இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காங்கிரஸால் நாட்டுக்கு எப்போதும் பிரச்சினை மட்டுமே: சோனியா காந்தி தொகுதியில் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் https://ift.tt/3sVE5Ps

படம்
லக்னோ: காங்கிரஸால் நாட்டுக்கு எப்போதும் பிரச்சினை மட்டுமே என சோனியா காந்தியின் தொகுதியான ரே பெரேலியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. நாடே எதிர்நோக்கும் இந்தத் தேர்தலுக்கு பாஜக ஆயத்தமாகி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உணவுப் பற்றாக்குறை, பொருளாதாரம் மீது கவனம் செலுத்தப்படும்: கிம் ஜோங்கின் புத்தாண்டு உரை

படம்
பியாங்யாங்: இந்த புத்தாண்டில் வட கொரியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவும், உணவுப் பற்றாக்குறையை சீர் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் கிம் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் புத்தாண்டு உரை கவனம் ஈர்த்துள்ளது. வட கொரியா என்றாலே ராணுவ பலம் பற்றி செய்திகள் தான் எப்போதும் வெளிச்சத்துக்கு வரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆன்லைனில் ரூ.70 லட்சம் பணம் திருடிய வழக்கில் மேச்சேரி பிடிஓ அலுவலக கணினி ஆபரேட்டர் கைது: வேலூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை https://ift.tt/3qEVt8z

படம்
காட்பாடி வட்டார வளர்ச்சி அலு வலகத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் முறையில் ரூ.70 லட்சம் பணத்தை திருடிய வழக்கில் மேச்சேரி பிடிஓ அலுவலக கணினி ஆபரேட்டரை வேலூர் மாவட்ட சைபர் குற்றப் பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வங்கிக் கணக்கில் ரூ.3 கோடி அளவுக்கு நிதி கையிருப்பில் உள்ளது. இதில், ரூ.70 லட்சம் தொகை திடீரென மாயமானதை கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, வேலூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவில் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரகு, அளித்த புகாரின்பேரில் ஆய்வாளர் அபர்ணா, உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி.யில் சட்டப்பேரவை தேர்தலால் அதிகரிக்கும் மதம் சார்ந்த நடவடிக்கைகள்: இந்து ராஜ்ஜியம் பெயரில் மாணவர்கள் உறுதிமொழி https://ift.tt/3EG3kaR

படம்
உத்தரபிரதேசத்தின் பள்ளி மாணவர்கள் இந்து ராஜ்ஜியத்தின் பேரில் உறுதிமொழி எடுத்த வீடியோசமூகவலைதளங்களில் வைரலாகிறது. இதுபோன்ற மதவாத நடவடிக்கைகள் அம்மாநில சட்டப்பேரவை தேர்தலால் அதிகரித்து வருவதாகக் கருதப்படுகிறது. பாஜக ஆளும் உ.பி.யின் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாகன திருட்டில் ஈடுபட்டவர் கைது https://ift.tt/3eFJouf

படம்
திருப்பத்துார் மாவட்டத்தில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். திருப்பத்துார் நகர காவல் துறையினர் நேற்று முன்தினம் மாலை திருப்பத்துார் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்துாரில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகாவில் பலாத்கார வழக்கில் இருந்து மடாதிபதி ராகவேஸ்வர பாரதி விடுவிப்பு https://ift.tt/3sNo0eF

படம்
கர்நாடகாவில் ராம கதா பாடகியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் மடாதிபதி ராகவேஸ்வர பாரதி நிரபராதி என விடுவிக்கப்பட்டார். கர்நாடகாவை சேர்ந்த ராம கதா பாடகி ஒருவர் கடந்த 2014ம் ஆண்டு ராமச்சந்திரபுர மடத்தின் தலைவர் ராகவேஷ்வர பாரதி தன்னை பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் கடந்த 2016ம் ஆண்டு மடாதிபதி ராகவேஸ்வர பாரதி குற்றமற்றவர் என விடுவித்தது. இதை எதிர்த்து ராம கதா பாடகி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஷானந்தா தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்நிலையில் நீதிமன்றம் நேற்று, ''ராகவேஸ்வர பாரதி மீதான பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தரப்பில் போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே பெண் புகார்தாரரின் மனுவும் அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது''எனக்கூறி, அவரை நிரபராதி என விடுவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தம...

கரோனா சிகிச்சைக்கு பயன்படும் மால்னுபிரவிர் மாத்திரை ரூ.40 முதல் ரூ.75-ஆக இருக்கும்: மருந்து தயாரிப்பு நிறுவனம் தகவல் https://ift.tt/3eFjyX7

படம்
கரோனா சிகிச்சைக்கான மால்னுபிரவிர் மாத்திரை ஒன்று ரூ.40 முதல் ரூ.75 வரை விலை நிர்ணயம் செய்யப்படலாம் என அதனை தயாரிக்கும் ஆப்டிமஸ் ஃபார்மா நிறுவனம் கூறியுள்ளது. கரோனா தொற்றால் தீவிர பாதிப்புக்கு உள்ளாவோருக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்காவை சேர்ந்த மெர்க் என்ற மருந்து நிறுவனம் மால்னுபிரவிர் என்ற மாத்திரையை தயாரித்துள்ளது. இந்த மாத்திரையை அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியா அண்மையில் அனுமதி அளித் தது. இந்தியாவில் இந்த மாத்திரைகளை ஆப்டிமஸ் ஃபார்மா, டாக்டர் ரெட்டீஸ், சிப்லா, சன் ஃபார்மா உள்ளிட்ட 13 நிறுவனங்கள் தயாரிக்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செய்தித்தாள் நிறுவனங்களின் ‘இ-பேப்பர்களை’ பிடிஎஃப் வடிவில் சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ்அப் குழுக்கள் முடக்கம்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு https://ift.tt/3qUZlCH

படம்
செய்தித்தாள் நிறுவனங்களின் இ-பேப்பர்களை அனுமதியின்றி பிடிஎஃப் வடிவில் சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ்அப் குழுக்களை முடக்க டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால் செய்தி நிறுவனங்கள் தங்களின் அன்றாட இ-பேப்பர்கள், புத்தகங்களை வாசகர்களுக்கு பயனளிக்கும் விதமாக தங்களின்அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் பிரசுரித்து வருகின்றன. ஆனால் சிலர் செய்தி நிறுவனங்களின் அனுமதியின்றி அந்நிறுவனஇ-பேப்பர்களையும், புத்தகங்களையும் சட்டவிரோதமாக டவுன்லோடு செய்து பிடிஎஃப் வடிவில் மாற்றி தங்களின் வாட்ஸ்அப் குழுக்களில் பகிருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆஸ்திரேலிய பழைய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு தீ வைப்பு: பூர்வக்குடிகள் போராட்டத்தில் பதற்றம்

படம்
கான்பரா: ஆஸ்திரேலியாவில் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது அருங்காட்சியமாக இருக்கும் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தீ வைக்கப்பட்டபோது 20க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்தனர். நிலைமையை உணர்ந்து ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் உயிர் பிழைத்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து: 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு https://ift.tt/3FDWB2u

படம்
திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் போளூர் வட்டம் சந்த வாசல் அடுத்த கேசவபுரம் அருகே உள்ள ஜலகொண்டாபுரம் கிராமத்தில் வசித்தவர் ராமமூர்த்தி மகன் கார்த்தி(21). இவர், ஒரகடத்தில் உள்ள தனியார் வாகன உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், பணி முடிந்து ஓரகடத்தில் இருந்து வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் நேற்று முன் தினம் இரவு வந்துள்ளார். போளூர் வட்டம் சந்தவாசல் அடுத்த வெல்லூர் கிராமம் குன்றுமேடு பகுதியில் வசித்தவர் முனுசாமி மகன் பாஸ்கர்(28). இவர், சந்தவாசல் அடுத்த ராமநாதபுரம் அருகே உள்ள மேலாண்டபுரம் பகுதியில் வசிக்கும் சங்கரை(38), இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்கார வைத்து கொண்டு ஆரணி சாலையில் உள்ள நடுகுப்பம் நோக்கி வந்துள்ளார். இவர்கள் இருவரும், ஆரணி – சந்தவாசல் சாலையில் உள்ள பார்வதி அகரம் என்ற இடத்தில் பயணித்துள்ளனர். அப்போது எதிர்பாராமல், இரண்டு பேரது இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு, ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கார்த்தி மற்றும் பாஸ்கர் ஆகியோர் ஏற்க...

நாகாலாந்தில் மேலும் 6 மாதங்களுக்கு ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு https://ift.tt/3EJ2g6e

படம்
நாகாலாந்தில் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட் டுள்ளது. கடந்த 1963-ம் ஆண்டு டிசம்பரில் நாகாலாந்து மாநிலம் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு 1958-ம் ஆண்டு முதலே நாகாலாந்து பகுதியில் ஆயுத படைகள் சிறப்புச் சட்டம் (ஏஎப்எஸ்பிஏ) அமலில் உள்ளது. இதன்படி, வாரன்ட் இன்றி யாரையும் கைது செய்ய முடியும். அனுமதியின்றி சோதனை நடத்த முடியும். துப்பாக்கிச்சூடு நடத்த முடியும். இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தராகண்டில் ரூ.17,500 கோடியில் புதிய திட்டங்கள்: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார் https://ift.tt/3mKMl11

படம்
உத்தராகண்டில் ரூ.17,500 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். பாஜக ஆட்சியில் மாநிலம் அபரிமிதமான வளர்ச்சியை கண்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். உத்தராகண்ட் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இதனால், மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், உத்தராகண்டில் ரூ.17,500 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உட்பட 14 நகரங்களில் கரோனா அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல் https://ift.tt/3FHQOcr

படம்
நாடுமுழுவதும் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னை உட்பட 14 நகரங்களில் கரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ளது. இதையடுத்து, தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி கரோனா 2-வது அலை வேகமாக பரவியது. கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்துவந்த நிலையில், இப்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் 13,154 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி, மும்பை, சென்னை, குருகிராம், கொல்கத்தா, பெங்களூரு, அகமதாபாத் உள்ளிட்ட 14 நகரங்களில் கரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ளது. டெல்லிக்கு அருகில் உள்ள ஹரியாணாவின் குருகிராமில் டிசம்பர் 15 முதல் 21 வரையிலான காலகட்டத்தில் 194 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. டிசம்பர் 22 முதல் 28 வரையிலான ஒரு வாரத்தில் கரோனா தொற்று 738 ஆக அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்...

சூடானில் ராணுவ புரட்சியில் ஆட்சி மாற்றம்; பாஸ்போர்ட், பணமின்றி 62 இந்திய தொழிலாளர்கள் தவிப்பு: செராமிக் நிறுவனர் வேறு நாட்டுக்கு தப்பியோட்டம்

படம்
சூடானில் ஏற்பட்ட ராணுவ ஆட்சி மாற்றத்தால் அங்குள்ள செராமிக் தொழிற்சாலையில் பணிபுரிந்த இந்தியத் தொழிலாளர்கள் 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சூடானில் நோபிள்ஸ் குழுமம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது. இக்குழும நிறுவனர் முகமதுஅல்-மமூன். இக்குழுமம் ரயில்வே,கப்பல், பெட்ரோ ரசாயனம், வேளாண்துறை மற்றும் டைல்ஸ்உற்பத்தி என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது. இதில் டைல்ஸ் ஆலை ஆர்ஏகே செராமிக்என்ற பெயரில் காரி தொழிற்பேட்டையில் செயல்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராகுல் வெளிநாட்டுப் பயணங்களை வைத்து வதந்திகளைப் பரப்பாதீர்கள்: பாஜகவுக்கு காங்கிரஸ் கண்டிப்பு https://ift.tt/3pDetF0

படம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களை வைத்து வதந்திகளைப் பரப்பி அரசியல் செய்ய வேண்டாம் என பாஜகவுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா அளித்தப் பேட்டியில், ராகுல் காந்தி குறுகிய வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இது அவரது தனிப்பட்ட பயணம். இது குறித்து பாஜகவும், ஊடக நண்பர்களும் வதந்திகளை தேவையில்லாமல் பரப்பாமல் இருக்க வேண்டுகிறேன் எனக் கூறியுள்ளார். ராகுல் வெளிநாட்டுப் பயணம் பற்றிய அறிவிப்பு வெளியானதுமே அவர் 2022 புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இத்தாலி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையொட்டியே ரன்தீப் சூரஜ்வாலா வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் 961 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு: அன்றாட கரோனா தொற்று 13,154; நேற்றைவிட 43% அதிகம் https://ift.tt/3mKU8fn

படம்
புதுடெல்லி: இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 961 ஆக அதிகரித்துள்ளது. 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பரவியுள்ளது. இதுவரை 320 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒமைக்ரான் பாதிப்பைப் பொறுத்தவரை டெல்லியில் அதிகபட்சமாக 263 பேருக்கும், மகாராஷ்டிராவில் 257, குஜராத்தில் 97, ராஜஸ்தானில் 69, கேரளாவில் 65 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜகவுக்கு முஸ்லிம் வாக்குகள் கிடைக்காது: உ.பி. எம்.பி. பேச்சு https://ift.tt/33W5qXp

படம்
சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது, அயோத்தியில் கோயில் கட்டியது, காசியில் கோயில் புனரமைத்தது, மதுராவில் கோயில் கட்டவுள்ளது போன்ற காரணங்களுக்காக பாஜகவுக்கு முஸ்லிம் வாக்குகள் கிடைக்காது என கனோஜ் தொகுதி எம்.பி. பேசியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு காஷ்மீரில் ஒரே நாளில் 2 என்கவுன்ட்டர்: 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை https://ift.tt/3mKYnr9

படம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஒரே நாளில் நடந்த 2 என்கவுன்ட்டரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அனந்தநாக், குலாம் மாவட்டங்களில் நேற்று மாலை இச்சம்பவம் நடந்தது. இது குறித்து போலீஸார் தரப்பில், நேற்று மாலை நவ்காம் அனந்தநாக் மாவட்டம், குல்காம் மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் இருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் குறித்து ரகசிய தகவலை கசியவிட்ட போலீஸ் அதிகாரி இடைநீக்கம் https://ift.tt/3EDPDsY

படம்
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த மாதம் எஸ்டிபிஐ (பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் அரசியல் கட்சி) கட்சி நிர்வாகியை மர்ம நபர்கள் கொலை செய்தனர். இதற்கு பழிவாங்கும் விதமாக பாஜக மூத்த நிர்வாகி ஒருவரை எஸ்டிபிஐ கட்சியினர் வெட்டிக் கொன்றனர். இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக ஆர்எஸ்எஸ், எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த பலரை போலீஸார் கைது செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரளாவின் பலபகுதிகளில் எஸ்டிபிஐ கட்சியினருக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் வெடித்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிப்பு https://ift.tt/3qwr4JD

படம்
நாட்டில் ஒமைக்ரான் பாதிப்புநாளுக்கு நாள் உயர்ந்து வரும்நிலையில் கரோனாவால் பாதிக் கப்படுவோர் எண்ணிக்கையும் திடீரென உயர்ந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 9,195 பேர் பாதிக்கப்பட் டுள்ளனர். கடந்த 19 நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 9 ஆயிரத்திற்கும் கீழ் இருந்தது. நேற்று மீண்டும் 9 ஆயிரத்தை தாண்டி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆட்சிக்கு வந்தால் குவாட்டர் மது ரூ.50: ஆந்திர பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை https://ift.tt/3HpHV7s

படம்
ஆந்திரா மாநிலம் அமராவதியில் பாஜக மாநில தலைவர் சோமு வீர்ராஜு தலைமையில் ஜெகன் அரசுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சோமு வீர்ராஜு பேசியதாவது: முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ஆட்சியில், அமராவதியை ஜப்பான், சிங்கப்பூர், சீனா போன்று உருவாக்குவேன் என மக்களை ஏமாற்றினார். தற்போது ஜெகன் ஆட்சியில் ஆந்திராவிற்கு தலைநகரமே இல்லாமல் செய்து விட்டு, விசாகப்பட்டினத்தை தலைநகராக்கி, அதில் ஏக்கர் கணக்கில் நிலத்தை வளைக்கலாம் என திட்டம் போட்டுள்ளார். இந்த இரு கட்சிகளுக்கும் மாற்று கட்சியான பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஓட்டல் கணினியை பயன்படுத்தி கர்நாடகாவில் ரூ.11.5 கோடி மோசடி செய்த பொறியாளர்: சிஐடி விசாரணையில் கண்டுபிடிப்பு https://ift.tt/3ENUMit

படம்
பெங்களூருவைச் சேர்ந்த பொறியாளர் ஸ்ரீ கிருஷ்ண ரமேஷ் (எ)ஸ்ரீகி (26) பள்ளியில் படிக்கும்போதே ஹேக்கிங் தொழில்நுட்பத்தின் மூலம் பிட்காயின் பரிவர்த்தனையில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார் பிட்ஃபினிக்ஸ் க்ரிப்டோகரன்சி சந்தையை ஹேக் செய்து 2016-ல் 1 லட்சத்து 19,756 பிட்காயின்களை திருடியதாக வாக்குமூலத்தில் தெரிவித்தார். கடந்த 2020-ம் ஆண்டு ‘டார்க்நெட்’ எனப்படும் இணைய வெளியில் போதைப் பொருள் விற்பனையிலும் இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதே ஆண்டில் கர்நாடக அரசின் ‘சென்டர் ஃபார்எக்ஸலென்ஸ்’ இணைய கொள்முதல் இணைய‌தளம் ஹேக்செய்யப்பட்டு, ஏலம் கோருபவர்களின் எர்னஸ்ட் மணி டெபாசிட் (இஎம்டி) தொகை ரூ.11.5 கோடிஹேக் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த அமலாக்கத் துறை, உ.பி.யைச் சேர்ந்த புலந்த்சரில் நிம்மி எண்டர்பிரைசஸ் நிறுவனம் உட்பட 14 கணக்குகளில் வரவு வைத்ததை கண்டுபிடித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகாராஷ்டிராவில் வருமானவரித்துறை சோதனை:  ரூ.150 கோடி வரி ஏய்ப்பு அம்பலம் https://ift.tt/3pCzO1E

படம்
மும்பை: மகாராஷ்டிராவில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் காட்டாமல் ரூ.150 கோடி அளவிலான வரிஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் நந்தர்பர். நாசிக் மற்றும் துலே பகுதிகளில், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடும் இரு குழுமங்களுக்கு சொந்தமான, 25க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல போலி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று 781 ஆக அதிகரிப்பு: அன்றாட கரோனா பாதிப்பு 9,195; பலி 302 https://ift.tt/3exvhXL

படம்
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,195 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு 781 ஆக அதிகரித்துள்ளது. 302 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ம.பி.யில் பியூன், ஓட்டுநர், வாட்ச்மேன் உள்ளிட்ட 15 காலியிடங்களுக்கு விண்ணப்பித்த 11,000 பட்டதாரிகள்: பி.இ., எம்.பி.ஏ., சட்டம் படித்தோரும் அடக்கம் https://ift.tt/3qvioD5

படம்
போபால்: மத்தியப் பிரதேசத்தில் பியூன், ஓட்டுநர், வாட்ச்மேன் வேலைக்கு பி.இ., எம்பிஏ, சட்டம் படித்த பட்டதாரிகள் உள்பட 11 ஆயிரம் பேர் விண்ணப்பித்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. இந்தப் பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தான் கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் கூட பட்டதாரிகள் பலரும் விண்ணபித்துள்ளனர். இது குறித்து அஜய் பாகெல் கூறுகையில், "நான் அறிவியல் பட்டதாரி. பியூன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளேன். இங்கே முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட இருக்கின்றனர்" என்றார். ஜிதேந்திர மவுரியா சட்டம் பயின்றவர். அவர் கூறுகையில், "நான் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பித்துள்ளேன். நீதிபதிகள் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். இந்த வேலை கிடைத்தால் நான் புத்தகம் வாங்கவாவது பயன்படும். அதனால் இந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளேன்" என்று கூறினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரக்கோணம் அருகே முகமூடி கொள்ளை வழக்கில் பிளஸ் 2 மாணவர் உள்ளிட்ட 2 பேர் கைது https://ift.tt/3ez9cIy

படம்
அரக்கோணம் அருகே ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்பட பாணியில் ஏர் கன் மூலம் சுட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக பிளஸ் 2 மாணவர் உள்ளிட்ட 2 பேரை காவல் துறையினர் கைது செய்துஉள்ளனர். இவர்களிடம் இருந்து ஏர் கன், லேப்டாப், கேமரா உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். அரக்கோணம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் விவசாய நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீட்டில் வசித்து வருபவர் புஷ்கரன்(23). இவரது வீட்டில் கடந்த 17-ம் தேதிநள்ளிரவு முகமூடி அணிந்த கும்பல் கொள்ளையடிக்க கதவைதட்டியுள்ளனர். கதவை திறந்தபோது கொள்ளையர்களை பார்த்த புஷ்கரன், கதவை மீண்டும் மூடியுள்ளார். அப்போது, ஜன்னல் வழியாக கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவர், துப்பாக்கியால் சுட்டதில் புஷ்கரன், அவரது பாட்டி ரஞ்சிதம்மாள் மீது துப்பாக்கி ரவை பட்டு படுகாயம் அடைந்தனர். அந்த நேரத்தில் கதவை உடைத்துவீட்டுக்குள் புகுந்த கும்பல் புஷ்கரனை கத்தியால் தாக்கிபீரோவில் இருந்து ரூ.25 ஆயிரம், பெண்கள் அணிந்திருந்த 15 பவுன் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu ...

மாணவனுக்கு பாலியல் தொல்லை: இளம்பெண் கைது https://ift.tt/3euCsjt

படம்
பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தின்கீழ் இளம்பெண் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம், அம்பாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியின் மகள் ராசாத்தி(24). இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிற்சி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தொடரும் டெல்லி மருத்துவர்கள் போராட்டம்: அதிகரிக்கும் ஒமைக்ரானுக்கு இடையே மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு https://ift.tt/3mEinf0

படம்
புதுடெல்லி: டெல்லியில் மருத்துவர்கள் போராட்டம் நடத்திவரும் சூழலில் அங்கு நாளுக்கு நாள் கரோனா நோயாளிகளும் அதிகரித்து வருவதால் மருத்துவர்களுக்கான பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. முன்னதாக, நீட் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு விரைந்து கவுன்சிலிங்கை நடத்த வலியுறுத்தி டெல்லியில் மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.இந்நிலையில் காவல்துறையைக் கண்டித்து இன்று (டிச.29) போராட்டம் நடத்தப்போவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.12 கோடியில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அம்சங்கள் மிகுந்த புதிய கார் https://ift.tt/3EtyYrX

படம்
புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு அதிக பாதுகாப்பு அம்சங்கள் மிகுந்த மெர்சடிஸ் நிறுவனத்தின் ரூ.12 கோடி மதிப்பிலான மேபேக் எஸ் 650 கார் வாங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி ஏற்கெனவே ரேஞ்ச் ரோவர் வோக், டொயோட்டாவின் லேண்ட் க்ரூசர் ஆகிய கார்களைப் பயன்படுத்திய நிலையில் தற்போது மெர்சடிஸ் காரைப் பயன்படுத்துகிறார் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கம்பத்தில் ஏற்றும்போது சோனியாவின் கரங்களில் கழன்று விழுந்த காங்கிரஸ் கொடி: வீடியோ இணைப்பு https://ift.tt/3JpoTQq

படம்
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் 137வது ஆண்டு விழாவை ஒட்டி கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றும்போது அது கீழே விழுந்தது. இது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் 137-வதுஆண்டு விழா இன்று (டிசம்பர் 28) கொண்டாடப்படுகிறது. சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பெருமை காங்கிரஸுக்கு உண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலகம் முழுவதும் 11,500 விமானங்கள் ரத்து: அதிகரிக்கும் ஒமைக்ரான் தொற்றால் நடவடிக்கை

படம்
கடந்த மூன்று நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் 11,500 விமானங்கள் ரத்தாகியுள்ளன. கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சுற்றுலா சென்றவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். சர்வதேச விமானப் போக்குவரத்துகளை ஆய்வு செய்யும் ஃப்ளைட் அவேர் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இதுவரை 11,500 விமானங்கள் ரத்தாகியுள்ளன. திங்களன்று 3,000 விமானங்களும், செவ்வாயன்று 1,100 விமானங்களும் ரத்தாகியுள்ளன. ஒமைக்ரான் பரவலால் உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சண்டிகரில் ஆம் ஆத்மி எழுச்சிக்கு காரணங்களும், பஞ்சாப் நோக்கிய கேஜ்ரிவாலின் இலக்கும்! https://ift.tt/3sE3U6P

படம்
சண்டிகர்: பஞ்சாப் - ஹரியானா மாநிலங்களின் பொது தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரில் மாநகராட்சி தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்கு ஆம் ஆத்மி கட்சி, 35 இடங்களில் 14 இடங்களில் வெற்றி பெற்று தனது தேர்தல் அரசியல் கணக்கைத் தொடங்கியுள்ளது. 12ல் பாஜகவும், 8ல் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன. சண்டிகர் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் யூனியன் பிரதேசம். அங்கே இதுவரை காங்கிரஸ், பாஜக என மாறிமாறி ஆட்சி செலுத்தியிருக்கின்றன. அத்தகைய பிரதேசத்தில் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 14 இடங்களைக் கைப்பற்றி எழுச்சி கண்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு பெயரில் அரசு வேலைக்கான நேர்முக தேர்வை போலியாக நடத்தி ரூ.1.5 கோடி மோசடி: 8 பேர் கும்பலை கைது செய்த சென்னை போலீஸார் https://ift.tt/3qrzulj

படம்
சென்னை: அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்குழு பெயரில் அரசு வேலைக்கான நேர்முகத் தேர்வை போலியாக நடத்தி ரூ.1 கோடியே 50 லட்சம் மோசடி செய்ததாக 8 பேர் கும்பலை சென்னை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்குழுவின் பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி மதுரை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம் மற்றும் சேலம் போன்ற இடங்களில் ஆட்களை வேலைக்குத் தேர்வு செய்வதாக சென்னையில் உள்ள அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் குழுவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதன் தென் மண்டல அலுவலர் ஆர்.சுந்தரேசன் இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வறட்சி, கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மொசாம்பிக் நாட்டுக்கு 500 டன் உணவு பொருள்: மனிதாபிமான அடிப்படையில் அனுப்பியது இந்தியா

படம்
மாபுடோ: உணவுப் பொருள் பற்றாக் குறையால் பாதிக்கப்பட்டுள்ள மொசாம்பிக் நாட்டுக்கு 500 டன் உணவுப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது. கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ 'சாகர்' திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன்படி இந்திய கடற்படையின் கேசரி கப்பல் மூலம் பல்வேறு நாடுகளுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்பப்பட்டு வருகின்றன. ஏர்கெனவே மாலத்தீவு, மொரிஷியல், செஷல்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா சார்பில் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இலவச வீடு திட்டத்தில் விவசாயிக்கு ரூ.14 ஆயிரம் பில் அனுப்பிய ம.பி.அரசு https://ift.tt/3pukLH1

படம்
போபால்: மத்திய பிதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்தவர் புத்ராம் ஆதிவாசி. ஏழை விவசாயியான இவருக்கு பிரதமரின் இலவச வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்ட் மாதம் வீடு கட்டித் தரப்பட்டது. இந்த வீட்டின் சாவியை ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்கு அப்போது மாநில ஆளுநர் மங்குபாய் சி. படேல் வந்திருந்தார். அவரும், புத்ராம் ஆதிவாசியிடம் வீட்டுச் சாவியை வழங்கினார். ஆனால் இந்த நிகழ்ச்சி முடிந்த சில மாதங்களில் ரூ.14 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று மத்திய பிரதேச அரசிடமிருந்து புத்ராம் ஆதிவாசிக்கு பில் வந்துள்ளது. இதனால் புத்ராம் அதிர்ச்சி அடைந்துள்ளார். முன்னதாக ஆளுநர் இந்த வீட்டுக்கு வருகிறார் என்று வீட்டின் முன்பாக புதிதாக இரும்பு கேட் அமைத்தனர். வீட்டையும் அலங்கரித்தனர். ஆனால் இப்போது கேட் வைப்பதற்கு செலவான வகையில் ரூ.14 ஆயிரம் பில் அனுப்பியுள்ளனர். என்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை. அந்த இரும்புக் கதவை நிறுவும் போது பணம் செலுத்த வேண்டும் என்று தெரிந்திருந்தால் இரும்புக் கதவை அங்கு வைக்க விட்டிருக்க மாட்டேன் என்று புத்ராம் கூறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News Indi...

60 வயதுக்கு மேற்பட்டோர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த என்ன தேவை? செய்ய வேண்டியது என்ன? https://ift.tt/3z4Fpkb

படம்
புதுடெல்லி: 60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் இருப்போர் பூஸ்டர் டோஸ் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்த என்ன செய்ய வேண்டும், எது தேவை என்ற தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து, பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தவும் மத்திய அரசு முடிவு செய்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

15 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு கோவாக்சின் மட்டும்தான் தடுப்பூசி https://ift.tt/3qoYUQM

படம்
புதுடெல்லி: 15 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்குச் செலுத்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி மட்டும்தான் இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வயதுவந்தோருக்குச் செலுத்த கோவிஷீல்ட், கோவாக்சின், ஸ்புட்னிக், மார்டனா, ஃபைஸர் ஆகியதடுப்பூசிகள் இருந்தாலும், 15 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு இந்தியாவில் செலுத்த கோவாக்சின் மட்டும்தான் தடுப்பூசியாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அதிரும் அமெரிக்கா: ஒமைக்ரான் பரவலால் நிரம்பி வழியும் குழந்தைகள் வார்டு; பரிசோதனைக்காகக் காத்திருக்கும் மக்கள்

படம்
நியூயார்க்: அமெரிக்காவில் ஒமைக்ரான் பரவலால் குழந்தைகள் நல வார்டு நிரம்பி வழிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த நவம்பர் 26 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் முதன்முறையாக ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இன்று 110க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதம் மாறியவர்களை தாய் மதத்துக்கு அழைத்து வருவோம்; கோயில்கள், மடங்களுக்கு இலக்கு நிர்ணயிப்போம்: பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா https://ift.tt/30Zclho

படம்
பெங்களூரு: மதம் மாறியவர்களை தாய் மதத்துக்கு திருப்பி அழைத்து வருவோம். இதற்காக இந்துக் கோயில்கள், மடங்களுக்கு இலக்கு நிர்ணயித்து செயல்படுவோம் என பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா பேசியுள்ளார். பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூர்யா, அண்மையில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டார். கடந்த சனிக்கிழமை (டிச.25) கிறிஸ்துமஸ் நாளன்று நடந்த இந்தக் கூட்டத்தில் தேஜஸ்வி சூர்யா பேசியது சர்ச்சையாகியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கடத்தல்: ரூ.5 லட்சம் பணம் பறிப்பு தொடர்பாக 3 பேர் கைது https://ift.tt/3EuVCQV

படம்
பூந்தமல்லி: பூந்தமல்லி பகுதியில் ஓய்வுபெற்ற ரயில்வேஊழியரை கடத்தி ரூ.5 லட்சம் பறித்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, கொளத்தூர் - மாதவன் நகரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(67). ரயில்வே துறையில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர், தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி சிறந்த எதிர்ப்பாற்றலை வழங்குகிறது: தேசிய தடுப்பூசி திட்ட தொழில்நுட்பக் குழுத் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா தகவல் https://ift.tt/3puFWbX

படம்
புதுடெல்லி: குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி சிறந்த எதிர்ப்பாற்றலை வழங்குகிறது என தடுப்பூசி திட்டத்துக்கான தேசிய தொழில்நுட்பக் குழுத் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார். மக்களுக்கு நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, 15 முதல் 18 வயதுவரை உள்ள பிரிவினருக்கு 2022, ஜனவரி 3ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவி்த்தார். முன்களப்பணியாளர்கள், 60வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் இருப்போருக்கு பூஸ்டர் தடுப்பூசி ஜனவரி 10ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பின் நோக்கம் பாதுகாப்புத் துறை அமைச்சர் விளக்கம் https://ift.tt/3z4w3VB

படம்
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் சோதனை மையத்துக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார். விழாவில் பின்னர் அவர் பேசியதாவது: பிரம்மோஸ் ஏவுகணை, மற்ற ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை மற்ற நாடுகளை தாக்குவதற்காக இந்தியா தயாரிக்கவில்லை. இந்தியாவை, மற்ற நாடுகள் தவறான எண்ணத்துடன் பார்க்கும் துணிச்சல் வரக்கூடாது என்பதற்காகதான் பிரம்மோஸ் ஏவுகணைகளை ரஷ்யாவுடன்இணைந்து தயாரிக்கிறது. உலகில் எந்த நாடும் நம்மை தாக்க முடியாதபடி இந்தியாவுக்கு அணு ஆயுதங்கள் பாதுகாப்பு உள்ளது என்பதை நாங்கள் காட்டி உள்ளோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தந்தையுடன் நடை பயிற்சிக்கு சென்ற போது ஆறுமுகநேரி அருகே கார் மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு https://ift.tt/3yWq0lY

படம்
ஆறுமுகநேரி அருகே தந்தையுடன் நடை பயிற்சிக்கு சென்ற போது, கார் மோதி பள்ளி மாணவி உயிரிழந்தார். குரூம்பூர் அருகே ராஜபூபதியை சேர்ந்தவர் சுப்பிரமணிய மகேஷ். ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி ராஜகுமாரி. இவர்களது மகள் மிருதுளா பார்கவி (9). இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். சுப்பிரமணிய மகேஷ் குடும்பத்துடன் ஆறுமுகநேரி காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இனப்படுகொலை நடக்கும் முன் வெறுப்புப் பேச்சுதான் தூண்டிவிடும்: ஹரித்துவார் சம்பவம் குறித்து அசோக் கெலாட் வேதனை  https://ift.tt/3Jiv495

படம்
உலகில் இனப்படுகொலை நடந்த நாடுகளில் பார்த்தால் இனப்படுகொலை நடப்பதற்கு முன், தீவிரமான வெறுப்புப்பேச்சுதான் தூண்டுகோலாக இருந்திருக்கிறது. ஹரித்துவாரில் நடந்த மதமாநாட்டில் வெறுப்புணர்வுடன் பேசியதில் யாரும் கைது செய்யப்படாதது வெட்கமாக இருக்கிறது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வேதனை தெரிவித்துள்ளார். ஹரித்துவாரில் கடந்த 17ம் தேதிமுதல் 20ம் தேதிவரை யாதி நரசிம்மானந்த் கிரி சார்பில் நடந்த ஜூனா அகாதாவில் முஸ்லிம் மதத்தினருக்கு எதிராக சிலர் பேசிய பேச்சுகள் பேச்சுகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஊராட்சி மன்ற தலைவியின் கணவரை கொலை செய்த இளைஞர் சிக்கினர் https://ift.tt/3EFMR6N

படம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரிய கொம்மேஸ்வரம் கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஷோபனா. இவரது கணவர் கோவிந்தராஜ் (38). வீரவர் கோயில் பகுதியில் டி.வி பழுது நீக்கும் கடை நடத்தி வந்தார். இவர், கடந்த 22-ம் கடையில் இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான வெங்கடேசன் (27) என்பவர் கொலை செய்துவிட்டு தப்பினார். இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த தப்பிஓடிய வெங்கடேசனை தேடி வந்தனர். இதற்காக, ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த அவரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

12 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிக்கு கோவாக்சினுக்கு அனுமதி https://ift.tt/3sOGVWP

படம்
புதுடெல்லி: 12 வயது அதற்கு மேற்பட்டோருக்குப் பயன்படுத்த கோவாக்சின் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதிவழங்கியுள்ளது. 18வயதுக்கு கீழ் இருப்போருக்கு செலுத்த 2-வது தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஜைடஸ் கெடலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது, அதன்பின் தற்போது கோவாக்சினுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அறிவியல் அதிசயங்களை அறிய உதவும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

படம்
வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பூமியிலிருந்து விண்ணில் உள்ள பல நட்சத்திரங்களை அறிவதற்காக விண்வெளியில் தொலைநோக்கியை நிலைநிறுத்த ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டனர். அதன்படி ஹப்பிள் என்ற தொலைநோக்கி பூமிக்கு வெளியே விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. அந்த விண்வெளி தொலைநோக்கி மனிதனுக்கு இதுவரை தெரிந்திடாத பல அரிய விண்வெளி தகவல்களை தெரிந்துகொள்ள வழி வகுத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னையில் நடப்பாண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 403 பேர் கைது https://ift.tt/32C9hbG

படம்
சென்னை: பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக, சென்னையில் நடப்பாண்டு 403 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து, கைது செய்யவும், தொடர்ந்து குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘‘இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நினைவுகூறுவோம்’’- பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து https://ift.tt/3qsymy5

படம்
புதுடெல்லி: கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் இந்த நேரத்தில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் உன்னதமான போதனைகளை நாம் நினைவுகூறுவோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அழைப்பு, இணைய பயன்பாடு தரவுகள் 2 ஆண்டுகளுக்கு சேமிக்க வேண்டும்: தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு https://ift.tt/3Fr4qbS

படம்
புதுடெல்லி: தொலைபேசி அழைப்புகள், இணையதள பயன்பாடு ஆகியவற்றின் தரவுகளை குறைந்தது 2 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்கவேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சந்தாதாரர்களின் நலன், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களுடைய தொலைபேசி அழைப்புகள், இணையதள பயன்பாடு ஆகியவற்றின் தரவுகளை முன்பு ஓராண்டு வரை சேமித்து வைத்திருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்