இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மீண்டும் 70 ஆயிரத்தை கடந்தது தினசரி கரோனா தொற்று: 6 மாதங்களில் இல்லாத பாதிப்பு https://ift.tt/39xvPuH

படம்
இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு பிறகு 70 ஆயிரத்தை கடந்துள்ளது. பலி எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 72,330 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,22,21,665ஆக அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தலைவனுக்கு பால்கே விருது என்பது மகிழ்ச்சியான செய்தி: மோடி வாழ்த்து https://ift.tt/3fy7mJE

படம்
தலைவனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்று ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு 70 வயது ஆகிறது. இவரின் கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி https://ift.tt/3rH8FbB

படம்
இன்று முதல் நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் மூன்றாம் கட்ட தடுப்பூசி பணி இன்று தொடங்கியது. கரோனா தடுப்புக்காக கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் அவசரக்கால பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஎப், சிறு சேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு வாபஸ்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு https://ift.tt/31IcC4Z

படம்
பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) மற்றும் சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைக்கடுவதாக வெளியான அறிவிப்பு திரும்பப்பெறப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய அரசாங்கத்தில் அனைத்து சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களும் ஏற்கெனவே 2020 2021 கடைசிக் காலாண்டில் இருந்த விகிதத்திலேயே தொடரும். நேற்றிரவு வெளியிடப்பட்ட புதிய வட்டி விகித அறிவிப்பு வாபஸ் பெறப்படுகிறது" எனப் பதிவிட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேற்கு வங்கம், அசாமில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது: நந்திரகிராமில் களம் காண்கிறார் மம்தா பானர்ஜி https://ift.tt/3u83C5B

படம்
மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் பலத்த பாதுகாப்புக்குடன் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றக் காத்திருக்கின்றனர். மேற்கு வங்கத்தில் இன்று தேர்தலை சந்திக்கும் 30 தொகுதிகளும் மாநிலத்தின் பஷ்சிம் மெதினிபூர், கிழக்கு மெதினிபூர், தெற்கு 24 பர்கானாஸ், பாங்குரா ஆகிய 4 மாவட்டங்களில் உள்ளன. 30 தொகுதிகளில் 8 தொகுதிகள் தனித் தொகுதிகள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிபிஎப், சிறு சேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு: மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு https://ift.tt/3rAVubX

படம்
பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) மற்றும் சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டது. ஏப்ரல் 1, 2021 முதல் பிபிஎப்வட்டி விகிதம் 7.1-லிருந்து6.4 சதவீதமாகக் குறைக்கப்பட் டுள்ளது. 46 ஆண்டுகளில் முதல் முறையாக பிபிஎப் வட்டி விகிதம் 7 சதவீதத்துக்கும் கீழாக குறைக்கப்பட்டுள்ளது. இதுபலோ தேசிய சேமிப்பு பத்திரங்கள் (என்எஸ்சி) மீதான வட்டி 6.8-லிருந்து 5.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரம் மீதான வட்டி 6.9-லிருந்து 6.2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சுகன்ய சம்ரிதி யோஜனா (எஸ்எஸ்ஒய்) திட்டத்துக்கான வட்டி 7.6-லிருந்து 6.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆதார் - பான் இணைப்புக்கு ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு https://ift.tt/3m7Fe14

படம்
ஆதார் - பான் கார்டு இணைப் பதற்கான கால அவகாசத்தை ஜூன் 30-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பைமத்திய வருமான வரித்துறைட்விட்டர் பதிவு மூலம் வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே ஆதார் - பான் இணைப்புக்கான காலக் கெடு மார்ச் 31 வரை அளிக்கப்பட்டிருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இலங்கை படகில் 300 கிலோ ஹெராயின் பறிமுதல் https://ift.tt/3sHP6B1

படம்
இலங்கையைச் சேர்ந்த மீன்பிடி படகுகளில் 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். லட்சத் தீவுகள் அருகேயுள்ள மினிகோய் தீவுக்கும் திருவனந்தபுரம் அருகிலுள்ள விழிஞ்சம் பகுதிக்கும் இடையே போதை மருந்து கடத்தல்கும்பலின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் கடலோர காவல் படையினர் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்தவாரம் கடல் மற்றும் வான் வழியான கண்காணிப்பு பணியின்போது சந்தேகத்துக் கிடமான 3 படகுகளை மடக்கி பிடித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முன்னாள் பிரதமர் தேவ கவுடாவுக்கு கரோனா பாதிப்பு: மனைவிக்கும் தொற்று ஏற்‍பட்டதால் மருத்துவமனையில் அனுமதி https://ift.tt/3ugmz6f

படம்
கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு வாரங்களாக கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. தினமும் 2500-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு கண்டறியப்படுவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத) தலைவருமான தேவகவுடா (87) மற்றும் அவரது மனைவி சென்னம்மா (82) ஆகிய இருவருக்கும் நேற்று கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தேவகவுடா தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கும், என் மனைவிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் குடும்ப உறுப்பினர்களுடன் எங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். எங்களோடு தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதே வேளையில் எனது உடல்நிலை குறித்து மஜதவினர் அச்சம் அடைய வேண்டாம்’’ என தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: ...

ஆந்திராவில் மதமாற்றத்தை தடுக்க 33,000 கி.மீ. இந்து விழிப்புணர்வு யாத்திரை: ஏழுமலையான் தரிசனத்துடன் திருப்பதியில் நிறைவு https://ift.tt/3m65ARa

படம்
ஆந்திராவில் மதமாற்றத்தை தடுக்கும் விதத்தில் 33 ஆயிரம் கி.மீ. தொலைவு வரை, சாரதா பீடம் சார்பில் இந்து தர்ம பிரச்சார யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. இந்த யாத்திரை நேற்று திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துடன் நிறைவடைந்தது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள சாரதா பீடம் சார்பில்கடந்த 2019-ம் ஆண்டு இந்து தர்மபிரச்சார யாத்திரை தொடங்கப்பட்டது. இளம் பீடாதிபதி ஸ்வத்மனந்தேந்திரா தலைமையில் நடைபெற்ற பிரச்சார யாத்திரை சுமார் 33 ஆயிரம் கி.மீ. தொலைவு வரை பயணித்து நேற்று திருமலையில் நிறைவடைந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தொழிலாளர் சட்ட விதிமுறைகள் ஏப்.1 முதல் அமல்படுத்தப்படாது; அடிப்படை சம்பள விகித மாற்றம் இல்லை: மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தகவல் https://ift.tt/3rGDb5a

படம்
தொழிலாளர் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய விதிகளின்படி அடிப்படை சம்பள விகித மாற்றம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வராது என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மாதாந்திர சம்பளதாரர்களுக்கு சிறிதளவு ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை அமல்படுத்துவதற் கேற்ப மாநில அரசுகள் புதியவழிகாட்டு நெறிகளை இன்னமும்வகுக்கவில்லை. இதனால் இதைஉடனடியாக அமல்படுத்தப் போவதில்லை என அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய பாகிஸ்தான் தீவிரவாதிக்கு10 ஆண்டு சிறை தண்டனை: டெல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு https://ift.tt/3ugmyPJ

படம்
இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய பாகிஸ்தான் தீவிரவாதிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து டெல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் காஷ்மீர் வழியாக இந்தியாவில் ஊடுருவி இருப்பதாக கடந்த 2016-ம் ஆண்டு உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. இதன் அடிப்படையில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பஹதுர் அலியை என்ஐஏ அதிகாரிகள் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

51 வருடங்களாக ஒரே தொகுதியில் போட்டியிட்டு வென்று வரும் உம்மன் சாண்டி: வழக்கம்போல் கைகொடுக்குமா ‘புதுப்பள்ளி’ தொகுதி? https://ift.tt/3cH5SuN

படம்
கேரளத்தில் காங்கிரஸ், மார்க் சிஸ்ட் கட்சிகள் 40 ஆண்டுகளாக மாறி, மாறி ஆட்சியைப் பிடித்து வருகின்றன. ஆட்சிகள் மாறினாலும் புதுப்பள்ளி தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் மட்டும் மாறியதே இல்லை. கடந்த 51 வருடங்களாக புதுப்பள்ளித் தொகுதியை தொடர்ந்து தக்க வைத்திருக்கும் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, 12வது முறையாக இதேதொகுதியில் களம் இறங்குகிறார். அவருக்கான வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது என இந்து தமிழுக்காக புதுப்பள்ளி தொகுதியில் வலம்வந்தோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திரிணமூல் காங்கிரஸின் தீவிர பிரச்சாரத்தை முடக்கி வைக்க பாஜக செய்த உத்தி: ஐந்து நாட்களாக வேறுவழியின்றி நந்திகிராமில் தங்கிய முதல்வர் மம்தா https://ift.tt/3dkN9nW

படம்
சட்டப்பேரவை தேர்தல்களில் ஆளும் கட்சியின் முதல்வர்கள் தாம் போட்டியிடும் தொகுதி களில் வழக்கமாக அதிக நாட்கள் தங்குவதில்லை. பெரும்பாலான வர்களுக்கு அங்கு எளிதாக வெல்லும் அளவிற்கு அவர்களது செல்வாக்கு இருக்கும். அவர்கள் தம் கட்சிக்காக மாநிலம் முழுவதிலும் தீவிரப் பிரச்சாரம் செய்ய வேண்டி இருப்பதாலும் தாம் போட்டியிடும் தொகுதிகளில் அதிக நாட்கள் தங்குவதில்லை. மேற்கு வங்கமாநிலத்தில் நந்திகிராம் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரான முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இங்கு இன்று (1ம் தேதி) இரண்டாம் கட்டத் தேர்தல்நடைபெறுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேற்கு வங்கம், அசாமில் 69 தொகுதிகளில் இன்று 2-ம் கட்ட தேர்தல்: நந்திகிராமில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டி https://ift.tt/3cCIezh

படம்
தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய 3 மாநிலங்களில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அசாமில் 3 கட்டமாகவும் மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாவும் தேர்தல் அறி விக்கப்பட்டது. இதில் அசாம், மேற்கு வங்கத்தில் முதல்கட்ட தேர்தல் கடந்த 27-ம் தேதி நடை பெற்றது. அசாமில் 47 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகள் என மொத்தம் 77 தொகுதிகள் முதல்கட்ட தேர்தலை சந்தித்தன. இவ்விரு மாநிலங்களிலும் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அசாமில் 39 தொகுதிகளும் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளும் இன்று தேர்தலை சந்திக்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உயர் ஜாதியைச் சேர்ந்தவர் எனக் கூறும் மம்தா பானர்ஜி; ஜாதி அரசியல் செய்கிறார்: ஒவைசி கண்டனம் https://ift.tt/3rBlDaz

படம்
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தன்னை உயர் ஜாதியைச் சேர்ந்தவர் என்று கூறியிருப்பதன் மூலம் அவரும் ஜாதி அரசியல் செய்வது உறுதியாகி விட்டது, பிரதமர் மோடி, பாஜகவுக்கும் இவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் முதல்கட்டத் தேர்தல் 27-ம்தேதி நடைபெற்றது. 30 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 7 கட்டத் தேர்தல் நடைபெற வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜகவுக்கு எதிராக ஒன்றுதிரள்வோம்: சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 15 தலைவர்களுக்கு மம்தா கடிதம் https://ift.tt/3dkBCop

படம்
பாஜக நடத்தும் தாக்குதலில் இருந்து இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சித் தத்துவம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைக் காக்க அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்று பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள தலைவர்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கு நாளை 2-ம் கட்டத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

6.3 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய அரசு நடவடிக்கை https://ift.tt/31wQ1sl

படம்
நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 6.3 கோடிக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், கர்நாடகா, கேரளா, குஜராத், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில், தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாளை முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்: மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை https://ift.tt/3sCCBGY

படம்
45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய்கள் இருப்போர், இல்லாதவர்கள் என அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நடைமுறைக்கு நாடுமுழுவதும் நாளை அமலுக்கு வருகிறது. இதை முறைப்படி செயல்படுத்தும் முன்பாக, மத்திய சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் , காணொலி மூலம் மாநில அரசுகள், யூனியன்பிரதேசங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மீண்டும் ஊடுருவல்காரர்களின் மையமாக அசாம் மாற பாஜக அனுமதிக்காது: பஹ்ருதீன் அஜ்மலுக்கு அமித் ஷா எச்சரிக்கை https://ift.tt/39tMM9w

படம்
அசாம் மாநிலம், மீண்டும் ஊடுருவல்காரர்களின் மையமாக மாறுவதற்கு பாஜக இனிமேலும் அனுமதிக்காது என்று ஏஐயுடிஎப் கட்சித் தலைவர் பஹ்ருதீன் அஜ்மலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் கடந்த 27-ம் தேதி 47 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடந்தது. நாளை நடக்கும் 39 தொகுதிகளுக்கு 2-வது கட்டத் தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 6-ம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜக போல் அல்ல; மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றும்: ராகுல் காந்தி உறுதி https://ift.tt/3wcFMaH

படம்
பாஜகவைப் போல் அல்ல காங்கிரஸ் கட்சி. நாங்கள் மக்களிடம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார். அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது.இதில் முதல்கட்டமாக 47 தொகுதிகளுக்குக் கடந்த 27ம் தேதி தேர்தல் நடந்தது. 2-வது கட்டமாக 39 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெளிமாநில குண்டர்கள் நந்திகிராமில் நுழைந்துவிட்டார்கள்: தேர்தல் ஆணையத்துக்கு மம்தா வலியுறுத்தல் https://ift.tt/3sFr2Pc

படம்
நந்திகிராம் தொகுதிக்குள் வெளிமாநிலங்களைச் சேர்ந்த குண்டர்கள் நுழைந்துவிட்டார்கள். தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுத்து அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் கடந்த 27-ம் தேதி 30 தொகுதிகளுக்கு நடந்த முடிந்த நிலையில் 2-வது கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையோடு முடிந்துவிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மன்னிப்பு கோரினார் மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.பி. ஜார்ஜ்: ராகுல் காந்தி குறித்த பாலியல் ரீதியான விமர்சனங்களைத் திரும்பப் பெற்றார் https://ift.tt/3wbU4bv

படம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறித்து பாலியல் ரீதியாக அவதூறாகப் பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாய்ஸ் ஜார்ஜ் தனது பேச்சுக்கு வெளிப்படையாக மன்னிப்பு கோரி, தனது வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். கடந்த வாரம் ராகுல் காந்தி, கொச்சியில் உள்ள புகழ்பெற்ற தெரஸா மகளிர் கல்லூரிக்குக் கடந்த வாரம் சென்றிருந்தார். அங்குள்ள மாணவிகள் கோரிக்கையை ஏற்றுத் தான் பயின்ற அகிடோ கலையைக் கற்றுக்கொடுத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகாராஷ்டிராவில் குறையும் கரோனா பரவல்: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உயர்வு https://ift.tt/3m5jumo

படம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த கரோனா பாதிப்பு 27 ஆயிரமாக குறைந்துள்ளது. அதேசமயம் கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து இயல்பு நிலையும் திரும்பியது. இந்தநிலையில் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரயில்களில் இரவு நேரத்தில் செல்போன் சார்ஜ் செய்ய பயணிகளுக்கு அனுமதியில்லை: ரயில்வே முடிவு https://ift.tt/3szi5XM

படம்
ரயில்களில் பயணிப்போர் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணிவரை செல்போன்களை சார்ஜ் செய்ய அனுமதியில்லை. தீ விபத்துகளைத் தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மேற்கு ரயில்வே கடந்த 16-ம் தேதி முதல் ரயில்களில் இரவு 11 மணிக்கு மேல் அனைத்து விதமான பிளக் பாயிண்ட்களிலும் மின் இணைப்பை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா தொற்று; தினசரி பாதிப்பு 53,480: பலி எண்ணிக்கை 354 https://ift.tt/3ufazSx

படம்
இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் புதிதாக 53,480 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 354பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

லடாக்கில் எல்லையில் ராணுவ வீரர்கள் நடனமாடும் வீடியோ வைரல் https://ift.tt/39qLbRO

படம்
லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. லடாக்கில் கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து சில முக்கியப் பகுதிகளை கைப்பற்ற முயற்சித்தனர். இதனை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் அங்கு பதற்றம் உருவானது. இதனிடையே, அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் மாதம் இந்திய – சீன ராணுவ வீரர்கள் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியில் தவிர்க்க முடியாத தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள்: ஆதரவை தக்கவைக்க தீவிரம் காட்டும் திரிணமூல் காங்கிரஸ் https://ift.tt/39sADS5

படம்
மேற்கு வங்க தேர்தல் வெற்றியில் அம்மாநில தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தவிர்க்க முடியாதவர்களாக உள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பக்கம் சாய்ந்த இவர்களை தம்முடன் தக்கவைக்க திரிணமூல் காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது. எட்டு கட்டங்களாக தேர்தலை சந்திக்கும் மேற்கு வங்கத்தின் வட பகுதியில் 8 மாவட்டங்கள் உள்ளன. இங்குள்ள 54 சட்டப்பேரவை தொகுதிகளில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் சுமார் 8 லட்சம் பேர் வசிக்கின்றனர். மேலும் பழங்குடியின தொழிலாளர்களும், குர்கா இன மக்களும் கணிசமாக உள்ளனர். இவர்களின் வாக்கு வட மாவட்டங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்திய ரூ.2 கோடி மதிப்புள்ள காணிக்கை தலைமுடி கடத்தல்: சீன எல்லையில் மீட்பு https://ift.tt/3sCN70N

படம்
திருப்பதி ஏழுமலையானுக்கு நேர்த்திக் கடனாக தலைமுடியை பக்தர்கள் செலுத்தி வருகின்றனர். இவ்வாறு தலைமுடி காணிக்கை செலுத்தப்பட்ட பின்னர், அவை தரம் பிரிக்கப்படும். 25 முதல் 27 அங்குல நீளம் உள்ள தலைமுடி முதல் வகையை சேர்ந்தது. அதன் பின்னர், 18 முதல் 24 அங்குலம் தலைமுடி 2ம் வகையை சேர்ந்தது. இப்படியாக காணிக்கை தலைமுடிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவை நன்றாக அலசி, உலர வைத்து, அதன் பின்னர் அவை சுத்தப்படுத்தி பாதுகாக்கப்படுகிறது. இந்த தலைமுடிகள் 3 மாதங் களுக்கு ஒருமுறை இ-டெண்டர் மூலம் ஏலம் விடப்படுகிறது. இவற்றை ஏலம் எடுக்க வெளி நாட்டவர் மிகுந்த ஆர்வம் காட்டு கின்றனர். இதற்காகவே ஒரு கும்பல் அவர்களாகவே ஒரு வட்டம் அமைத்துக் கொண்டு ஏலத்தில் பங்கேற்பதாகவும் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. ஆதலால், ஒரு சிலர் மட்டுமே ஏலத்தில் பங்கேற்று அவர்கள் கூறும் விலைக்கு தலைமுடி ஏலம் விடப்படுகிறது. இவை சீனா, இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நடந்த இதய அறுவை சிகிச்சை வெற்றி https://ift.tt/3fskAr7

படம்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு டெல்லி எய்ம்ஸ்மருத்துவமனையில் மேற்கொள் ளப்பட்ட இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது. 75 வயதாகும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதயப் பிரச்னை காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த வெள்ளிக் கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு வழக்கமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவர் களின் கண்காணிப்பில் இருந்தகுடியரசுத் தலைவர் அடுத்த நாள்டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீக்கியர்கள் பேரணிக்கு அனுமதி மறுப்பு; மகாராஷ்டிராவில் போலீஸார் மீது பட்டாக்கத்தியால் தாக்குதல்: 4 பேர் படுகாயம்; 18 பேர் கைது https://ift.tt/39tKLd4

படம்
மகாராஷ்டிராவில் சீக்கிய பேர ணிக்கு அனுமதி மறுத்தத்தால் கோபம் அடைந்த இளைஞர்கள், பட்டாக்கத்தியால் தாக்கியதில் 4 போலீஸார் படுகாயம் அடைந் தனர். மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் பகுதியில் உள்ள குருத் வாராவில், ஆண்டுதோறும், ‘ஹோலா மொஹல்லா’ என்ற பெயரில் பேரணி நடத்துவார்கள். அப்போது இளைஞர்கள் சீக்கிய தற்காப்புக் கலைகளை நிகழ்த்தியபடி ஊர்வலம் செல்வார்கள். இந்த ஆண்டு அந்தப் பேரணிக்கு அனுமதி கேட்டு குருத்வாரா நிர்வாகிகள் விண்ணப்பித்தனர். ஆனால், மாநிலம் முழுவதும் கரோனா வைரஸ் அதிகமாகி உள்ளதால், பேரணிக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அரசு மருத்துவமனையில் - ஒரே படுக்கையில் 2 கரோனா நோயாளிகள்: சமூக வலைதளங்களில் வைரலாகும் படங்கள் https://ift.tt/31zMYQ8

படம்
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அரசு மருத்துவமனையில் ஒரேபடுக்கையை 2 கரோனா நோயாளிகள் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாக்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு தனி வார்டு உள்ளது. இந்நிலையில் இந்த வார்டில் பல படுக்கைகளில் ஒருவருக்கு பதிலாக 2 நோயாளிகள் இருப்பது அந்த புகைப்படங்களில் தெரிய வருகிறது. இது மகாராஷ்டி ராவில் கரோனா வைரஸ் பாதிப்புஎந்த அளவுக்கு தீவிரம் அடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முகேஷ் அம்பானியை மிரட்டிய விவகாரம்- போலீஸ் அதிகாரி சச்சின் வாஸின் மடிக்கணினி கண்டுபிடிப்பு https://ift.tt/31uWbsW

படம்
தொழிலதிபர் முகேஷ் அம்பா னிக்கு மிட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் அதிகாரி சச்சின் வாஸின் மடிக்கணினி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின் முன்பு கடந்த பிப்ரவரி 25-ம் தேதி ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் வெடிக்கும்தன்மை கொண்ட ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. அதோடு முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கடிதமும் வைக்கப்பட்டிருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மியான்மர் அகதிகளை அனுமதிக்க வேண்டாம் என்ற உத்தரவை 3 நாளில் திரும்பப் பெற்ற மணிப்பூர் அரசு https://ift.tt/3dozig2

படம்
மியான்மரிலிருந்து வரும் அகதிகளை அனுமதிக்க வேண்டாம் என்ற உத்தரவை மணிப்பூர் அரசு 3 நாளில் திரும்பப் பெற்றுள்ளது. மியான்மரில் ராணுவப் புரட்சிக்கு எதிராக போராடும் மக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பலர் அங்கிருந்து வெளியேறி இந்தியாவின் மிசோரம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அஸ்ட்ரா ஜெனிகா கரோனா தடுப்பூசிக்கு கனடாவில் தடை

படம்
பிரிட்டிஷ், சுவீடன் நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இது உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.இந்தியாவில் புனே நகரை சேர்ந்தசீரம் நிறுவனம், அஸ்ட்ரா ஜெனிகாவின் கரோனா தடுப்பூசியை ‘கோவிஷீல்டு' என்ற பெயரில் தயாரித்து, விநியோகம் செய்து வருகிறது. இந்த தடுப்பூசியால் ரத்தம்உறைதல் பிரச்சினை ஏற்படுவதாக சில மாதங்களுக்கு முன்பேஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டின. இதன் பேரில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் முதியவர்களுக்கு அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி போட தடை விதிக்கப்பட்டது. எனினும் ஐரோப்பிய ஒன்றியமருந்து ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் சில நாடுகளில் மட்டும் தடை விலக்கி கொள்ளப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அலாஸ்காவில் ஹெலிகாப்டர் விபத்து- ஐரோப்பிய கோடீஸ்வரர் பீட்டர் கெலினர் மரணம்

படம்
அலாஸ்காவின் மலைப் பகுதியில் நேர்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஐரோப்பிய கோடீஸ்வரர்களில் ஒருவரான பீட்டர் கெலினர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். அலாஸ்கா மலைப்பகுதியில் ஹெலி-ஸ்கையிங் எனப்படும் பனிச் சறுக்கில் பங்கேற்க இவர்கள் அனைவரும் ஹெலிகாப்டரில் பயணித்தது தெரியவந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திரிணமூல் காங்கிரஸ், பாஜக சதிகாரர்கள்: பட்டாச்சார்யா குற்றச்சாட்டு https://ift.tt/31yho5c

படம்
மேற்குவங்க மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா நேற்று வெளியிட்ட ஆடி யோவில் கூறியிருப்பதாவது: கடந்த 10 ஆண்டு திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் ஓர் ஆலை கூட தொடங்கப்படவில்லை. மேற்குவங்க இளைஞர் கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு செல்லும் அவல நிலை உள்ளது. கல்வி, சுகாதாரத் துறை சீர்குலைந்துள்ளது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு, சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மம்தாவின் தோல்வி அச்சத்தைக் கொடுக்க வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு https://ift.tt/31C1dUg

படம்
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி களம் காண்கிறார். திரிணமூல் காங்கிரஸில் இருந்து அண்மையில் விலகி பாஜகவில் இணைந்தவரான சுவேந்து அதிகாரிக்கு, நந்திகிராம் தொகுதியில் பெரிய அளவில் மக்கள் செல்வாக்கு உள்ளது. இதனால், இந்தத்தேர்தலானது மம்தாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் நாளை நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலில் நந்திகிராம் தொகுதியும் இடம்பெறுகிறது. இதனை முன்னிட்டு, அங்கு பாஜக சார்பில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஎம் கேர்ஸ் நிதி, பணமதிப்பிழப்பு பணம் தாராளமாகப் புழங்குகிறது; பாதுகாப்புத்துறை வாகனங்களில் பண விநியோகம்: பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு https://ift.tt/3dhmwQK

படம்
பிஎம் கேர்ஸ் நிதி, பணமதிப்பிழப்புப் பணம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்த பணம் ஆகியவைதான் தேர்தலில் மக்கள் வாக்களிக்க வைக்க வழங்கப்படுகிறது. பாதுகாப்புத்துறை வாகனங்கள் மூலம் பணம் விநியோகம் செய்யப்படுகிறது என்று பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் கடந்த 27ம் தேதி 30 தொகுதிகளுக்கு நடந்த முடிந்த நிலையில் 2-வது கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 1ம் தேதி நடக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கன்னியாஸ்திரிகளை கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது? -பாஜகவுக்கு பிரியங்கா காந்தி கேள்வி https://ift.tt/3wduWkM

படம்
கன்னியாஸ்திரிகளை கேள்வி கேட்கவும், அவர்களின் டிக்கெட்டுகளை ஆய்வு செய்யவும் பாஜகவின் இளைஞர் அமைப்புக்கு என்ன உரிமை இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். உ.பி.யில் ஜான்ஸி நகரில் கேரளாவைச் சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகள் ரயிலில் வந்தபோது, அவர்களை ரயிலில் இருந்த ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த சிலர் கீழே இறக்கிவிட்டனர். கட்டாய மதமாற்றத்துக்காக இரு பெண்களை அழைத்துச் செல்கிறார்கள் எனக் கூறி போலீஸில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் புகார் செய்தனர். இந்த புகாரையடுத்து, விசாரணை நடத்திய போலீஸார் கன்னியாஸ்திரிகள் மீது எந்தத் தவறும் இல்லை என அவர்களை அனுப்பி வைத்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மெகபூபா முப்தியைத் தொடர்ந்து அவரின் தாயாருக்கும் பாஸ்போர்ட் வழங்க மறுப்பு https://ift.tt/3frrf4M

படம்
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியின் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவரின் தாய் குல்ஷன் நசீரின் விண்ணப்பத்தையும் போஸ்போர்ட் அலுவலகம் நிராகரித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் முதல்வருமான முப்தி முகமது சயீத்தின் மனைவி குல்ஷன் நசீர் என்பது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகாராஷ்டிராவில் மீண்டும் லாக்டவுன்? - உத்தவ் தாக்கரேவுக்கு ஆனந்த் மகேந்திரா உருக்கமான பதிவு https://ift.tt/3frcYVV

படம்
மகாராஷ்டிராவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு விடும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வேண்டுகோள் விடுத்துள்ளார். கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்தது. இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அசாமில் நாளை மறுநாள் 2-ம் கட்டத் தேர்தல்: இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிகிறது https://ift.tt/31vxUmn

படம்
அசாம் மாநிலத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல்1ம்தேதி) 39 தொகுதிகளுக்கான 2-ம் கட்டத் தேர்தல் நடைபெறுவதையடுத்து, இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. இந்தத் தேர்தலில், அசாம் அமைச்சர்கள் பியூஷ் ஹசாரிகா, பரிமால்சுக்லா பைதியா, பாபேஷ் கலிதா, துணை முதல்வர் லஸ்கர் என முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெள்ளிக் காசுக்காக ஏசுவை யூதாஸ் காட்டிக்கொடுத்தார்; தங்கத்துக்காக கேரள மக்களுக்கு இடதுசாரி அரசு துரோகம் செய்துவிட்டது: பிரதமர் மோடி கடும் தாக்கு https://ift.tt/39tVODn

படம்
சில வெள்ளிக்காசுகளுக்காகக் கடவுள் ஏசுவை யூதாஸ் காட்டிக்கொடுத்தார், சில தங்கக் கட்டிகளுக்காக கேரள மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி அரசு துரோகம் செய்துவிட்டது என்று பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார். கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் கடும் போட்டி இருந்து வருகிறது. மூன்றாவதாக பாஜகவும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்துவருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘‘48 மணிநேரம் கவனத்துடன் இருக்க வேண்டும்’’ - நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி எச்சரிக்கை https://ift.tt/3frIumS

படம்
நந்திகிராம் தொகுதியில் வாக்குப்பதிவு முடியும் வரை நான் இங்கே இருப்பேன், 48 மணிநேரம் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் முதல்கட்டத் தேர்தல் 27-ம்தேதி நடைபெற்றது. 30 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 7 கட்டத் தேர்தல் நடைபெற வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கன்னியாஸ்திரிகள் தாக்கப்படவில்லை என பியூஷ் கோயல் கூறுவது பொய்; வெட்கப்படுங்கள்: பினராயி விஜயன் கண்டனம் https://ift.tt/3fndg05

படம்
கன்னியாஸ்திரிகள் தாக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியது அப்பட்டமான பொய். இப்படிப் பேசியதற்கு வெட்கப்பட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்திலிருந்து கன்னியாஸ்திரிகள் இருவரும், இரு பெண்களும் கடந்த 19-ம் தேதி ஹரித்துவார்-பூரி உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒடிசா மாநிலம் பூரி நகருக்குச் சென்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராகுல் காந்தி திருமணமாகாதவர்; ஏன் பெண்கள் படிக்கும் கல்லூரிக்கே சென்று பேசுகிறார்?- முன்னாள் எம்.பி. சர்ச்சைப் பேச்சு; நழுவும் மார்க்சிஸ்ட் https://ift.tt/3dgNh7U

படம்
கொச்சியில் கடந்த வாரம் கல்லூரிப் பெண்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் நடத்தியதைக் கொச்சைப்படுத்திப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாய்ஸ் ஜார்ஜ், ராகுல் காந்தி ஏன் பெண்கள் பயிலும் கல்லூரிக்கே செல்கிறார் என்று சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளார். கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் கடும் போட்டி இருந்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் இன்று பிரச்சாரம் ஓய்வு: கடைசி நாளில் அமித் ஷா தீவிர வாக்கு சேகரிப்பு https://ift.tt/3fu9v90

படம்
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இறுதி நாளான இன்று மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதுபோலவே பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் செய்கிறார். மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கட்சி கடுமையாகப் போராடி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பந்தலூரில் தேர்தல் மோதல்: திமுகவைச் சேர்ந்த 4 பேருக்கு கத்திக்குத்து; படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி https://ift.tt/2PiY2OX

படம்
பந்தலூரில் தேர்தல் மோதலில் திமுகவைச் சேர்ந்த நான்கு பேரைக் கத்தியால் குத்தியதில் அவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கத்தியால் குத்திய இருவரும் தலைமறைவாகியுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் காசிலிங்கம் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் பொன்.ஜெயசீலன் போட்டியிடுகிறார். இருவரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்