறகு ஒருவர் உயிருடன் மீட்பு https://ift.tt/E2LuTxQ

படம்
தானே: மகாராஷ்டிராவில் 2 மாடி கட்டிடம் நேற்றுமுன்தினம் திடீரென இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பிவாண்டி நகரில் உள்ளது வால்படா. இங்குள்ள வர்தமான் காம்பவுண்ட் பகுதியில் 2 மாடி கட்டிடம் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் கீழ் பகுதியில் கிடங்கு செயல்படுகிறது. இரண்டாவது மாடியில் 4 குடும்பத்தினர் வசித் தனர். கிடங்கிலும் தொழிலாளர்கள் சிலர் இருந்துள்ளனர். கட்டிடம் இடிந்ததில் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் ஓராண்டு பயிற்சி பெறமுடியாது: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு https://ift.tt/I5y4kPb

படம்
சென்னை: வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் ஓராண்டு உள்ளுறைப் பயிற்சி பெற முடியாது என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காதவர்கள், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று, மருத்துவம் படிக்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செவ்வியல் தமிழ் மொழிக்கான பேரகராதி ‘தமிலெக்ஸ்’: முழு வரலாற்றுடன் ரூ.10 கோடி செலவில் ஜெர்மனி வெளியிடுகிறது

படம்
புதுடெல்லி: ஜெர்மனி அறிவியல் அறிஞர்கள் அகாடமி சார்பில், ‘தமிலெக்ஸ்’ (Tamilex) எனும் செவ்வியல் தமிழ் மொழிக்கானப் பேரகராதி வெளியாக உள்ளது. அனைத்து வார்த்தைகளின் முழு வரலாற்றுடன், ரூ.10 கோடியில் இதை ஜெர்மனி வெளியிடுகிறது. செம்மொழியான தமிழ் மொழி இலக்கியங்களின் தொகுப்புகள், மனிதகுலத்தின் சிறந்த பாரம்பரியத்திற்கு பெரும் பங்களித்து வருகின்றன. இருப்பினும் இவற்றை பற்றி இன்னும் மேற்கத்திய நாடுகள் அதிகம் அறியாமலேயே உள்ளன. இதனால், சிறப்புமிக்க செவ்வியல் தமிழ் மொழி மீது இந்தியாவை விட வெளிநாடுகளில் அதிக ஆர்வம் காட்டப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

'நாகநதிக்கு புத்துயிர் அளித்த தமிழக பெண்கள்' - 100வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் https://ift.tt/eNAhpZ4

படம்
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இது கோடிக்கணக்கான இந்தியர்களின் குரல் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்ட பிரதமர், தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் நாகநதிக்கு புத்துயிர் அளித்துள்ளதாக புகழாரம் சூட்டினார். கடந்த 2014 மே 26-ம் தேதி நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அதே ஆண்டு அக்.3-ம் தேதி முதல்முறையாக ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பானது. அது முதல் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் மனதின் குரல் வாயிலாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில், 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று காலை 11 மணிக்கு வானொலியில் ஒலிபரப்பானது. நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் கேட்க பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.சபையின் தலைமை அலுவலகம், தூதரக அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் நேரடியாக ஒலிபர...

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்: பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தகவல் https://ift.tt/XIVsl0D

படம்
பாட்னா: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் கட்சித் தலைவர்கள் பலர் ஈடுபட்டுள்ளதால், இந்த தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் பாட்னாவில் நடைபெறலாம் என பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சைபர் குற்றங்களுக்கான தலைமையிடமாக விளங்கும் ஹரியாணா நூஹ் மாவட்டத்தில் 300 இடங்களில் 5,000 போலீஸார் தீவிர சோதனை: 125 குற்றவாளிகள் கைது https://ift.tt/UYPa2Jj

படம்
நூஹ்: ஹரியாணா மாநிலத்தில் உள்ள நூஹ், ராஜஸ்தானில் பாரத்பூர், உத்தரப் பிரதேசத்தில் மதுரா ஆகிய நகரங்களை இணைக்கும் எல்லைப் பகுதி சமீப ஆண்டுகளில் சைபர் குற்றச் செயல்களுக்கான தலைமையிடமாக மாறியுள்ளது. இப்பகுதியுள்ள சிறிய கிராமங்களில் முகாமிட்டு கணினி மற்றும் இணைய வசதியைப் பயன்படுத்தி சைபர் குற்றங்களில் பல குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன. மொபைல் எண்ணுக்கு போலி மெசேஜ் அனுப்பி அதன் மூலம் பணம் அபகரித்தல், ஜி பே, போன்பே போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு போலி இணைப்புகளை அனுப்பி அதன் மூலம் அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைக் திருடுதல், ஏடிஎம் கார்டு மோசடி, சிம் கார்டு மோசடி என விதவிதமான சைபர் குற்றங்கள் இந்தப் பிராந்தியத்தை தலைமையிடமாகக் கொண்டு நடத்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

24 இந்திய ஊழியர்களுடன் கப்பலை சிறைபிடித்தது ஈரான்

படம்
துபாய்: மார்ஷல் தீவுகள் நாட்டுக்கு சொந்தமான அட்வான்டேஜ் ஸ்வீட் என்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் அமெரிக்காவுக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 24 இந்திய ஊழியர்கள் இருந்தனர். ஓமன் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த இந்த கப்பலை ஈரான் கடற்படையினர் கடந்த 27-ம் தேதி சிறைபிடித்துள்ளனர். இதுகுறித்து கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “அட்வான்டேஜ் ஸ்வீட் டேங்கர் கப்பலை, சர்வதேச கடல் எல்லையை மீறியதாகக் கூறி ஈரான் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். அந்தக் கப்பலையும் ஊழியர்களையும் பத்திரமாக மீட்க தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்” என கூறப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் சிபிஐ 5 மணி நேரம் விசாரணைa https://ift.tt/Rj1aXO4

படம்
புதுடெல்லி: கடந்த 2019 ஆகஸ்ட் 23 முதல் அதே ஆண்டு அக்டோபர் 30 வரை ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்யபால் மாலிக் பதவி வகித்தார். அப்போது, ஊழியர்கள் சுகாதார காப்பீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தத்தை பெறவும் கிரு நீர் மின்சக்தி திட்டத்துக்கான கட்டுமான பணி ஒப்பந்தத்தைப் பெறவும் தனியார் நிறுவனங்கள் சார்பில் ரூ.300 கோடி லஞ்சம் தர முன்வந்ததாக சத்யபால் மாலிக் குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக சிபிஐ 2 வழக்குகளை பதிவு செய்து சத்யபால் மாலிக்கிடம் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி விசாரணை நடத்தியது. இந்நிலையில், டெல்லி ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள சத்யபால் மாலிக் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு சென்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெளிநாட்டு பண பரிவர்த்தனை தொடர்பாக பைஜூஸ் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை https://ift.tt/7zPeWHv

படம்
பெங்களூரு: பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் வழியாக கல்வி வழங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம் பைஜூஸ். இந்நிறுவனத்துக்கு தொடர்புடைய 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத் துறை நேற்று தெரிவித்தது. பள்ளி மாணவர்கள் மற்றும் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனமாக பைஜூஸ் செயல்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு சில லட்சம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட பைஜூஸ் நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1.8 லட்சம் கோடியாக உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இன்று பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி: ஐ.நா. சபையில் நேரடி ஒலிபரப்பு https://ift.tt/G7Y9Reb

படம்
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று காலை வானொலியில் ஒலிபரப்பாகிறது. நாடு முழுவதும் 4 லட்சம் இடங்களில் இந்த நிகழ்ச்சியை ஒலிபரப்பு செய்ய பாஜக ஏற்பாடு செய்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம்நாட்டின் பிரதமராக நரேந்திர மோடிபதவியேற்றார். அதே ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி அகில இந்தியவானொலி மற்றும் தூர்தர்ஷன் மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர் முதல் முறையாக உரையாற்றினார். அப்போதுமுதல் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றி வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடன் தவணை செலுத்துவதற்கு தொழிலதிபருக்கு ‘லிங்க்’ அனுப்பி ரூ.47,000 மோசடி https://ift.tt/EnzNMGg

படம்
மும்பை: மும்பை பாந்த்ராவைச் சேர்ந்தவர் மோகன் வத்வா. இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவருடைய வங்கி கணக்கு ஒரு மாதத்துக்கு முன்பாக ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்டது. இந்நிலையில், மோகன் வாங்கிய வாகனத்துக்கான மாதத் தவணையை செலுத்த கோரி அவருக்கு மொபைல் போனில் அழைப்பு வந்துள்ளது. எதிர்த் தரப்பில் பேசிய பெண் அதற்கான லிங்க் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதை தனது வங்கி மேலாளருக்கு அனுப்பி தன்னுடைய மற்றொரு கணக்கில் இருந்து வாகனத்துக்கான மாதத் தவணை ரூ.47,002 செலுத்தி விடுமாறு கோரியுள்ளார். ஆனால், அந்த லிங்க் போலி என்று பின்னர் அறிந்து போலீஸில் மோகன் புகார் அளித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதுராவில் மது, இறைச்சிக்கு தடை விதித்தது ஏன்? - உ.பி. முதல்வர் ஆதித்யநாத் விளக்கம் https://ift.tt/0aYBkH1

படம்
முசாபர் நகர்: உத்தர பிரதேச மாநிலத்தில் மே 4 மற்றும் 11-ம் தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு முதல்வர் ஆதித்யநாத் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை மதுரா, பிரோசாபாத், ஆக்ரா ஆகிய இடங்களில் பொதுக் கூட்டங்களில் பங்கேற்ற ஆதித்யநாத் பேசியதாவது. மதுரா நகரம் மிகவும் புனிதமானது. முன்பு இந்த நகரம் பால் ஆறுகள் என்று பிரபலமாக அறியப்பட்டது. அதனால் மதுரா நகரில் இனிமேல் இறைச்சி, மது விற்க தடை விதிக்கப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு வரை இந்த நகரில் இறைச்சி, மது விற்கப்பட்டது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை விற்க தடை கொண்டு வரப்பட்டது. எனினும் சட்டவிரோதமாக சிலர் அவற்றை விற்கின்றனர். அவர்கள் மில்க் ஷேக், காய்கறி விற்க வேண்டும். இந்த நகரத்தின் புனிதத்தை காக்க வேண்டும். இந்த அரசு யாருக்கும் பாரபட்சம் பார்க்காது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கிழக்கு லடாக் எல்லையில் படைகளை திரும்ப பெறாதவரை இந்தியா - சீனா இடையே சுமுக உறவு ஏற்படாது: சீன அமைச்சரிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

படம்
புதுடெல்லி: இந்தியா-சீனா எல்லையில் சீனா ராணுவம் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் அத்துமீறியது முதல், இரு நாடுகளும், கிழக்கு லடாக் எல்லையில் சுமார் 50,000 ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளன. இரு தரப்பும் போருக்கு தயார் நிலையில் இருக்கும் சூழ்நிலை அங்கு நிலவுகிறது. இந்த சூழ்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் லீ ஷாங்ஃபு டெல்லி வந்துள்ளார். அவரை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் நேற்று முன்தினம் சந்தித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சத்தீஸ்கரில் 10 போலீஸார் உயிரிழந்த சம்பவத்தில் சாலையில் சுரங்கம் தோண்டி கண்ணிவெடி தாக்குதல் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியீடு https://ift.tt/ogRbZiv

படம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் 10 போலீஸார் உயிரிழந்த சம்பவத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தியவிதம் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட ஆயுதபோலீஸ் படை (டிஆர்ஜி) உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தப் படையில் உள்ளூர் இளைஞர்கள், மனம் திருந்திய மாவோயிஸ்ட்கள் மற்றும் போலீஸார் இடம்பெற்றுள்ளனர். டிஆர்ஜி படையில் முன்னாள் மாவோயிஸ்ட்கள் இருப்பதால் தீவிரவாதிகளின் இருப்பிடம், பதுங்குமிடம் மிக எளிதாக கண்டுபிடிக்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பைக்கில் 3 பேர் பயணிக்கும் வகையில் குழந்தையுடன் செல்லும் பெற்றோருக்கு அனுமதி: மத்திய அரசை அணுக கேரளா திட்டம் https://ift.tt/QHUtY5A

படம்
கேரளாவின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் செயற்கை நுண் ணறிவு அடிப்படையிலான தானியங்கி போக்குவரத்து நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு இருசக்கர வாகனங்களில் 3 பேர் செல்லும் ‘ட்ரிபிள் ரைடிங்’ குற்றத்துக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுவதற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து அழைப்பு: குடியரசுத் தலைவர் ஜூன் 5-ல் சென்னை வருகை https://ift.tt/i3VpRz6

படம்
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் அழைப்பை ஏற்று, வரும் ஜூன் 5-ம் தேதி சென்னை வரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கிண்டியில் ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு தொடக்க விழாவிலும் பங்கேற்கிறார். சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2021 ஜூன் 3-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவையில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: மந்திரவாதிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை https://ift.tt/UmEPNls

படம்
கோவை: கோவையை சேர்ந்த பெண், மன நலம் பாதிக்கப்பட்ட தனது சகோதரர்கள் இருவரையும் கவனித்து வந்துள்ளார். அந்த பெண்ணின் தந்தையின் நண்பர், மனநல பாதிப்புக்கு பரிகார பூஜை செய்தால் சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு தெரிந்த திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையை சேர்ந்த பாபு (40) என்பவர் பரிகார பூஜை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 2021 மார்ச் 12-ம் தேதி, பாபு அந்த பெண்ணின் சகோதரர்களுக்கு பூஜை செய்துள்ளார். பிறகு பெண்ணுக்கு 37 வயதாகியும் திருமணமாகாததை கூறி, அந்த பெண்ணுடன் தனிமையில் பரிகார பூஜையை செய்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை கே.கே.நகரில் துணிகரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை https://ift.tt/kReaZlM

படம்
சென்னை: சென்னை கே.கே நகர், அம்பேத்கர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (40). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருகைதொகுதி பிரமுகராக இருந்தார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துவந்தார். மேலும், ரவுடிகள்பட்டியலில் ‘ஏ’ பிரிவில் போலீஸாரால் வைக்கப்பட்டிருந்தார். இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், ரமேஷ் நேற்று காலை 7.50 மணியளவில் வீட்டருகே உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில்வந்து இறங்கிய 2 பேர் அரிவாளால் ரமேஷை வெட்டினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத் மக்களை அவதூறாக பேசியதாக பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி மீது வழக்கு https://ift.tt/E7mbXWO

படம்
அகமதாபாத்: குஜராத் மக்களை அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டி பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது அகமதாபாத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘மோடி' சமூகத்தினரை அவதூறாக பேசிய வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து பிஹார் துணை முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவருமான தேஜஸ்வி யாதவ் மீது குஜராத்தின் அகமதாபாத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி மேயர் பதவியை மீண்டும் தக்கவைத்தது ஆம் ஆத்மி - கடைசி நேரத்தில் பாஜக வாபஸ் https://ift.tt/PwBTmLK

படம்
புதுடெல்லி : டெல்லி மாநகராட்சியில் (எம்சிடி), மேயர் பதவிக்காக ஒவ்வொரு வருடமும் தேர்தல் நடைபெறுவது வழக்கம். இந்த மேயர்பதவி, முதல் வருடம் மகளிருக்காகவும், மூன்றாவது வருடம் பட்டியல் இனத்தவருக்கும் என ஒதுக்கப்பட்டுள்ளது. இதர மூன்று வருடங்களும் பொதுப் பிரிவினருக்கானது. இங்கு தனி மெஜாரிட்டியான ஆம் ஆத்மி கடந்த வருட மகளிருக்கான மேயர் பதவியை வென்றிருந்தது. பொதுப்பிரிவினருக்கான இந்தமுறையும் ஆம் ஆத்மி அதே வேட்பாளர்களை நிறுத்தியது. மேயராக ஷெல்லி ஓபராயும் துணை மேயராக ஆலே முகம்மதுவும் மீண்டும் போட்டியிட்டனர். பாஜக சார்பில் சிக்‌ஷா ராய் மேயர் பதவிக்கும், சோனி பாண்டே துணை மேயருக்கும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கடைசிநேரத்தில் ஆம்ஆத்மியின் 2 உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர். இதனால், போட்டியின் முடிவு கணிக்க முடியாமல் இருந்தது. எனினும், கடைசிநேரத்தில் பாஜகவின் 2 வேட்பாளர்களும் வாபஸ் பெற்றதால், ஆம் ஆத்மியினர் போட்டியின்றி வெற்றி பெற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேசிய மருத்துவ உபகரணங்கள் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: முக்கியமான முடிவு என பிரதமர் பதிவு https://ift.tt/zdLUNgB

படம்
புதுடெல்லி : தேசிய மருத்துவ உபகரணங்கள் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் சுகாதார துறை ஊக்கம் பெறும் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கடந்த 2014 முதல் நாடு முழுவதும் புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு அருகில் ரூ.1,570 கோடி செலவில் 157 செவிலியர் கல்லூரிகளை நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் 84 மாவட்டங்களில் 91 எஃப்.எம். டிரான்ஸ்மிட்டர்களை இன்று தொடங்குகிறார் பிரதமர் https://ift.tt/gIJK5nH

படம்
புதுடெல்லி : நாடு முழுவதும் பண்பலை வானொலி (எஃப்.எம். ரேடியோ) இணைப்பை மேம்படுத்தும் வகையில், 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 91 எஃப்.எம். டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வளரும் மாவட்டங்கள் மற்றும் எல்லைப்புற பகுதிகளில் ரேடியோ ஒலிபரப்பை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாக். மீது அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு: கோவாவில் பிலாவல் புட்டோவுடன் இருதரப்பு பேச்சுக்கு வாய்ப்பில்லை https://ift.tt/xPGbgh8

படம்
புதுடெல்லி: எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் சிக்கலானது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளதால், கோவாவில் அடுத்தவாரம் நடைபெறும் எஸ்சிஓ கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோவுடன் அவர் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் கோவாவில் மே 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த அமைப்பில் பாகிஸ்தான் உறுப்பினராக உள்ளதால், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோவுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்திருந்திருந்தார். இதை ஏற்று பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் குழுவினர் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடி செலவிட்ட கேஜ்ரிவால் - பாஜக குற்றச்சாட்டு https://ift.tt/gajWGYr

படம்
புதுடெல்லி : டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடி வரிப் பணத்தை செலவிட்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அர்விந்த் கேஜ்ரிவால், அரசியலுக்கு வந்தபோது நேர்மை மற்றும் எளிமையை ஊக்குவிப்பேன் என்றார். ஆனால் அதை அவர் மறந்துவிட்டார். தன்னை மகாராஜா என நினைத்துக்கொண்டு ஆடம்பர வாழ்க்கைக்கு ஆர்வமாக இருக்கிறார். கேஜ்ரிவால் தனது வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடிக்கு மேல்மக்கள் வரிப்பணத்தை செலவிட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாவோயிஸ்ட்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதல் - சத்தீஸ்கரில் 10 போலீஸார் உயிரிழப்பு https://ift.tt/9OW6foK

படம்
ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 10 போலீஸார் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். ஐஇடி வகை கண்ணிவெடியை சாலையில் புதைத்து, போலீஸாரின் வாகனம் சாலையைக் கடக்கும்போது வெடிக்கச் செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டம் அரண்பூர் பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, மாவட்ட ஆயுத போலீஸ் படை (டிஆர்ஜி) போலீஸார் ஒரு வேனில் அங்கு சென்றனர். தேடுதல் வேட்டை முடிந்து நேற்று திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அரண்பூர் சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த ஐஇடி வகை கண்ணிவெடி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், 10 போலீஸார், வாடகை வேனின் ஓட்டுநர் உயிரிழந்தனர். இந்த கண்ணிவெடி தாக்குதலை மாவோயிஸ்ட்கள் நடத்தியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்தில் 11 உள்பட நாடு முழுவதும் 157 புதிய செவிலியர் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் https://ift.tt/MnuEkpv

படம்
புதுடெல்லி : நாடு முழுவதும் தற்போது உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே ரூ.1,570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாட்டில் செவிலியர் பணியை வலுப்படுத்தும் வகையில், கடந்த 2014ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே ரூ.1,570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“சரியான வேலை இல்லாததால் கடனாளியாகி விட்டேன்; வீட்டில் தனியாக இருந்த 2 மூதாட்டிகளை பணம், நகைக்காக கொலை செய்தேன்” - சென்னையில் கைதானவர் வாக்குமூலம் https://ift.tt/OjThaLX

படம்
சென்னை: பழவந்தாங்கல் பகுதியில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கொலையாளி, நகை, பணத்துக்காக 2 மூதாட்டிகளை கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை பழவந்தாங்கல், தில்லை கங்கா நகரைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி (81) என்ற மூதாட்டிகடந்த 21-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டிலிருந்த 45 பவுன் நகை, ரூ.2 லட்சம்ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆதம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிந்து கொலை, கொள்ளை தொடர்பாக கே.கே.நகர், பாரதிதாசன் காலனியை சேர்ந்த சக்திவேல் (45) என்பவரை 24 மணி நேரத்தில் கைது செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பழங்குடியின மாணவி கொலை - உதகை அருகே இளைஞர் கைது https://ift.tt/Y0qkHGB

படம்
உதகை : உதகை அருகே பழங்குடியின மாணவியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை பகுதியை சேர்ந்த 14 வயதான தோடர் பழங்குடியின மாணவி, அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது இறுதித் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்தில் விசாரித்தும் தகவல் கிடைக்கவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கூடங்குளம் அணுமின் நிலையம்: 5-வது அணு உலைக்கான பாகங்களை அனுப்பியது ரஷ்யா https://ift.tt/AxR2fH1

படம்
புதுடெல்லி: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நிறுவப்பட்டு வரும் 5-வது அலகுக்கு தேவைப்படும் நான்கு நீராவி ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட முக்கிய பாகங்களை ரஷ்யாவைச் சேர்ந்த அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் அனுப்பியுள்ளது. கூடங்குளம் அணு உலை நிர்வாகம், கட்டுமானத்தில் இந்த நிறுவனம்தான் முக்கிய பங்காற்றி வருகிறது. நட்பு நாடுகளுடன் ஒத்துழைப்பதில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் ரஷ்யா தொடர்ந்து சர்வதேச வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை வளர்த்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கென்யாவில் பாதிரியாரின் போதனையை கேட்டு பட்டினி கிடந்து உயிரிழந்தவர்கள் 73 ஆக உயர்வு - 212 பேர் மாயம்

படம்
மாலிண்டி : கென்யாவில் பாதிரியார் ஒருவரின் போதனையை நம்பி பட்டினி கிடந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. கென்யா நாட்டில் மாலிண்டி என்ற கடற்கரை நகரத்தில் ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்’ உள்ளது. இதன் தலைமை பாதிரியாராக இருப்பவர் பால் மேக்கன்ஜி நெதாங்கே. இவர் தனது போதனையின் போது, உண்ணாவிரதம் இருந்து இறப்பவர்கள்தான் கடவுளின் தொண்டர்கள் என கூறியுள்ளார். இதை நம்பி பலர் உண்ணாவிரதம் இருந்து இறந்துள்ளனர். இவர்கள் எல்லாம் அருகில் உள்ள காடுகளில் மொத்தமாக புதைக்கப்பட்டுள்ளனர். சிலரது உடல்கள் புதைக்கப்படாமலேயே கிடந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து 278 பேருடன் முதல் கப்பல் இந்தியா புறப்பட்டது

படம்
கார்ட்டூம் : உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் 72 மணி நேர போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களுடன் முதல் கப்பல் அங்கிருந்து புறப்பட்டுள்ளது. வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2021 முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போட்டியில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்தினருக்கும் கடந்த 15-ம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆதம்பாக்கத்தில் நகை, பணத்துக்காக மூதாட்டி கொலை: தலைமறைவாக இருந்த கொலையாளி கைது https://ift.tt/myDi6qw

படம்
சென்னை: ஆதம்பாக்கத்தில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு நகை, பணம் கொள்ளை யடித்த வழக்கில் தலைமறைவாக இருந்தநபர் கைது செய்யப்பட்டுஉள்ளார். ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 10-வது தெருவை சேர்ந்தவர் சிவகாம சுந்தரி (81).கணவரை இழந்த இவர், மகன்ராம், மருமகள் பானு ஆகியோருடன் வசித்து வந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போலீஸாரை அடித்த ஆந்திர முதல்வர் தங்கை கைது https://ift.tt/0Zk3p1R

படம்
ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா எனும் புதிய கட்சியை தெலங்கானா மாநிலத்தில் ஷர்மிளா தொடங்கி உள்ளார். சமீபத்தில் தெலங்கானா பொதுத் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வினாத்தாள்கள் கசிந்ததை எதிர்த்து இவரும் பல போராட்டங்களை நடத்தினார். இவ்வழக்கை விசாரிக்க சிறப்புக் குழுவை தெலங்கானா அரசு நியமனம் செய்துள்ளது. இந்நிலையில், நேற்று ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து ஒய்.எஸ்.ஷர்மிளா, விசாரணை நடத்தும் சிறப்பு குழுவின் அலுவலகத்துக்கு செல்ல தனது வீட்டை விட்டு வெளியே வந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தன்பாலின திருமணத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்க கூடாது: பார் கவுன்சில் ஆப் இந்தியா தீர்மானம் https://ift.tt/Jw3Be6t

படம்
புதுடெல்லி: தன்பாலினத்தவர்களின் திருமணத்துக்கு சட்டரீதியாக அங்கீகாரம் வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில் பார் கவுன்சில் ஆப் இந்தியா மற்றும் பல்வேறு மாநிலங்களின் பார் கவுன்சில் நிர்வாகிகளின் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் இறுதியில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதி தேவஸ்தான பெயரில் 41 போலி இணையதளங்கள் - திருமலை போலீஸார் விசாரணை https://ift.tt/9gOBGy7

படம்
திருமலை : திருமலை திருப்பதி தேவஸ்தானம் https://tirupatibalaji.ap.gov.in/ என்கிற இணைய தளத்தின் மூலம் இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. மேலும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், பக்தர்கள் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு, இ-உண்டி, நன்கொடைகள் என அனைத்து சேவைகளுக்கும் இந்த இணைய தளத்தை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி அலை கர்நாடக தேர்தலிலும் தொடரும்: மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.அசோகா நம்பிக்கை https://ift.tt/yzPJYCZ

படம்
கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸூக்கும் பாஜகவுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், 2 தொகுதிகளில் போட்டியிடும் கர்நாடக வருவாய்துறை அமைச்சர் ஆர்.அசோகா பெங்களூருவில் அளித்த பேட்டியில் கூறியதாவது... மூத்த தலைவர்களுக்கே தொகுதிகள் கிடைக்கவில்லை. உங்களுக்கும் சோமண்ணாவுக்கும் மட்டும் 2 தொகுதிகள் எப்படி கிடைத்தது? from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பழனிசாமி, ஓபிஎஸ் தரப்பு வேட்புமனுக்கள் வாபஸ் https://ift.tt/bSn86Oh

படம்
சென்னை : கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பிலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் பாஜக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டிருந்தனர். அதற்காக, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை பழனிசாமி சார்பில் தம்பிதுரை எம்.பி. சந்தித்து, கர்நாடக தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பழனிசாமியின் விருப்பத்தை தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தெலங்கானா | போலீஸாரை கன்னத்தில் அறைந்த ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு 14 நாட்கள் சிறை https://ift.tt/rRNaHqx

படம்
ஹைதராபாத் : போலீஸாரை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு 14 நாட்கள் காவல் அளிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TSPSC தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் அம்மாநிலத்தில் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், மூன்று தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும், ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா, இதே விவகாரத்தை முன்னிறுத்தி பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். கடந்த மாதம், ஹைதராபாத்தில் இந்த பிரச்சனைக்காக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர் கைது செய்யப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டின் முதல் நீர்வழி மெட்ரோ சேவை: பிரதமர் நரேந்திர மோடி கொச்சியில் நாளை தொடங்கி வைக்கிறார் https://ift.tt/zIgjKq9

படம்
கொச்சி: நாட்டின் முதல் நீர்வழி மெட்ரோ போக்குவரத்து சேவையை பிரதமர் மோடி கேரளாவின் கொச்சி நகரில் நாளை தொடங்கி வைக்கிறார். கேரளாவின் துறைமுக நகரான கொச்சியில் 2021 பிப்ரவரியில் ரூ.1,137 கோடியில் நீர்வழி மெட்ரோ திட்டம் தொடங்கப்பட்டது. கொச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும் வகையில் 76 கி.மீ. தொலைவுக்கு 15 நீர் வழித் தடங்களில் மெட்ரோ சேவைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பத்து தீவுகளில் 38 நீர்வழி மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேதார்நாத் பக்தர்களுக்கு சேவை வழங்கும் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் இறக்கையில் அடிபட்டு அதிகாரி உயிரிழப்பு https://ift.tt/CJYbFSl

படம்
டேராடூன் : கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் இறக்கையில் அடிபட்டு ஹெலிகாப் டர் நிறுவன அதிகாரி உயிரிழந்தார். உத்தராகண்ட் அரசுக்கு சொந்தமான கார்வால் மண்டல விகாஸ்நிகாம் நிறுவனம், கேதார்நாத் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹெலிகாப்டர் சேவையை வழங்கி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மழையில் நனைந்த பிரதமர் மோடியின் ‘கட் அவுட்’டை துடைத்த முதியவர் - அமித் ஷா வீடியோவை பகிர்ந்து நெகிழ்ச்சி https://ift.tt/QyXJHxT

படம்
பெங்களூரு : பெங்களூரு அருகே மழையில் நனைந்த பிரதமர் நரேந்திர மோடியின் கட் அவுட்டை முதியவர் ஒருவர் தனது துண்டால் மழை நீரை துடைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் பெங்களூருவை அடுத்துள்ள தேவனஹள்ளியில் நடைபெற இருந்தது. திடீர் மழை காரணமாக இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்நிலையில், அங்கு சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் கட் அவுட் மழையில் நனைந்து கிடந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பனியன் ஏற்றுமதியாளரிடம் ரூ.98 லட்சம் மோசடி - வெளிநாட்டினர் உட்பட 4 பேர் கைது https://ift.tt/jzIKx2e

படம்
திருப்பூர் : திருப்பூரை சேர்ந்த பனியன் ஏற்றுமதியாளரிடம் ரூ.98.28 லட்சம் மோசடி செய்ததாக வெளிநாட்டைச் சேர்ந்த பெண் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். திருப்பூரை சேர்ந்தவர் சிவக்குமார். பனியன் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர். இவருக்கு கடந்த மார்ச் 22-ம் தேதி வாட்ஸ்-அப் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து குறுந்தகவல் வந்தது. அதன் பிறகு வாட்ஸ்-அப் மூலமாக ஒருவர் பேசினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மருத்துவமனையில் அனுமதி https://ift.tt/Qmq9Zrv

படம்
பெங்களூரு : கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் வரும் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மூத்த தலைவருமான எச்.டி.குமாரசாமி (63) கடந்த சில தினங்களாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 2-ல் அமைச்சரவை கூட்டம் https://ift.tt/S1u3CgH

படம்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே மாதம் 2-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் 5-ம்கூட்டத்தொடரின் முதல் கூட்டம் ஜனவரி 9-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரையும், இரண்டாம் கூட்டம் மார்ச் 20-ம் தேதி தொடங்கி ஏப்.21-ம்தேதி வரையும் நடைபெற்றது. 2023-2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20-ம் தேதியும், வேளாண்மை நிதிநிலை அறிக்கை 21-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ம.பி. என்கவுன்ட்டரில் பெண் மாவோயிஸ்ட்கள் 2 பேர் உயிரிழப்பு https://ift.tt/taC5Viw

படம்
போபால்: மத்திய பிரதேசத்தின் பாலகாட் மாவட்டம் கட்லா வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் அதிகமாக நடமாடி வருகின்றனர். நேற்று அதிகாலை, கட்லா வனப்பகுதியில் மத்தியபிரதேச மாநில சிறப்பு போலீஸ் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் திடீரென தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு போலீஸாரும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த என்கவுன்ட்டரில் 2 பெண் மாவோயிஸ்ட்கள் உயிரிழந் தனர். ஏராளமான துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்று போலீஸார் அறிவித்துள்ளனர். அவர்கள் சுனிதா, சரிதா காதியா மோச்சா என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆதித்யா எல்-1, சந்திரயான்-3 திட்டங்கள் அடுத்த சில மாதங்களில் செயல்படுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் https://ift.tt/oJpPWwU

படம்
சென்னை: அடுத்த சில மாதங்களில் ஆதித்யா எல்-1, சந்திரயான்-3 உள்ளிட்ட முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார். பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் ஏவுதல் திட்டம் வெற்றியடைந்த பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த ஆண்டு 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா: அமெரிக்க அமைச்சர் டொனால்டு லூ தகவல்

படம்
வாஷிங்டன்: இந்தியர்களுக்கு இந்தாண்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட எச்-1பி மற்றும் எல் விசாக்கள் வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் டொனால்டு லூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து டொனால்டு லூ அளித்த பேட்டி. இந்தியர்களுக்கு இந்த ஆண்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்களை வழங்க உள்ளோம். மாணவர்கள் விசா மற்றும் குடியேற்ற விசாக்களுடன் இது சாதனை அளவாக இருக்கும். அமெரிக்காவுக்கு படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்திய மாணவர்களுக்கான அனைத்து விசாக்களையும் வழங்க அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது. பி1 (வர்த்தகம்) மற்றும் பி2 (சுற்றுலா) விசா பிரிவுகளில் முதல்முறை விண்ணப்பிப்பவர்கள் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வணிகரீதியாக இஸ்ரோ செலுத்திய பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் பயணம் வெற்றி! https://ift.tt/Vlfpgsi

படம்
சென்னை: பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் சிங்கப்பூரின் ‘டெலியோஸ்-2’ உள்ளிட்ட 2 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. நம் நாட்டுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலை உணர்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக் கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), விண்ணில் செலுத்தி வருகிறது. இதுதவிர, வணிகரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்